“அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!” (9876)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9876

Date uploaded in London –20 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பா.கண்ணன், புது தில்லி

“அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!”

சமீபத்தில் ஶ்ரீநாகராஜன் அவர்கள் ஒரு வலைப்பதிவில் “கடவுள் எங்கே?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் பதிவிட்டிருந்தார். அதில் அவர், கடலில் உப்பு பரவியிருப்பது போல, கடவுள் இந்தப் பிரபஞ்சம்
முழுவதும் நிரம்பி இருக்கிறான். எப்படி விதைக்குள் மரமானது ஒளிந்திருக்கிறதோ, அதே போல் ஒவ்வொருவரிடமும் பரமன் மறைந்திருக்கிறான் எனக் குறிப்பிடிருந்தார். அதைப் படித்த போது சிலஆண்டுகளுக்கு முன்பு கன்னிமேரா பொதுநூலகத்தில் 

இ ருந்து படிக்க எடுத்து வந்த “YOUR SACRED SELF”என்ற நிர்வாகம்-மேலாண்மையைப் போதிப்பதுடன் ஆன்மிகப் புரிதலையும் விளக்கும் புத்தகம் தான் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

டாக்டர் வேய்ன் வால்டர் டையர் (Dr. Wayne W. Dyer,1940-2015) ஓர் அமெரிக்க தத்துவ ஞானி, வேதாந்தி, சுய சிந்தனை, சுய முன்னேற் றத்தை ஊக்குவிக்கும் விரிவுரையாளர், வாழ்வில் வெற்றிபெறஉதவும் வழிமுறைகளைப் போதிப்பவர். அத்துவைத சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். லிங்காயத் சைவ மரபைச் சார்ந்த மராத்திய தத்துவ மேதை மாருதி ஷிவராம்பந்த் காம்லி எனும் பூர்வாஸ்ரமப் பெயர் கொண்ட ஸ்ரீநிசர்கதத்தா மகராஜைத் தன் ஆதர்ச ஆசானாக ஏற்றுக் கொண்டவர். ‘நீங்கள் இறைவனைப் போற்றி, அவருக்குச் சேவையாற்றுபவராக இருக்கலாம் அல்லது, தற்பெருமை, சுய நலத்துக்கு அடிமையாகி, அதன்பிணைக் கைதியாகவும் மாறி விடலாம். எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது!’ என்று மகராஜ் அடிக்கடி கூறுவார். தன் ஆசானின் அருளால் ஆன்மிக விஷயத்தில் ஈடுபாடு கொண்டு சில புத்தகங்களும் எழுதியுள்ளார்.‘நிதர்சன மாயாஜாலம்’ (REAL MAGIC), உயர்மட்ட இறையுணர்வு நிலையை விவரிக்கும் ‘உன் தூய உள்ளம்’ (YOUR SACRED SELF), ஆகிய அவரது இருபுத்தகங்களும் ஆன்மிக விஷயத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இரண்டாவதில், முன்னுரையில் அவர் கையாளும் ஓர் உருவகக் கதையின் மூலம், பக்த பிரகலாதனின் ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்!’என்ற வாதமும், தாயின் கருப்பையில் இருந்தவாறே அபிமன்யு கற்றறிந்தப் போர்க்கள ஞானமும், பஞ்சபூதங்களில் உறைந்திருக்கும் இறைவனைப் பூடகமாக உணர்த்தும் தாயின் கருப்பையும் எவ்வளவு உண்மை என்பதை அறிய முடிகிறது! இதோ அதன் சுருக்கம்……

ஒரு தாயின் கருவில் முழுவளர்ச்சி அடைந்த இரட்டைச் சிசுக்கள்(IDENTICAL TWINS) இருந்தன.கூடிய விரைவில் பிரசவம் ஆகிவிடலாம் என்ற நிலை. அச்சமயம் அவையிரண்டும் தங்களுக்குள் ‘மானசீகமாக’ப் பேசிக்கொண்டன.

