அதிசயமான நூல்- யோகவாசிஷ்டம்(Post No.9563)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9563

Date uploaded in London – –  –4 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசயமான நூல்- யோகவாசிஷ்டம்

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 3-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

உலகில் மிக அதிசயமான நூல் எது என்று யாரேனும் ஒருவர் கேட்டால் தயங்காமல் விடையைக் கூறி விடலாம் – அப்படிப்பட்ட மிக அதிசயமான நூல் யோகவாசிஷ்டம் என்று!உலகில் மனித மனதில் சிக்கலான பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அறிஞர்களாலும் கூட சரியாகப்

tags- அதிசய நூல், யோகவாசிஷ்டம், 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! (Post No.2874)

yoga vasista

 

Article written by S.NAGARAJAN

 

Date: 7 June 2016

 

Post No. 2874

 

Time uploaded in London :–  5-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் !

 

ச.நாகராஜன்

 14_Yoga-Vasistha_1

உலகில் மிக அதிசயமான நூல் எது என்று யாரேனும் ஒருவர் கேட்டால் தயங்காமல் விடையைக் கூறி விடலாம் – அப்படிப்பட்ட மிக அதிசயமான நூல் யோகவாசிஷ்டம் என்று!

 

உலகில் மனித மனதில் சிக்கலான பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அறிஞர்களாலும் கூட சரியாகப் பதில் சொல்ல முடியாத கேள்விகள்!

 

 

தகுதியான மனிதன் என்று சொல்லக் கூடியவன் யார்?

 

மனித முயற்சியின் பலன் என்ன?

 

கடவுள் ஒருவரை சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பி விட முடியுமா?

 

விதி என்று ஒன்று உண்டா?

 

விதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

 

மனித வாழ்க்கையைக் கடக்க உள்ள வழிகள் எவை?

 

நல்லவர்களின் சகவாசம் நமக்கு எவற்றைத் தரும்?

 

காலம் என்பது என்ன?

 

கற்பனை என்பது என்ன?

 

உலகம் என்பது என்ன?

எண்ணம் என்ன செய்யும்?

மனிதனின் மரணம் எத்தனை வகைப்படும்?

முக்தி என்பது உண்டா? இருப்பின். அது எத்தனை வகைப்படும்?

இந்த உலகில் வாழ்ந்து கொண்டே முக்தி அடைய முடியுமா?

விழிப்புணர்வு, கனவு இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

விசார மார்க்கம் என்றால் என்ன?

அதனால் அடையும் பயன்கள் என்ன?

கேள்விகள் முடிவற்றவை.

பல அறிவாளிகளும் தங்கள் மனதிற்கேற்றபடி பதிலைத் தந்திருக்கின்றனர்.

ஒன்றை இன்னொன்று மறுக்கும்; ஏளனம் செய்யும்.

இவற்றில் எது உண்மை?

 

 

இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு அருமையாக பதிலைச் சொல்கிறது யோக வாசிஷ்டம்.

“அறியாமையைப் போக்க இதைப் போன்ற இன்னொரு சாஸ்திரம் இல்லை !” என்று இந்த சாஸ்திரத்தின் முதல் பகுதியிலேயே சொல்லப்படுகிறது.

அது உண்மை தான் என்பதை நூலைத் தொடர்ந்து படித்தால் அறியலாம்.

 

 

எளிமையான சம்ஸ்கிருத பதங்கள். அனைத்தும் அருமையானவை.

32000 ஸ்லோகங்கள்!

 

 

வாழ்நாளில் ஒரு முறையேனும் சில பகுதிகளேனும் படிக்க வேண்டிய நூல். ஒரே ஒரு ஸ்லோகத்தை ஊன்றிப் படித்தால் கூட படித்த அளவுக்கு அது அறியாமையைப் போக்கும்.

அரிய உதாரணங்கள். நல்ல  கதைகள். புத்திக்கு வேலை தரும் சுவையான சம்பவங்கள். சொற்கோவைகள்.

 

 

இப்படி இதன் புகழைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த நாட்டவருக்கும் பொதுவான நூல் இது.

வசிஷ்டர் ராமருக்குக் கூறும் அரிய உபதேசக் கோவை இது. இதை இயற்றியவர் வால்மீகி.

 

 

இதைப் படித்துப் பார்த்தால் படிப்பதற்கே ஒரு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பது புரியும்.

அதிர்ஷ்டசாலிகள் அழைக்கப்படுகிறார்கள் இதைப் படிக்க!

படிக்க ஆரம்பித்தால் படித்தவர்கள் மேலே கூறியவற்றை விட இன்னும் அதிகமாகப் புகழ்வார்கள்!

 

நூல் பற்றிய மேலும் சில விவரங்கள் அடுத்த கட்டுரையில்!

***********