வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2 (Post No.10,343)

EGYPTIAN FROG GODDESS HEQET OR HEKET= HINDU SHAKTI 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,343

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள்” (Post.10,337) -என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் இதுவரை நான் 5 அதிசயங்களைக் கண்டுள்ளேன். அதர்வண வேதம் முழுதும் மாய , மந்திர, இந்திர ஜால (Magic) வித்தைச் செய்திகளாக உள்ளன. யஜுர் வேதத்திலும் மேலும் அதிசயச் செய்திகள் உள்ளன. ஆகவே தவளைகள் பற்றி மேலும் அதிசயச் செய்திகள் கிடை க்கலாம் .

இதுவரை நாம் கண்ட அதிசயங்கள் 4; அவையாவன

1. ரிக் வேதத்தில் வசிஷ்டர் பாடிய நகைச் சுவை மிகுந்த தவளைப் பாட்டு (RV 7-103). இதை அப்படியே கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனீஸ் காப்பி அடித்து கிரேக்க மொழியில் ஒரு நாடகம் செய்தார். இது உலக அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தி ; கம்பனும் இதே பாணியில் தவளை பற்றிப்   பாடினான்  (எனது முந்தைய கட்டுரைகளில் காண்க).

இரண்டாவது அதிசயம்- ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் தகனக் கிரியைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலில் சடலத்தை எரித்த பின்னர் அங்கே பெண் தவளை ஒன்றை வைக்க வேண்டும் என்பதாகும் .

மூன்றாவது அதிசயம் – அதர்வண வேதத்தில்  இருக்கிறது; சிவப்பு -நீல நிற நூலைக் கட்டி தங்கத்துடனும் ‘அவகா’ என்ற நீர்த் தாவரத்துடனும் கால் வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விட  வேண்டும்  என்று சொல்லி இருப்பதைக் கண்டோம்..

நாலாவது அதிசயம் — அதர்வண வேதத்தில் கண்வக்கா , கைமுக்கா , தஹூரி என்றெல்லாம் தவளைக்குப் பெயர் சூட்டும் மந்திரம் உள்ளது. இதை வெள்ளைக்காரர்கள் , ஒலி நயம் காரணமாக ரிஷிகள் பாடி மகிழ்ந்தனர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் நான் அது தவறு என்பதை அலிகி , விளிகி பாம்பு விஷயங்களைக் காட்டி விளக்கினேன்.

XXXX

GREEK GODDESS HECATE= HINDU SHAKTI 

இப்போது புதிய அதிசயத்துக்கு வருவோம்.

ஐந்தாவது அதிசயம்

மொழி இயல் (Linguistic researchers) பற்றி ஆராய்வோருக்கு சில விஷயங்கள் கண்களில் ‘சட்’டென்று பட்டு விடும்

ரிக் வேதத்தில் ‘ஸபா’ என்ற சொல் உள்ளது. அதை ‘அவை’ என்று மாற்றி தமிழர்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பன தெயாத இந்தியர்கள் இருக்க முடியாது. அங்கே ‘ப’ என்பது தமிழில் ‘வ’ என்று மாறுகிறது. இன்றும் நாம் ‘பெங்கால்’ என்பதை ‘வங்கம்’ என்கிறோம் . இந்த மாற்றங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து இருக்கிறது!

இதே போல நாம் ‘ச’ என்று சொன்னால் கிரேக்க பாரசீக மொழிகளில் ‘ச’ கிடையாது; அதை அவர்கள் ‘ஹ’ என்பர். இதனால்தான் சிந்து நதிக்கரையில்’ அதற்கு அப்பாலும் வசித்த நம் எல்லோரையும் அவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று எழுதிவிட்டனர் .

இந்துக்கள் ‘சக்தி’ என்றால் அவர்கள் ‘ஹக்தி’ என்பார்கள் . இதே பெயரில் எகிப்திலும் , கிரேக்க நாட்டிலும் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றில் கிரேக்க நாட்டு ‘ஹெகதி’க்கு நாம் ‘சக்தி’ பற்றி சொல்லிய வருணனைகள் பொருந்துகின்றன.

எகிப்து நாட்டில் ‘ஹெகதி’ Heqet, Heket என்ற தேவதைக்கு தவளை உருவம் கற்பித்துள்ளனர். அவளை குழந்தை பிறப்பதில் உதவவும் தேவதையாகவும் மகப்பேறு மருத்துவச்சி என்றும் பழைய எகிப்திய நூல்கள் வருணிக்கின்றன.

இப்போது நாம் பழைய விஷயங்களை ஒப்பிடுவோம் . சுடுகாட்டில் ஏன் இந்துக்கள், பெண் தவளையை வைத்தனர்? கால்வாயில் ஏன் இந்துக்கள் நீர்  தாவரத்துடன் தவளையை விட்டு திறப்பு விழா நடத்தினர்?

இதற்கு விடை: மறு பிறப்பு, மறு மலர்ச்சி,  (Rebirth, Reincarnation, Resurgence) புத்தெழுச்சி ஆகும் அதாவது தவளை முட்டையாக தோன்றி மீன் போல உருமாறி (தலைப் பிரட்டை Tadpole) நான்கு கால் தவளையாக உருமாறுகிறது. இது மறு பிறப்பைக் குறிக்கும். அது மட்டுமல்ல தவளைக்குள்ள அபூர்வ குணம் நீரிலும் வசிக்கும், நிலத்திலும் வசிக்கும். (Amphibian) கல்லுக்குள் தேரையாகவும் வசிக்கும் .அத்தோடு இந்துக்கள் நீர்த் தாவரத்தையும் கால்வாயில் விட்டனர். அந்த ‘அவகா’ தாவரத்தை இன்று லண்டன் முதலிய இடங்களில் அக்வேரியம் aquarium எனப்படும் மீன் காட்சி சாலைகளில் தண்ணீர் தொட்டிக்குள் காணலாம். இதன் அபூர்வ குணம் தண்ணீருக்குள் வளர்ந்து அதை சுத்தப்படுத்தும் . இதை அறிந்த வேத கால ரிஷிகள் இதையும் சேர்த்து கால்வாயில் விடச் சொன்னார்கள்.

தவளையின் இனப்பெருக்கத்தையும் (fertility) , அதன் உரு மாற்ற (Metamorphosis) குணத்தையும் கண்ட எகிப்தியர் இந்துக் கடவுளுக்கான ‘சக்தி’க்கு தவளை உருவத்தைக் கொடுத்து அதை ‘ஹெகதி’ (சக்தி என்றனர்)

இப்போதும் மேற்கு வங்கம் பீஹார் போன்ற இடங்களில் இந்துக்கள் ‘ஷஷ்டி’ Shasthi என்ற தேவதையாக வணங்கி வருகின்றனர். காலப்போக்கில் சஷ்டியில் (ஆறு என்பதன் சம்ஸ்கிருதம்) முருகன் வழிபாடு இருப்பதாலும், முருகனை 6 கிருத்திகைப் பெண்கள் வள ர்த்தத்தாலும் அதை ஸ்கந்தனுடனும் தொடர்பு படுத்தினர்.

தவளை உருமாற்றம் செய்வது போலவே இந்து தெய்வங்கள் உருமாற்றம் அடைவதையும் காணலாம் (Metamorphosis of Hindu Gods) . ஒரே பார்வதி தேவியை – ஒரே சக்தி அன்னையை- மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயரில் அழைப்பதைக் காணலாம் – 51 சக்தி பீடங்களின் தேவி பெயர்களின் பட்டியலைப் பார்த்தால் இது உங்களுக்குத் புரியும். அத்தோடு local லோக்கல் கதைகளை இணைத்து தலபுராணமும் சொல்லுவார்கள். “கடவுள் ஒருவரே; அவரை பல குணங்களில் ,  பல ரூபங்களில் வணங்கலாம்”– என்பது இந்துக்கள் உலகிற்குக் கற்பித்த  பாடம்.

