அதிசய புத்த துறவி ஸு யுன்! முடிவுரை Part – 39 (Post No.3739)

Written by S NAGARAJAN

 

Date: 20 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3739

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 39

ச.நாகராஜன்

 

முடிவுரை

 

நூறு வயது வாழ்ந்த பெரியோரின் வரிசையில் காஞ்சி பரமாசார்யர் மஹா பெரியவாள், பண்டிட் சாத்வலேகர், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, அரவிந்த மஹரிஷியின் சீடரான நிரோத்பரன் ஆகியோரைப் பற்றி எழுதி முடித்தவுடன் அடுத்து 120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி மாஸ்டர் ஸு யுன் பற்றி எழுத முனைந்தேன்.

 

Empty Cloud  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அது அவரது அற்புதமான சுய சரிதம். அது 320 பக்கங்கள் கொண்ட பெரிய நூல்..

 

ஏராளமான அருமையான புத்த மத நூல்களை எனக்கு இலவசமாக தபால் செலவையும் தாமே ஏற்று அனுப்பி வரும் பெரிய புத்த மத தர்ம நிறுவனம்

 

The Corporate Body of the Buddha Educational Foundation

Taipei, Taiwan.

 

Xu Yun (Picture from Wikipedia,thanks.)

இந்த நிறுவனம் வெளியிடும் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது, இந்த நிறுவனம் தான் எனக்கு ‘எம்ப்டி க்ளௌட்’ புத்தக்கத்தையும் அனுப்பி உதவியது.

 

 

இவர்களுக்கு வெறும் வார்த்தையால் நன்றி என்று சொல்வது மட்டும் போதுமா? என் உளமார்ந்த அன்பும் வணக்கமும் கலந்த ந்ன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.

 

இந்தப் பெரியாரின் சரிதத்தை ஒரு கட்டுரையில் தருவது தான் முதலில் எனது எண்ணமாக இருந்தது. .ஆனால் எழுத எழ்த இது இந்த 39வது அத்தியாயம் வரை நீண்டு விட்டது.

இது புத்தரின் கருணையே.

 

இந்தத் தமிழாக்கம் பெரிய புத்தகத்தின் சொல்லுக்குச் சொல், வரிக்கு வரியான தமிழாக்கம் அல்ல இது. திரண்ட சுருக்கம் என்றே சொல்லலாம். பல நீண்ட சொற்பொழிவுகளை இங்கு சேர்க்கவில்லை.

நெருடலான மொழிபெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை.

சீன நகர்களின் பெயர்கள், சீன பெரியோரின் பெயர்கள். புத்த மத கலாசாரம் சம்பந்தமான் கலைச் சொற்களை ஆகியவற்றை அப்படியே எழுதியதால், படிப்பதில் சிரமம் இருக்கலாம். சம்பிரதாயமான புத்த தம்ம கலைச் சொற்கள் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டவை. அதன் விளக்கம் புத்த தர்மத்தைப் பற்றி ஆழ்ந்து படித்த்வர்களாலேயே நன்கு உணர முடியும்.

என்றாலும் இந்த வார்த்தைகள் தமிழ் அன்பர்களிடையே ஒரு ஆர்வத்தைத் தூண்டி விட்டு அவற்றைப் பற்றி மேலும் அறிய அவர்களை ஊக்குவிக்கும் என்றே நம்புகிறேன்,

 

புத்தமதம், ஜென், கோயன்கள் பற்றி பல கட்டுரைகளை எழுத தைவான் புத்தகங்களும் எனது சேகரிப்பில் உள்ள இதர புத்த மத நூல்களுமே காரணம்.

 

யோக வாசிஷ்டம் உள்ளிட்ட ஆழ்ந்த அத்வைதக் க்ருத்துக்கள் அடங்கிய நூல்களில் அதிகம் ஈடுபாடுள்ள எனக்கு சூன்ய வாத  கொள்கையை உடைய புத்தமத நூல்களின் மீதும் புத்த தர்ம ஆசார்யர்களின் மீதும் எப்படி ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு எனது எளிமையான பதில் ஒன்று உண்டு.

 

எதையும் ஆராய்ந்து பார்த்து ஒத்துக் கொள் என்கிறது புத்த மதம்.

