WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,326
Date uploaded in London – – 11 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வியாசர் என்பவரை இந்துக்களின் எல்லா பிரிவினரும் ‘குரு’ என்று ஏற்கின்றனர் ; அது மட்டுமல்ல; வியாசரை விஷ்ணுவின் அ வதாரமாகவும் கொள்கின்றனர். அவரது நினைவாக வியாச பெளர்ணமி தினம் முதல், 4 மாதங்களுக்கு சாதூர் மாஸ்ய விரதமும் அனுஷ்டிக்கின்றனர்.;ஏன் தெரியுமா?
அவர் இறந்தவுடன் கலியுகம் துவங்கப் போவது பஞ்சாங்கக் கணக்குப்படி தெரிந்தது; உடனே அவசரம் அவசரமாக புராண இதிஹாச வேதங்களைத் தொகுத்தார். அவர் பெயரில் உள்ள விஷயங்களைக் கணக்கிட்டால் பத்து கின்னஸ் புஸ்தகத்தில் எழுதலாம் ; தனக்குப் பின்னர் பிறக்கப்போகும் கலியுகத்தில் மக்களுக்கு வேதங்களைப் பின்பற்ற நேரமும் இருக்காது; நாட்டமும் இருக்காது என்று கருதி 1400 வரிகளில் இந்து மதத்தை ‘ஜுஸ்’ பிழிந்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்தில் சேர்த்தார். மகாபாரதத்தின் மொத்தவரிகள் இரண்டு லட்சம் வரிகள். அதில் ஒரு மில்லியன்- பத்து லட்சம் சொற்கள் உள்ளன !
அதே போல 18 புராணங்களையும் தொகுத்தார். இதை எல்லாம் விட ஒரு அற்புதமான வேலையை அவர் செய்தார். அதில்தான் அவர் உலக மஹா ஜீனியஸ் / மஹா மேதாவி என்பது தெரிகிறது. எழுதக்கூடாது; வாய் மொழி மூலமே பரப்ப வேண்டும்; அதிலும் ஒலி பிசக்கக்கூடாது ; அதிலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் உண்மை உடையவர்கள் மட்டுமே கற்கவேண்டும் என்று விதி மேல் விதிகளைக் கொண்ட வேதங்களை பலரும் பின்பற்றமுடியாமல், அதாவது நினைவிற் வைத்துக்கொள்ள முடியாமல், தவிப்பதைக் கண்டார். உடனே அத்தனையையும் திரட்டி 4 பிரிவுகளாகப் பிரித்தார். அதை விட முக்கியம் அதைப் பரப்ப 4 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் ; ‘இதோ பாருங்கள்; இனி உங்கள் பொறுப்பு இதைப் பரப்புங்கள் என்றார்
. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்கத் தமிழ் நூல்களும் நான் மறை அந்தணர் பற்றீச் சொல்லி, ‘எழுதாக் கற்பு’ என்று வேதங்களைப் புகழ்கின்றன. அது மட்டுமல்ல. தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் certificate கொடுத்து இது நல்ல புஸ்தகம்தான் என்று சொல்லியவரும் அப்படிப்பட்ட நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சார்யார் ஆவார் .
xxxx
ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் .
தமிழ் மன்னர்கள் உள்பட இந்தியா முழுதும் மன்னர்கள் வேதப் பிராமணர்களுக்கு ஏன் தங்கக் காசு கொடுத்தனர் (ஹிரண்ய தானம்), ஏன் நில புலனகளைக் கொடுத்தனர் (பிரமதேயம்) என்ற கேள்வி என் மனதில் வரும்; அது மட்டுமா? உலக மஹா தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய பாரதி வேதம் என்று வாலாக என்று கொட்டு முரசே என்று ஏன் செப்பினான் என்றும் எண்ணுவேன்.
இதற்கெல்லாம் பதில் ரிக் வேதத்தின் கடைசி பாடலில் இருக்கிறது (10-11) அதுதான் 1028 ஆவது துதி. பத்தாயிரத்து 552 ஆவது மந்திரத்துக்கு மூன்று, நான்கு மந்திரத்துக்கு முந்திய 2, 3 மந்திரங்கள்.