இந்துக் கடவுளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றோர், அதற்கு மொழி மாற்றம் காரணமாக புதிய உச்சகரிப்பை – புதிய  நாமத்தை — புதிய கதைகளை உருவாக்கி லோக்கல்/ உள்ளூர்  மக்களை கவர்கின்றனர் .

இதுதான் சக்தி – ஷஷ்டி ஆகி கிரேக்க நாட்டில் ஹெகதி ஆகிக் – எகிப்தில் தவளை ரூபா ஹெக்தி ஆக உரு மாறிய கதை.

அதர்வண வேத மந்திரம் ஒவ்வொன்றும் அற்புத விஷயங்களைச் சொல்கிறது. நம்முடைய முதல் கடமை வேதம் படித்தவர்களைப் பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து, தயவு செய்து இதை ஒலி மாறாமல் சொல்லி வாருங்கள்; நாங்கள் பிற் காலத்தில் அர்த்தம் சொல்கிறோம் என்று சொல்ல வேண்டும்!!

இன்று காலை நான் படித்த அதர்வண வேத ஐந்தாவது காண்டத்தின் முன்னுரையிலேயே, இதிலுள்ள 30 பாடல்களுக்கும் சாயனர் உரை  எழுதவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனருக்கே அர்த்தம் புரியவில்லையா? ஆராய்ச்சிகளைத் தொடர்வோம் .

–subham–

TAGS- எகிப்து, தவளை, தேவதை, கிரேக்க, ஹெகதி , சக்தி , அதர்வண வேதம், அதிசயங்கள்

வேத கால வானியல் அதிசயங்கள் (Post No.8952)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8952

Date uploaded in London – –20 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வான சாஸ்திரத்தில் இந்துக்கள் அடைந்த முன்னேற்றம் வியப்பானது. தமிழ், எபிரேயம் எனப்படும் ஹீப்ரு , சீ ன, பாரஸீக , கிரேக்க, லத்தின் மொழிகளில் இலக்கியங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே இந்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் நட்சத்திர பட்டியல், கிரஹப் பட்டியலை எழுதி வைத்துவிட்டனர். மேற்கூறிய  மொழிகள் பட்டியலில் தமிழ்தான் சின்னப்பையன். அதாவது கடைசியில் இலக்கியம் படைத்த குட்டித்தம்பி .

பைபிளின் பழைய ஏற்பாடு OLD TESTAMENT OF BIBLE  , பாரசீக செண்ட் அவஸ்தா ZEND AVESTA ஆகியன கி.மு 900  வாக்கில் உருவாயின. ஹோமர் கிரேக்க மொழியில் எழுதிய இலியட், ஆடிஸி /ஒடிஸி ILLIAD, ODYSSEY (இரண்டு உச்சரிப்புகளும்  சரி) ஆகிய காவியங்கள் கி.மு 800-ல் உருவாயின. லத்தின் மொழி காவியங்கள் தமிழுக்கு கொஞ்ச்ம்  முன்னால் தோன்றின. சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் உள்ள 30,000 வரிகளும் கி.பி.முதல் 3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தின் தேதி கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி 5-ம் நூற்றாண்டு வரை ஊசல் ஆடுகிறது. நிற்க.

இவற்றுக்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ரிக் வேதத்தில் நட்சத்திரங்கள், கிரஹங்கள் பற்றிய  குறிப்புகள் உள . ஆனால் முழுப் பட்டியல் யஜுர் வேதத்தில்தான் காணக்கிடக்கிறது.

முதலில் வானத்தைப் பார்த்து அதிசயித்த ரிக் வேத கவிஞன் (1-24-7 ரிக் வேதம்) வியக்கிறான் –

அஜீ கர்த்தனின் புதல்வன் ரிஷி சுநஸ் சேபன்  பாடுகிறான் —

“இந்த ஆகாயத்தின் ஆழம் மிகப்பெரியது. இதன் தரையைப் பார்க்க முடியாது இந்த அடி முடியற்ற ஆகாயத்தின் உச்சியில் தூய்மையான வருண பகவான் ஒரு ஒளிக்கற்றையை வைத்திருக்கிறான். அங்கிருந்து ஒளி கீழே பாய்கிறது “.

இந்தக்  கவிதையில் ரிஷி பயன்படுத்தும் சொல் ‘வனஸ்ய ஸ்தூபம்’. இது ‘ஒளித் தூண்’ , ‘ஒளி மரம்’ என்று சொல்லலாம் . பிரபஞ்சத்தை ஒரு வட்ட வடிவத்தில் உள்ள கூடாரமாகக் கண்டு அதிலுள்ள நட்சத்திரங்களையும் பாடுகிறார் கவிஞர்…….

“உச்சத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் இரவிலே தெரிகின்றன. பகல் நேரத்தில் மறைந்து விடுகின்றன. இவை வருணனின் தடைப்படாத செயல்கள்.  அவனது ஆணையின் கீழ்

சந்திரன் இரவில் பிரகாசித்துக் கொண்டு செல்கிறான்.”1-24-10

இதற்கு முந்தைய எட்டாவது மந்திரத்தில் பகலில் பிரகாசிக்கும் சூரியனையும் பாடுவதால் காலை முதல் இரவு வரை எல்லாம் வருணனின் நியதிப்படி நடப்பதைக்  கண்டு வேத கால மக்கள் குறிப்பு எடுத்ததை அறிகிறோம்

ஆழம் காண முடியாத, அடி முடியற்ற வானம் (BOTTOMLESS) என்பது சுவைத்துப் படிக்க வேண்டிய வரிகள்.

“இரவு .நேரத் திருடர்களைப் போலத்  தோன்றி , பகல் வந்தால் ஓடி விடுகின்றன விண்மீன்கள் என்கிறார் அதர்வண வேதக்  கவிஞர் .அப்போது சூரியன் உல கைப் பராமரிக்கிறான் என்கிறார் சூரியனை போலீசாகவும் நட்சத்திரங்களை திருடர்களாகவும் வருணிக்கிறார் என்றே தோன்றுகிறது — அதர்வண வேதம் 13-12-17; 20-47-14

சந்திரனின் பாதையையும் சூரியனின் பாதையையும் திதிகள், சுக்ல, கிருஷண பக்ஷங்கள் , தக்ஷிணாயணம் உத்தராயணம் என்றெல்லாம் காரணத்தோடு இந்துக்கள் பிரித்தனர். இதனால் அவர்கள் அறிவியல் பார்வையுடையோர் என்பது தெளிவாகிறது.. இதை விட முக்கியமான விஷயம் கிரேக்க மக்கள் உலகில் எழுதத் துவங்குவதற்கு முன்னரே கிரஹங்கள் நட்சத்திரங்கள், ருதுக்கள் பட்டியலை இந்துக்கள் வெளியிட்டதாகும் .

வான சாஸ்திர புஸ்தகம் எதையும் அவர்கள் எழுதவில்லை. இறைவனைத் துதி பாடியபோது , போகிற போக்கில் நட்சத்திரங்களைக் குறிப்பிடுகின்றனர்.

கிரஹங்கள் இடம் விட்டு இடம் செல்வத்தையும் ஒளிராமல் இருப்பதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்தனர் . ஆனால் நட்சத்திரங்கள் இருந்த இடத்திலேயே இருப்பதையும் கண் சிமிட்டுவதையும் TWINKLING கண்டு வேறுபடுத்தினர்.