இதனாலேயே அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு (அம்பேத்கர் என்ற ‘அ’வில் ஆரம்பித்து ‘ஜ’ வழியே சென்றால் ஆயிரக்கணக்கான பெயர்களைப் பட்டியலிடலாம்) உள்ளிட்ட சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், நாத்திகர்களாகவும் ஆக முடியாமல் ஆத்திகர்களாகவும் ஆக முடியாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் அக்னாஸ்டிக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் அறிவால் எதையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் புத்தரின் உபதேசங்களால் கவரப்படுகின்றனர்,

 

அருணகிரிநாதர் திருப்புகழில்,

 

“அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே

என முருகனைப் பற்றிப் பாடுகிறார்.

 

அறிவால் அறிதலையும் புத்தரின் மீதான பக்தியையும் புத்த தர்மம் வலியுறுத்துகிறது..

 

இப்படி அறிவு வழியே பக்தியுடன் சரியாகச் சிந்திப்பவர்கள் இறுதியில் சரியான, இறுதியான பேரறிவை அடைந்தே தீருவர் என்பது நமது அறநூல்களின் முடிபு

 

ஆகவே புத்தமத நூல்களும் அதைப் பின்பற்றும் பெரியோர்களின் சரிதமும் கூட ஒரே உண்மையை அடையும் வழிகளுள் ஒன்றே!

 

தவறாமல் புத்த மத நூல்களை நான் படிக்க இன்னும் ஒரு காரணமும் உண்டு.

இந்து மதத்தின் முக்கிய கொள்கையான கர்மா மற்றும் மறு பிறப்பு உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தும் மதம் புத்த மதம். சீலமே அடிப்படை என்கிறது புத்த மதம். இதுவே இந்து மத தத்துவமும் கூட.

 

ஆகவே இதைப் படிப்பதிலும் புத்தரின் அறவுரைகளைப் பின்பற்றுவதிலும் யாருக்கும் எந்த வித சிக்கலும் உருவாகாது.

சீலத்திற்கு பிரபஞ்சமே அடி பணியும்.

 

 

பிறந்த நாட்டிலேயே அழிந்து ஒழிந்த கம்யூனிஸ்டு கொள்கை சீனாவில் அடியெடுத்து வைத்தவுடன் கம்யூனிஸ்டு குண்டர்களால் சீனா சீரழிந்ததையும் மாஸ்ட்ர் ஸு யுன்னின் வரலாறில் காணலாம்.

 

புத்தரின் கருணையால் கம்யூனிஸம் அழிந்து பட்டு அஹிம்சை வழியே சீனா அறப்பண்புகளைப் பெற்று  பாரதத்துடன் பழைய நாட்களில் கொண்டிருந்த பெரும் நட்புடன் மீண்டும் இணக்கமாக செய்லப்டும் அற்புதமான் நாட்கள் வந்தே தீரும்.

 

அதை அருளுமாறு புத்தரை இறைஞ்சுகிறேன்.

 

 

இந்த நெடுந்தொடரை http://www.tamilandvedas.comஇல் வெளியிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இதைப் படித்த அனைத்து வாசகர்களுக்கும் புத்தரின் அருள் உரித்தாகுக;

 

புத்தம் சரணம் கச்சாமி!

ச.நாகராஜன்

பெங்களூரு

12-3-2017

துர்முகி வருடம் மாசி மாதம் 28ஆம் நாள்  –  பௌர்ணமி தினம்

முற்றும்

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 29 (Post No.3603)

Written by S NAGARAJAN

 

Date: 4 February 2017

 

Time uploaded in London:-  6-37 am

 

 

Post No.3603

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 29

ச.நாகராஜன்

 

98ஆம் வயது (1937-1938)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 98. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைத்த பிறகு காண்டனிலிருந்து குவாங்டாங் மடாலயத்திலிருந்து ஸு யுன்னுக்கு அழைப்பு வந்தது. அங்கும் சூத்ரங்கள் ஓதப்பட்டன. அங்கு திபெத்திலிருந்து வந்த லாமாக்களை ஸு யுன் வரவேற்றார். அருகிலிருந்த ஃபூஷான் என்ற நகரைச் சேர்ந்த மக்கள் ரென் ஷோ ஆலயத்தில் நிறுவப்பட்ட ஸ்தூபத்தைத் திறந்து வைக்குமாறு ஸு யுன்னை வேண்டினர்.. பின்னர் நான் ஹூவா மடாலயம் திரும்பிய அவர் அங்குள்ள ஆலய கும்பாபிஷேக பணிகளைக் கவனிக்கலானார்.

 

 

99ஆம் வயது (1938-1939)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 99. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைத்த பிறகு ஸு யுன் காண்டன் நகருக்குச் சென்றார்.பிறகு அங்கிருந்து மஹாகருணா சடங்குகளைச் செய்ய ஹாங்காங் நகருக்குச் சென்றார். டாங் ஜியான் மற்றும் ஜூ யுவான் ஆலயங்களில் முறையாகச் செய்யப்பட்ட சடங்குகளைத் தொடர்ந்து அவர் நான் ஹூவா மடாலயம் திரும்பினார்.