அங்கே வேதத்தின் சாரத்தை செப்பிவிடுகிறார்.
xxxx
ஒற்றுமை! ஒற்றுமை! ஒற்றுமை!
சொல்லிலே, செயலிலே சிந்தனையில் ஒற்றுமை !
முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் ஏற்பட்ட LEAGUE OF NATIONS லீக் ஆப் நேஷன்ஸ் என்ற சர்வ தேச சபையும் இதையே சொன்னது; ஹிட்லரும் முசோலினியும் கேட்கவில்லை இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்தது ; அது முடிந்த பின்னர் ஐ.நா. சபை தோன்றியது. அதன் சாசனத்திலும் அமைதி, ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது
நமது காலத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம் ; கெ ட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்று பாரதி தாசன் பாடினார் ; காஞ் சி பரமாசார்ய சுவாமிகள் ஐ நா சபையில் பாடுவதற்காக எம் எஸ் சுப்புலெட்சுமிக்கு எழுதிக்கொடுத்தித்த ‘மைத்ரீம் பஜத பாடலிலும் இதையே சொன்னார். ஆனால் உலக மகா மேதாவி வேத வியாசர் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தின் கடைசி பாடலில் முத்தாய்ப்பாக வைத்தார். அதாவது 4 வேதங்களின் 20,000 மந்திரங்களின் மொத்தக் கருத்தே இதுதான் என்பது அவரது துணிபு..
அதைப் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு சுவையான செய்தியைச் சொல்கிறேன். “சரி, ஆறு மாதத்தில் ரிக் வேதத்தின் 10,552 மந்தி ரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்து முடித்துவிட்டோம்; கடைசி வேதமான அதர்வண வேதத்தையும் படிப்போமே” என்று எடுத்தால், அதில் ரிக் வேதத்தை விட அருமையான ஒற்றுமை மந்திரம் இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.
xxx
இதோ இரண்டு மந்திரங்களையும் நீங்களும் படியுங்கள்
ரிக் வேதம் 10-191
“எல்லோரும் ஒன்று சேருங்கள்
எல்லோரும் ஒன்றாகப் பேசுங்கள்
முன் காலத்தில் தேவர்களும் ஒற்றுமையுடன் இருந்து
வேள்வியில் தங்களுக்குரிய பங்கினை ஏற்றார்கள் .
உங்களுடைய மந்திரங்கள் ஒன்றுபோல ஒலிக்கட்டும்
உங்களுடைய அசெம்பிளியில் ஒன்றுபட்ட குரல் கேட்கட்டும்
எல்லோரும் ஒன்று போல சிந்திக்கட்டும்
எல்லோரும் ஒன்றையே நாடட்டும்
உங்களுடைய அசெம்பிளி தீர்மானமும் ஒன்றாக இருக்கட்டும்
உங்களுடைய இருதயம்/ உள்ளக்கிடக்கை ஒன்றுபோல ஆகட்டும்
உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றையே சிந்திக்கட்டும்” .
இதிலுள்ள ‘அசெம்பிளி’ என்ற ஆங்கிலச் சொல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் Ralph T H Griffith தின் சொல். இன்று நாடு முழுதும் பயன்படுத்தும் சபை/ அவை என்ற சொல் சம்ஸ்க்ருத மந்திரத்தில் உள்ளது
XXX
இதோ அதர்வண வேத ஒற்றுமை மந்திரம்
மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம்
“நான் உங்களுக்கு ஒரே இருதயத்தை, ஒரே மனத்தைக் கொண்டு வருகிறேன்.