‘ந சரதி  இதி நக்ஷத்ரஹ’ – ‘எது நடப்பத்தில்லையோ அது நட்சத்திரம்’ என்று வியாசர் மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் விளக்குகிறார் (290-36, சாந்தி பர்வம்)

தாரா என்ற சொல்லில் இருந்து STAR ஸ்டார் , மாச என்ற சொல்லிலிருந்து மந்த் MONTH என்னும் ஆங்கிலச் சொற்கள் வந்ததையும் அறிவது பொருத்தம்

மாச என்றால் நிலவு என்கிறது ரிக் வேதம்; அதாவது நிலவின் ஒரு சுற்று = 1 மாதம் . இதையே தமிழர்களும் பின்பற்றி ‘திங்கள்’ என்றால் சந்திரன், ஒரு மாதம் என்று பொருள் கொண்டனர்.

சந்திரன் செல்லும் பாதையில் உள்ள 27+1 நட்சத்திரங்களையும் இந்துக்கள் பட்டியலிட்டனர். பெளர்ணமி அன்று எந்த நட்சத்திரத்துக்கு அருகில் சந்திரன் நிற்கிறதோ அதை அந்த மாதத்துக்கு பெயராக சூட்டி , 12 பெரிய விழாக்களைக் கொண்டாடினர் . திரு ஞான சம்பந்தர் இந்த பெளர்ணமி விழாக்களைத்  தொகுத்து ஒரு பதிகமாகவே பாடிவிட்டார் . காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் (1894-1994) 12 மாதங்களின் பெயர்களையும் விளக்கி அற்புதமான சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

XXX

ரிக் வேதம் பாடும் நட்சத்திரங்கள்

அகா /மகம், அர்ஜுனி — 10-85-13

ரேவதி, புனர்வசு — 10-19-1

ரேவதி – 5-11-14; 4-51-4

திஷ்ய – 5-54-13; 10-64-8

சித்ரா – – 4-51-2

நக்ஷத்ரம் என்ற சொல்லையும் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறது

XxxX

கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரீய ஸம்ஹிதையில் 28 நட்சத்திரப் பெயர்களும் அவற்றுக்கான அதிதேவதைகளும்  கிடைக்கின்றன …….

கிருத்திகா – அக்னி

ரோஹிணி – பிரஜாபதி

மிருகசீர்ஷ -ஸோம

ஆருத்ரா – ருத்ர

புனர்வசு – அதிதி

திஷ்ய – ப்ருஹஸ்பதி

ஆஸ்லேஷா – ஸர்ப்ப

மகா – பித்ரு

பூர்வ  பல்குனி – அர்யமா

உத்தர பல்குனி – பக

ஹஸ்த – ஸவித்ரு

சித்ரா – இந்திர

சுவாதி – வாயு

விசாகா – இந்திர/ அக்னி

அனுராதா – மித்ர

ஜேஷ்டா – விஷ்ணு

விச்ருதி – பித்ர்

பூர்வ ஆஷாட – ஆப

உத்தர ஆஷாட – விஸ்வே தேவா

ஸ்ரோண – விஷ்ணு

ஸ்வவிஷ்ட – வசு

சதபிஷஜ – இந்திர

பூர்வ ப்ரோஷ்டபத – அஜ ஏகபாத

உத்தர  ப்ரோஷ்டபத — அஹிர் புதன்ய

ரேவதி – பூஷன்

அச்வா யுஜு – அஸ்வினவ்

அப பரணி – எமன்

இவை தவிர அபிஜித் என்னும் நட்சத்திரமும் சில கணக்குகளில் உண்டு

பஞ்சங்கமே  தேவை இல்லை. வனத்தில் சந்திரன் உள்ள நிலையைக் கொண்டே பெரும்பாலான விஷயங்களைக் கணக்கிட்டு  வந்தனர் .

FROM OUR OLD POSTS IN THIS BLOG……………………………..

  1. Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
    2) Bharani – No 28,29,41 Taurus பரணி
    3) Krittika – Pleiades கார்த்திகை
    4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி
    5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்
    6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை
    7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
    8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
    9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
    10) Maagha – Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
    11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
    12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
    13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
    14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
    15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
    16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
    17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
    18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
    19) Mula – Scorpio, tail stars மூலம்
    20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
    21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
    22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
    23) Dhanishtha – Delphinus அவிட்டம்
    24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
    25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
    26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
    27) Revathi – Zeta Piscum ரேவதி

Xxxxxxxxxxxx

Like we have Graha purusa and Vastu Purusa, Varahamihira gives us some information about Nakshatra Purusa:

The FEET of the stellar deity are represented by the star Mula

The LEGS by Rohini

The KNEES by Asvini

The THIGHS by two (Purva/Uttara) Asadas

The PRIVITIES by two Phalgunis (Purva/ Uttara)

The HIPS by Krittikas

The SIDES by Purva and Utthara) Bhadrapadas

The STOMACH by Revati

The BREAST by Anuradha

The BACK by Dhanista

The ARMS by Visakha

The HANDS by Hastha

The FINGERS by Punarvasu

The NAILS by Aslesa

The NECK by Jyeshata

The EARS by Sravana

The MOUTH by Pusya

The TEETH by Svati

LAUGHTER by Sathabishak

The NOSE by Magha

The EYES by Mrgasiras

The FOREHEAD by Chitra

The HEAD by Bharani and

The HAIR by Arudra

Hindus always describe Gods from Foot to Head and human beings from Head to Foot. It is seen in Sangam Tamil and more ancient Sanskrit literature.

12 signs of zodiac (12 Rasis) represent Kalapurusa (Time in the form of a Person). Likewise the 27 Nakshatras are distributed among the limbs of the Nakshatra purusa.

tags –வேத கால,, வானியல் ,, அதிசயங்கள், 

–SUBHAM–

ரிக்வேத எட்டாவது மண்டல அதிசயங்கள் (Post No.8195)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8195

Date uploaded in London – 17 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேத எட்டாவது மண்டல அதிசயங்கள் (Rig Veda Eighth  Mandala Wonders)

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம். மனித குலத்தின் முதல் அதிகாரப்பூர்வ ரிக்கார்ட் (RECORDS) அதில் உள்ளது. மனிதனின் சிந்தனை எவ்வளவு உயர்ந்தது என்பதை அது காட்டுகிறது. அகர்ந் முதல் எழுத்தில் துவங்கி உலக மஹா தேசீய கீதத்தில் முடிவடைகிறது. பத்தாவது மண்டலத்தின் கடைசி மந்திரம் உலக ஒற்றுமையை வலியுறுத்துகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன் இதைத் தொகுத்து, பத்துப் பிரிவுகளாக நமக்கு வகைப்படுத்திக் கொடுத்த வியாச மகரிஷி இப்படி முடிக்கிறார்:–

“நம் எல்லோர் இதயங்களும், எண்ணங்களும், குறிக்கோள்களும் ஒன்றாக இருக்கட்டும்” என்ற அற்புதமான மந்திரத்துடன் முடிக்கிறார். இது மனித குலத்தின் உச்சியை இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொட்டுவிட்டதைக் காட்டுகிறது.

ரிக்வேதத்தின் எட்டாவது மண்டலம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. இதிலுள்ள செய்திகள் புராண, இதிகாசங்களில் காணப்படவில்லை. இதனால் இது ஈரான் நாட்டுக்கு குடியேறிய இந்திய ரிஷிகள் பாடியது என்று சிலர் கருதுகிரார்கள். தானங்களில் நிறைய ஒட்டககங்கள் தானம் பற்றிய குறிப்பு வருகிறது. ரிக் வேத முனிவர்களோ சரஸ்வதி-சிந்து- கங்கை நதி தீரத்தைக் குறிப்பிடுகிறார்கள். அங்கு பாலைவன ஒட்டகம் இருக்க வா ய்ப்பில்லை . ஆயினும் தானங்களின் எண்ணிக்கை வியப்பூட்டும் டெசிமல் சிஸ்டத்தில் DECIMAL SYSTEM உள்ளது. இந்த தாசாம்ச முறையையும் பூஜ்யம் என்ற ஒன்றையும் இந்துக்கள் கண்டுபிடித்து உலகிற்குக் கற்பித்ததால் இன்று நமக்கு கம்பியூட்டர் , இன்டர்நெட், விண் கலங்கள் , ஏவுகணைகள் கிடைத்துள்ளன.