“நாம் பிறந்த பிறகு நமக்கு நடக்கப் போகும் விஷயங்களில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டது முதல் சிசு. எதிர்மறை சிந்தனை உடையது, போலும்! அதாவது  நாத்திகவாத எண்ணம் கொண்டது!

“நிறையவே இருக்கு! ஏதாவது நிச்சயம் நடக்கும். அதை எதிர்கொள்ள வேண்டியத் தயார் நிலைக்கு நாம் இருக்கும் இச்சூழலே கொண்டுச் செல்லக் கூடும், அல்லவா?” என்றது இரண்டாவது சிசு. இது நேர்மறை (அதாவது ஆத்திகவாத)எண்ணம் கொண்டது, போலும்!

“அசடு, அசடு! பிறப்புக்குப் பின் வாழ்வு என்பதே கிடையாது. அப்படியே இருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?”

“அவ்வளவாகத் தெரியாது! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இங்கிருப்பதை விட அங்கு ஒலியும், வெளிச்சமும் அதிகமிருக்கலாம். இதோ நம் கால்களால் நடக்கலாம், வாயினால் சாப்பிடலாம். வேறு ஏதாவது புலன்களால் ஆட்டுவிக்கப்படலாம். இப்போதே அதைத் தெரிந்துக் கொள்ள முடியாதே!”

“ஹோ,ஹோ! சுருண்டு, முடங்கிக் கிடக்கும் நாம் நடப்பதா, அடி முட்டாள்தனம்! வாயால் சாப்பிடுவதா, நல்ல வேடிக்கை, கேலிக்கூத்து! இந்தத் தொப்புள்கொடி தான் நமக்கு எல்லாவற் றையும் தருகிறதே? ஆனால் அது சிறியதாக இருப்பது தான் சங்கடம். பிறப்புக்குப் பின் அதால் என்ன உபயோகம் இருக்கப் போகிறது? உயிரில்லா நிலையே நிலவும் என்பதே உண்மை!”

“இல்லை,அப்பனே! என் மனதில் வேறு மாதிரி தோன்றுகிறது. அங்கு நிலைமையே வேறு மாதிரி இருக்கலாமே! இந்தத் தொப்புள்கொடிக்கே அவசியம் இல்லாமல் போகலாம், அல்லவா?”

“நிறுத்து, நிறுத்து! பிறப்புக்குப் பின் வாழ்வு உண்டென்றால், ஏன் யாரும் இங்குத் திரும்பி வரவேயில்லை? என்னைப் பொறுத்த வரை பிறப்பு என்பது உயிரின் முடிவு. பிறப்புக்குப் பின்னால் நாம் உணரப் போவது ஒரே அந்தகாரம், ஆழ்ந்த மௌனம் மற்றும் ஒருவித மயக்க நிலையே நிறைந்திருக்கும். வேறு வழி ஒன்றும் புலப்படாது!”

“எனக்கும் புரியவில்லைதான்! ஆனால் நம்மைப் பராமரிக்கப் போகும் ஒரு புனித நபரைச்  சந்திப்போம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை! அந்த நபர்  நம்மைப் பேணி, பாதுகாப்பார் என்பதும் உறுதி!”

“அப்படி ஒருவர் இருப்பாரா, என்ன, எனக்கு நம்பிக்கை இல்லை!”

“நிச்சயம் இருப்பார். ஏன், நம்மை வெளியுலகத்துக்கு அறிமுகப் படுத்தப் போகும் இந்த ‘அறை’ யின் சொந்தக்காரராகவும், ‘அன்னை’ யாகவும் ஒரு பொருப்புள்ள ‘அம்மா’ வாக இருக்கலாமே!”

“உன் பேச்சைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. ‘அம்மா’, ‘அன்னை’ என்று சொல்கிறாயே, அப்படி ஒருவள் உண்டா? நீ நம்புகிறாயா? அப்படி இருப்பாளேயானால் இப்போது அவள்எங்கே?”