வெறுப்பிலிருந்து விடுதலை பெறுக; பிறந்த கன்றுக்குட்டியிடம் தாய்ப்பசுவுக்கு உள்ள பாசம் போல பாசம் பெருகட்டும்
‘தந்தை தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை மகன் உணரட்டும் ; கணவனிடம் மனைவி அன்பு மழை பொழியட்டும்; தேன்மிகு இனிமையான சொற்களை பேசட்டும்
சகோதரன் மற்ற சகோதரனை வெறுக்கக் கூடாது; சகோதரி, மற்ற சகோதரியை வெறுக்கவேண்டாம் ; ஒற்றுமை நிலவுக; ஒரே நோக்கம் நிலவுக; மங்கள மொழியை உதிருங்கள்
கடவுளர்/ தேவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை ; பிரிந்து செல்வதில்லை; அந்த குணத்தை உங்கள் வீட்டில் நிலை நாட்டுகிறோம் ; உங்கள் வீட்டிலுள்ள புருஷர்கள் அதையே பின்பற்றுவார்களாகுக
ஒரே எண்ணத்துடன் , ஒரே முயற்சியுடன், இணைந்து வாருங்கள்; பிரிந்து செல்லாதீர்கள் ;ஒருவருக்கொருவர் இனிமையான மொழியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை ஒரே நோக்கம், ஒரே எண்ணம் உடையவனாக ஆக்குவேன் (மேலும் வலுப்படுத்துவேன்)
நீங்கள் ஒரே பானத்தை பருகுங்கள்; ஒரே உணவை சம கூறிட்டு உண்ணுங்கள்; நானும் உங்களை அன்பால் பிணைக்கிறேன் ; ஓர் சக்கரத்திலுள்ள ஆரங்கள் போல ஒன்று பட்டு அக்கினி தேவனை வழிபடுங்கள் .
நான் உங்களை ஒன்றாகக் கட்டும் மந்திரத்தின் மூலம் பிணைக்கிறேன் ஒரே எண்ணத்துடன் ஒரே தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு செய்கிறேன்
தேவர்களைப் போல அமிர்தத்தை போற்றுங்கள்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் அன்பு அலை வீசட்டும் “.
–மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம் (சூக்தம் 101)
xxx
என் கருத்து
இதற்கு நான் உரையோ விளக்கமோ சொல்லத் தேவை இல்லை; முதலில் தனி மனிதனிடம் நேசமும் பாசமும் இருக்க வேண்டும்; பின்னர் குடும்பத்தில் அது இருக்க வேண்டும். பின்னர் அது புறச் சூழலில் எதிரொலிக்க வேண்டும். அதன் மூலம் எங்கும் அமைதி ஓ ற்றுமை ஓங்கி வளரும்
இந்த இரண்டு கீதங்களையும், துதிகளையும் எல்லோரும் படித்தா லோ அல்லது வேத பிராமணர்கள் ஒலிக்கும் பொழுது கேட்டாலோ சர்வ மங்களம் உண்டாகும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ!
XXX
RIG VEDA 10-191 (Last Hymn in the RV)
संस॒मिद्यु॑वसे वृष॒न्नग्ने॒ विश्वा॑न्य॒र्य आ ।
इ॒ळस्प॒दे समि॑ध्यसे॒ स नो॒ वसू॒न्या भ॑र ॥ १०.१९१.०१
सं ग॑च्छध्वं॒ सं व॑दध्वं॒ सं वो॒ मनां॑सि जानताम् ।
दे॒वा भा॒गं यथा॒ पूर्वे॑ संजाना॒ना उ॒पास॑ते ॥ १०.१९१.०२
स॒मा॒नो मन्त्रः॒ समि॑तिः समा॒नी स॑मा॒नं मनः॑ स॒ह चि॒त्तमे॑षाम् ।
स॒मा॒नं मन्त्र॑म॒भि म॑न्त्रये वः समा॒नेन॑ वो ह॒विषा॑ जुहोमि ॥ १०.१९१.०३
स॒मा॒नी व॒ आकू॑तिः समा॒ना हृद॑यानि वः ।
स॒मा॒नम॑स्तु वो॒ मनो॒ यथा॑ वः॒ सुस॒हास॑ति ॥ १०.१९१.०४
–subham—
Tags- ரிக் வேதம், அதர்வ வேதம், ஒற்றுமை, தேசீய கீதம், உலக கீதம் , மந்திரம்
You must be logged in to post a comment.