அடங்காத ஆத்திச்சூடியும் CONSULT ME TO INSULT-ம்-2 (Post.9038)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9038

Date uploaded in London – – 15 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அடங்காத ஆத்திச்சூடியும் CONSULT ME TO INSULT-ம் -2

Kattukutty

அடங்காத ஆத்திசூடி!

டங்கி நடக்காதே

தரிப்பது லாபம்

ராகு காலம் ஒண்ணரை மணி நேரம்.

என இளிக்கப் பழகு

தை கிடைத்தால் வாங்கிக் கொள்

ரோடு ஒத்து வாழாதே

மகண்டம் என்றைக்கும் உண்டு

ங்குவது இயற்கை

யோ பாவம்

ன்று பட்டால் உண்டு ஆபத்து

டு ஓடு ஓடிக் கொண்டே இரு

டதம் இல்லை அடிபட்டால்.

CONSULT ME TO INSULT  -2

(லுயிஸ் சேபியஸ் எழுதிய “2000 more insults” என்பதிலிருந்து சில துளிகள்)

அவனிடம் மூன்று மூக்குக் கண்ணாடிகள் உள்ளன. ஒன்று கிட்டப் பார்வைக்கு, இரண்டாவது தூரப் பார்வைக்கு, மூன்றாவது மற்ற

இரண்டையும் தேடுவதற்கு!!!

அவனுக்கு சிகரட் லைட்டரை விட தீக்குச்சியை உபயோகிப்பது

தான் பிடிக்கிறது. ஏனென்றால் சிகரட் லைட்டரால் பல்லைக் குத்த

முடிவதில்லையாம்!!!

‘வீட்டில் எஜமானனாக இருப்பது எப்படி?’ என்ற புத்தகத்தை வாங்கி

பல நாளாகியும் இன்னும் படித்து முடிக்கவில்லை……காரணம் அவன் மனைவி புத்தகத்தைப் படிக்க அனுமதி கொடுக்க மறுத்து விட்டாள்.

அவன் உயரம் 6 அடி.அது திடீரென்று ஐந்தரை அடியாக குறைந்து

விட்டது – காரணம் அவன்,சலூனுக்கு போய் வந்ததால்…….

அவனது மேலதிகாரி செய்வது எல்லாமே சரியான காரியமாகத் தான் இருக்கும்.முக்கியமாக அவர் தவறான காரியம் செய்யும் போது!!!.,

அந்தப் பணக்காரரின் நாய் குட்டி தொலைந்து போய்விட்டது.

ஆனால் பேப்பரில் விளம்பரம் போட மாட்டேன் என்கிறார். ஏனென்றால் அவர் நாய் குட்டிக்கு படிக்கத் தெரியாதாம்!!!

அவன் கஷ்டத்தில் இருக்கும் போது நீங்கள் அவனுக்கு உதவி செய்தால், அவன் உங்களை மறக்கவே மாட்டான்- முக்கியமாக

மறுபடியும் கஷ்டம் வரும் வரை……..

கண்டதும் காதல் ஏற்படவில்லை அவள் மேல் அவனுக்கு……..

இரண்டாம் முறை கண்டபோது தான் ஏற்பட்டது……காரணம்

முதன் முறை பார்க்கும்போது அவள் பணக்காரி என்று அவனுக்குத்

தெரியாது……

அவனிடம் நீங்கள் கைமாறாக பணம் கொடுத்தால் “சார், என்றும்

உங்களுக்கு கடன் பட்டிருப்பேன்” என்பான்.கடைசி வரை அது

உண்மையாகவே இருக்கும்!!!

அந்த வழுக்கைத் தலை மனிதருக்கு சலூன்காரர் மூப்பது ரூபாய்

சார்ஜ் செய்கிறார். கேட்டால் “முப்பது ரூபாய் முடி வெட்டுவதற்கல்ல, அதை தேடுவதற்குத் தான்” என்கிறார்!!!

tags- அடங்காத ஆத்திசூடி

***