ஒரு துளி அன்பை அனுப்புங்கள்! (Post No.9453)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9453

Date uploaded in London – –  –4 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஒரு துளி அன்பை அனுப்புங்கள்!

ச.நாகராஜன்

மற்றவரைக் கிளர்ச்சியுறச் செய்யாத, ஸத்யமான, ப்ரியமான ஹிதமான  வார்த்தைகளைக் கூற வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் அருளியுள்ளார்

anudvega-karam vakyam
satyam priya-hitam ca yat
svadhyayabhyasanam caiva
van-mayam tapa ucyate (Gita Cahpter 17 –Sloka 15)

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்றார் திருமூலர்.

திருக்குறளில், இனியவை கூறல் என்று ஒரு அதிகாரத்தையே வகுத்துள்ளார் திருவள்ளுவர்.

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் என்பது அவரது அறிவுரை.

இப்படிப்பட்ட நல்ல சொற்கள், அன்பு, நேசம், நம்பிக்கை, இறைவனின் மீது ஈடுபாட்டுடன் கூடிய பிரார்த்தனை இவை எல்லாம் நல்ல விதைகள். அது பெரிதாகித் தொடர்ந்து தரும் பலன்களோ மிக மிக அதிகம்.

ஜூலி ஹெபர்ட் என்ற கவிஞர் ஒரு துளி அன்பு, ஒரு துளி நேசம் ஆகியவற்றை அனுப்ப ஒரு கவிதை இயற்றுகிறார். அன்பை அனுப்பச் சொன்ன கவிஞருக்கு அன்பையும் நேசத்தையும் நம்பிக்கையையும் இறை ஈடுபாட்டையும் கூடவே நமது நன்றியையும் காணிக்கையாக ஆக்குகிறோம். கவிதையின் திரண்ட தமிழாக்கம் இதோ. மூலத்தையும் கீழே காணலாம்.

இதோ கவிதை, படியுங்கள்!

ஒரு துளி அன்பு!

ஜூலி ஹெபர்ட் (காப்புரிமை பெற்ற கவிதை)

ஒரு துளி அன்பை அனுப்புங்கள்

ஒரு மகிழ்ச்சி ததும்பும் முகத்தைக் காணுங்கள்

ஒரு துளி அன்பு வெகு தூரம் செல்லும்

விண்வெளியின் கடைசி எல்லைக்கும் செல்லும்

ஒரு துளி நேசத்தை அனுப்புங்கள்

நேசத்தின் தழுவுதலை உணருங்கள்

அது தரும் உணர்வு நீங்கள் சரியான

இடத்தில் இருப்பதாக உணர்வது தான்!

ஒரு துளி நம்பிக்கையை அனுப்புங்கள்

அந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழுங்கள்

நம்பிக்கை கொள்வது ஆச்சரியகரமானது, ஆனால் நீங்கள்

சில சமயம் அவ்வளவு தூரம் தள்ளி உட்கார முடியாதே!

ஒரு துளி இறை நம்பிக்கையை அனுப்புங்கள்,

ஒரே ஒரு பிரார்த்தனையின் மூலம்,

இறைவன் உங்களுக்கு வழி காட்டுவார்

இறை நம்பிக்கை எப்போதுமே இருப்பதனால்!

                                      Drop Of Kindness
                                                   Poet: Julie Hebert, ©2012 Send a drop of kindness,
And see a happy face.
A drop of kindness goes real far,
It may even reach outer space.

Send a drop of love,
And feel a loving embrace.
It feels so good to feel like,
You are in the right place.

Send a drop of hope,
But be that shinning star.
Hope is wonderful to have,
But sometimes you can’t sit away so far.

Send a drop of faith,
With a single prayer.
And God will show the way,
As faith is always there. நன்றி : ஜூலியா ஹெபர்ட்
                                                   ****

 Tags– ஒரு துளி, அன்பு,

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.

தான் பெற்ற குஞ்சுகளையே கொல்லும் அதிசயப் பறவை!

Mockingbird,_

Article No.2014

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 24  July 2014

Time uploaded in London : காலை 6-02

‘யுதனேசியா’ என்னும் கருணைக் கொலை பற்றி தற்காலத்தில் பத்திரிக்கைகளில் நிறைய படிக்கிறோம். யாரேனும் தீராத நோயில் நீண்டகாலம் கஷ்டப்பட்டால், அவர் இருப்பதைவிட போவதே மேல் என்று அவரை மேலுலகத்துக்கு அனுப்பிவைப்பது பல நாடுகளில் சட்டபூர்வம் ஆக்கப்பட்டுவிட்டது. அன்பின் காரணமாக ஒரு வகைப் பறவையும் இப்படி செய்கிறது! தான் பெற்ற குஞ்சுகளையே அது கொன்றுவிடுகிறது.