 

 

100ஆம் வயது (1939-1940)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 100. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைத்த பிறகு பெரிய அளவில் மக்கள் மடால்யத்தில் திரண்டனர். வடக்கில் பெரும் கல்வரம் நடக்க ஆரம்பித்திருந்தது. ராணுவ வீரர்களும் மக்களும் பெருமளவில் கொல்லப்பட்டிருந்தனர். கலவரம் சீக்கிரம் முடிவுறவும் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் தினமும் புத்தரின் வழி நடக்கும் சீடர்கள் இரண்டு மணி நேரம் தவம் இருக்க வேண்டும் என்று ஸு யுன் அறிவுறுத்தினார். நிவாரண நிதிக்கு நிதி அளிப்பதற்காக ஒவ்வொருவரும் சற்றுக் குறைத்துச் சாப்பிட்டு அதில் சேமிக்கப்படும் நிதியைத் தரலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். அந்த யோசனைகளை அனைவரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்தனர்.

 

 

101ஆம் வயது (1940-1941)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 101. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன. காண்டன் நகரத்தை ஜப்பானிய ராணுவம் தன் வசப்படுத்தியது.சிவில் மற்றும் ராணுவப் பிரிவுகள் குவிஜாங் நகரை நோக்கி நகர்ந்தன. அங்கு எல்லா நகர்களிலிருந்து பெருமளவு புத்த பிட்சுக்கள் திரண்டனர். அங்குள்ள ‘பெரும் கண்ணாடி’ என்று பொருள்படும் டா ஜியான் ஆலயத்தை ஸு யுன் புனருத்தாரணம் செய்தார்.அங்கு விருந்தாளிகள் வந்து தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதே நோக்கத்தில் சந்திர மலர் என்று பொருள்படும் யு ஹூவா ஆலயமும் புனருத்தாரணம் செய்யப்பட்டது.

 

 

 

102ஆம் வயது (1941-1942)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 102. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன. பின்னர் முந்தைய இரண்டு வருடங்களில் பக்தர்களால் தரப்பட்ட காணிக்கையான இரண்டு லட்சம் டாலர்களை ஸு யுன் அரசுக்கு அளித்தார். இலையுதிர் காலத்தில் குவாங்டாங் புத்த அசோசியேஷன் ஸு யுன்னை தலைவராகவும் உபாசகர் ஜாங் லியானை உபதலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

 

 

103ஆம் வயது (1942-1943)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 103. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்ட போது ஒரு மரத்தில் குடியிருந்த ஆவி ஒன்று தன் விடிவுக்காக சூத்ரங்களை ஏந்த வந்தது. அதிசயமான இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்ற ஆலயத்தின் சூபரிண்டெண்டெண்ட் மாஸ்டர் குவான் பென் இதை பின் வருமாறு பதிவு செய்தார்:

 

 

சூத்ரங்கள் இசைக்கப்பட்ட போது ஒரு பிட்சு வந்து ‘பிட்சு சூத்திரங்களைக்’ கேட்டார். தனது பெயர் ஜாங் என்றும் குஜியாங்கில் தான் பிறந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவருக்கு வயது 34. அவரது தலையை மழிக்க யாரும் கிடைக்கவில்லை. அந்த சடங்கிறகாக வர வேண்டிய சம்பிரதாய உடையுடனும் அதற்கான பாத்திரங்களுடனும் அவர் வந்துள்ளாரா என்று கேட்கப்பட்ட போது இல்லை எனறு பதில் வந்தது. அவர் வெளிப்படையாக அனைத்தையும் பேசியதால் அவருக்கு வேண்டிய உதவிகள் அளிக்கப்பட்டன. அவருக்கு புதிய பெயராக் ஜாங் யு என்ற தர்ம நாமமும் அளிக்கப்பட்டது. அவருக்கு நாமகரணம் அளிக்கப்படும் முன்னர் வெகு தீவிரமாக உழைத்து மடாலயத்தை அவர் சுத்தப்படுத்தினார்.யாருடனும் அவர் பேசுவதே இல்லை. வினய ஹாலுக்கு அவர் அழைக்கப்பட்ட போது அனைத்து சடங்கு விதிமுறைகளையும் அப்பழுக்கின்றி அப்படியே கடைப்பிடித்தார். போதிசத்வர் உபதேசம் அளிக்கப்பட்ட பின்னர் அவரைக் காணவே இல்லை. ஆகவே அவரது ஆடையும் நற்சான்றிதழும் வினய ஹாலிலேயே வைக்கப்பட்டன. அதன் பின்னர் அவரைப் பற்றிய நினைவே இல்லாமல் போனது. அடுத்த ஆண்டு சூத்ரங்கள் இசைக்கப்படும் சமயத்தில் ஸு யுன் கனவில் அவர் தோன்றி தனது நற்சான்றிதழைத் தருமாறு கேட்டார். அவர் இதுவரை எங்கே போயிருந்தார் என்று ஸு யுன் கேட்டபோது தான் எங்கும் போகவில்லை என்றும் பூமி தேவியிடம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் அவரது நற்சான்றிதழ் எரிக்கப்பட்டு அவருக்குக் காணிக்கையாகத் திருப்பி அளிக்கப்பட்டது.