“நம்மைச் சுற்றி அவள் வியாபித்து இருக்கிறாள். அவளுள் கட்டுண்டுக் கிடக்கிறோம். நம் ஒவ் வொரு அசைவும் அவள் விருப்பப்படியே நடக்கிறது. அவளுடைய ஓர் அங்கம் நாம்.அவளின்றி ஓர் அணுவும் அசையாது,அப்பனே!”

“சுத்த அபத்தம்! என்னால் அவளைப் பார்க்க முடியவில்லையே? ஆகையால், தருக்கப்படி ‘அன்னை’  என்ற அவள் இல்லவே, இல்லை என்பதே சரி!”

“நிதானமாக யோசித்துப் பார்! எந்த இடையூறுமின்றி மனதை ஒருமுனைப் படுத்தி, மோன நிலையில் தியானம் செய். அவள் உன்னைச் சுற்றி இருப்பதை உணருவாய். அங்கிருந்து எழும் இனம்புரியாத ஒலி உன் மனதில் பரவும். எங்கிருந்தோ அவள் அன்புடன் பேசுவதையும், பிறருடன்  உரையாடுவதையும் உற்றுக் கேட்டுப் பரவசமடைவாய்!”

“………………………………………………….!”

“என்ன, பேச்சே எழும்பவில்லை? யோசிக்கிறாயா, யோசி, யோசி!” என்றது இரண்டாம் சிசு. முதல் சிசு மேலும் யோசிக்க ஆரம்பிக்கையில் பிரசவம் நேர ஆரம்பித்துவிட்டது….!

அன்பர்களே, நாமும் யோசித்துப் பார்ப்போம். அந்தத் தாய் நமக்கு அளித்துள்ளப் புகலிடம்  கருப்பை (பூமி), மேற்கூறை வேய்ந்து (ஆகாயம்) பாதுகாப்பாக வைத்துள்ளாள், அவள் கொடுத்துள்ளத் தொப்புள்கொடியே நம் உயிர் மூச்சு ( வாயு ), நம்மைச் சுற்றி இருக்கும் சவ்வுத் திரவம் —பனிக்குடம்),(நீர்) சீரான வெப்பநிலையை ( அக்னி ) நமக்குத் தந்துக் காக்கிறது. இவையெல்லாமே அந்தப் பரம்பொருள், கருணையே வடிவான
அன்னை நம்மீது காட்டியுள்ள அருட்செயல், அளப்பறியக் கருணை. அப்படிப்பட்டவள் பிறப்புக்குப் பின்பும் நம்மை உணர்வுகளுக்கு அப்பாலிருந்துக் காத்தருளுவாள் என்பதில் சிறிதளவும் ஐயமேயில்லை! இன்னும் யோசிக்கிறீர்களா, யோசியுங்கள், விடாமல் யோசியுங்கள்! நீங்களே புரிந்துகொள்வீர்கள்!

அன்னை,பகவான்,இறைவன் என்ற பல்வேறு சொற்களுக்கு வேறு என்ன விளக்கம் வேண்டும்?!

நன்றி, வணக்கம்.

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்!

tags- அன்னை, இறைவன்

ஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும்! (Post No.6778)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 14 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  18-12

Post No. 6778

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.

ஸ்ரீ அராவிந்த கோஷ் 15-8-1872 – 5-12-1950)

இந்திய சுதந்திர தினத்துக்கு இரண்டு சிறப்பு.

சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்

இந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர்,

பத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.

அரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை சக்தி மாலரில் வெளியானதை இணைத்துள்ளேன்

Tags அரவிந்தர், ஆஸ்ரமம், புதுச்சேரி, பாரதிதாசன் கவிதை, ஆரோவில், அன்னை

–subham–

அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792)

mother-and-baby-portrait-drawing-kate-sumners

Translated by london swaminathan

 

Date: 8 May 2016

 

Post No. 2792

 

Time uploaded in London :–  6-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்தப் பகுதியில், அன்னை (மாதா) பற்றிய பழமொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருத பழமொழிகள்- பகுதி-7

(பகுதி 6 ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது)

mother baby

104.கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி – பிரதிமா நாடக

தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?

 

105.குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி –தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரம்

கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.