அமெரிக்காவில் மாக்கிங் பர்ட் mocking- bird – என்னும் பறவை வகை உண்டு. இவை கிளி, மைனா போல தான் கேட்ட ஒலிகளை அப்படியே செய்துகாட்டி விகடம் செய்யும் பறவை வகை.

இது பற்றிய அதிசயச் செய்தி இதோ:–

ஆர்ச்சிபால்ட் ரட்லெட்ஜ் என்பவர் எழுதுகிறார்: “நான் சிறுவயதில் படு சுட்டிப்பயல். அமெரிக்காவில் கரோலினாவில் வசித்தபோது பறவைகளைக் கூண்டில் அடைத்துப் போட்டு மகிழ்வேன். ஒரு மாக்கிங் பறவை வகையைப் பிடித்து கூண்டில் போட்டால் வாழ்நாள் முழுதும் அதன் இசையைக் கேட்டு மகிழலாம் என்று குஞ்சு ஒன்றைப் பிடித்துக் கூண்டில் அடைத்தேன். என்ன அதிசயம் பாருங்கள்! மறு நாள் அதன் தாய் வந்து அதற்கு உணவு ஊட்டியது.

அட நமக்கு இனி செலவும் இல்லை; கவலையும் இல்லை! ஒரு தாய் கவனிப்பது போல நாம் கவனிக்க முடியாது. அன்பைத் தடைப் போட்டுத் தடுக்கும் தாழ்ப்பாள் கிடையாதே என்று எண்ணினேன்.

அந்தோ பரிதாபம்; இரண்டாவது நாள் கூட்டில் உள்ள பறவையைக் கொஞ்சுவதற்காக எட்டிப் பார்த்தேன். அது இறந்து கிடந்தது. எனக்கு மிகவும் வருத்தம்.ஆனால் காரணம் தெரியவில்லை.

புகழ்பெற்ற அமெரிக்க பறவையியல் நிபுணர் ஆர்தர் வெய்ன் என்பவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: மாக்கிங் பறவை வகைப் பறவைகள் தங்கள் குஞ்சுகள் கூண்டில் அடைக்கபட்டால், அதற்கு விஷமுள்ள பழங்களைக் கொண்டுவந்து ஊட்டிக் கொன்றுவிடும். ஏனெனில், தனது அன்பிற்கினிய குஞ்சுகள் இப்படி அடைபட்டு, சித்திரவதைப் படுவதை அவைகளின் தாய் விரும்புவதில்லை” என்றார்.

பறவைகளிடமிருந்துதான் மனிதன் கருணைக் கொலையைக் கற்றுக் கொண்டானோ?

mockingbirdstamp

பறவைகளுக்குதான் எவ்வளவு சுதந்திர உணர்வு!

சோழ மன்னன் செங்கணானிடம் தோல்வியடைந்து, சிறைக்காவலில் வைக்கப்பட்ட கணைக்கால் இரும்பொறை, காவலர்கள் தண்ணீர் தர தாமதித்ததால், மானத்துடன் உயிர்துறந்தான். அதுபோல சிறை வாழ்வை விட இறப்பதே மேல் என்று எண்ணுகின்றன இவ்வகைப் பறவைகள்.

இதே போல வேடன் பிடித்த ஆண் புறா இறக்கக் கண்டு, பெண்புறாவும் தீயில் விழுந்து வேடனின் பசிதீர்த்த கதையை நாம் அறிவோம்.

கழுகு விரட்டி வந்த, புறாவுக்காக தன்னுயிரையே ஈந்த சோழர்குல முன்னோனான சிபிச் சக்ரவர்த்தி கதையையும் புறநானூற்றில் கண்டோம்.

“பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்” – என்றும் பாடுகிறோம். ஆனால் பறவைகளிடமிருந்து மனிதர்கள் கற்றது ஏராளமானவை என்பதை நம் புலவர்கள் பாடத் தவறவில்லை.

இந்திய இலக்கியங்களில் காகம், குருவி, கிளி, குயில் முதலியன பற்றிப் புலவர்கள் பாடியதைப் பற்றி எழுதினால் புத்தகங்கள் அளவுக்கு விரிவடையும்!

கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலில் உள்ளத்தை உருக்கும் ஒரு சம்பவம்!

Canada Post unveiled today the images of the five stamps that will be issued on April 5 to mark the centennial of the sinking of RMS Titanic. (CNW Group/Canada Post)

Canada Post unveiled today the images of the five stamps that will be issued on April 5 to mark the centennial of the sinking of RMS Titanic. (CNW Group/Canada Post)

எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:– 2005

தேதி:– 20 ஜூலை, 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்:– காலை 9-28

தியாகம், அன்பு, நன்றி ஆகிய நற்குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது உலகத்தில் எல்லா இன மக்களிடையேயும் இப்படிப்பட்ட நல்லோர் இருப்பதை அறிய முடிகிறது.

