
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,045
Date uploaded in London – 2 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

19. எண்களைக் குறிப்பிடும் ரிஷிகள் எனக்கு நூறு செல்வங்களை, 1000 செல்வங்களை அல்லது பசு மாடுகளை தா என்று வேண்டுகிறார்கள் . எப்போது பார்த்தாலும் இவர்களுக்கு டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM நினைப்புதானா ? நல்ல வேளை . இவர்கள் இதைக் கண்டுபிடித்திராவிடில், பசு மாடுகள் மற்றும், பாலின் பயனைக் கண்டுபிடித்திராவிடில் , உலக ஆரோக்கியமும் இராது; கம்ப்யூட்டர், ராக்கெட், விண்வெளிப் பயணமும் நடந்திராது ! வாழ்க ரிக் வேத ரிஷி முனிவர்கள் .
20.எல்லா முனிவர்களும் நாங்கள் உனக்காக தர்ப்பைப் புல்லை வெட்டி பரப்பி இருக்கிறோம்; இதன் மீது அமர்க என்று பாடுகிறார்கள் ! என்ன அதிசயம்! இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதோடு இன்றும் பிராமணர்களும் , ஏனைய ஜாதியினரும் (ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும்) தர்ப்பை மீது அமரும்படி இறந்தோரை அழைத்து நீரும் எள்ளும் வார்க்கிறார்களே ! இது இந்துக்கள் ஒரே சமுதாயம், நீண்ட கால பாரம்பர்யத்தைப் பின்பற்றும் சமுதாயம் என்பதைக் காட்டுகிறது.
21.’வ்ருத்ரன்’ என்ற அசுரனையும் ‘அஹி’ என்னும் பாம்பையும் இந்திரன் கொன்றதை பத்து மண்டலங்களில் உள்ள ரிஷிகளும் பாடுகின்றனர். ‘வ்ருத்ர’னும் ‘அஹி’ யும் இயற்கைச் சக்திகள் என்பதை வெள்ளைக்காரனும் புரிந்து கொண்டுள்ளான் .
22. என்ன அதிசயம் ! ‘பதி’ என்பதை ஆணுக்கும் ‘வதி’, ‘மதி’ என்பதை பெண்ணுக்கும் ரிக் வேதம் முழுதும் காண முடிகிறது; இன்றும் என் நண்பர்கள் பெயரில் சரஸ் வதி, இந்து மதி , கண பதி, பார் வதி, வசு மதி, லட்சுமி பதி என்ற பெயர்கள் உள்ளன. கட்டாயம் சிந்து சமவெளி முத்திரைகளில் (ஜாடி அல்லது மீன் வடிவ முத்திரை)இது இருக்க வேண்டும் !
23.வேதம் முழுதும் ‘கடவுளருக்கு எல்லாம் தாய் அதிதி’ என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதிலும் பெண்ணுக்கே முதலிடம். இளா ILA , பாரதி BHARATI , சரஸ்வதி SARASVATI (அலைமகள், கலைமகள், மலைமகள்) என்றும் போற்றுகின்றனர் . 20+++ பெண் கவிஞர்கள் , 30 பெண் தெய்வங்கள் முதலியோரை முனிவர்கள் பாடுகின்றனர் ; உலகில் பெண் தெய்வங்களை வழிபடும் பழைய மதம் இந்து மதம் என்பதற்கும் இன்றுவரை பெண்களை தெய்வமாகப் போற்றி வழிபடும் மதம் இந்துமதம் ஒன்றே என்பதற்கும் வேதமே சான்று
24.தானம், ஈகை முதலியவற்றைப் போற்றும் பாடல்களைப் பார்க்கையில் திருக்குறள், நாலடியார், பழமொழி நூல்கள் நினைவுக்கு வருகின்றன.