 

டா ஜியான் ஆலயம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் நான் ஹுவா ஆலயப் பணி இன்னும் முடியவில்லை. எல்லா ம்டாலயங்களும் ஸு யுன்னை அணுகி ஆலோசனைகளைக் கேட்ட வண்ணம் இருந்தன. ஜப்பானிய குண்டு விமானங்கள் தினமும் மடாலயம் மீது பறந்து கொண்டே இருந்தன.

 

 

காண்டன் நகரம் வீழ்ச்சியுற்ற பின்னர் ஜப்பானிய ராணுவத்தின் உளவுப்பிரிவு,  ஆலயமானது சீன அதிகாரிகள் கூடி விவாதிக்கும் இடமாக இருப்பதாக அறிந்தது.ஏழாம் மாதத்தில் எட்டு எதிரி பாம்பர்கள் ஆலயத்தைச் சுற்றி வளைத்துப் பறந்தன. அவர்களது எண்ணத்தை அறிந்த ஸு யுன் எல்லா பிட்சுக்களையும் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குள் உடனே செல்லுமாறு கூறினார். பின்னர் பிரதான ஹாலுக்குச் சென்று ஊதுபத்திகளை ஏற்றினார். ஒரு குண்டு வீசும் விமானம் மடாலயத்தின் அருகில் இருந்த ஆற்றுப் படுகையில் ஒரு  குண்டைப் போட்டது. பின்னர் எல்லா விமானங்களும் ஆலயத்தைச் சுற்றின. திடீரென்று அவற்றில் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி  த்ரையில் விழுந்து நொறுங்கின. அதிலிருந்த விமானிகளும் வீரர்களும் கொல்லப்பட்டனர், அதிலிருந்து எதிரி விமானங்கள் ஆலயத்தின் அருகில் வரவே இல்லை.

 

 

குளிர் காலத்தில் பதினொன்றாம் மாதத்தில் பிரஸிடெண்ட் லின் ஷென் உபாசகர் சூவையும் ஷாங் ஜி லியன்னையும் அனுப்பி ஸு யுன்னை போர்க்காலத் தலைநகரான சோங்கிங் நகருக்கு வந்து ஒரு பிரார்த்தனை நடத்தித் தருமாறு வேண்டினார். அங்கு சென்று ஸு யுன் ஹெங் ஷான் என்ற புனித மலையில் பிரார்த்தனையை நடத்தினார். பின்னர் அங்கிருந்த பல்வேறு இடங்களுக்கும் அவர் சென்ற போது மக்களும் இராணுவ அதிகாரிகளும் திரளாக வந்திருந்து அவரை தரிசித்தனர். பிரஸிடெண்ட் லின் ஷென்னைப் பார்த்த பிறகு இரண்டு தர்ம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆண்டும் முடிந்தது.

 

-தொடரும்

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 28 (Post No. 3554)

Written by S NAGARAJAN

 

Date: 18 January 2017

 

Time uploaded in London:-  6-34 am

 

 

Post No.3554

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 28

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 95. வசந்த காலம் வந்தது. வின்ய பள்ளியை மேம்படுத்துவதற்காக தர்மா மாஸ்டர் சி ஷோவை தலைமை ஆசிரியராக இருக்குமாறு ஸு யுன் கேட்டுக் கொண்டார்.

இரண்டாம் மாதத்தில் ஒரு நாள்  மாலை ஸு யுன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது ஆறாம் குலபதி அவர் முன் தோன்றினார். அது நிச்சயமாக கனவு இல்லை. “நீ போகும் காலம் வந்து விட்டது” என்று அவர் தெளிவாகக் கூறினார். ஆறாம் குலபதி என்பவர் ஹூய் நெங் என்ற பெயரைக் கோண்டவர். (அவர் வாழ்ந்த காலம் கி.பி.638-713) அவரால் தான் மனம் பற்றிய புதிய மார்க்கம் சீனாவில் பரவியது.

