4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் ஆண்டு! (Post No.9492)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9492

Date uploaded in London – –14  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

படகு /ப்லவ/ பிலவ வருஷ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அறுபது வருட வரிசையில் முப்பத்தைந்தாவதாக இடம்பெறுவது படகு. இதற்கான ஸம்ஸ்க்ருத்ச் சொல்  ‘ப்லவ’ (Float/Boat in English) .

இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலன்களையுயும் அளிக்கட்டும்!

படகு /ப்லவ என்று சொன்னவுடன் சில படகு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.

அப்பர் பெருமான் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் படகு பற்றிப் பாடினார் :–

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி

சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே

–அப்பர் தேவாரம் 4-46

அழகான உருவக அணி!

மனம் = படகு/தோணி

மதி /அறிவு = துடுப்பு

சினம் = சரக்கு

கடல் = சம்சார சாகரம்/ பிறவிப் பெருங்கடல் (குறள் )

மனன் = மன்மதன்/காமம்

மறியும்போது = இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால்

உன்னை நினைக்கும் உணர்வு = ஓற்றியூரில் கோவில்கொண்ட

சிவபெருமானே  உன்னை நினைந்தால் போதும் ; உய்வு உண்டு.

மனம் என்பது ஒரு படகு என்பதையும், அது காற்று அடிக்கும் திசைக்கு ஏற்பச் சென்றால் என்ன நடக்கும் என்பதையும் அழகாக எடுத்துரைக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நாலாம் திருமுறையில்.

XXX

ஆக ப்லவ வருஷ அறிவுரை:

படகை ஜாக்கிரதையாக, கவனமாக செலுத்துங்கள் !

அடுத்தபடியாக என் நினைவுக்கு வரும் கவிதை பாரதியாரின் கவிதையே!

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

நல்ல சுவையான அருமையான கற்பனை : மலையாள அழகிகள்; நதி- பஞ்சாப் பில் ஓடும் சிந்து நதி ; அதில் தோணி/படகுப் பயணம். பின்னணியில் தெலுங்கு மொழியின் தேனிசை !

இப்படி வாழ்நாள் முழுதும் கழிக்க முடிந்தால் எப்போதும் தோணி/ படகு/ கப்பல்/ ப்லவ நீடிக்கட்டும்! .

XXX

அப்பருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் புத்தர். அவர் கடலைக் கண்டதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர் வலம் வந்த இடங்கள் பீஹார் , உத்தரப்பிரதேச மாநில  நகரங்களே . அவர் படகு பற்றிப் படுகிறார். அது கங்கை நதி அல்லது ஏரிப்  படகாக இருக்கவேண்டும்

தம்மபதத்தில் புத்தரும் அப்பர் போல எச்சரிக்கிறார் –

வாழ்க்கை என்னும் படகிலுள்ள சரக்கை தூக்கி எறியுங்கள் ; அப்போது அது வேகமாகச் செல்லும்  தீய ஆசைகளையும் புலன் இன்பத்தையும் (சரக்கு) களைந்து விட்டால் வாழ்க்கைப்படகு ‘நிர்வாணம்’ (முக்தி) என்னும் இடத்தை விரைவில் அடைந்து விடும் – தம்மபதம் 369.

வாழ்க்கை = படகு

சரக்கு = ஆசைகள்

XXX

4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் பிலவ ஆண்டு.

இறுதியாக இந்த பிலவ ஆண்டின் அதிர்ஷ்ட சாலிகள் யார் என்று பார்ப்போம் :-

தனுர், மீனம், ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ; அதைவிட கூடுதல் அதிர்ஷ்டம் மகர ,கும்ப ராசிக்கார்களுக்கு இருந்தாலும் அதே அளவுக்கு நஷ்டமும் உண்டு ; அதாவது லாபமும் நஷ்டமும் சமம்

அதிக நஷ்டம் உடைய  ராசிகள் –

கடக , சிம்மம்

ஏனைய ராசிக்காரர்களுக்கு லாப- நஷ்டம் சமம்

XXX

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்

ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட

மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்

நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

பெரியபுராணம்சேக்கிழார்

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து!