இதோ சில தானங்கள்:–

1.பத்தாயிரக் கணக்கில் பசுக்களை தானம் கொடுத்ததில் ப்ளயோகாவின் மகன் எல்லோரையும் மிஞ்சிவிட்டான்

ரிக் வேதம் 8-1-33

2.நாலு மடங்கு பத்தாயிரத்தோடு எட்டாயிரம் கூடக்கொடுத்தான் விபிந்து — 8-2-41 (40000+8000= 48,000)

நான் ஒரு ரிஷி; நான் 60,000 பசுக்களை  ஓட்டிச் செல்கிறேன் – 8-4-20

3.கஷு சைத்யன் இவ்வாறு 100 ஒட்டகங்களையும் பத்தாயிரம் பசுக்களையும் தானம் கொடுத்தான் – 8-5-37

4.சக்தி வாய்ந்த மந்திர உச்சாடனத்துக்காக , அவர்கள் 300 குதிரைகளையும் 10,000 பசு மாடுகளையும் தானம் அளித்தார்கள்.8-6-47

5.சித்ரன் ஒரு அரசன் .சரஸ்வதி நதி தீரத்தில் எல்லோரும் அரசர் போல வாழ்கிறார்கள்; மழைக்கடவுள் மழை பொழிவது போல  அவன் பசு மாடுகளை பத்தாயிரக் கணக்கில் ஆயிரம் தடவை அளித்தான் .8-21-18

பாரி ஒருவன்தான் கொடுப்பவனா? மாரியும் (மழை ) உளதே என்ற கபிலரின் புற நாநூற்றுப்  பாடலை  நினைவுபடுத்துகிறது இது

6.நான் 60,000 குதிரைகளையும் பத்தாயிரம் பசு மாடுகளையும் மற்றும் 20 நுறு (2000) ஒட்டகங்களையும் வென்றேன் 8-46-22

7.பத்தாயிரக் கணக்கான பசு மாடுகளுடன் த்ரி வ்ரிஷ்ண  பிரகாசிக்கிறான் – 5-27-1

8.ருக்ஷமாஸ்களிடையே நான் 4000 பசுமாடுகளை பெற்றே ன் 5-30-15

9.) 60,000 பசுமாடுகள் பின்தொடர்ந்து வந்தன ; கடைசி நாட்களில் கக்ஷி வான்  அவைகளை வென்றான் 1-126-3.

இந்தப் பட்டியலை டேவிட் ப்ராலி ‘கடவுளும், முனிவர்களும், அரசர்களும்’ என்ற அவரது புஸ்தகத்தில் எழுதியுள்ளார். அவர் கூறுகிறார்

வேத கால மக்கள் நாடோடிகள் அல்ல. அவர்கள் வசித்த இடம் வறண்ட பாலை  வனமும் அல்ல. பிரம்மாண்டமான மேய்ச்சல் நிலங்கள் இருந்தால்தான் இவ்வளவு பசு மாடுகள் இருக்க முடியும் . மேலும் பல தங்க ரதங்களும் பரிசளிக்கப்பட்டன (RV.8-46-24)

பரிசளித்தவர்களின் செல்வ வளத்தை இது காட்டுகிறது; அவர்கள் நாடோடிகள் அல்ல.

***

அள்ளிக் கொடுத்த சொக்கத்தங்கம்

10.ப்ரிதுஸ்ரவஸ் எங்களுக்கு தங்க ரதம் பரிசளித்தான் 8-46-21

11.பூஷன், உன்னுடைய தங்கக் கப்பல்கள் கடலில் நிற்கின்றன 6-58-3

12.மருத் தேவதைகளின் தலையில் தங்கக் கிரீடங்கள் இருக்கின்றன – 5-54-12

13.மருத்துகள் போல வேறு எவருமிலர் ; அவர்கள் உடலில் தங்க ஆயுதங்களுடன் ஜொலிக்கிறார்கள்.

14.இந்திரா உன்னை நான் விட்டுவிட மாட்டேன் ; பணம், ஆயிரம் கிடைத்தாலும் , பத்தாயிரம்

கிடைத்தாலும், நூறு ஆயிரம் கிடைத்தாலும் உன்னை விட்டுப் போக மாட்டேன் 8-1-5

DECIMAL SYSTEM

1000

10,000

100,000

15.எனக்கு திவோதாசனிடமிருந்து பத்துத் தங்கக் கட்டிகள் கிடைத்தன 6-47-23

என் கருத்து

சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு புலவருக்கும் ஆயிரக் கணக்கில் பொற்காசுகளைக் கொடுத்தது பாடப்பட்டுள்ளது. அவைகளை இத்துடன் ஒப்பிடலாம். இவைகளை மிகைப்படுத்தப் பட்ட ‘எண்’கள் என்று கருதினால் பதிற்றுப் பத்தில் வரும் தானங்களையும் சந்தேகிக்க நேரிடும்.

இந்திரர் அமிழ்தமே கிடைத்தாலும் தனியாக உண்பவர் இலர் என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறாநானுற்றில் பாடுகிறார் (182). இங்கு ரிக் வேதத்தில் ஒரு லட்சம் பணம் கிடைத்தாலும் இந்திரன் வழிபாட்டை விடமாட்டேன் என்று ஒரு புலவர் பாடுகிறார்.

மேற்கண்ட ரிக் வேத எண்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சிலர் சந்தேகப்படலாம். மருத் என்னும் காற்று தேவதை பாடலில் வரும் தங்கத்தை உவமை என்றும் கருதலாம். ஆயினும் செல்வ வளம் பொருந்திய இடங்களில் மட்டுமே இத்தகைய எண்ணிக்கையும் உவமைகளும் வர முடியும்.

SOURCE – GODS, SAGES AND KINGS, DAVID FRAWLEY, 1991 (MOTILAL BANARSIDAS, DELHI).

tags. ரிக்வேதம், எட்டாவது மண்டலம், அதிசயங்கள்

–சுபம்–

அகநானூற்றில் MISS GOOD FRIDAY! RICE BEER!! (Post No.7205)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12  NOVEMBER 2019

Time  in London – 9-02 am

Post No. 7205

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

சங்கப் புலவர் பெயர் நல் வெள்ளி!!!

Vegetarian Food at Tiruvannamalai

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1 | Tamil …

8 Dec 2014 – எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் காதல், குடும்ப வாழ்வு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் உள. அதிசயம் 1

1.      

tamilandvedas.com › 2014/12/09 › அகநான…



அகநானூறு அதிசயங்கள் – Tamil and Vedas

9 Dec 2014 – Dr R Nagasamy ,an eminent archaeologist, historian and a Tamil-Sanskrit scholar has written several books on Tamil culture. கட்டுரையை எழுதியவர் … அதிசயம் 5 அகநானூற்றில் பல காடுகளின் பெயர்கள் வருகின்றன. அவை … Related. அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1In “தமிழ் பண்பாடு”.

1.      

swamiindology.blogspot.com › 2014/12 › 1_8



அகநானூறு அதிசயங்கள் – Swami’s Indology …

MYSTERIOUS MEDICINAL PROPERTIES OF THE SOMA PLANT IN RIG VEDA (Post No.7069). Oct 7th … Oct 1st. கவிதையில் இலக்கண அதிசயம்! வேற்றுமைக் கவிதைகள்!! … MY TAMIL BOOK. Sep 23rd.

