
Post No. 8255
Date uploaded in London – 28 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழைப் போலவே ஸம்ஸ்க்ருதமும் அழகான மொழி . கொஞ்சம் எழுத்துக்களை மாற்றிப் போட்டால் அர்த்தமே மாறி விடும். க, ச ட , த, ப என்பதற்கெல்லாம் ஒவ்வொரு வர்க்கத்திலும் 4 எழுத்துக்கள் வீதம் இருப்பதால் இன்னும் ஜாக்கிரதையாக உச்சரிக்க வேண்டும் . இதைக் கொஞ்சம் பயின்றால் அருணகிரிநாதர் போல நாமும் சந்தக் கவி எழுதத் தொடங்கி விடுவோம் ; படிக்கப் படிக்க இசை ஓசை எழும்பும்
மெதுவாகப் படித்தால் அகராதியைப் பார்க்காமல் நாமே பொருள் சொல்லிவிடுவோம் .தசரதன், பசுவதை, மது, மதம் என்பதெல்லாம் நாம் அறிந்த சொற்களே . ஹைதராபாத், அலகாபாத், ஆமதாபாத் என்பதில் ஜனபத என்ற சொல் இருக்கிறது. புத்தர் காலத்தில் 16 மஹா ஜனபத (ங்கள்) இருந்தன. 56 தேசங்கள் என்று கதைகளில் நாம் படிப்பதெல்லாம் குட்டி ஜனபத ஆகும். இவை பல நகரங்களின் பெயரில் இன்றும் ஒட்டிக்கொண்டுள்ளன
சங்கீத மேதை பாபநாசம் சிவன் வடமொழி சொற்கடல் என்ற புஸ்தகத்தில் பக்கம் பக்கமாக இந்த அழகை எடுத்துக் காட்டியுள்ளார் இதோ இணைப்பைப் பாருங்கள் :–


சம்ஸ்க்ருத/ தேவ நாகரி எழுத்து படிக்கமுடியாதவர்களுக்கு அதே வரிசைக் கிரமத்தில் இதோ சொற்கள் :
அதிபத , அவப்ருத,அதிரத , தசரத, ஜனபத, ம்ருகமத ,மதுமத , தனமத ,அபசத /அபஸ த ,பசுவத, சிசுவத
tags- தசரத, அதிரத, அதிபத , ஜனபத