–subham–

Tags – ராசி, அதிர்ஷ்டம், மனம், படகு, தோணி , ப்லவ, பிலவ

ஆமைக்கு அடித்த அதிர்ஷ்டம் (Post No9377)

ஆமைக்கு அடித்த அதிர்ஷ்டம் (Post No9377)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9377

Date uploaded in London – –13 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.பிரெட் (Fred) என்ற பெயருள்ள ஒரு ஆமை பிரிட்டனிலேயே பணக்கார ஆமை ஆகிவிட்டது . மிஸ் டாலி டப்பின் (Miss Dolly Duffin) என்பவர் இந்த ஆமையை வீட்டில் செல்லப் பிராணியாக (pet) வளர்த்து வந்தார். அவர் 1990-ம் ஆண்டு மார்ச் மாதம்

பிராணிகளைக் காப்பாற்றும் அறக்கட்டளைக்குப் போகவேண்டும் என்றும் டாலி தனது உயிலில் எழுதி வைத்துள்ளார் .

tags-குரங்கிற்கு , சிலை,  ஆமை, அதிர்ஷ்டம்,

அதிர்ஷ்டம் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.7392)

Written by london Swaminathan

Date – 28th December 2019

Post No.7392

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ஜனவரி 2020 காலண்டர்

மார்கழி மதம், விகாரி வருஷம்

சுபமுகூர்த்த தினங்கள் – ஜனவரி 20, 27, 30

முக்கிய பண்டிகைகள் – ஜனவரி 1 புத்தாண்டு தினம்;  6 வைகுண்ட ஏகாதஸி ; 10 ஆருத்ரா தரிசனம்; 14 போகிப்பண்டிகை; 15 தைப்பொங்கல்; 16 கனு, மட்டுப் பொங்கல்; 16 திருவள்ளுவர் தினம் ; 17 உழவர் திருநாள்; 24 தை  அமாவாசை; 26 குடியரசு தினம்.

அமாவாசை – 24; பவுர்ணமி -10, ஏகாதசி – 6, 20/21

ஜனவரி 1 புதன் கிழமை

KR – KAHAVATRATNAKAR; AM – AVI MARAKA DRAMA OF BHASA

RM – RAMAYANA MANJARI; BM – BHARATA MANJARI

RT – RAJA TARANGINI OF KALHANA; SVD -SVAPNAVASAVADATA OF BHASA

SP- SARNGADHARAPADDATHI; KSS – KATHA SARIT SAGARA

அநாயாசம் அம்ருதம் பத கசிய ந ரோசதே –பி எம்

வேலையே செய்யாமல் அமிர்தம் கிடைத்தால் யார் வேண்டாமென்று சொல்லுவார்

X

 ஜனவரி  2 வியாழக் கிழமை

அநித்யபதநோச்ராயாஹா  விசித்ரா பாக்யவ் ருத்தயஹ — ஆர் டி 5-262

மேடும் பள்ளமும் கொண்ட விதியின் விளையாட்டு விநோதமானதே

x

ஜனவரி  3 வெள்ளிக் கிழமை

அதிருட்டத்திற்கு அறிவில்லை – தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  4 சனிக் கிழமை

அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல– தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  5 ஞாயிற்றுக் கிழமை

அனுகூலே யதா தைவே க்ரியா ல்பா சுபலா பவேத் – சம்ஸ்க்ருத பழமொழி

இறைவன் அருள் இருந்தால் தினை அளவு முயற்சியும் பனை அளவு பலன் தரும்

x

ஜனவரி 6 திங்கட் கிழமை

அனுபத் னாதி பவ்யானாம்  உதயே அப்யுதயாந்தரம் — ஆர் டி 8-2275

அதிர்ஷ்டம் கண் பட்டால் அலைபுரண்டு வரும் செல்வங்கள்

x

ஜனவரி  7 செவ்வாய்க் கிழமை

அபவ்யாஹா ப்ராப்தமப்யர்த்தம் நைவ ஜானாதி ரக்ஷிதம் – கதா சரித சாகரம்

கிடைத்த செல்வத்தையும் பாதுகாக்க வழிதெரியாது துரதிருஷ்ட சாலிகளுக்கு

x

ஜனவரி 8 புதன் கிழமை

அபீஷ்டம் லப்யதே தைவாத்யக்தம் ந புனரேதி தத் –ஆர் எம்

நம் ஆசைகளைப் பூர்த்தி செய்வது அதிர்ஷ்டம்; ஒருமுறை புறக்கணித்தால் மீண்டும் வராது .

x

ஜனவரி  9 வியாழக் கிழமை

ஆயாசபாஜனோ நிதியம் பாக்யஹீ னா னுகோ ஜனஹ — பி எம்

துரதிருஷ்டசாலிகளைப் பின்பற்றுவோருக்கு எப்போதும் கஷ்டம்தான்

x

ஜனவரி  10 வெள்ளிக் கிழமை

சக்ராபங்த்திரீவ  கச்சதி பாக்ய பங்த்திஹி  –எஸ் வி டீ

அதிர்ஷம் என்பது சக்கரம் போல சுழலும்

x

ஜனவரி  11 சனிக் கிழமை

அதிருட்டமுள்ளவன்  அலைகடலிலும் அமிழான் — தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  12 ஞாயிற்றுக் கிழமை