 

106.ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசீ

-கஹாவத்ரதனாகர்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே

 

107.ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே-கஹாவத்ரதனாகர்

தாய் உயிரோடிருக்கும் வரைதான்  வீட்டில் சுகம்.

 

108.து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம் –ப்ருஹத் கதா மஞ்சரி

அம்மாக்கள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

 

109.துஹிது: ப்ரதானகாலே து:கசீலா ஹி மாதர:

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகையில் தாயார் மனம் தவிக்கும்.

mother rangoli

110.ந மாது: தைவதம் பரம்- சாணக்ய நீதி

அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை (தாயினும் பெரிய கோயில் இல்லை)

 

111.பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன

மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை விட்டுவிடலாம், ஆனால் அம்மாவை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.

 

112.பாததே ந நிஜ ஆபத்யம் மார்ஜாரீ தசன ஆவலி.

தாய்ப் பூனையின் பற்கள், பூனைக்குட்டிகளுக்கு தீங்கு செய்யா (கோழி மிதித்து குஞ்சுகள் சாகா)

 

113.மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம் – மத்யமவ்யாயோக

எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.

 

114.மாதா பித்ருப்யாம்  சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – கதாசரித்சாகரம்

பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழமுடியாது.

 

115.மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி  பந்தனே – ஹிதோபதேசம்

அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள் (தாயார்தான் ஆதரவு தரும் கொழுகொம்பு)

 

116.மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ- தைத்ரீயோபநிஷத்

தாயை தெய்வமாக வணங்கு; தந்தையை தெய்வமாக வணங்கு.

 

117.மாத்ருதோஷோ ந தோஷ: -ப்ரதிமா நாடக

அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது

 

118.மாத்ரா சமம்  நாஸ்தி சரீர போஷணம் – சுபாஷிதாவலி

தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமிலர்.

 

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை!

119.யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ

— கஹாவத்ரதனாகர்

தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள் (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை).

mother_love_

120.ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—மனுஸ்மிருதி 2-145

தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.

 

121.ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி: -ப்ரதிமா நாடக

தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.

 

 

–சுபம்–

 

அரவிந்தர் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள்

sri-aurobindo

டிசம்பர் 5ஆம் தேதி அரவிந்தர் மஹாசமாதி தினம். அதையொட்டி அவரைப் போற்றும் அஞ்சலிக் கட்டுரை இது.

Post No 730 dated 4th December 2013

அரவிந்த யோகம் by ச.நாகராஜன்

வான் அரசாட்சி இம் மண்ணுலகத்திலே
வளர்ந்து செழித்திடவே
தேனருவி என மோனத்திலே நின்று
தெய்வக் கனல் பொழிந்தான்
மானவ ஜாதிக்கே அமர நிலை பெற
வாழும் வகையளித்தான்
போனது கலியுகம், பூத்தது புதுயுகம்
பூரணன் வாழியவே
வாழ்க அரவிந்தன் வாழ்க பராசக்தி
வல்லபன் வாழியவே!

-கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார்

வேத நெறி தழைக்க வந்த அவதாரம்

தேசீயம் தெய்வீகம் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதையே தன் வாழ்க்கையாக்கி மனித குலத்தை சனாதன தர்மம் தந்த வேத நெறியில் உயர்த்த அவதரித்தவரே மஹரிஷி அரவிந்தர்.

