Picture of London Swaminathan
Written by London Swaminathan
Date: 4 August 2017
Time uploaded in London- 8-13 am
Post No. 4127
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
pictures by Natarajan Krishnan of Sydney (my Sambandhi)
ஜூலை மாதக் கடைசியில் நாங்கள் ஏதென்ஸ் நகருக்கும் சாண்டோரினி என்ற வரலாற்றுச் சிறப்பும் இயற்கை வனப்பும் கொண்ட தீவுகளுக்கும் சென்று வந்தோம். இது பற்றிய எனது முந்தைய கட்டுரைகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.
கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகரில் ஆக்ரோபொலிஸ் என்னும் இடத்தில் பார்த்தினான் கோவில் (Athena Temple in Parthenon at Acropolis in Athens, Greece) உள்ளது இதில் இருந்த அழகிய அதீனா தேவியின் சிலையை கிறிஸ்தவ மத வெறியர்களும் முஸ்லீம் மத வெறியர்களும் அழித்த கதை மிகவும் வருந்தத்தக்க கதை.
எப்படி சோமநாத புர சிவன் கோவிலை உடைத்து கஜினி முகமது டன் கணக்கில் தங்கம் கொண்டு சென்றானோ, எப்படி போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாண இந்துக் கோவில்களை நாசப்படுத்தினரோ, எப்படி மாலிக்காபூர் மதுரை திருவரங்கம் பகுதி கோவில்களைக் கொள்ளை அடித்து கோவில்களை இடித்தானோ, எப்படி மாயா, அஸ்டெக், இன்கா, ஒல்மெக் நாகரீகங்களை ஸ்பானிய கிறிஸ்தவ வெறியர்கள் அழித்து தங்கத்தை எல்லாம் ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு சென்றார்களோ, எப்படி அவுரங்க சீப் அயோத்யா ராமர் கோவிலையும் மதுரா நகர கிருஷ்ணன் கோவிலையும் இடித்து மசூதி கட்டினானோ—– அப்படி அதீனா தேவி சிலையை முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மாறி மாறி உடைத்து
2000 ஆண்டுகளுக்கு மசூதியாகவும் சர்ச்சாகவும் பயன்படுத்தினர் (விக்கிபீடியா ஆங்கிலப் பகுதியில் முழு விவரம் காண்க)
சுருக்கத்தை மட்டும் தமிழில் தருகிறேன்:-
‘போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்’ என்பது போல மிச்சம் மீதி இருந்த தூண்களை பிரிட்டிஷ்காரர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் கொள்ளை அடித்து அவரவர் மியூசியங்களில் வைத்துக் கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மனின் நீலக்கல்லையும் கோஹினூர் வைரத்தையும் விக்டோரியா ராணி “திருடியது போல”, இவைகளைத் திருடினர் வெள்ளைக்கார்கள். இதில் ஒரே ஒரு நன்மை உண்டு. நம்மூர் திராவிட அரசியல்வாதிகளின் கைகளில் கிடைத்திருந்தால் போன இடமே தெரிந்திருக்காது. இவர்கள் காட்சி சாலையிலாவது (Museum) வைத்து இருக்கிறார்கள். நம்மூர் பிராமணப் பெண்கள் கையிலோ, செட்டியார் கைகளிலோ சிக்கி இருந்தால் உருக்கி புது நகை செய்து அதில் ரத்தினக் கற்களைப் பொருத்தி இருப்பர். வெள்ளைக்கார, கொள்ளைக்காரன் காட்சிப் பொருளாகவாது பாதுகாத்து வைத்திருக்கிறான்.
பார்த்தினான் கோவில் இருந்த இடத்தில், அதற்கு முன்னதாக ஒரு நூறு கால் மண்டபம் இருந்தது. இப்படி 100 கால் , 1000 கால் மண்டபங்கள் கட்டுவது இந்துக்களின் வழக்கம். இதுவும் நமது இந்து சமய செல்வாக்கைக் காட்டுகிறது. 2500 ஆண்டுகளாக இருந்த இந்தக் கோவில் முதலில் பாரசீகப் படை எடுப்பில் சேதமானது.
இரண்டாம் தியோடோசியஸ் கி.பி.435ல் கிறிஸ்தவ சமயமல்லாத கோவில்கள் (Pagan Temples) அனைத்தும் மூடப்படவேண்டும் என்று உத்தரவிட்டான். கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ மன்னன் ஒருவன் அதீனா சிலையைக் கொள்ளை அடித்து அந்த நகருக்குக் கொண்டு சென்றான். பின்னர் அது அழிக்கபட்டது. ஆறாம் நூற்றாண்டில் அதை கிறிஸ்தவ சர்ச்சாக மாற்றி வர்ஜின் மேரி VIRGIN MARY (கன்னி மேரி) சிலையை வைத்தனர். (சமணர்களும், பௌத்தர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்தியாவில் இந்து சிலைகளை அகற்றி தங்கள் சிலைகளை வைத்தது போல)
அவர்கள் மற்ற கடவுளர் சிலைகளை உடைத்தனர். மேலும் சிலவற்றை கிறிஸ்தவ சிலைகள் என்று புனைக் கதைகளை எட்டுக்கட்டினர். முடிந்தவரை கிறிஸ்தவ ஓவியங்களை சுவர்களில் வரைந்தனர்.
கிறிஸ்தவர்கள் கட்டிட அமைப்பைச் சிறிது மாற்றி வாசலை கிழக்கு நோக்கி வைத்தனர். பின்னர் ரோமன் கதோலிக்க சர்ச்சாக 200 வருடம் நீடித்தது.
1456ல் ஏதென்ஸ் மீது படை எடுத்து வெற்றி பெற்ற ஆட்டோமான் துருக்கியர்கள் அக்கட்டிடத்தை கிரேக்க ஆர்த்தடக்ஸ் கிறிஸ்தவர் கைகளில் முதலில் ஒப்படைத்தனர். பின்னர் அதை மசூதியாக மாற்றினர்.
1687ல் ஏற்பட்ட துருக்கிய யுத்தத்தில் அதைத் துப்பாக்கி மருத்து சாலையாகப் பயன் படுத்தினர். அபோது ஏற்பட வெடிப்பில் பெருமளவு பகுதி சேதமானது. கிறிஸ்தவப் படைகள் வீசிய பீரங்கிக் குண்டுகள் கோவில் பகுதிகளைத் தகர்த்துதது. இப்போது கிரேக்க அரசு, பார்த்தினான் கோவிலுக்கு விரிவான திருப்பணி செய்து வருகிறது.
பார்த்தினான் அதிசயம்
பார்த்தினான் கட்டிடம் எட்டு தூண்களையும் நீளவாக்கில் 17 தூண்களையும் உடையது. இதை ஏ 4 சைஸ் (A 4 Size Paper) பேப்பருடன் ஒப்பிடலாம் என்று எங்களுக்கு விளக்கம் தந்த (Tourist Guide) கைடு சொன்னாள். மேலும் இது சம-மட்டமான தரையில் அன்றி சிறிது வளைந்து இருப்பதால் இந்த தூண்களிலிருந்து கோடு கிழித்தால் அவை ஐந்து கிலோமீட்டர் உயரத்தில் சந்திக்கும் என்றும் அப்பொழுது பிரமிடு வடிவம் உருவாகும் என்றும் சொன்னாள்.
அடுத்த கட்டுரையில் அதீனா தேவியின் தோற்றம் பற்றிய கதை இந்து மதத்துடன் எப்படித் தொடர்புடையது என்பதைக் காண்போம்.
–Subham–