அடுத்த நாள் ஸு யுன் இதை தன் சிஷ்யரான குவன் பென்னிடம் குறிப்பிட்டு, “ஒரு வேளை நான் பூமியிலிருந்து போக வேண்டிய காலம் வந்து விட்டதோ என்னவோ?” என்றார்.

 

குவான் பென் தன் மாஸ்டரான் ஸு யுன்னுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

நான்காம் மாதத்தில் திரும்பவும் அதே தோற்றம்! ஆறாம் குல்பதி மூன்று முறை ஸு யுன்னை திரும்பிப் போகும்படி வற்புறுத்தினார்.

மறுநாள் குவாங்டாங் மடாலயத்திலிருந்து தந்தி ஒன்று வந்தது அங்குள்ள ஆறாம் குலபதியின் ம்டாலயப் பொறுப்பை ஏற்க முன் வருமாறு ஸு யுன்னுக்கு அழைப்பு அந்த் தந்தியின் மூலம் வந்திருந்தது.

அந்த ம்டாலயம் மிகவும் சிதிலமடைந்திருதது. ஸு யுன் அங்கு கிளம்ப முடிவு செய்து புறப்பட்டார்.

 

1933 நவம்பர் முதல் ஆரம்பித்த புனருத்தாரண பணி 1934 அக்டோபரில் முடிந்தது. அங்கு தர்ம சூத்ரங்களை ஸு யுன் விளக்க ஆரம்பித்தார்.

காண்டன் மற்றும் ஷோவாகுவான் நகரத்தைச் சேர்ந்த பெரும் அதிகாரிகளும் அவர்கள் குடும்பத்தினரும் திரள் திரளாக வந்தனர். அவர்கள் அனைவரும் ஸு யுன்னின் சிஷ்யர்களாக ஆயினர்.

பதினொன்றாம் மாதம் 17ஆம் நாள் மாலை விளக்கவுரை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு புலி அங்கு வந்தது. அனைவரும் பயந்து நடுநடுங்கினர். ஆனால் ஸு யுன்னோ தொடர்ந்து விளக்கவுரையை புலிக்கும் கூறலானார்.அகதி சூத்ரத்தைக் கேட்ட புலி சாதுவாக திரும்பிச் சென்றது.

 

 

1934ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் நாள் திரளான் அதிகாரிகள், சிஷ்யர்களுடன்  ஸு யுன்  காவோஸி என்ற இடம் நோக்கிச் சென்றார். அங்கு குலபதியின் பிறந்த தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஸு யுன் தர்ம சூத்ரங்களைச் சுருக்கமாகப் பாடினார்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 96. வ்சந்த காலத்தின் போது அதுவரை நல்ல ஆதரவு நல்கி வந்த ஜெனரல் லி ஹான் – யுன் கிழக்கு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

 

ஹாங்காங்கில் உள்ள டோங்குஹா மருத்துவமனைக் குழுமம் ஸு யுன்னை உடனே வருமாறு அழைப்பு விடுத்தது. நீரிலும் நிலத்திலும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய சடங்குக்ளைச் செய்ய வேண்டும் என்பது அங்குள்ளோரின் விருப்பம்.

இதற்கென அங்குள்ள டாங் லியான் மற்றும் ஜூ யுவான் ஆலயங்களில் ஒரு விசேஷ பீடம் நிறுவப்பட்டது.  இந்த சடங்குகள்  முடிந்த பின்னர் நேராக  கு ஷான் மடாலயம் திரும்பிய ஸு யுன் அங்கு தனது ராஜிநாமாவைச் ச்மர்ப்பித்தார்.

பிறகு நான் ஹுவா மடாலயம் திரும்பிய ஸு யுன் ஆறாம் குலபதியின் பிரதான் ஹாலைப் புதுப்பித்தார். அவலோகிதேஸ்வரருக்கு அங்கு ஒரு சந்ந்தியைப் பிரதிஷ்டை செய்தார்.

குளிர் காலத்தில் அங்கு பட்டுப்போயிருந்த மூன்று செடார் மரங்கள் திடீரென்று துளிர் விட்டு மீண்டும் தழைக்க ஆரம்பித்தன.