அதிருட்டம் ஆறாய் பெருகுகிறது —- தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி 13 திங்கட் கிழமை

பாக்யா னாம் உதயே விசந்தி சதசோ த்வா ரைர்ன  கைஹி ஸ ம்பதஹ – ஆர் டி

அதிர்ஷ்டம் உச்ச நிலையில் இருக்கும்போது பல வாசல்கள் வழியாக நூறு மடங்கு செல்வங்கள் வரமாட்டாதா ?

x

ஜனவரி  14 செவ்வாய்க் கிழமை

ரக்ஷந்தி பாவிகல்யாணம் பாக்யான்யேவ — கதா…………

அதிர்ஷ்டமே மேலும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்

x

ஜனவரி 15 புதன் கிழமை

அதிருட்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  16 வியாழக் கிழமை

ரூபேண ஹீனஹ  பிரபலஸ்ச பாக்யாத் – கே ஆர்

ஆள் அவலட்சணம்தான் ; அதிர்ஷ்டம் அவனுக்கு அள்ளித்தருகிறது

x

ஜனவரி  17 வெள்ளிக் கிழமை

பவந்த்யுதய காலே ஹி சத் கல்யாண பரம்பராஹா – கதா ………………….

அதிர்ஷ்டம் வந்தால் நல்லவை மலை போல பெருகும்

x

ஜனவரி  18 சனிக் கிழமை

நல்லவை எல்லா அவாந்  தீயவாம்  தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு – குறள் 375

விதி நன்றாக இருந்தால் கெட்டதும் நல்லதாகிவிடும் ; அதிர்ஷ்டம் இல்லையானால் நல்லதும் கெட்டுப்போகும்

x

ஜனவரி  19 ஞாயிற்றுக் கிழமை

பாக்யவந்தம் ப்ரஸு ஏ தாஹா மா சூ ரம் மா ச பண்டிதம் — எஸ் பி

வீரனும் வேண்டாம், அறிவாளியும் வேண்டாம், உனக்கு அதிர்ஷ்டசாலி கிடைப்பானாக

x

ஜனவரி 20 திங்கட் கிழமை

பாக்யம் ப்ரபூணாம் பலவத்தரம் ஹி – கே ஆர்

பலமுள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்தால் மேலும் சக்தி கிடைக்கும்

x

ஜனவரி  21 செவ்வாய்க் கிழமை

பாக்யம் பலதி  சர்வத்ர ந வித்யா ந ச பவ் ருஷம் — கே ஆர்

கல்வியும் இல்லை, வீரமும் இல்லை, அதிர்ஷ்டமே பலன் தரும்

x

ஜனவரி 22 புதன் கிழமை

பாக்ய க்ரமேண ஹாய் தனானி வாந்தி யாந்தி — எம் கே 1-13

செல்வம் வருவதும் போவதும் அதிர்ஷ்டத்தைப் பொருத்தே

X

ஜனவரி  23 வியாழக் கிழமை

அதிருட்டம் இல்லாதவனுக்கு கலப் பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும் — தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  24 வெள்ளிக் கிழமை

குதிரை ஏற யோகமிருந்தால் கொண்டேற வேண்டுமா ? தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  25 சனிக் கிழமை

அதிருட்டம் கெட்டதுக்கு அறுபது நாழியும் தியாஜ்ஜியம் தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி  26 ஞாயிற்றுக் கிழமை

அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு குதிரை கு …….க்குக் கீழே தானே வந்து நிற்கும் — தமிழ்ப் பழமொழி

x

ஜனவரி 27 திங்கட் கிழமை

பிரயோ கச்சதி யத்ர பாக்யரஹிதஹ தத்ரைவ யந்த்யா பதஹ– நீதி சாஸ்திரம் 84

து ரதிருஷ்டசாலிகளைத் துன்பங்கள் தொடரும்

x

ஜனவரி  28 செவ்வாய்க் கிழமை

சவுபாக்கியேன வைத்யானாம் ரோகர்த்தோ ஜாயதே ந்ருபஹ — கே ஆர்

அரசனுக்கு வியாதி; வைத்தியர்களுக்கு அதிர்ஷ்டம்

X

ஜனவரி 29 புதன் கிழமை

Arudra darsan from Lalgudi Veda

ஹஸ்தி ஹஸ்த சஞ்சலானி  புருஷ பாக்யானி வாந்தி – ஏ எம்

யானையின் தும்பிக்கை போன்றது .