அகநானூறு | Tamil and Vedas

7 Mar 2016 – Tagged with அகநானூறுஅகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! … ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1469; தேதி டிசம்பர், 2014. … அகநானூறு

சரக சம்ஹிதை | Tamil and Vedas

Tagged with சரக சம்ஹிதை … மாதவ நிதானம் (1-4). 9. வியாதிகளின் வகைகள். வியாதி … இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 …

tamilandvedas.com › tag › சரகர்



—subham–

வரதராஜப் பெருமாள் கோவில் அதிசயங்கள்! (Post No.6235)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 7 April 2019


British Summer Time uploaded in London – 7-15 am

Post No. 6235

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Correction தொட்டாச்சார்யார் not தாத்தாசார்யார்

-subham-

பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்! (Post No. 2529)

IMG_8880

Free Red Ferry of Brisbane

 

Written by london swaminathan

Post No. 2529

Date: 11th February 2016

 

Time uploaded in London  14-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_8850

 

பிரிஸ்பேன் (Brisbane) என்னும் நகரம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது சிட்னி நகரிலிருந்து 1000 கிலோமீட்டர் தூரத்தில் பிரிஸ்பேன் நதிக்கரையில் இருக்கிறது. நாங்கள், உலக மஹா இயற்கை அதிசயமான பெரும் பவளத்திட்டைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் பிரிஸ்பேன் வந்தோம்.

 

பிரிஸ்பேனில் என்னை அதிசயிக்க வைத்த முதல் விஷயம், இலவச படகு சவாரி! உலகில் பத்துப் பதினைந்து நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலையைப் பார்க்க படகு சவாரியானலும் சரி, அல்லது பாரீஸ் நகரில் செயின் நதியில் பவனி வருவதானாலும் சரி காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் படகில் ஏற்றுவர். அட! எங்கள் லண்டன் மாநகரில் எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் தேம்ஸ் நதியில் உலாவர அழைத்துச் சென்றபோதும் ஒவ்வொரு ஆளுக்கும், ஒரு இருபது  பவுனாவது (ரூ2000) செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிஸ்பேனில் இலவச படகு சவாரி.

IMG_8886

Beautiful Brisbane River

ஹோட்டலில் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், சில தகவல் விசாரித்தபோது ‘ரெட் Fபெர்ரி’யில் (Red Ferry) போங்கள்; டிக்கெட் எதுவும் வேண்டம் என்று ஒரு துப்பு கொடுத்தார். சிவப்பு நிற படகில் ஏறினால் பிரிஸ்பேன் முழுதும் சுற்றிப் பார்க்கலாம். ஊரின் வரைபடம் கையிலிருந்தால் எந்த ‘ஸ்டாப்’பில் இறங்கினால் என்ன சுற்றுலாக் கவர்ச்சி இருக்கிறது என்பது தெரியும். ஆங்காங்கே இறங்கி இலவசமாகப் பார்த்துவிடலாம்.

 

உலகில் சில இடங்களில் நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் இலவச சவாரி இருக்கும். ஆனால் நதியில் ஊர் முழுவதும் செல்ல இலவச சவாரி, எனக்குத் தெரிந்தவரை இது ஒன்றுதான். வாழ்க பிரிஸ்பேன்.

IMG_8843

Himalayan Salt for Good Health

இன்னொரு அதிசயம்!

பிரிஸ்பேனில் கடை கண்ணிகளை வேடிக்கை பார்த்தவாறு நகர்ந்தோம். ஒரு கடையின் வாசலில் பெரிய பெரிய பாறைகளாக (சிவப்புக் கூழாங்கற்கள் போல இருக்கும்) 30 கிலோ, 35 கிலோ என்று வைத்திருந்தார்கள். ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் – (Himalayan Salt) இமய மலை உப்பு என்று எழுதிவைத்திருந்தனர். எனக்கு ஒரே வியப்பு. அட! இந்தியாவில் கூட நான் பார்த்திராத இமயமலை உப்பை ஆஸ்திரேலியாவில் விற்பதன் மர்மம் என்ன என்ற ஐயம் எழவே, கடைக்குள் சென்றேன். அங்குள்ள ஒரு இளம் பெண் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடமென் ஐயப்பாட்டைக் களைய வினாக்கள் தொடுத்தேன். அவர் சொன்னார்: “ இவை அனைத்தும் இமயமலையிலிருந்து வந்தவை. இது மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்குச் சுகமளிக்கும். காற்றைத் தூய்மையாக்கும்”. பல புத்தகங்களும் வைத்திருந்தனர். காசு கொடுத்து வாங்க மனமுமில்லை. ஓசியில் புரட்டிப் பார்க்கத் துணிவுமில்லை. மனைவி மக்கள் விரட்டவே மெதுவாக நகர்ந்தேன்.

IMG_8897

Asia Pacific Art Gallery

எங்களுக்கு போனஸ்

ஒவ்வொரு இடத்திலும் ஒரே நாள் இரவு ஹோட்டல் ரிசர்வ் செய்திருந்ததால் அருகிலுள்ள கோல்ட்கோஸ்ட், (Koala) கோவாலா சரணாலயம் ஆகியவற்றுக்குப் போகமுடியவில்லையே என்று வருத்தம். கோவாலா என்னும் மரக் கரடியும். கங்காரு என்னும் மிருகமும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் பிராணிகள்.

 

ஆயினும் கலைக் கூடத்துக்குச் (Art Gallery) சென்று வண்ண ஓவியங்களைப் பார்ப்போம் என்று குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கலைக்கூடத்துக்குள் நுழைந்தோம். எங்களுக்கு போனஸ் காத்திருந்தது. நாலு மாதங்களுக்கு ஆசிய- பசிபிக் வண்ண ஓவியங்களின் விசேஷ காட்சி என்பதைக் கண்டு மகிழ்ந்தோம். உள்ளே சென்றவுடன் அருமையான ஓவியங்களைக் கண்டு இரண்டு காமிராக்களையும் முடுக்கினேன். ஒரு நூறு படங்கள் கிடைத்தன. நேபாள, இந்திய ஓவியர்கள் பல இந்துமத ஓவியங்களைத் தீட்டியிருந்தனர்.

 

எல்லா ஊர்களிலும் இருப்பது போல இராட்சத ராட்டினம் (பிரிஸ்பேன் வீல் Brisbane Wheel) இங்கும் இருந்தது. ஆனால் அதைவிட்டுவிட்டு வேறு ஒரு புதுமையைக் காண விரைந்தோம். செயற்கைக் கடற்கரை அங்கு இருப்பதாக சுற்றுலாக் கவர்ச்சிப் பட்டியலில் இருந்தது. ஒரு பெரிய பூங்காவில் நிறைய கடல் மணலை நிரப்பி வைத்துள்ளனர். அதில் ஏராளமான பெண்கள் அரைநிர்வாண உடையுடன் வெய்யில் காய்ந்து கொண்டிருந்தனர். அருகிலேயே குழந்தைகள் , அவர்களுடைய விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு அப்படி ஒன்றும் கவர்ச்சியாகத் தோன்றவில்லை. அட, சரியப்பா! ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூதானே சர்க்கரை என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தோம்.