நெடுங்காலமாக வாடி இருந்த அவை இப்படி மலர்ச்சியுற்றதைத் தொடர்ந்து அங்கிருந்த அவைத் தலைவர் மாஸ்டர் குவான் பென் இந்த நிகழ்ச்சியை ஒரு பாடலாகப் பாடினார். அந்தக் கவிதையை உபாசகர் ஜென் ஸூ லூ ஒரு கல்வெட்டில் பொறித்து அங்கு நிறுவினார்.

ஸு யுன்னுக்கு இப்போது வயது 97. நான் ஹுவா மடாலய கட்டிடம் வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்ட பின்னர் படிப்படியாக முழுமை பெற்றது.

 

குடியரசுத் தலைவர் லின் ஷென், காபினட் மந்திரியான சூ ஷெங்,  ஜெனரல் சியாங் கே ஷேக் ஆகியோர் ஸு யுன்னைப் பார்க்க வருகை புரிந்தனர். லின்னும் சூ ஷெங்கும் பெரிய அளவில் நிதி உதவி அளித்தனர். சியாங் கே ஷேக்கோ காவோக்ஸி நீரோடையை தடம் மாற்றுவதற்காக தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய ஊதியத்தைத் தர முன் வந்தார்.

பழைய காலத்தில் காவோக்ஸ் நீரோடை ம்டாலயத்திலிருந்து சுமார் 1400 அடி தள்ளிப் பாய்ந்து கொண்டிருந்தது. அங்கு ஏராளமான புதர்களும் பாறைகளும் வரவே அது பாதை மாறி மடாலயம் நோக்கிப் பாய ஆரம்பித்தது. பழைய தடத்திற்கு அதை  மாற்ற 3000 தொழிலாளிகள் தேவையாக இருந்தது.

அந்தப் பணி தொடங்க இருந்த நாள் நெருங்கியது.

 

ஏழாம் மாதம் இருபதாம் நாளன்று மாலை திடீரென இடி ஒலி கேட்டது, அப்போது ஆரம்பிதத் இடியோசை இரவு முழுவதும் தொடர்ந்தது. தொடர்ந்து காவோக்ஸி நதியில் பெருவெள்ளம் பொங்கியது. ஆனால் என்ன ஆச்சரியம், அந்த வெள்ளப் பெருக்கு காவோக்ஸியின் பழைய தடத்தைப் புதுப்பித்து அதன் வழியாகவே நீர்ப் பெருக்கு செல்ல ஆரம்பித்தது. எந்த ஒரு மாபெரும் பணி தொடங்க இருந்ததோ அது சில மணி நேரங்களுக்குள் தானாகவே முடிந்து விட்டது!

இந்த அதிசயத்துடன் வருடம் முடிவுக்கு வந்தது.

தொடரும்

*********

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 27 (Post No.3542)

Written by S NAGARAJAN

 

Date: 14 January 2017

 

Time uploaded in London:-  6-13 am

 

 

Post No.3542

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 27

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 91. முந்தைய  வருடம் ‘மவுண்ட் கு’ வில் இருந்த போது மடாலயத்தின் நிர்வாகம் செம்மையாக நடைபெறும் படி மேம்படுத்தப்பட்டது. ப்ரஹ்ம நெட் சூத்ரங்களின் விளக்கவுரையை ஸு யுன் சொல்லி வந்தார். பிட்சுக்கள் தங்கும் விடுதியின் பின்னால் இருந்த முற்றத்தில் இரண்டு பனை  மரங்கள் இருந்தன. அவை டாங் வமிசம் இருந்த போது ‘மின்’ மாகாண இளவரசரால் பல நூற்றாண்டுகளுக்கு  முன்னால் நடப்பட்டவையாம். அந்த மரங்கள் மெதுவாக வளர்பவை என்பதோடு வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இலைகளை மட்டுமே துளிர் விடுமாம். பத்து அடி உய்ரமே இருந்த அந்த ம்ரங்கள் பூப்பதில்லை.  அது பூக்க ஆயிரம் வருடங்கள் ஆகுமாம். ஆனால் ஸு யுன் சூத்திரங்கள் சொன்ன போது அவை பூத்தன. இந்த அதிசயத்தைக் கேட்டு மடாலயத்தின் அருகிலிருந்தோரும் வெகு தொலைவிலிருந்தோரும் கூட்டம் கூட்டமாக் வந்து அந்தப் பனை  மரங்களைப் பார்த்தனர். மாஸ்டர் வெங்-ஜி இந்த அதிசயத்தை கல்வெட்டில் பொறித்து மடாலயத்தில் நிறுவினார்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 92. கு ஷான்  மடாலயத்தில் சூத்ரங்களை இசைத்து வந்தார் ஸு யுன். வினய மார்க்கத்திற்கான பள்ளி ஒன்றையும் திறந்து வைத்தார். அத்துடன் பிங்-கு மறு ஸி – லின், யுன் –வோ ஆகிய  இடங்களில் ஆலயங்களையும் கட்டினார்.