X

ஜனவரி  30 வியாழக் கிழமை

ஹே பூஷன், எல்லாவித அதிர்ஷ்டங்களையும் கொண்டுவருவாயாக .தங்க வாள்

ஏந்தியவனே , செல்வங்கள் அனைத்தும் எங்களுக்கு எளிதில் கிடைக்கட்டும் -ரிக்வேதம் 1-42

X

ஜனவரி  31 வெள்ளிக் கிழமை

மணமகளே, உன் கணவர் வீட்டுக்குள் வருவாயாக, அங்குள்ள மக்களுக்கும் பிராணிகளுக்கும் அதிர்ஷ்டத்தைத் தருவாயாக –  ரிக் வேதம் 10-85-44

X

காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்! (Post No.5855)

Written by S Nagarajan


Date: 30 DECEMBER 2018


GMT Time uploaded in London – 5-29 am


Post No. 5855

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்!

ச.நாகராஜன்

 வாழ்வில் ஏற்படும் சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். ஏன் அப்படி நடந்தது என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது.

நல்ல விஷயம் என்றால் அதிர்ஷ்டம் என்று சொல்லி விடுவோம். கெட்ட விஷயம் என்றால் என் விதி; எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கூறிப் புலம்பி அழுது தீர்ப்போம்.

அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது என்பதை உணர்ந்தாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய எல்லோருக்குமே ஒரு ஆவல் இருக்கிறது.

ஜோதிடத்தில் மனிதனுக்குத் தீராத ஆசை ஏற்படுவது எதிர்காலத்தை அறியத் துடிக்கும் மனிதனின் இந்த மனப்பான்மை தான்!

 இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆஸ்டிரிய – பிரிட்டிஷ் தத்துவஞானியான சர் கார்ல் ரெய்மண்ட் பொப்பர் ( Sri Karl Raimond Popper – பிறப்பு 28-7-1902 மறைவு 17-9-1994) , ‘தர்க்கரீதியாகப் பார்த்தால் வரலாற்றின் எதிர்காலம் பற்றி  நம்மால் முன்கூட்டி கணிக்கவே முடியாது’ ( for strictly logical reasons, it is impossible for us to predict the future course of history) என்றார்.

அடுத்த விநாடி நடக்கப் போவதை அறியாதவன் ஆயிரம் ஆண்டுக்கு ஜோஸியம் சொன்னானாம் என்று அவர் எள்ளி நகையாடுகிறார்.

பல சம்பவங்களைப் பார்க்கும் போது நமக்கு வியப்புத் தான்  மேலிடுகிறது.

மூழ்கவே மூழ்காத கப்பல் என்று விளம்பரம் செய்யப்பட்ட டைட்டானிக் கப்பல் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு 1912 ஏப்ரலில் தனது பயணத்தை ஆரம்பித்தது.

வட அட்லாண்டிக்கில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி அது உடைந்தது; அதில் பயணித்த 2224 பயணிகளில் 710 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

அது மூழ்கியவுடன் தான் அதில் பயணிக்கத் தவறியவர்கள் யார் யார், ஏன் அவர்கள் அதில் பயணிக்கவில்லை என உலகினரால் விசேஷமாகப் பார்க்கப்பட்டார்கள்.

அவர்கள் ‘Just Missed It’ Club – அதாவது ‘மயிரிழையில் பிழைத்தவர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

இந்தப் பட்டியலில் ஏராளமானோர் இருந்தனர்.  அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களுள், தொழிலக முன்னோடிகள் என்று சொல்லக் கூடிய ஹென்றி க்ளே ஃபிரிக் (Henry Clay Frick),  ஜே.பி. மார்கன் (JP Morgan), ஜே. ஹொரேஸ் ஹார்டிங் (J. Horace Harding) ஆகியோரும் அடங்குவர்.

இந்த மூவருமே டைட்டானிக் கப்பலில் பயணப்பட ஏற்பாடுகளைச் செய்தவர்கள்!