IMG_2014

Brisbane Wheel

இரவு நெருங்க நெருங்க பசி எடுத்தது. நாங்களோ சுத்த சைவம். எனது மகன் கஷ்டப் பட்டு, கூகிள் செய்து ஒரு ‘வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்டைக் கண்டுபிடித்திருந்தான். ‘கூகிள் மேப்’ பைப் பயன்படுத்தி அங்கே போவதற்குள் இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. அது ஒரு தாய்(லாந்து) ரெஸ்டாரண்ட். வழக்கம்போல எங்கள் பல்லவியைப் பாடினோம். “நாங்கள் அனைவரும் சுத்த வெஜிட்டேரியன்ஸ். அதன் பொருள் என்ன வென்றால், ‘நோ பிஷ்’, ‘நோ மீட்’, ‘நோ எக்’ No Fish, No Meat, No Egg (மச்சம், மாமிசம், முட்டை அற்ற) என்று விளக்கினோம். அந்தப் பெண்ணோ, ‘நோ பிராப்ளம்’, பிஷ் சாஸ் (No Problem; we will use fish sauce or oyster sauce)  போடுகிறோம் அல்லது ஆய்ஸ்டர் சாஸ் போடுகிறோம், மாமிசம், முட்டை எதுவும் போட மாட்டோம்’ என்று உறுதி தந்தாள்!!!! அடக் கடவுளே! அது வெஜிட்டேரியன் அல்லவே என்றோம். அதற்கென்ன, அதையெல்லாம் போடாமல் செய்வோம் .ஆனால் அது ‘ஹாரிபிள்’ (Horrible அதி பயங்காச் சுவை) ஆக இருக்குமென்று அச்சுறுத்தினாள்; தாயே, உண்மையைச் சொன்னாயே; நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க என்று மனதிற்குள் வாழ்த்திக்கொண்டே ஒரு இதாலிய ரெஸ்டாரண்டில் நுழைந்து வழக்கம்போல பீட்ஸா (Pizza), பாஸ்தா (Pasta) சாப்பிட்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.

 

பிரிஸ்பேன் நகரில் வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே, நீல நதியில் படகு செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. நல்ல பூங்காக்கள், தாவரவியல் பூங்கா ஆகியனவும் அழகூட்டுகின்றன. சுமார் 24 மணி நேரமே இருந்தாலும் மலையளவு சாதித்த மகிழ்ச்சி.

IMG_2021

Whale song

ஆர்ட் காலரிக்குச் செல்லும் வழியில் அந்த ஊர் அறிவியல் காட்சிசாலையும் உள்ளது. அந்தக் கூடத்தில் பெரிய திமிங்கில உருவங்களைத் தொங்கவிட்டுள்ளனர். திமிங்கிலங்கள் கடலில் எழுப்பும் பெரிய சங்கொலி போன்ற சப்தத்தை திமிங்கிலப் பாட்டு (Whale Song) என்பர். அதை அப்படியே ரிகார்ட் செய்து அந்தக் கூடத்தில் ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறார்கள். முதலில் இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று வியந்த எங்களுக்கு தலையை நிமிர்த்திப் பார்த்தபோதுதான் விளங்கியது.

 

எல்லா ஊர்களையும் போல, பல ஷாப்பிங் மால் (கூடங்கள்), தெருக்களும் இருக்கின்றன. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல. அதையும் பார்த்து பொழுதும் போக்கலாம்.!

IMG_8854

 

IMG_8865

 

IMG_8825

Brisbane by Night

 

–subham–

 

 

சங்க காலத்தில் வரதட்சணை!

அகம்1

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 4

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1482; தேதி 13 டிசம்பர், 2014.

முதல் மூன்று பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நலம்.

அதிசயம் 16
பாடல் 90 மருதன் இளநாகனார் பாடியது — முன் காலத்தில் திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ‘’விலை’’ (ஸ்ரீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இது தலை கீழாக மாறி ஆண்களுக்கு விலை பேசினர். டாக்டர் படிப்பு படித்திருந்தால் இவ்வளவு வரதட்சணை, இஞ்ஜினீயர் என்றால் இவ்வளவு என்று. இப்பொழுது பெண்கள் எண்ணிக்கை குறையவே பழைய கால நிலை திரும்பிவிட்டது. அதாவது பெண்களுக்கு பல விதமான ஊக்குவிப்புகளைக் காட்டி என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று ஆண்கள் கெஞ்சவேண்டிய நிலை! ஆதிகாலத்தில் பெண்களுக்கு ‘’விலை’’ கொடுத்ததை காளிதாசன் காவியங்களிலும் சங்க இலக்கியத்திலும் காணலாம். இந்தப் பாட்டில் செல்லூர் கோசர்களின் நியமம் என்ற ஊரையே நீ விலையாகக் கொடுத்தாலும் பெண்ணை அடைவது கஷ்டம் என்று தோழி கூறுகிறாள்:–

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே!
வரதட்சணை காலம் தோறும் மாறுவது வியப்பிலும் வியப்பே!!

அதிசயம் 17

பாடல் 342 மதுரை கணக்காயனார் பாடியது. இதில் குகைகளில் உறையும் தேவதைகள் பற்றிப் பாடுகிறார். ஏரி, குளம், காடு, மலை, தோட்டம், துறவு, குகை, அருவி, கடல் முதலிய பல இடங்களில் வசிக்கும் அணங்குகள் பற்றி சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் காணக்கிடக்கிறது. இது ஒரு நல்ல பி.எச்டி. ஆய்வுக்குரிய விஷயம்.

நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்
அவ் வரி அல்குல் அணையக் காலே
பொருள்: அருவி வீழும் பொய்கை உடைய மலைக் குகையில் மறைந்த வரையர மகளிர் போல காண்பதற்கு அரியவள் நம் தலைவி.

பழந்தமிழர்களும் ஏனைய மக்கள் குழாம் போல பல (மூட?) நம்பிக்கை உடையோரே!
(வரையரை மகளிர்= மலையில் வாழும் பெண் தெய்வம்; கல் அளை=குகை).

அகம்2

அதிசயம் 18

பாடல் 369 நக்கீரர் பாடியது. இதில் காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தின் தாக்கத்தைக் காணலாம். சகுந்தலை என்னும் கானகப் பேரழகி, கண்வ மகரிஷியின் ஆஸ்ரமத்தை விட்டுச் செல்லும்போது அவளால் வளர்க்கப்பட்ட தாவரங்களும் பிராணிகளும் இருந்த நிலையை காளிதாசன் அழகாக வருணிக்கிறான். இதோ நக்கீரர் சொல்வது:

அவள் வளர்த்த கிளிகள் பால் உண்ணவில்லை; தோழியர் கூட்டம் விளையாடவில்லை; பூஞ்செடிகள் மலரவில்லை; சுவரில் உள்ள பாவைகளும் பலி எதையும் கொள்ளவில்லை.

நக்கீரர் கூற்றில் மெலும் ஒரு விஷயமும் தெரிகிறது. வீடுகளில் சுவரில் தெய்வப் படங்களை வரைந்து அதற்கு தினமும் நைவேத்யம் செய்வது தமிழர் வழக்கம் என்பது உறுஹியாகிறது. இதே விஷயம் வேறு சில பாடல்களிலும் வருகிறது.

அதிசயம் 19

பாடல் 344 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது. இதில் தொளி என்னும் மகளிர் விளையாட்டு பற்றிக் குறிப்பிடுகிறார். இப்போது இந்தச் சொல்லும் விளையாட்டும் வழக்கில் இல்லை என்றே தோன்றுகிறது. மகளிரின் தொளி என்னும் விளையாட்டைப் போல மயில் கூட்டம் திரிகிறது என்று அவர் பாடுகிறார். பதவுரை விளக்கத்தில் மகளிர் பலர் கூடி ஆடும் வரிக் கூத்து தொளி என்று விளக்கப்படுகிறது. கோலாட்டம், கும்மி போல ஒரு கோஷ்டி ஆட்டமாக இருக்கலாம்.

அகம்3

அதிசயம் 20
பாடல் 398 இம்மென்கீரனார் பாடியது. இதில் பொற்கோட்டு இமயத்தைப் பாடுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இந்தியாவின் முழு சித்திரமும் தெரிந்திருந்தது. இமயம் வரை அவர்களுக்குத் தெரிந்ததிருந்தது. வெள்ளைக்காரன் நாடு முழுதும் சாலையும் ரயில் பாதையும் போட்டதால்தான் நாடு ஒற்றுமை ஆனது என்பது எல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது தமிழ் இலக்கியத்தைப் படிப்போருக்கு விளங்கும். ஆதி சங்கரர் பல முறை வலம் வந்து நாற்புறங்களிலும் மடங்களை நிறுவியதை அறிந்தும் வெள்ளைக்காரன் அவனையே புகழ்ந்து எழுதிய வரலாற்றை இன்று வரை நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம்.