மஹாசக்தி வழி நடத்திய புருஷர்

ஒரு மாபெரும் சக்தி அவரை வாழ்க்கை முழுவதும் வழி நடத்தி வந்தது. அந்த வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களோ ஏராளம்!
1908ஆம் ஆண்டு மிர்ஜாபூரில் வெடித்த குண்டைத் தொடர்ந்து அரவிந்தர் அலிபூர் சிறையில் ஒன்பது அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார்.அங்கு அனைத்தையும் வாசுதேவனாகக் கண்டார். ‘சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்’ என்ற மகத்தான அநுபூதியைப் பெற்றார். ஒரு நாள் அவர் உடல் தரையிலிருந்து மேலே சிறிது எழும்பியது. அந்த நிலையில் கைகளையும் உயர்த்தினார். எப்படி முயன்றாலும் அடைய முடியாத ஒரு விசித்திரமான நிலையில் அவர் உடல் இருக்கவே, அதைப் பார்த்த சிறை வார்டர் அரவிந்தர் இறந்து விட்டதாக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்கள் ஓடோடி வந்து பார்த்த போது அரவிந்தர் இயல்பான நிலையில் இருந்து.
சிரித்தார். தன்னை இறந்ததாக அறிவித்தவனை முட்டாள் என்றார்!

இயல்பாகவே அரவிந்தருக்குத் தீர்க்கதரிசனக் காட்சிகள் தோன்றி வந்தன. அவரே கூறிய ஒரு சம்பவம் இது:- “ஒரு சமயம் சி.ஆர்.தாஸின் நண்பரான வ.ரா. (பிரபல தமிழ் எழுத்தாளராக பின்னால் புகழ் அடைந்தவர்) என்னைக் காண வருவதாக இருந்தது.அவரது தோற்றம் எப்படி இருக்கும் எனக் காண விரும்பினேன். நன்கு ஒட்ட வெட்டிய தலையோடு உரமான முரட்டு இயல்போடு கூடிய ஒருவரின் தோற்றத்தைக் கண்டேன். ஆனால் வ.ரா நேரில்வந்த போது சாந்த முகம் உள்ள தென்னிந்திய அந்தணருக்கே உரித்தான தோற்றத்துடன் விளங்கினார்! ஆனால் இரு வருடங்களுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்த போது நான் முதலில் எப்படிக் கண்டேனோ அப்படி அவர் மாறிவிட்டிருந்தார்.”

டீ அடிமையாக அவர் இருந்த போது தனது மைத்துனர் எப்போது டீ கொண்டு வருவார் என்று அவர் எண்ணிய சமயத்தில் எதிரே இருந்த சுவரில் டீ வரும் சரியான நேரம் எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் டீயும் வந்தது. “அன்று முதல் தினமும் டீ வரும் நேரம் சுவரில் எழுதப்படுவதைக் கண்டேன்” என்று அரவிந்தர் பின்னால் தன் அனுபவங்களைக் கூறினார்.

பாண்டிச்சேரி செல்!

சிறையில் அவருக்கு உள்ளிருந்து குரல் ஒன்று கிளம்பி அவர் செய்ய வேண்டியதைப் பணித்தது.அது எந்த காரணத்தையும் சொல்லாமல் இதைச் செய்; அதைச் செய் என்று மட்டும் பணித்தது. மற்றவர்கள் எல்லாம் அவரை பிரான்சுக்குச் செல்ல ஆலோசனை தந்த போது அவரது உள்ளார்ந்த குரலோ அவரை பாண்டிச்சேரி செல்லுமாறு கூறியது.31-3-1910 அன்று கல்கத்தாவிலிருந்து கப்பலில் கிளம்பிய அரவிந்தர் 4-4-1910 அன்று மூன்று மணிக்குப் புதுவை வந்து சேர்ந்தார். அங்கு மகத்தான யோக சாதனையைச் செய்தார். எதற்காக புதுவைக்குச் செல்லச் சொன்னதோ அந்த மஹாசக்தியின் விருப்பப்படி அரவிந்த ஆசிரமமும் உருவானது.

1926ஆம் தேதி நவம்பர் மாதம் 24ஆம் தேதி கிருஷ்ணர் பூவுலகில் அவரது உடலில் ஆவிர்பித்ததை அவர் அறிவித்தார். அது இன்றளவும் சித்தி தினமாக்க் கொண்டாடப்படுகிறது. சூபர்மைண்ட் எனப்படும் அதிமானுட மனமும் ஆனந்தமும் பெரும் பணியை நிறைவேற்ற வந்திருப்பதை அனைவரும் அறிந்து மகிழ்ந்த அன்றைய தினத்தில் அரவிந்தர் தனிமையை நாடித் தன் பெரும் பணியை மேற்கொண்டார். அதன் பின்னர் வருடத்திற்குச் சில குறிப்பிட்ட தினங்களே அவரை தரிசிக்கும் பாக்கியம் சாதகர்களுக்குக் கிடைத்தது.