ஹென்றி க்ளே ஃபிரிக் அமெரிக்காவின் தலைசிறந்த செல்வந்தர்களுள் ஒருவர். எஃகு, உருக்குத் தயாரிப்பாளர். பிப்ரவரியிலேயே தனக்கும் மனைவிக்குமாகச் சேர்த்து டிக்கட்டை முன்பதிவு செய்திருந்தார் அவர். ஆனால் திடீரென்று அவர் மனைவிக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டது. கணுக்கால் எலும்பில் முறிவு ஏற்படவே, இத்தாலியில் அவர் மருத்துவ மனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஆகவே அவர்களால் டைட்டானிக்கில் பயணிக்க முடியவில்லை. இவர்களுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த B-52,54,56 ஆகிய மூன்று சூட் ஜேபி மார்கனுக்கு ஒதுக்கப்பட்டது. வங்கித் தொழிலில் கொடி கட்டிப் பறந்த மார்கனும் மிகச் சிறந்த செல்வந்தர் தான். ஆனால் ஐரோப்பாவில் அவரது வணிக சம்பந்தமான திட்டத்திற்காக அவர் கொஞ்சம் அதிக காலம் தங்க வேண்டியதாயிற்று. அவரும் பயணத்தை ஒத்திப் போட்டார். இந்த முறை இவருக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் ஜே. ஹொரேஸ் ஹார்டிங்கிற்கும் அவரது மனைவிக்கும் ஒதுக்கப்பட்டன. இவரும் வங்கித் தொழிலில் ஈடுபட்டிருந்த பணக்காரர் தான்! ஆனால் இவர்களுக்கு இதற்கு முன்னர் கிளம்பிய கப்பலில் இடம் கிடைத்ததால் இவர்கள் முந்திக் கொண்டு அதில் சென்றனர்; காலன் பிந்திக் கொண்டு விட்டான்!

துரதிர்ஷ்டவசமான அந்த அறைகள் வொய்ட் ஸ்டார் லைன் சேர்மனான ஜே. ப்ரூஸ் இஸ்மேக்குப் போய்ச் செர்ந்தது.

மூன்று தொழிலதிபர்களும் டைட்டானிக் ஆபத்திலிருந்து எப்படி பிழைத்தனர்!

யாராலும் சொல்ல முடியவில்லை. துரதிர்ஷ்டவசமான அந்த அறைகளுக்கு அவர்கள் செல்லவே இல்லை!

இதே போல லண்டனில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சை சேர்ந்த பாதிரியாரான ஜே. ஸ்டூவர்ட் ஹோல்டனும் (J. Stuart Holden) இதில் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது மனைவியின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்படவே பயணத்திற்கு ஒருநாள் முன்னர் ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று தன் பயணத்தை அவர் தள்ளி வைத்தார்; பிழைத்துக் கொண்டார். இப்படி ஏராளமானோர் துரதிர்ஷ்டவசமாக முடியப் போகும் பயணத்தைத் தவிர்த்தனர்.

இதெல்லாம் யாரால், ஏன் நிர்ணயிக்கப்படுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.

இப்படி உயிர் பிழைக்க அதிர்ஷ்டம் காரணமாகும் நிகழ்வுகள் ஒரு புறம் இருக்க,  சில சிறிய நிகழ்வுகள் ஒருவருக்குப் பெரிய வாழ்வைத் தந்து விடுவதையும் பார்க்கிறோம்.

மன்னர் நான்காம் ஜார்ஜுக்கு ஒரு சமயம் திடீரென்று வலிப்பு வந்து விட்டது. தற்செயலாக அங்கு சென்றிருந்த ஒரு கிராம வைத்தியர் அவருக்கு உடனடி சிகிச்சை கொடுத்தார்; மயக்கமடைந்த மன்னருக்கு உணர்வு வரும்படி செய்தார். மன்னரிடம் பேச்சுக் கொடுத்து அவரின் மனநிலையை மாற்றி அவரைச் சிரிக்கவும் வைத்தார். அவரை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உடனடியாக அவர் அரண்மனை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

இப்படி எத்தனையோ பெருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வருவதையும் பார்க்கிறோம்; அவர்கள் பிரபலமாவதையும் பார்க்கிறோம்.

விஷம் கொடுத்துச் சாகாமல் இருப்பவர்கள் என்ற விஷயத்தை நம்ப முடியாது என்றாலும் கூட ரஸ்புடீனை எடுத்துக் கொண்டால் சற்று பிரமிப்பு தான் ஏற்படும்.

அவருக்கு கடுமையான விஷம் தரப்பட்டது. ஆனால் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பிழைத்துக் கொண்டார்.

இதே போல பதினான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்த ஒரு குழந்தை புல்தரையில் விழுந்து ஜம்மென்று நடந்த கதையையும் செய்தித் தாளில் பார்க்க நேரிடுகிறது.

என்ன ஆச்சரியம் போங்கள், இந்த மனித வாழ்க்கை!

