தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி – 2(Post 8682)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8682

Date uploaded in London – –14 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி – 2

 தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி முதல் பகுதி 12-9-2020 வெளியானது. தமிழ் மொழியைவிட மிகப் பழமை வாய்ந்த கிரேக்க மொழியின் பெருமையைத் தொடர்ந்து காண்போம்.

இதை மொழியியல் அறிஞர்கள், (INDO-EUROPEN LANGUAGE FAMILY)  இந்திய ஐரோப்பிய மொழிக்   குடும்பத்தில் வைக்கின்றனர். இந்த மொழியில் சாக்ரடீஸ் , அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற அறிஞர்களும் அலெக்ஸாண்டர் போன்ற பேரரசர்களும், வரலாற்று அறிஞர்களும், நாடக ஆசிரியர்களும் , ஹோமர் போன்ற கவிஞர்களும் தோன்றினர் .

முதலில் கி.மு 1300-ல் லீனியர் பி என்ற எழுத்தில் களிமண் படிவத்தில் எழுதப்பட்டது. பின்னர் 600 ஆண்டுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. பெரிய மௌனம். அடுத்ததாக கி.மு.700 முதல் தொடர்ந்து எழுத்து  வடிவ சாட்சியங்கள் கிடைக்கின்றன. அது  முதல் கிரேக்க தீபகற்பத்திலும் சைப்ரஸ் தீவிலும் கிரேக்க மொழி ஆட்சி – இன்று வரை – நடந்துவருகிறது.

கிரேக்க மொழியின் வரலாற்றைப்  பின்வருமாறு பிரிப்பர் :–

மைசீனியன் நாகரீக காலம் – கி.மு.1300

பழங்காலம் / புராதன காலம்- கி.மு 700 முதல் கி.பி.500 வரை

இதன் உட் பிரிவுகள் –

மிகப் பழைய வடிவம் – கி.மு 700 முதல் கி.மு 500 வரை;

 செம்மொழிக் காலம் – கி.மு 500 முதல் 300 வரை;

எல்லினிய காலம் – கி.மு 300 முதல் கி.பி 1 வரை;

ரோமானிய காலம் – கி.பி 1 முதல் 500 வரை;

இதன் பின்னர் பைஸான்டைன் காலம் – கி.பி.500 முதல் 1450 வரை;

துருக்கிய – வெனிஸ் நகர காலம் – கி.பி 1450 முதல் கி.பி 1800 வரை;

தற்கால (MODERN GREEK) கிரேக்க மொழி – .கி.பி. 1800 முதல்

ரோமானிய காலத்தில் லத்தின் மொழிக்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டபோதும் கிரேக்க மொழி மீண்டும் உயிர்பெற்று எழுந்தது. துருக்கிய ஆட்டோமான் காலத்தில் கிரேக்க மொழி முதலிடம் பெற்றது.

1923-ம் ஆண்டில் துருக்கி மீது கிரீஸ் படையெடுத்தது. இதனால் துருக்கி- கிரீஸ் இடையே மக்கள் பரிமாற்றம் நடந்தது. கிரேக்க மொழி பேசுவோர் பெரும்பாலும் கிரேக்க நாட்டிற்குள் தஞ்சம்  புகுந்தனர் .

கிரேக்க மொழியில் மாற்றம்

காலத்தினால் ஏற்படும் மாற்றம் (HISTORICA CHANGES IN MEANING AND PRONUNCIATION) , எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது. கிரேக்க மொழியிலும் இந்த மாற்றம் காணப்படுகிறது மைசீனியன் நாகரிக எழுத்தும் அதற்கு 600 ஆண்டுக்குப் பின்னர் தோன்றிய ஹோமர் கால எழுத்தும் வேறுபட்டது. மைசீனியர் காலத்திய இலக்கியம் எதுவும் இல்லை. அப்போது களிமண் படிவங்களில் பொருட்களின் பட்டியல் (INVENTORIES ONLY)  மட்டுமே உளது

கிரேக்க மொழியிலும் வட்டார வழக்குகள் (DIALECTS) இருந்தன. அவைகளில் ஏதென்ஸ் நகரில் பேசப்பட்ட (ATTIC GREEK) கிரேக்க மொழியே சிறந்தது. கி.பி.1500 வரை பெரிதும் பயன்பட்டது. இதனுடைய பேச்ச்சு வழக்கு கொய்னே (koine)  எனப்படும் வடிவம் ஆகும். இதில் பைபிளின் பழைய , புதிய ஏற்பாடுகள் மொழிபெயர்க்கப்பட்டன.