Sri_aurobindo2

அன்னையின் பார்வை

புதுவை வந்த அன்னை ஆசிரமத்தின் பெரும் சக்தியாக மாறினார்.
அரவிந்த ஆசிரமம் நிறுவப்பட்டவுடன் அன்னை ஆசிரமத்தை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு சாதகர்களுக்கு உற்ற வழிகாட்டியாகவும் ஆனார். அன்னையின் பல்வேறு அபூர்வ சித்திகளையும் சக்திகளையும் அரவிந்தர் எளிதில் உணர்ந்து கொண்டார்.அன்னையின் பார்வை சகல வல்லமை படைத்தது என்பதை அரவிந்தர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
சாதாரணமாக உடல் அளவில் அன்னை பெற்றிருந்த சக்தியைக் கூட அவர் அறிந்து வைத்திருந்தார். ஒரு முறை அன்னையின் பார்வை ஆற்றலைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிட்டார்:-“சிறு வயதில் அன்னைக்கு இருளில் கூடப் பார்க்கும் சக்தி இருந்தது.எங்கும் பார்க்கும் ஆற்றலை அவர் வளர்த்துக் கொண்டார்.இப்போது கூட தனக்குப் பின்னால் உள்ள அனைத்தையும் அவரால் பார்க்க முடியும்.அவர் கண்களின் பார்வையை விட இந்தப் பார்வை இன்னும் துல்லியமாக இருக்கும். கண்களை மூடிக் கொண்டாலோ இது இன்னும் நன்கு வேலை செய்யும்.”

கூடவே வரும் துணை

அரவிந்தரின் யோகம் அவருக்காக மட்டும் செய்யப்படவில்லை. அவரே ஒரு முறை,” முக்தியையும் பரிபூரணத்வத்தையும் எனக்கு மட்டும் பெற எண்ணி இருந்தேனென்றால் எனது யோகம் நெடும் காலத்திற்கு முன்னரே முடிந்திருக்கும்.எனது சித்தியானது மற்றவர்கள் அதை அடைவதற்கு ஒரு முன்னோடி தான்.” என்று குறிப்பிட்டார்.ஆக சாதகர்களுக்கு அவர் எப்போதும் உற்ற துணையாக இருந்தார்; இருந்து வருகிறார்!

பிரபல எழுத்தாளரான பால் பிரண்டன் தன்னுடன் உற்ற துணையாக யாரோ கூட வருவது போன்றே உணர்ந்து வந்தார். அரவிந்தரின் போட்டோவைப் பார்த்த போது அது ‘கூட வரும் துணையைப்’ போல இருக்கவில்லை.ஆனால் அரவிந்தரை நேரில் தரிசித்த போது ‘கூட வரும் துணை’ அவரே என்பதை உணர்ந்து கொண்டார்.

நான் தருகிறேன் உத்தரவாதம்

பாரதம் சுதந்திரம் அடைவது பற்றிய பேச்சை சில சீடர்கள் எழுப்பிய போது அவர்களுள் ஒருவர் “அப்படி ஒரு சுதந்திரம் வர உத்தரவாதம் வேண்டுமே” என்றார். உடனே அரவிந்தர், “ அதற்கு நான் தருகிறேன் உத்தரவாதம்” என்று கூற அனைவரும் வியப்படைந்தனர். அவர் அளித்த உறுதியின் படியே பாரதம் சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் அவரது பிறந்த நாள். எனது பிறந்த நாள் பரிசாக இரண்டு பகுதிகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று அவர் பிரிவினை பற்றிக் கூறினார். ஆனால்,” பாரதப் பிரிவினை இயற்கையானதல்ல; அது போக வேண்டும். போய் விடும்” என்று தீர்க்கதரிசன வாக்கைக் கூறியுள்ளார்.