காலன் அழைத்தாலும் காத்து விடுகிறது அதிர்ஷ்டம்!

சில சமயமோ நல்ல விஷயம் நடப்பதில்லை; எதிர்பார்த்ததற்கு மாறாக  ஏடாகூடமாக ஏதாவதொன்றில் சிக்கிக் கொள்கிறோம்.

வரலாற்றின் எதிர்காலம் இருக்கட்டும்; வரக் கூடிய அடுத்த கணமே நமக்கு எப்படி இருக்கும் என்பது தெரியாது, அது பற்றிச் சொல்லவும் முடியாது என்பது தான் உண்மை போலும்!

***

நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே! (Post No.3361)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 17 November 2016

 

Time uploaded in London:5-11 AM

 

Post No.3361

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

பாக்யா 18-11-16 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை

 

நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே!

ச.நாகராஜன்

“சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாயிருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்” –

நாடோடி மன்னன் படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம அவர்களின் பாடல்

 

அதிர்ஷ்டமே இல்லை என்று அலட்டிக் கொள்பவர்களில் ஒருவரா நீங்கள்? இனி கவலையை விடுங்கள். அதிர்ஷ்டத்தை நீங்கள் அழைக்கலாம். அறிவியல் அதிர்ஷ்டத்தை அலசி ஆராய்ந்து துணை புரிய வருகிறது.

இப்போது உலகெங்கும் பரபரப்பாகப் படிக்கப்படும் புத்தகங்கள் சான்ஸ் எனப்படும் அதிர்ஷ்டத்தைத் தரும் வாய்ப்பைப் பற்றி புத்தகங்களே!

 

 

கேய்ட் சுகெல் (Kayt Sukel)என்ற பெண்மணி தன் குழந்தையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஆப்பிரிக்காவையும் மத்திய கிழக்கையும் அடி அடியாக அளந்தவர். ரிஸ்க் எனப்படும் அபாயம் என்றால் அவருக்கு வெல்லக்கட்டி. துணிந்து ரிஸ்க் எடுத்து வாழ்ந்து பழகிய இவர் ‘தி ஆர்ட் ஆஃப் ரிஸ்க்’ (The Art of Risk) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது அதிர்ஷ்ட விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஸ்கை – அபாய முடிவுகளை – எடுங்கள் என்பதே இவரது அறிவுரை.

மனிதர்களிடம் ஒவ்வொருவரிடமும் ஒரு ரிஸ்க் கால்குலேடர் இயல்பாகவே இருக்கிறது என்கிறார் அவர். சூழ்நிலை, அனுபவம், அவசியம் ஆகியவற்றோடு நிலைமையை சரியாகக் கணிக்கும் மூளைத் திறனும் உள்ளவர்கள் ஜெயிப்பது நிஜம் என்கிறார் இவர். அதிக ரிஸ்கை இயல்பாக எடுக்கும் பலருக்கு ஜீன்கள் எனப்படும் மரபணுவும் ஒரு காரணம். DRD4 GENE இன் மாற்றுரு (Variant) ஒன்றைக் கொண்ட கல்லூரி மாணவ மாணவியர் லாபரட்டரி சோதனைகளில் மிகவும் துணிச்சலுடன் புதிய சோதனைகளைச் செய்து பார்ப்பது ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது.

 

 

அபாயகரமான முடிவுகளை அதிகம் எடுப்பவர்கள் நல்ல திறம்படத் திட்டமிடும் திறன் உடையவர்கள் என்பது இவர் தரும் சுவையான செய்திகளுள் ஒன்று.

புத்தகத்தை முடிக்கும் போது, “ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கின்ற முடிவுகளில் அது பெரிதோ சிறிதோ, வாழ்க்கையை மாற்றுவதோ அல்லது சாதாரணமானதோ, அதில் ஒரு ரிஸ்க் – அபாயம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்” என்கிறார். ஆக அதிர்ஷ்டத்தை அழைக்க அடிப்படைத் தகுதி கவனமுடன் ரிஸ்கைத் தேர்ந்தெடுத்துச் செயல்படும் திறனே!

 

 

    அடுத்து அதிரடியாக வாய்ப்பைப் பற்றிச் சொல்லும் இன்னொரு கலக்கல் புத்தகம் ‘தி பெர்ஃபெக்ட் பெட்’ (The Perfect Bet)  இதை எழுதியவர் பிரபல கணித மேதையான ஆடம் குர்சார்ஸ்கி (Adam Kucharski) .   லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றில் மறைந்திருக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து, என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிச்சயமற்ற தன்மையுடன் நாம் புத்திசாலித்தனமாக பேரம் பேசினால் வெற்றி தான் என்கிறார்.

