Buddha in Dambulla, Sri Lanka; picture by Dr Devaraj of London.
Written by S NAGARAJAN
Date: 1 March 2017
Time uploaded in London:- 5-24 am
Post No.3679
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 31
by ச.நாகராஜன்
107ஆம் வயது (1946-1947)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 107. ஒரு வழியாக இரண்டாம் உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்திருந்ததால்,. அனைத்து அரசு அலுவலகங்களும் தங்கள் பழைய இடங்களுக்குத் திரும்பின. வசந்த காலத்தில் உரிய சூத்திரங்கள் இசைக்கப்பட்டன. யுத்தத்தில் இறந்த்வர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை புரியுமாறு அனைத்து ம்டாலயங்களுக்கும் அரசு உத்தரவிட்டது. ஆகவே காண்டனில் உள்ள ஜின் ஹுயி ஆலயத்திற்கு அது போன்ற ஒரு பிரார்த்தனைக்கு வருமாறு அதிகாரிகளும் உயரிய பிரபுக்களும் ஸு யுன்னுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
நவம்பர் மாதம் அங்கு ஆலயத்திற்குச் சென்றார் ஸு யுன். அங்குள்ள பீச் மரங்கள் பிரார்த்தனை புரியும் போது திடீரென்று மலர்ந்தன. பிரமாதமாக நறு மணம் வீசியது. ஒரு லட்சம் பேர் ஆலயத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சீஸனே இல்லாத போது மலர்கள் மலர்ந்த இந்த மாபெரும் அதிசயத்தைப் பார்த்து வியந்தனர். உபாசிகா ஜெங் பி-ஷான் பழைய கால புத்தரை எம்ப்ராய்டரியில் செய்து பீச் மலர்களால் அலங்கரித்தார். உபாசகர் ஹூ யி-ஷெங் புனித மலர்களை ஒரு ஓவியமாகத் தீட்டினார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அனைத்து அதிகாரிகளும் பிரபுக்களும் கை யுயான் மடாலயத்திற்கு வந்து புத்த தர்மத்தைப் போதிக்குமாறு வேண்டினர். ஏராளமான பேர்கள் அங்கு குழுமினர். குளிர்காலத்தில் ஸு யுன்னின் மூத்த சீடரான குவான் பென் காலமானார்.
108ஆம் வயது (1947-1948)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 108. வசந்த காலத்தில் நான் ஹூவா மடாலயத்திற்கு ஸு யுன் சென்று சூத்ரங்களை இசைத்தார். ஹாங்காங்கில் உள்ள டோன்ஹுவா ஆஸ்பத்திரிகளின் குழுமம் ஸு யுன்னை அழைத்து க்ரவுன் காலனி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை புரியுமாறு வேண்டியது. சோங்-லான் பள்ளியில் நட்ந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குழுமினர்; ஸு யுன்னின் சீடர்களாயினர். உபாசிகா ஜெங் பி-ஷான் ஸு யுன்னுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார்
அடுத்து மக்காவோவில் உள்ளவர்கள் அழைக்கவே அங்கு ஒரு வார கால தியானம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஸு யுன்னின் சீடர்களாயினர்.
உபாசகர் மா ஷி சுவான் அழைப்பை ஏற்று மவுண்ட் ஜோங் சென்ற ஸு யுன் அங்கு ம்ஹா கருணை கூட்டத்தை நடத்தினார். அங்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்; அவர்களும் சீடர்களாக ஆயினர். பின்னர் யுவான் மென் மடாலயம் திரும்பிய ஸு யுன் அங்கு புனருத்தாரண வேலையை துரிதப்படுத்தினார்.
வருடம முடிவுக்கு வந்தது.
109ஆம் வயது (1948-1949)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 109.. வசந்த காலத்தில் நான் ஹுவா மடாலயத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன. ஸு யுன் காண்டனில் உள்ள ஜி டே மருத்துவமனையைத் திறப்பதற்காக அழைக்கப்பட அங்கு சென்றார். அந்த விழாவை முடித்து விட்டு ஹாங்காங்கில் சி ஹாங் ஆலயத்தில் சூத்ரங்களை இசைத்தார்.
அங்கு ஒரு வார காலம் ப்யூர் லேண்ட் தியானத்தை நடத்தி சரணாகதி சூத்ரத்தையும் ஐந்து சூத்ரங்களையும் கற்பித்தார். பின்னர் யுன் மென் மடாலயத்திற்குத் திரும்பினார்.
யூனானில் ஐந்தாம் மாதம் தர்ம குரு ஜியா சென் மறைந்தார்.
இலையுதிர்காலத்தில் அமெரிக்கப் பெண்மணியான ஆனந்தா ஜென்னிங்ஸ் அங்கு வந்து உபதேசம் செய்தார். ஒருவார காலம் சான் தியானம் நடைபெற்றது. அவருக்கு ஒரே மகிழ்ச்சி.
.ஆனந்தா ஜென்னிங்ஸ் புத்த தர்மத்தை ந்னகு கற்றுத் தேர்ந்த வல்லுநர். அவரை ஸு யுன்னின் சீடரான மாஸ்டர் குவி ஷி சோதனை நிமித்தம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.
சரித்திர பிரசித்தி பெற்ற இந்த உரையாடலின் போது ஆனந்தா ஜென்னிங்ஸ் உடனுக்குடன் கேள்விகளுக்கு பளீர் பளீரென்று பதில் அளித்தார்.
இதனால் அனைவரும் மகிழ்ந்தனர். ஸு யுன்னும் குவி ஷியும் அவரை ஆசீர்வதிக்க அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.
110ஆம் வயது (1949-1950)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 110.. நான் ஹுவா மடாலயத்தில் போதனைகள் முடிந்த பிறகு யுன் மென் திரும்பிய ஸு யுன் எண்பது சிலைகளுக்கான பூச்சு வேலையையும் அதன் பீடங்கள் உருவாக்கப்படுவதையும் மேற்பார்வையிட்டார்.
இது முடிய ஒரு வருட காலம் ஆனது.
இப்படியாக ம்டாலயம் தொண்ணூறு சதவிகிதம் புதுப்பிக்கப்பட்டது.
ஹாங்காங்கில் புத்தர் கோவில் ஒன்றைத் திறக்க வருமாறு உபாசகர் பாங் யாங் கியூ அழைக்கவே அங்கு விரைந்த ஸு யுன் பிரக்ஞா விஹாரத்தில் சூத்ரங்களை போதித்தார்.
ஒரு மாதம் அங்கு கழிந்தது. பின்னர் அவர் யுன் மென் திரும்பினார்.
யுன் மென் மடாலயத்தின் ஆவணங்களைத் திருத்துமாறு ஸு யுன், உபாசகர் சென்ஸியூ லு-ஐக் கேட்டுக் கொண்டார்.
வருடம் முடிவுக்கு வந்தது.
-தொடரும்