அதிசயம் 21
காட்டில் வாழும் மறவர்கள் செய்த கொடிய செயலையும் பின்னர் அவர்களே அதற்கு வருந்தியதும் பாடல் 337ல் உள்ளது. இதைப் பாடியவர் பாலை பாடிய பெருங் கடுங்கோ. எலும்பும் தோலுமாக ஒரு பிராமணன் காட்டு வழியாக ஓலைச் சுவடியுடன் தூது போகிறான். அதை மழவர்கள் (மறவர்கள்) பார்த்தவுடன் இவன் தங்கத்தை வைத்திருந்தாலும் வைத்திருப்பான் என்று எண்ணி அவனைக் கொன்றுவிடுகின்றனர். அவனிடம் வெறும் ஓலைச் சுவடி மட்டுமே இருந்ததைக் கண்டு அடடா! தவறு செய்துவிட்டோமே ! என்று கையை நொடித்து அப்பாற் சென்றனர். அந்தப் பார்ப்பனனின் உடலை நரி தின்றது.

சம்ஸ்கிருத காவியங்களிலும், சிலப்பதிகாரம் முதலிய தமிழ் காவியங்களிலும் தூது செல்லும் பணி பார்ப்பனர்களுக்கே ஒதுக்கப்படதைக் காட்டும். இது 15 ஆம் நூற்றாண்டிலும் நீடித்தது. கேரள மன்னன் அனுப்பிய பார்ப்பன தூதுவனை கொடியவனான வாஸ்கோடகாமா தன் கப்பலிலேயே கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டான். அதை எல்லாம் சரித்திரப் புத்தகத்தில் எழுதாமல் – இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடித்த வாஸ்கோட காமா — என்று நம் குழந்தைகள் இன்னும் வரலாறு படிப்பது வெட்கக்கேடு.

வாஸ்கோட காமா கடற்வழியைக் கண்டுபிடித்த செய்தியும் தவறு. நாடு பிடிக்க வந்த வெள்ளைக்காரன், போர்ச்சுகீசியரும் தம் வகையறா என்று எழுதிய பொய்யுரை அவை.— வரலாற்றை உடனே திருத்தி எழுதுதல் அவசரப்பணியாகும்.

vaidehi herbert

அதிசயம் 22
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடிய பாடல் 320 ஓங்குதிரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ – என்று துவங்குவது மதுரைக் காஞ்சியின் முதல் வரியை நினைவுபடுத்தும். இதே சொற்றொடரைக் கல்வெட்டுகளும் பயன்படுத்தின.

அதிசயம் 23
வேறு பல அதிசயச் செய்திகளைத் தனித் தனி கட்டுரைகளில் கொடுத்துவிட்டதால் பாடல் குறிப்புகளை மட்டும் தருகிறேன்:

பாடல் 265—மாமூலனார்— கங்கை நதிக்கு அடியில் தங்கம்
பாடல்கள் 69, 251, 281 – மௌரியர் படை எடுப்பு— மௌரிய மன்னன் பிந்துசாரன் தென் இந்தியாவை வென்றதை திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாராநாத் குறிப்பிடுவதை ஒப்பிடுதல் பொருத்தம்.
அகம் 107, 381 வங்கர் பற்றிக் கூறும்.

பாடல் 296— மதுரைப் பேராலவாயார் பாடல் – பண்டம் மாற்று வணிகம் பற்றிய குறிப்பு— கடலில் எடுத்த சிப்பிகளைக் கொடுத்து அதற்கு விலையாக ‘’கள்’’ வாங்குகின்றனர்.
பல கலாசாரங்களில் சிப்பி, கிழிஞல், சங்கு, சோழி ஆகியன கரன்ஸியாக/ பணமாகவும் பயன்படுத்தப்பட்டன.

260- மோசிக் கரையனார் பாடல் – நள்ளிரவில் வரும் பேய்கள் பற்றிய குறிப்பு.
211- மாமுலனார் பாடல் – கதவில் பல் பதித்தல்
269- மதுரை மருதன் இளநாகனார்— பாவை நோன்பு
பாடல் 151, 155, 173 – நல்ல மேற்கோள்கள்/ தமிழர்களின் கொள்கைகள்.

பாடல் 220 — மதுரை மருதன் இளநாகனார் – பரசுராமன் பற்றிய குறிப்பு – மழுவாள் நெடியோன்
பாடல் 148 – ஆந்தைகள் ஏன் பகலில் வருவதில்லை – பரணரின் புதிய விளக்கம்

அகநானூறு அதிசயங்கள் நிறைவு. —-சுபம்—
contact swami_48@yahoo.com
Pictures are used from various websites;thanks.

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1

akanan1

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1466; தேதி 8 டிசம்பர், 2014.

ஏற்கனவே இவ்வரிசையில்,
புறநானூறு அதிசயங்கள்
நற்றிணை அதிசயங்கள்
பதிற்றுப்பத்து அதிசயங்கள்
குறுந்தொகை அதிசயங்கள்
என்று நான் எழுதிய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.
எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் காதல், குடும்ப வாழ்வு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் உள.

அதிசயம் 1
அகநானூற்றில் மிகப்பெரிய அதிசயம் பாடலின் தொகுப்பு முறையாகும். தமிழர்கள் கணிதத்தில் எவ்வளவு ஆர்வமும் கவனமும் செலுத்தினர் என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும். 400 பாடல்களையும் 1,2,3,4,5,6……. என்று எழுதுங்கள். அதில் ஒற்றைப்படை எண்கள் உடைய பாடல்கள் எல்லாம் பாலைத் திணையாகவும் பத்து தொடர்ந்தனவெல்லாம் நெய்தலாகவும், நாலு தொடர்ந்தனவெல்லாம் முல்லையாகவும் இரண்டும் எட்டும் தொடர்ந்தனவெலாம் குறிஞ்சியாகவும், ஆறு தொடர்ந்தன வெல்லாம் மருதமாகவும் நூல் முழுதும் தொகுக்கப்பட்டுள்ளது.

இதைத் ‘’தமிழ் இலக்கியத்தில் எண்கள்’’ என்ற எனது 1995 தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டேன். இப்பொழுது சிறிது விளக்கமாகவே கூறுகிறேன்:–

பாலை
1,3,5,7,9,11…………………………….. இப்படி 397,399 வரை எல்லா ஒற்றைப்படை எண்ணுள்ள பாடல்களும் பாலைத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
நெய்தல்
10, 20, 30, 40, இப்படி ……………….390, 400 வரை பத்தில் முடியும் எண் பாடல்கள் அனைத்தும் நெய்தல் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
முல்லை
4,14,24,34,44,54……………………. 394 வரை இவ்வாறு நாலு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் முல்லைத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
குறிஞ்சி
2,12,22,32,42…………………….. 8, 18, 28, 38……………………. 392, 398 வரை இவ்வாறு இரண்டு எட்டு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
மருதம்
6,16,26,36……………………………..396 என்ற வரை இவ்வாறு ஆறு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் மருதத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.

akanan2

இப்படிச் செய்வதால் புத்தகத்தைப் படி (பிரதி) எடுப்போர் தவறு செய்யும் வாய்ப்புகள் குறைவாகும். யாரேனும் ஒருவர் தவறு செய்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்துத் திருத்தி விடலாம். இப்படிப் பிரித்ததிலும் கூட 200+40+40+80+40 என்ற அழகைக் காணலாம்.