 

 

அடுத்து பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியும் எழுத்தாளருமான ராபர்ட் மாத்யூஸ் எழுதிய ‘சான்ஸிங் இட்’ என்ற புத்தகம் (Chancing It by Robert Mathhews)  அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது.           

 

                                 

இவர் தெள்ளத் தெளிவாக வெற்றிக்கான வழிகளை அடுக்குகிறார்.  சூதாட்டத்தையும் லாட்டரியையும் நடத்துவோர் கணிதத்தின் ப்ராபபலிடி (Probability) எனப்படும் இயலும் நிலை பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தங்கள் வணிகத்தில் தோற்கவே மாட்டார்கள். அவர்கள் நம்புவது சூதாட வருவோரின் தொடர்ந்து ஆட வேண்டும் என்ற வெறி கொண்ட மன நிலையையே. ஆகவே ஓரிரு முறை வெற்றி பெற்றவுடன் சூதாட்ட களத்தை விட்டுக் கடையைக் கட்ட வேண்டும் என்கிறார் ராபர்ட்.

 

 

அடுத்து குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் ரிச்சர்ட் வைஸ்மேன் (Richard அதிர்ஷ்டம் பற்றி முறைப்படி பல ஆண்டுகள் ஆராய்ந்தவர் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.  

 

   இவர் அதிர்ஷ்டசாலிகளைத் தேடிப் பிடித்து ஆராய்ந்தார். 400 தன்னார்வத் தொண்டர்களைத் தன் ஆய்வுக்காக அழைத்தார். இதில் 18 முதல் 84 வயது வரை உள்ளவர்கள் அடக்கம்! இவர் ஆய்வின் முடிவில் கண்டு பிடித்தது அதிர்ஷ்டசாலிகளுக்கும் ஏனையோருக்கும் அடிப்படையிலேயே அணுகு முறையில் வித்தியாசம் இருக்கிறது என்பதைத் தான். யார் வேண்டுமானாலும் அதிர்ஷ்டசாலியாகலாம் என்று கூறும் இவர் நான்கு பயனுள்ள குறிப்புகளைத் (டிப்ஸ்) தருகிறார்.

 

 

 

  • அதிர்ஷ்டசாலிகள் தங்களது நல்ல காலத்தைத் தாங்களே உருவாக்குகிறார்கள் அவர்கள் நல்ல வாய்ப்புகள் வரும் போது நழுவ விடுவதே இல்லை. நல்ல வாய்ப்புகள் வரும் போது அதை அவர்கள் சிறப்புடன் இனம் காணுகிறார்கள்.
  • தங்கள் உள்ளுணர்வு அல்லது அந்தரங்க குரலை அவர்கள் கேட்கிறார்கள். மதிக்கிறார்கள். அதன் படி முடிவெடுக்கிறார்கள். பகுத்தறிவுடன் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் அவ்வளவாக மதிப்புக் கொடுப்பதில்லை!
  • தங்களது வெற்றிக்கான இலக்கை நிர்ணயிப்பதோடு அதை அடைந்து விட்டதாக கணிப்பையும் செய்து விடுகிறார்கள் அந்த அதிர்ஷ்டசாலிகள். வரப்போகும் வெற்றியை பாஸிடிவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.
  • தங்கள் பயணத்தில் தடைகள் வந்தால் அவர்கள் தளர்வதில்லை. மோசமான தோல்விகளை அல்லது துரதிர்ஷ்டங்களை அல்லது சவால்களை அவர்கள் கடுமையாக எதிர்கொண்டு நிற்பதோடு அவற்றை நல்லதிர்ஷ்டமாக மாற்றவும் செய்கிறார்கள்.

 

 

இந்த நான்கு விதிகளைக் கடைப்பிடிப்பவர்கள் நாளடைவில் தோல்விகளைச் சந்திப்பதே இல்லை. அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது இயல்பான வாழ்க்கைப் பழக்கமாக ஆகி விடுகிறது என்கிறார் வைஸ்மேன்.

 

 

இதற்கான ஏராளமான உதாரணங்களை அவர் அடுக்கிக் கொண்டே போகிறார். ஆகவே அவர் சொல்வதைக் கேட்டுக் கடைப்பிடித்தால் அதிர்ஷ்டசாலி ஆவது நிச்சயமே!

எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே!