டைட்டானிக் கப்பல் விபத்தை அறியாதோர் யாரும் இருக்கமுடியாது. இந்தக் கப்பல் பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஆகும். 1912 ஏப்ரல் 15-ஆம் தேதி பிரிட்டனின் தென்பகுதி நகரான சௌதாம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கி தனது முதல் (கன்னி) பயணத்தைத் துவக்கியது. வட அட்லாண்டிக் மஹா சமுத்திரத்தில் ஒரு மிதக்கும் பனிப்பாறை (ஐஸ்பெர்க்) மீது மோதி கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலில் 2224 பேர் சென்றனர். அவர்களில் 1500-க்கும் மேலானோர் கடலில் மூழ்கி இறந்தனர். அதில் ஒரு சம்பவம்.

Straus-Park-Memorial

டைட்டானிக் கப்பலில், உயிர்காக்கும் அவசரப் படகுகள், பாதிப்பேரை மட்டுமே காக்கும் எண்ணிக்கையில் இருந்தன. ஆகையால் முதலில் குழந்தைகளையும், பெண்களையும் படகுகளில் ஏற்றுவது என்று தீர்மானித்தனர். சில தியாக உள்ளம் படைத்தோர் தன்னுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாது மற்ற எல்லோரையும் படகுகளில் ஏற்றி கரை சேர உதவினர். இவர்களில் அன்றிற் பறவைபோன்ற இணைபிரியா கணவன் மனைவி தம்பதிகள் இருவர் எல்லோருக்கும் உதவி செய்தனர். அநேகமாக எல்லாப் பெண்களும் ஏற்றியாகிவிட்டது என்று அறிந்தபோது நியூயார்க் நகர பெண்மணி திருமதி ஈடா ஸ்ட்ராஸ் என்பவரை அவரது கணவர் ஈஸிடோர் ஒரு படகுக்குள் உள்ளே தள்ளி, “நீயாவது உயிர் தப்பு” என்று சொன்னார். அந்தப் பெண்ணோ படகிலிருந்து மீண்டும் கப்பலுக்குள் — மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுக்குள் –- குதித்தார்.

“அன்பரே! நீரும் நானும் எத்தனை காலம் சேர்ந்து வாழ்ந்தோம். இந்த இக்கட்டான நேரத்தில் உம்மை விட்டுப் பிரியமாட்டேன். நீங்கள் எங்கே செல்கிறீர்களோ அங்கே நானும் வருவேன்” என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டார். இருவரும் கப்பலுடன் கடலுக்கடியில் சென்றுவிட்டனர். அதனால் என்ன? பூத உடல்தானே மறைந்தது. அவர் புகழ் உடம்பு மனித சமுதாயம் வாழும்வரை என்றும் நிலைத்து நிற்குமே!! அவர் எங்கு வேலை பார்த்தாரோ அந்த நிறுவன (மேஸிஸ்) ஊழியர்கள், அந்த தியாக சீலிக்கு ஒரு சிலையே வைத்துவிட்டனர் நியூயார்க் நகரில்!

samoa

சமோவா தீவில் ஒரு எழுத்தாளனுக்கு சமாதி!

ஆங்கிலம் படித்தவர்கள் ஆர்.எல்.ஸ்டீவன்சன் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, கிட்நாப்ட்’ போன்ற கதைகளைப் படித்திருப்பார்கள். அந்த ஸ்டீவென்சன் பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ள சமோவா தீவின் மக்களின் உள்ளத்தில் அழியாஇடம் பெற்றுவிட்டார். எப்படி?

ஐரோப்பிய காலனியாதிக்கம் கொடிகட்டிப் பறந்த நாட்களில் உலகம் முழுதும் பிரிட்டனும், பிரான்சும், போர்ச்சுகல்லும் ஸ்பெயினும், ஹாலந்தும் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை அடக்கி ஒடுக்கி ஆண்டனர். உள்நாட்டு மக்களை குருவி, கொக்கு சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளினர். பசிபிக் மஹா சமுத்திர சமோவா தீவில் வாழ்ந்த பழங்குடி இன மக்கள் தலைவர் மடாFபாவைப் பிடித்து சிறையில் தள்ளினர். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் இருந்த சிறைகளுக்கு, கதாசிரியர் ஸ்டீவென்ஸன்,  சென்று புகையிலை முதலிய பொருட்களைக் கொடுத்து, ‘கைம்மாறு வேண்டாக் கடப்பாடு’ (பலனை எதிர்பாரா உதவி) செய்தார். கொஞ்ச காலத்துக்குப் பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