பாரத தேசம் மகோன்னதமான நிலையை எய்தும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள அரவிந்தர் அந்த உயரிய நிலை உலகம் முழுவதும் மேம்படுவதற்கான ஒரு ஆரம்பம் என்று அருளினார். அவரது அற்புதமான பூரண யோகம் இதை நோக்கமாகக் கொண்டே அனுஷ்டிக்கப்பட்டு பூரணாத்மாக்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பவானி பாரதி

பவானி பாரதி என்ற அற்புதமான சதகத்தை – நூறு பாடல்கள் கொண்ட சம்ஸ்கிருத நூலை அரவிந்தர் யாத்துள்ளார். உக்கிர மான காளியின் அற்புதவர்ணனைகளுடன் மயிர்க்கூச்சலெழுப்பும் சொற்களுடன் உள்ள ஸ்லோகங்களில் உத்திஷ்ட (எழுமின்)
ஜாக்ரத (விழிமின்) என்ற ஆவேசமூட்டும் சொற்களைக் காணலாம். அதில் இனி வேதகோஷம் முழங்கும் என்றும் துஷ்டன் அழிவான் என்றும் புகழோங்கிய நிலையை பாரதம் அடையும் என்றும் பாடியுள்ளார்.

அரவிந்தரின் பணி பாரதத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அதன் பண்டைய நாகரிகத்தை உணர்த்தி அதன் அடிப்படையில் புதிய யுகத்தை உலகத்தில் நிர்மாணிப்பதே!

அரவிந்த யோகம்

அரவிந்த யோகம் என்றால் என்ன என்பதை -கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார் அழகுற இப்படி விளக்குகிறார்:-
பக்தி யோகம், நிஷ்காம்ய கர்ம யோகம்,கடவுளைத் தியானத்தால் கலந்து நிற்கும் ஞான யோகம், எல்லோரையும் சமமாகக் காணும் சர்வாத்ம சித்தி எல்லாம் ஒருங்கே சேர்ந்தது ஶ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்.

அரவிந்த யோகம் உலகை உயர்த்துகிறது.அழகில் தெய்வத்தைக் காண்கிறது.அழகை ஆத்ம பரிபூரணத்திற்கு ஒரு வழியாக்குகிறது.வாழ்வைக் குறுக்கி ஒடுக்காமல் விரிந்து பொலியச் செய்கிறது.உலக வாழ்வையே தெய்வ சித்தி பெற ஓர் அகண்ட சமரஸ யோகமாக்குகிறது.

இதுகாறும் உலகில் பெரியார்கள் வகுத்த யோக சாதனங்களின் நன்மைகளை எல்லாம் தன்னகத்துக் கொண்டுள்ளது அரவிந்த யோகம்.அது ஒரு தோட்ட ரோஜாக்களை ஒரு சிறு அத்தர் புட்டியில் காண்பது போன்றது. அது மனிதனில் தெய்வத்தை விளக்குகிறது. வாழ்வை எல்லாம் யோகமாக்குகிறது.”

அரவிந்த யோகத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட சாதகர்கள் பெருமளவில் பெருகும் போது இந்தியா அமர நிலையை எய்தும் முறையை உலகிற்குக் கற்பிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

சின்ன உண்மை!
பவானி பாரதி மிகவும் சக்தி வாய்ந்த உக்ரமான சொற்களால் ஆன நூறு பாடல்களைக் கொண்ட நூல். மாதிரிக்கு ஒரு ஸ்லோகத்தின் அர்த்தம்:-
இதயத்திற்கு அம்ருதத்வத்தை வழங்கும் வேத கோஷ முழக்கத்தை மீண்டும் நான் வனங்களில் கேட்கிறேன். ஆன்ம ஞானத்தை அடைந்த, பெருக்கெடுத்தோடும் மனித குல வெள்ளமானது ரிஷிகளின் குடில்களை நோக்கிப் பாய்கிறது.
பவானி பாரதி 93 ஆம் ஸ்லோகம்
Contact swami_48@yahoo.com

*****************