25.எப்போதும் வானத்தில் செல்லும் குதிரை, தேர் பற்றியே பாடுகின்றனர். அந்தக் காலத்தில் அவர்கள் விண் கப்பலில் பூமிக்கு வந்தார்களோ! இதை கற்பனை என்று யாராவது கருதினால், உலகில் முதலில் விஞ்ஞான புனைக் கதைகளை SCIENCE FICTION எழுதியவர் இந்துக்கள்தான் என்பதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் ‘ததிக்ராவண்’ என்னும் பறக்கும் குதிரை பற்றிப் பாடுகின்றனர்/ மந்திரம் சொல்கின்றனர்.
26.அட அதிசயமே ! 100 இடங்களில் கடல் பற்றிப் பாடுவதோடு ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்கிறார்களே
27.இவர்கள் சிந்து – சரஸ்வதி சமவெளியில் மட்டும் இல்லாமல் ‘மலை’ ‘கடல்’ பற்றியெல்லாம் பாடுகின்றனர். சிந்து முதல் யமுனை வரையுள்ள பிரதேசத்தை ஒரே மந்திரத்தில் சொல்லுகின்றனர் . அப்படியானால் வட இந்தியா முழுதும் இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்!
28.ஏராளமான பறவைகள், மிருகங்கள் பற்றிப் பாடுகின்றனர். சிங்கம், யானை, ஒரே இடத்தில் புலி பற்றி எல்லாம் பாடுகின்றனர். நிறைய இடங்களில் ஓநாய்- ஆடு உவமை வருகிறது ; இயற்கையை ரசித்த மக்கள் போலும் .
29.போர், பகைவர், தாசன், தஸ்யூ சிம்யூ, பாணி , ராக்ஷஸ, கந்தர்வர், சித்தர் பற்றி எல்லாம் பாடுகின்றனர். இவர்களில் பலர் ‘மனிதர்களை அடித்து உண்ணுவோர்’ CANNIBALS என்றும், இரவில் தாக்குவோர் என்றும், கடவுளை வணங்காதோர் (GODLESS) என்றும் சொல்லுகின்றனர் இப்படி சில கும்பல்கள் இன்றும் இருப்பதைக் காண்கிறோம்
30.குகையில் மறைத்துவைக்கப்பட்ட பசுக்கள் பற்றியும் அவற்றை இந்திரன் மீட்டது பற்றியும் நிறைய ரிஷிகள் பாடுகின்றனர் . இதற்கு மறைபொருள் உளது. புறநானூறு , மஹாபாரதம் ஆகியவற்றில் ‘ஆநிரை கவர்தல்’ வந்தாலும் இதை இரு பொருள்பட ரிஷிகள் உபயோகித்தனர் போலும். சாயனர் என்ற உரைகாரரும் பசு என்பதற்கு பல அர்த்தம் கற்பிக்கிறார்.
31. ஈற்றடிகள் ஒரே மாதிரியாக முடியும் நிறைய துதிகள் பத்து மண்டலங்களிலும் உள . இதே போல நாடகத்துக்கு முன்னோடியான உரையாடல் பாடல்களும் உள . இவை எல்லாம் இலக்கிய கலை வளர்ச்சியைக் காட்டுகின்றன.
32. இந்திரனை ‘’பாடல்களை விரும்புவோன் LOVER OF SONGS என்று எல்லா ரிஷிகளும் பாடுகின்றனர். சாம கானம் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. ஏழு என்ற எண் சப்த ஸ்வரங்களைக் குறிப்பிடலாமென்ற தொனியிலும் மந்திரங்கள் உள்ளன. இந்திரனை நாட்டியக்காரன் dancer என்றும் போற்றுகின்றனர். கந்தர்வர் என்னும் பாடும் பாணர்கள் பற்றியும் மந்திரங்கள் உள்ளன. பாடலும் ஆடலும் போற்றப்பட்ட சமுதாயம் வேத கால சமுதாயம்
33. விவசாயம், பார்லி/யவம் , அரிசி, தானியம், அப்பம்,கஞ்சி போன்றவை வருவதால் விவசாய சமூகம் என்பது தெரிகிறது.அபால என்ற பெண் தனக்கு தோல் வியாதி நீங்கி முடி வளரவேண்டும், தன் தந்தைக்கு வழுக்கைத் தலையில் முடிவளரவேண்டும், நிலத்தில் பயிர்கள் வளரவேண்டும் என்று பாடுகிறார். இன்னொரு புலவர் அரிவாள், அறுவடை, நிறைய தானியம் பற்றிப் பாடுகிறார். வேதம் முழுதும் விவசாயம் உளது.
34.மிகவும் அதிசயம் ! ருதம்TRUTH என்னும் இயற்கை விதியும் /ஒழுங்கும், சத்தியமும் முழுதும் போற்றப்படுகிறது.
35. கவசம் போன்ற பாடல்களின் ‘மூலம்’ ரிக்வேதம், மற்றும் அதர்வ வேதத்தில் உளது
36. உலகில் தினசரி வழிபாட்டில் யாப்பு இலக்கணத்தைப் பயன்படுத்தும் ஒரே சமுதாயம் இந்துக்களே. காயத்ரீ , பிருஹதி , 7 வகை யாப்புகள் குறித்து ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன. பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் 7 வகை யாப்புகளையும் சொல்லி வழிபடுகின்றனர். இலக்கணத்தை வழிபடும் சமுதாயம் என்றால் எந்த அளவுக்கு கல்வி அளவு இருக்க வேண்டும்! அதைப் பெண்களுக்கும் பெயராகச் சூட்டுவது அதை விட அருமை !!
To be continued…………………………
tags – ரிக் வேத, அதிசயம் , part 2

xxxxxxxxxxxxxxxxxxxxx
You must be logged in to post a comment.