R L Stevenson

பழங்குடி இனமக்களுக்கு எழுத்தறிவு கிடையாது. ஆனால் குணநலன்களில், படித்தவர்களை விட ஒரு படி மேல்தான். அவர்களாக முன்வந்து ஸ்டீவன்ஸன் வாழும் மலைப்பகுதிக்கு சாலை அமைத்தனர். அந்த சாலை அவர் வீட்டு வாசல் வரை சென்றது. அது மட்டுமல்ல. அவரை தங்கள் இனத்தின் தலைவர்களில் ஒருவராக அறிவித்தனர்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”

ஸ்டீவென்சனின் மெய்க்காப்பளரும் அந்த பழங்குடி இனத்தச் சேர்ந்தவரே. அவரிடம் ஸ்டீவென்ஸன் சொன்னார்:

அடடா! உங்களுக்குத் தான் என்னே விவேகம் இருக்கிறது.

உடனே அந்த பழங்குடி இனத்தவர் சொன்னார்

விவேகம் அல்ல! இது பேரன்பு! என்றார்.

samoa-stamps-1969-Robert-Louis-Stevenson

நல்ல குணங்களைப் பின்பற்ற எழுத்தறிவு தேவை இல்லையே!

ஸ்டீவென்சன் இறந்தவுடன் அவர்களே அந்த சடலத்தை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அங்கு முக்கியமான வர்கள் மட்டுமே அழைக்கப்படிருந்தனர். அந்த இடத்தில் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் இருந்தார். எல்லோரும் வியப்புடன் நீங்கள் யார்? ஏன் இங்கே வந்தீர்கள்? என்று கேட்டனர். நீண்டகாலத்துக்கு முன் தான் தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்குச் சென்றபோது அந்தப் பக்கம் வந்த ஸ்டீவென்சன், காரணத்தைக் கேட்டுவிட்டு தன்னை தற்கொலை செய்யாமல் இருக்க அறிவுரை பகன்றதாகவும் அதனால்தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றும் நன்றியுடன் சொன்னார்.

“நன்றி மறப்பது நன்று அன்று” என்பதற்கு பழங்குடி இன மக்களும் இந்த ஸ்காட்ஸ்மேனும் எடுத்துக் காட்டுகள்!

பாவாஹரி பாபா கதை! கல் மனமும் கரைந்தது!

thief

Article No.1748; Date:- 25  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  8-07

சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)

காசிபுரத்தில் குகை ஒன்றில் பாவாஹரி பாபா என்ற மஹான் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் பிரம்ம நிஷ்டையில் இருக்கும் போது ஒரு திருடன் குகைக்குள் வந்தான். அவருடைய பூஜா பாத்திரங்கள் அனைத்தையும் (பூஜைக்குப் பயன்படுத்தும் சாமான்கள்) மூட்டை கட்டிக் கொண்டு நழுவ முயன்றான். அந்த நேரத்தில், தியானம் கலைந்து பாபா முழித்துப் பார்த்தார்.

இதைக் கண்ட திருடன் பயந்து நடுக்கி மூட்டையைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான். பாபாவும் மூட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் பின்னால் ஓடினார். அவர் தொடர்ந்து வருவதைப் பார்த்த திருடனுக்கு பயம் அதிகரிக்கவே மேலும் வேகமாக ஓடினான். ஆனால் யோக சக்தியால் உடலைப் பக்குவமாக வைத்திருந்த பாபா, அவனை முந்திச் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார். அவன் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, “அன்பனே, இவை எனக்கு வேண்டாம். நீயே எடுத்துகொள்ளலாம்” என்று சொல்லி அவன் கைகளில் கொடுத்தார்.

அந்தக் கள்ளனின் கல் மனமும் உருகிவிட்டது. அன்றுமுதல் அவன் அவருடைய பக்தனாக மாறி, அவருக்குச் சேவகம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

(குறள் 71:– அன்பைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் இருக்கிறதா? அன்புடையார் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீர்த் துளிகளே உள்ளத்தில் கிடக்கும் அன்பினை எல்லோருக்கும் காட்டிவிடும்)

ascetic

Image of an acetic

மற்றொரு சமயம் ஒரு கிருஷ்ண சர்ப்பம் (நாகப் பாம்பு) அவரைக் கடித்துவிட்டது. அப்போது அவர் நிஷ்டையில் இருந்தார். யாருக்கும் பக்கத்தில் செல்ல பயம். அவர் இறந்தேவிட்டார் என்று எல்லோரும் எண்ணினர். அவர் நிஷ்டை கழிந்து ஒன்றும் நடவாதவர் போல நடந்துவந்தார். பாம்பு கடித்தும் எப்படி உயிருடன் வந்தீர்கள்? என்று பக்தர்கள் வியப்புடன் கேட்டனர். “கடவுளின் தூதர் என்னைப் பார்த்துவிட்டுப் போனார்” – என்று அவர் பதில் கொடுத்தார்.