சம்ஸ்கிருத மொழியில் வேர்ச் சொற்களைக்கொண்டு புதிய சொற்களை உண்டாக்குவது எளிது. இதனால் சம்ஸ்கிருதத்துக்கு அகராதியே  தேவை இல்லை. வேர்ச் சொற்களின் பொருள் தெரிந்தால் சொல்லின் பொருளை அறிய முடியும் என்பர். 2700 ஆண்டுகளுக்கு முன்னரே தாது படத்தில் 1970 வினைச் சொற்களைப் பட்டியலிட்டுவிட்டனர். அதே போல கண படத்தில் பெயர்ச் சொற்களை பட்டியலிட்டுவிட்டனர். இதை அறிந்தால் போதும்.

இதே போல கிரேக்க மொழியும் பிற்காலத்தில் பெயர் பெற்றது  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு THE GREEKS HAD A WORD FOR IT  . இதற்கு கிரேக்க மொழியில் — கட்டாயம் / ஏற்கனவே — ஒரு சொல் உண்டு . லிட்டல்- ஸ்காட் தொகுத்த கிரேக்க- ஆங்கில அகராதியில் 3 லட்சம் சொற்கள் உண்டு. ஜெர்மன் மொழியிலும் புதிய சொற்களை நாமாக உருவாக்கலாம். இவை இரண்டும் சம்ஸ்கிருத மொழியை  மூல மொழியாகக் கொண்டவை என்பது குறிப்பிட்டது தக்கது.

தற்காலத்திய கிரேக்க மொழி பழங்கால கிரேக்க மொழி போலத்  தோன்றும். ஆனால் ஒலியில் – ஒலிக்கும் விதத்தில் —மாறுபட்டிருக்கும். பழங்கால கிரேக்க மொழி இசை போல ஒலித்தது. வேதங்களை இன்றும் ஏற்றியும் இறக்கியும் சமமாகவும் — உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் — என்று உச்சரித்துப் பாடுவர். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் இதுபற்றி அவரது சூத்திரங்களில் செப்புகிறார். ஆனால் பிற்காலத்தில் இது வழக்கொழிந்து போனது. இதே போல பழங்கால கிரேக்கம் இருந்தது. இது தவிர இன்று பிற மொழிகளில் காணப்படும் சில அம்சங்கள் இருந்து மறைந்தன

தமிழுடன் ஒப்பிடவேண்டுமானால் ஒரு எடுத்துக்காட்டு சொல்லலலாம் இன்று மஞ்சள் ,சங்கம் போன்ற சொற்களை சம்ஸ்கிருத (Manjal, Sangam)  ஜ , க போல உச்சரிக்கிறோம் சங்க காலத்தில் சட்டம், கட்டம் போன்ற சொற்களில் உள்ளது போலவே ச, க (cha, ka) ஆகியவற்றை (Cankam, mancal) உச்சரித்தனர் என்பர் மொழியியல் வல்லுநர்கள். இன்று நாம் ஸ்டாலின், ஜெய லலிதா, எம்.ஜி .ஆர் , ஷேக்ஸ்பியர், ஹாரி பாட்டர் , ஜோசப் , அப்துல் என்று சொல்கிறோம்.. சங்க காலத் தமிழர்கள் இந்த ஒலிகளை கேட்டே இருக்கமாட்டார்கள். இந்த ஒலிகள் அப்போது தமிழில் இல்லை. தொல்காப்பியர் ச, ஞ, ய, ல, ர போன்ற எழுத்துக்களில் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாதென்றார். இன்று எவரும் இதைப் பின்பற்றுவதில்லை .

வெள்ளைக்காரர்கள் இந்தியர்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் படுகொலை செய்ததை நாம் அறிவோம்.

கிரேக்கர்களும் இந்தியப் பெயர்களைப் படுகொலை செய்தனர்.தமிழ்ப் பெயர்களை தொண்டிஸ் , முசிரிஸ் என்று எழுதினர் . இன்னும் பல பெயர்களை உருத்தெரியாமல் மாற்றினர் . அவற்றை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.

இவைகளை அறிந்தால் தமிழ்  முட்டாள்கள் தெலுங்கு, சம்ஸ்கிருதம் போனற மொழிகளைக் கிண்டல் செய்வது எவ்வளவு மடைமை என்பது விளங்கும். சம்ஸ்கிருதம் , தமிழ் உள்பட எந்த இந்திய மொழிகளிலும் HARRY POTTER ஹாரிபாட்டரை ஆங்கில உச்சரிப்புக்கு இணையாக எழுத முடியாது!!!! இப்படி ஒவ்வொரு மொழியிலும் சில குறைபாடுகள், சிறப்புகள் இருக்கும். சம்ஸ்கிருதத்தில் குறில் எழுத்துக்களான  எ , ஒ  கிடையாது. தமிழில் ஷ , ஸ, ஹ, ஜ , க்ஷ இல்லாததால் பல வெளிநாட்டுப் பெயர்களை உச்சரிக்கமுடியாது. தமிழ்ப்படுத்தினால் அது வேறு மொழிக்காரர்களுக்கு விளங்காது!!!

to be continued………………………………………………………

tags– தமிழ் மொழி, அண்ணன், கிரேக்க மொழி-2,

Xxx subham xxx