பிராமணர்கள் வாய்மொழியாகவே வேதத்தைப் பரப்பவேண்டும் என்ற கொள்கையினை உடையோராதாலால் அதில் இடைச் செருகல் வரக்கூடாது என்பதற்காக, பல்லாயிரம் வருடங்களாக, அதை

1.வாக்கிய பாடம்,
2.கிரம பாடம்,
3.கண பாடம்,
4.ஜடா பாடம்
என்று சொற்களைக் கணித அடிப்படையில் கூட்டிக் கூட்டிச் சொல்லுவர்.

மனப்பாட சக்தியுள்ள ஒருவரைப் புகழும்போது, ‘’அவரா? அவர் அதைத் தலைகீழாகச் சொல்லச் சொன்னாலும் சொல்வாரே, அந்த அளவுக்குப் புலமை’’ என்போம். இது போல பிராமணர்கள் பெரிய புலமை பெறும் போது அவர்களுக்கு ‘கனபாடி’கள் என்ற பட்டமும் கிடைக்கும். இதே போல தமிழர்களும் எண் அடிப்படையில் பாடல்களை வகுத்தது அவர்களின் திறமைக்கு ஒரு சான்றெனில் அது மிகையாகாது.

Akananuru graph
அதிசயம் 2
அகநானூற்றில் 108 ஊர்களின் பெயர்கள் உள்ளன. 2000 ஆண்டுப் பழமையான ஊர்களை அறிய இது பெரிதும் உதவுகிறது. தமிழர்கள் மிகவும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ஆகையால் அலைவாய் (திருச்செந்தூர்), அரங்கம் (ஸ்ரீரங்கம்), கோடி (தனுஷ்கோடி), மதுரை, வேங்கடம் (திருப்பதி) முதலிய பல புண்ய க்ஷேத்திரங்களைக் குறிக்கத் தவறவில்லை.

அதிசயம் 3
அகநானூற்றில் குறைந்தது 14 நாட்டுப் பிரிவுகள் வருகின்றன. இப்போது நாம் நாடு என்றால் பெரிய நிலப்பரப்புடைய அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் என்போம். 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இதைச் சிறு நிலப்பரப் பிற்கே பயன்படுத்தினர். எல்லா மொழிகளிலும் காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறும். ஆங்கிலத்திலும் கூட 400 ஆண்டுகளுக்கு முன் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய சொற்கள் இன்று பொருள் மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.
இடையநாடு, குடநாடு, கொங்குநாடு, கோசர் நாடு, துளுநாடு, தொண்டைநாடு, பாணன் நாடு, புகார் நாடு, பூழி நாடு, மழவர் நாடு, மாறோக்கநாடு, வடுகர்நாடு, வேம்பிநாடு, வேளிர்நாடு முதலியன.

‘’நாடு’’ என்னும் சொல் பொருள் மாறியது பற்றி எழுதியவுடன் வேறு ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது.

பல வெளிநாட்டுக்காரர்கள் ரிக் வேதத்தை மொழி பெயர்க்கிறேன் என்ற பெயரில் தத்துப்பித்து என்று உளறி வைத்துள்ளனர். இதை உளறல் என்று கண்டுபிடிக்க நீங்கள் பெரிய சம்ஸ்கிருத அறிஞராக இருக்க வேண்டாம். 20 வெளிநாட்டுக்காரர்கள் ரிக் வேதப் பாடல்களை மொழிபெயர்த்ததைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தா சம்பந்தமே இராது.

திருக்குறளிலும் பதின்மர் உரை என்று பத்துப் பேர் எழுதிய உரைகள் உண்டு. அதில் பெரிய வேற்றுமைகளையோ கலாசார எதிர்மறை விளக்கங்களையோ காணமுடியாது. ஆனால் வேதத்துக்குப் பொருள் எழுத வந்தோருக்கு நம் கலாசாரம் தெரியாது என்பதைவிட அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதைப் பார்க்கையில் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும். சாயம் வெளுத்துப்போகும்!

akanan3

அதிசயம் 4
அகநானூறு குறிப்பிடும் தமிழர்களின் தெய்வங்கள்:
அருந்ததி, இராமன், இல்லுறை கடவுள், உமை, கண்ணபிரான், கவிர மலைத் தெய்வம், குபேரன், கொல்லித் தெய்வம், சந்திரன், சிவபெருமான், சூரியன், செல்லூர்த் தெய்வம், நடுகற் கடவுள், நள்ளியடுக்கத்துச் சூர்,
புகார்த் தெய்வம், பாழி அணங்கு, பொதியில் தெய்வம், மழுவாள் நெடியோன், முருகன், வேம்பினடிக் கடவுள், வேளூர்வாய்த் தெய்வம்.
இது தவிர ஏரி, குளம், காடு, மலை, குன்று, மரங்களில் உறையும் அணங்குகள் பற்றிய குறிப்புகளும் நிறைய உண்டு.

தமிழர்களைப் பற்றி சில அரசியல் கட்சிகள் தவறான பிரச்சாரத்தைச் செய்ததால் தற்கால இளைஞர்களுக்கு தமிழர்கள் என்போர் ஏதோ தனிப்பட்ட ஒரு இனம், அவர்கள் ஆகாசத்தில் இருந்து குதித்த உலக மஹாப் பழங்குடி மக்கள், அவர்களுக்கு வேறு ஒரு கலாசாரம் உண்டு என்ற எண்ணம் உண்டாகும் இவை எல்லாம் மஹா அபத்தம் என்பதை அறிய நீங்கள் மிகப்பெரிய தமிழ் அறிஞராக இருக்க வேண்டும் என்பது இல்லை.

வர்த்தமானன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்ட சங்க இலக்கிய மேல் கணக்கு நூல்கள் 18 ஐயும் எடுத்துக் கொண்டு பத்துப்பாட்டையும் (10 நூல்கள்) எட்டுத்தொகையையும் ( எட்டு நூல்கள்) படியுங்கள். இமயம் முதல் குமரி வரை எல்லாம் ஒரே பண்பாடே என்று நீங்களே கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். திருநெல்வேலி பெட்டி வெல்லம், நெல்லை லாலகடை அல்வா, மணப்பாறை முறுக்கு, மானாமதுரை சாம்பார் சாதம், மதுரை நாகப்பட்டிணம் கடை காராச்சேவை, ஐயங்கார் மெஸ் புளியோதரை என்பது போல சில ‘’ஸ்பெஷல்கள்’’ ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இது உலகம் முழுதும் உண்டு.
ஐயர் வீட்டுக் கல்யாணங்களில் கூட திருநெல்வேலி வழக்கம், மதுரை சம்பிரதாயம், தஞ்சாவூர் பார்ப்பனர் வழக்கம், ஆற்காட்டு ஐயர் சம்பிரதாயம் என வேறுபடும் ஆனால் அவர்கள் எலோரும் பிராமணர்களே. செட்டியார் வீட்டுக் கல்யாணங்களிலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் மாறுபடும். அவர்கள் அனைவரும் வடநாட்டு ஷ்ரேஷ்டிகளே=செட்டி=ஷெட்டி.

கோவில் வாஹன அலங்கராத்தில் கூட சூர்யப்பிரபை, சந்திரப்பிரபை என்ற வாஹனங்களைத் தென் தமிழ்நாட்டுக் கோவில்களில் காணமுடியாது. அதற்கேன வட அற்காடு விஷ்ணுவை ஆரியர் என்றும் தென் தமிழ்நாட்டுப் பெருமாளைத் திராவிடன் என்றும் சொல்லும் மடைமை ஈங்கு இல்லை. ஆயினும் வெள்ளைகாரன் போல பி.எச்டி. பட்டம் வாங்க விரும்பினால், உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை கிடைக்க வேண்டுமானால் நீங்களும் பிரித்தாளும் சூட்சியில் இறங்கலாம்.

அகநானூற்று அதிசயங்கள் தொடரும்…………………………

தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.
Contact swami_48@yahoo.com