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 93. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன. நரைத்த முடி, தாடியுடன் வந்த ஒரு முதியவர் நேராக ஸு யுன் இருந்த அறைக்கு வந்து நமஸ்கரித்து வினய விதிகளைப் போதிக்குமாறு கேட்டுக் கொண்டார். விசாரித்ததில் அவர்  பெயர் யாங் என்றும் அவர் நான் – டாய் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. நான் – டாய் நகரைச் சேர்ந்த இன்னொருவரான மியாவோ-ஜாங் என்பவரும் அப்போது சூத்ரங்களைப் பெற அங்கு வந்திருந்தார். அவர் அந்த முதியவரைத் தான் நான் – டாயில் ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறினார். சூத்ரங்கள் இசைக்கப்பட்டு போதிசத்வரின் ந்ற்சான்றிதழகள் அனைவருக்கும் தரபப்ட்டன,. அதன் பின் அந்த முதியவரைக் காணோம்.

சொந்த ஊருக்குத் திரும்பிய மியாவோ – ஜாங்,  ட்ராகன் கிங் என்னும் ஆலயத்திற்குச் சென்ற போது அங்கிருந்த சிலையைப் பார்த்து அதிசயித்தார். ஏனெனில் அந்த சிலை தான் பார்த்த  முதியவரைப் போலவே இருந்தது. அத்துடன் அந்த சிலையின் கையில் ஸு யுன் வழங்கிய போதிசத்வரின் நற்சான்றிதழும் இருந்தது. முதியவர் வேடத்தில் வந்து கிங் டிராகன் போதிசத்வரின் நற்சான்றிதழ் பெற்ற செய்தி காட்டுத் தீ போல வெகு வேகமாகப் பரவியது. அனைவரும் அதிசமான இந்த நிகழ்வைப் பற்றிப் பேசியவாறு இருந்தனர்.

 

 

அந்த வருடம் 66 வயதான காண்டனீஸ் உபாசகரான ஜாங் யு டாவ் என்பவர மடாலயத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு தர்மத்தின் நாமமான குவான் பென் என்ற பெயர் புதிதாக சூட்டப்பட்டது. ம்டாலய நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் வரிசைப்படுத்தும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. அவர் வினய விதிமுறைகளை அனைவருக்கும் விளக்கும்படி கோரப்பட்டார். வருடம் இனிதே முடிந்தது.

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 94. வசந்த காலத்தில் தர்ம குருவான யின் – சி ப்ரஹ்ம நெட் சூத்ரங்களை விளக்கினார். முதல் மாதத்தில் ஜப்பானிய ராணுவம் ஷாங்காய் கண்வாயை ஆக்கிரமித்து ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது.  19வது தடத்தின் படை ஒரு அவசரநிலையை பிரகடனம் செய்யவே எந்த மடாலயமும் புதிதாக வரும் விருந்தினர்களை அனுமதிக்க மறுத்தது. கு ஷான்  மடாலயம் மட்டும் கடல் வழியே வரும் விருந்தினரகளை அனுமதித்தது. 1500 முதல் 1600 பேர்  மடாலயத்தில் தங்கி இருந்தனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.குறைந்த ப்ட்சம் அரிசிக் கஞ்சியாவது அனைவருக்கும் உண்டு.

அந்த வருடத்தில் ஐந்தறிவு ஜீவராசிகளுக்கான பூங்கா கட்டி முடிக்கப்பட்டது.அங்கு அசாதாரணமான் எடையுடன் இருந்த ஒரு வாத்து. பிரதான ஹாலில் வந்து நின்றது. அதை  ம்ரமீனால் தட்டிய போது சிறகை விரித்து ஆடியது. நாள் முழுவதும் புத்தரின் விக்ரஹத்தைப் பார்த்தவாறே அது நின்று கொண்டிருந்தது. ஒரு  மாதம் கழித்து அது இறந்தது. இறந்தும் கீழே விழாமல் அப்படியே நின்ற நிலையில் அது நின்ற்வாறு இருந்த அதிசயத்தை எல்லோரும் பார்த்த வண்ணம் இருந்தனர். உபாசகர்  ஜியாங்  இந்த் அதிசய சம்பவத்தைக் கண்டு அதை புத்த தர்ம சடங்குகளின் படி எரியூட்டினார். ஏழு நாட்கள் கழித்தே அது எரியூட்டப்பட்டது என்றாலும் அழுகிப் போய் நாற்றம் அடிக்கவே இல்லை. எல்லாப் பறவைகளுக்கும் பொதுவாக ஒரு குழி வெட்டப்பட்டு அதில் அஸ்தி சாம்பல்கள் வைக்கப்பட்டன.

