அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள இழப்பு! (Post No.5622)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 4 November 2018

Time uploaded in London – 5-49 AM (GMT)

Post No. 5622

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

(PART OF A.I.R.RADIO TALK BY S NAGARAJAN)

1992லிருந்து அண்டார்டிகா 3.3 டிரில்லியன் டன் ஐஸை இழந்துள்ளது. இதன் விளைவாக உலகெங்கும் உள்ள கடலின் மட்டம் கால் அங்குலம் உயர்ந்துள்ளது.

விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அண்டார்டிகா மிக வேகமாக உருக ஆரம்பித்துள்ளது.
அண்டார்டிகாவில் உள்ள பனிப்படலங்கள் 2007லிருந்து மும்மடங்காக இழப்பை அடைந்து வருகிறது என்று பிரப்ல விஞ்ஞான இதழான நேச்சரில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.60 முதல் 90 விழுக்காடு சுத்த நீரை அண்டார்டிகா தான் உலகிற்கு வழங்குகிறது என்பது மிக முக்கியமான விஷயம்.

இதுவரை எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இது மிகவும் பெரியது. 24 ஆய்வுகளை 84 விஞ்ஞானிகள் 44 நிறுவனங்களிலிருந்து எடுத்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 7300 கோடி மெட் ரிக் டன் ஐஸை இழந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது 21900 கோடி மெட் ரிக் டன் ஐஸை இழக்கிறது என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படியே போனால் 2100ஆம் ஆண்டில் கடல் மட்டம் ஆறு அங்குலம் உயர்ந்து விடும்; இது மிக அபாயகரமான ஒன்று என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆண்ட் ரூ ஷெப்பர் என்ற லீட்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ப்ரூக்ளினில் வருடத்திற்கு ஒரு முறை தான் வெள்ளச் சேதம் இப்போது ஏற்படுகிறது. கடல் மட்டம் ஆறு அங்குலம் உயர்ந்தால் 20 முறை வெள்ளச் சேதம் ஏற்படும் என்கிறார்.

அண்டார்டிகாவில் ஏற்படும் பனிப்படலத்தின் இழப்பு உலகளாவிய விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விஞ்ஞானிகள், “ உடனடியாக நாம் எடுக்கும் நடவடிக்கையால் மட்டுமே வப்போகும் பயங்கரத்தைத் தடுக்க முடியும். அண்டார்டிகாவின் எதிர்கால மனித குலத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. இன்று உடனடியாக எடுக்கப்படும் போர்க்கால நடவடிக்கைகள் சுற்றுப்புறச் சூழல் கேட்டை மெதுவாகத் தடுக்கும். மீளவே முடியாத சோகத்திலிருந்து விடுபட அனைவரும் இதற்காக ஒன்றுபட்டு நல்ல செயல் திட்டத்தை ஏற்படுத்தி அமுல் படுத்துவோமாக” என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஒன்றுபட்ட நடவடிக்கையால் உலகைக் காப்போம்; உயர்வோம்!

***