 

–Subham–

                  

 

பெண்களின் மனதும், ஆண்களின் அதிர்ஷ்டமும் கடவுளுக்கே தெரியாது! (Post No 2720)

viry 25

Translated by london swaminathan

Date: 13 April, 2016

 

Post No. 2720

 

Time uploaded in London :– 9-27 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 4

viry 31

51.விஷம: ஸ்த்ரீணாம் ஈர்ஷ்யா விஷக்ருத: ஜ்வர: ——ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்களுக்குப் பொறாமையால் ஏற்படும் விஷ ஜுரம் அவர்களை கொடுமைப்படுத்தும்.

xxx

52.வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

–சாணக்யநீதி 7-17

வயதான பெண் பதிவிரதையே!

xxx

53.சைசவே பிது: ஆயத்தா: பரதந்த்ரய: சதா ஸ்த்ரிய:

–பாரத மஞ்சரி

குழந்தைப் பருவத்தில் தந்தை காப்பார்; பெண்கள் எப்போதும் பிறரால் காக்கப்படுவர்.

xxx

54.சகீஜன சித்த அனுவர்த்தி அபலா ஜன: பவதி –ம்ருச்சகடிகம்

தோழிகளின் மனதை ஒட்டியே பெண்கள் மந்து செல்லும்.

xxx

  1. ச அபராத் அபி ந இஹ ஸ்த்ரீ ஹந்தவ்யா சுத்த புத்திபி:

———ப்ருஹத் கதா கோச

ஒரு பெண் பயங்கரத் தவறு செய்திருந்தாலும், பெண்களைக் கொல்லவே கூடாது

xxxx

 

Viry Sy 6

56.ஸ்த்ரிய சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஸ்யா:

–சுபாஷித ரத்ன பாண்டாகார

பெண்களின் மனதையும், ஆண்களின் அதிர்ஷ்டத்தையும் கடவுளும்கூட அறிய முடியாது; மனிதர்கள் எம்மாத்திரம்?

xxx

57.ஸ்த்ரியோ ஹி ஸ்த்ரீஷு த்ருஸ்யந்தே சதா சம்பரிமார்கனே

–வால்மீகி ராமாயணம்

பெண்களையா தேடுகிறீர்கள்? கட்டாயம் ஒரு பெண்கள் கூட்டத்தில்தான் இருப்பாள் (அரட்டைக் கச்சேரி)

xxx

58.ஸ்த்ரீணாம் ந ச க்ஷண: யத்ர ந கதா  ஸ்வபராஸ்ரயா

–கதாசரித்சாகரம்

பெண்கள் தங்களைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ பேசாத நிமிடமே இல்லை.

xxx

59.ஸ்த்ரீணாம் பதி: ப்ராணா ந பாந்தவா:

–கதாசரித்சாகரம்

கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல

Xxx

 

  1. ஸ்த்ரீணாம் ப்ரியாலோகபலோ ஹி வேஷ: – குமாரசம்பவம்

தனது காதலனை மகிழ்விக்கவே ஒரு பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

xxx

 

Viry Sy 21

  1. ஸ்த்ரீணாம் பர்த்தா ஹி தேவதா

–வால்மீகி ராமாயணம்

பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்.

xxx

  1. ஸ்த்ரீணாம் யௌவனம் அத்ருவம்

–வால்மீகி ராமாயணம்

பெண்களின் இளமை (வனப்பு) அதிக காலம் நீடிக்காது.

xxx

63.ஸ்த்ரீணாம் ஹி சாஹசர்யாத் பவந்தி சேதாம்சி பர்த்ரு சத்ருசானி—வேணி சம்ஹார

கணவர் கூடவே இருப்பதால், பெண்களும் அவர்களைப் போலவே சிந்திப்பர்.

Xx

64.ஸ்த்ரீணாம் அலீகமுக்தம் ஹி வச: கோ மன்யதே ம்ருஷா – கதா சரித் சாகர

மயங்கவைக்கும் பேச்சுவன்மை உடைய பெண்களின் பேச்சை யார் சந்தேகிப்பர்?

Xxx

65.ஸ்த்ரீணாம் அசிக்ஷிதம் படுத்வம் அமானுசீஷு சத்ருஷ்யந்தே.

–சாகுந்தலம்

பெண்களின் திறமையை மற்ற பெண்ணின பிராணிகளிடத்தில் கூடக் காணலாம்.

Xxx

66.ஸ்த்ரீபி: கோ ந விடம்பித:

யார்தான் பெண்களால் முட்டாள்கள் ஆக்கப்படவில்லை?

 

Viry Sy 19

—தொடரும்…………………………………..

–சுபம்–