நாட்கள் மாதங்களாகி வருடமும் முடிவுக்கு வந்தது.

-தொடரும்

***

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 24 (Post No.3490)

Written by S NAGARAJAN

 

Date: 28  December 2016

 

Time uploaded in London:-  5-34 AM

 

Post No.3490

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 24

 

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 84.

 

 

புத்த தர்மத்தில் பக்தர்களில் ஏழு பிரிவுகள் உண்டு.

  • பிட்சுக்கள் – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இவர்கள்
  • பிட்சுணி – முழுவதுமாக உலகைத் துறந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண்மணிகள்
  • சிக்ஷம்ணா – ஆறு உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
  • ஸ்ரமணிரா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகர்கள்
  • ஸ்ரமணிரிகா – ஆரம்ப உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் ஆரம்ப சாதகப் பெண்மணிகள்
  • உபாசகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியன்
  • உபாசிகா – முதல் ஐந்து உபதேசங்களைக் கடைப்பிடிக்கும் சாமானியப் பெண்மணி

 

இந்த ஏழு வகைப் பிரிவினரின் அஸ்திகளை வைப்பதற்காக ஒரு பெரிய ஸ்தூப கட்டிடம் இந்த வருடத்தில் அமைக்கப்பட்டது.

 

 

அதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது பத்தடி ஆழத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில், “ஸ்ரீமதி லி. ஃபான் யாங்கைச் சேர்ந்தவர் ஜியா ஜிங் ஆட்சியில் (1525-1526ஆம் ஆண்டு) நான்காம் ஆண்டில் மறைந்தவர்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

 

 

அவரது  முகம் உயிரோடிருப்பது போல அன்றலர்ந்த நிலையில் இருந்தது. அவரை எரியூட்டும் சமயம் அந்த சிதையிலிருந்து எழுந்த ஜுவாலைகள் தாமரை வடிவில் உருவெடுத்தன.அவரது அஸ்தி  உபாசிகாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

ஆலயத்திற்கு வலப்புறத்தில் இருந்த அனைத்து கல்லறைகளும் தோண்டப்பட்டன. எரியூட்டப்பின்னர் எடுக்கப்பட்ட அஸ்திகள் ஸ்தூபத்தில்  முறைப்படி வைக்கப்பட்டன.

 

 

ஒரு கல்லறையில் இருந்த கல்லறை வாசகத்தில் டாவோ மிங் என்ற பிட்சுவின் வாழ்க்கை பற்றி பொறிக்கப்பட்டிருந்தது. அவர் டாவோ-குவாங் ஆட்சியின் போது (1821-1850) பிறந்தவர். சங்கத்தில் சேருமாறு அவர்கள் பெற்றோரால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டவர். முறைப்படியான சடங்குகளுக்குப் பின்னர் அவர் அவலோகிதேஸ்வரர் நாமத்தைச் சொல்ல ஆரம்பித்தார்

 

அவர் படுத்த படுக்கையாக கிடந்த சமயம், ஒரு நாள் இரவு போதிசத்வர் அவர் கனவில் தோன்றி அவரைக் குளிக்குமாறு ஆணையிட்டார். அதற்குப் பின்னர் அவர் கனவில் போதிசத்வர் வரவே இல்லை.

 

 

குளித்ததற்குப் பின்னர் அவர் கால்கள் மிகவும் இலேசாக ஆயின. அடுத்த நாள் காலை அவரால் மற்றவர்களைப் போல நடக்க முடிந்தது. அவர் அகத்தில் ஞானம் உதிக்கவே இறுதி வரை போதிசத்வர் நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கல்லறையில் இருந்த் சவப்பெட்டியின் மூடி கரையானால் அரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கரையான் அரிப்பு ஒரு சித்திர வடிவில் இருந்தது. அது ஒரு ஏழு மாடி எண்கோண ஸ்தூப வடிவில் இருந்தது. அந்த பிட்சுவின் தவத்திற்கான சித்தியாக அது அமைந்திருந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.

 

இப்படியாக அந்த ஆண்டு முடிவிற்கு வந்தது.

-தொடரும்

******