Written by London Swaminathan
Date: 14 DECEMBER 2017
Time uploaded in London- 7-26 am
Post No. 4493
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஆர்டுரோ டோஸ்கானினி (ARTURO TOSCANINI) இசை இயக்குநர் ஆவார். ஆரம்ப காலத்தில் அவர் ஸெல்லோ (CELLO) வாத்தியம் வாசிப்பவராக இருந்தார். பிரபல வயலின் வித்வான்கள்; சாஹித்ய கர்த்தாக்ளுடன்க நல்ல தொடர்பு வைத்திருந்தார். வயலின் மேதைகள் ரோமானினி, என்ரிகோ போலோ, இசை அமைப்பாலர் போல்சோனி ஆகியோர் ஒரு முறை சந்தித்தனர் அவர்கள் அப்பொழுது போல்சோனி எழுதிய அடாகியோ ஒன்றை வாசித்தனர்.
அடாகியோ (ADAGIO) என்பது ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு (ITEM) ஐட்டம். நம்மூர் தில்லானாவுக்கு எதிர்ப்பதம் என்றும் சொல்லலாம்.
மற்றொருத் தடவை போல்சோனி தவிர மற்ற எல்லோரும் சந்திக்கும் வாய்ப்பு கிடடைத்தது. அவர்களுக்குள் போல்ஸோனி பற்றி சம்பாஷணை எழுந்தது. அடடா! அவருக்குதான் இசை அமைப்பதில் என்ன திறமை? அவர் மட்டும் இப்பொழுது இருந்தால் அடகியோவை மீண்டும் வாசித்து இன்புறலாமே! அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்தனர்.
திடீரென்று டோஸ்கானினி ஒரு பேப்பரும் பென்ஸிலும் கொடுங்கள் என்றார். காகிதம் கையில் கிடைத்தவுடனே, ம்ள மளவென்று அடாகியோவுக்கான நொடேஷன் எல்லாவற்றையும் ஸ்வரம் தப்பாமல் எழுதிக் கொடுத்தார். அனைவரும் அதை வாசித்து மகிழ்ந்தனர்.
அந்த அடாகியோவில் நான்கு பகுதிகள் உண்டு
நம்ம ஊரில் ஒரு சாகித்யகர்த்தா எழுதிய ஒரு பாடலை அவர் கச்சேரி முடிந்து திரும்பியவுடன் அவர் பாடிய புதிய பாடலை ஸ்வரம் தப்பாமல் எழுதிக்கொடுப்பது போலாகும் இது.
XXXX
ஆசை, அகந்தை, அலட்சியம்!!!
ப்ரூனோ வால்டர்ஸ் (BRUNO WALTERS) நல்ல இசை அமைப்பாளர். மிகவும் அமைதியானவர்; அடக்கம் உடையவர்; பழகுதற்கு இனியர்.
அவர் முதல் தடவை நியூயார்க் பிலார்மானிக் நிகழ்ச்சி நடத்தியபோது முதல் ஸெல்லோ வாத்யம் (CELLIST) வாசிப்பவற்கான நாற்காலியில் ஆல்ப்ரெட் வாலென்ஸ்டைன் (ALFRED WALLENSTEIN) உட்கார்ந்து கொண்டார்.அத்தோடு நில்லாமல் ஒத்திகை நடந்தபோதும் சரி, இன்னிசை நிகழ்ச்சியிலும் சரி, நடத்துநர் ப்ரூனோவைக் கண்டுகொள்ளவில்லை. வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். அங்குமிங்கும் ‘பராக்’ பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், கோபத்தில் அவரை திட்டியிருப்பார். ஆனால் ப்ரூனோ அவரிடம் சென்று, என்னைத் தனியாகச் சந்தியுங்கள் என்றார்.
வாலென்ஸ்டைனும் தனிச் சந்திப்புக்காக வந்தார்.
“வாலன்ஸ்டன், உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஒருமாதிரி இருக்கிறீர்களே, உங்கள் ஆசை அபிலாஷைகள்தான் என்ன? சொல்லுங்கள்”.
வாலன்ஸ்டைன் சொன்னார்: “நான் ஒரு சிறந்த இசை நடத்துநர் (CONDUCTOR) ஆக வேண்டும்”.
உடனே ப்ரூனோ, அமைதியாகச் சொன்னார்:
“அதற்கென்ன, ஆகுங்களேன் ஆனால் வாலன்ஸ்டைன் போன்றவரை முதல் வரிசையில் உட்கார வைத்துவிடாதீர்கள்!”
XXXX
சங்கீத அவுரங்கஸீப்புக்கு சிபாரிசுக் கடிதம்!
லியோபோல்ட் ஸ்டோகோவ்ஸ்கி (LEOPOLD TOKOWSKI) என்பவர் பெரிய இசை அமைப்பாளர் (MUSIC CONDUCTOR); அவருக்கு ஒரு பிரபல வயலின் வித்வான் சிபாரிசுக் கடிதத்துடன், வேறு ஒரு இளம் வயலின் வித்வானை அனுப்பி இருந்தார்.
அது நல்ல சிபாரிசு என்பதால், ‘இப்போதைக்கு பிலடெல்பியாவில் இசைக் குழுவில் இடம் இல்லை. சில நாட்கள் பிலடெல்பியாவில் தங்கினால் ஏதேனும் உதவி செய்வேன்’ என்றார் ஸ்டோகோவ்ஸ்கி.
வந்த ஆளின் அதிர்ஷ்டம், ஒரு முக்கியக் கச்சேரிக்கு முன், இசைக்குழு வயலின் வித்வானுக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆகையால் சிபாரிசுக் கடிதத்துடன் வந்தவரிடம் டோகோவ்ஸ்கி வந்து, பீதோவனின் (BEETHOVEN SYMPHONY) பாட்டுக்கு நீங்கள் ஈடுகொடுத்து வாசிப்பீர்களா? என்றார். அவரும் தலையை அசைத்துவிட்டு, அவ்வாறே வாசித்தார்.
ஆனால் நேரம் ஆக ஆக அவர் முகத்தில் கொஞ்சமும் சுரத்து இல்லை; பிடிக்காத விஷயமாக இருந்தால் குழந்தைகள் எப்படி நெளியுமோ, முகத்தைச் சுழிக்குமோ அப்படி சுழித்தார்.
டோகோவ்ஸ்கி அவரிடம் சென்று என்ன விஷயம்? என்று கேட்டார்.
உடம்பெல்லாம் சரியா? ஏதேனும் உடம்பு கோளாறா? டாக்டரைக் கூப்பிடவா? என்று கேட்டார்.
அவர் இல்லை என்று சொன்னவுடன்,
மிகவும் கோபத்துடன், பின்னர் ஏன் இப்படி முகத்தை, குரங்கு மூஞ்சி போல வைத்துக்கொண்டு முழிக்கிறீர்கள் என்று விரட்டினார்.
அதுவா……….. அதுவா,,,,,,,,,,,,,,,,, எனக்கு சங்கீதம் பிடிக்கவே பிடிக்காது! — என்றார் கோணமூஞ்சி வயலின் வித்வான்!
Tags:-சங்கீத சம்பவங்கள், அபார ஞாபக சக்தி, வயலின் வித்துவான், அவுரங்கசீப், அகந்தை
–சுபம்–