‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு ! (Post No.10054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,054

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய நூல் ரிக்வேதம். 6000 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகம் என்கிறார்கள் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பலகங்காதர திலகரும். பிரிட்டிஷ் கைக்கூலியாக கிழக்கு இந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட பிரிட்டன் வாழ், ஜெர்மன் ஆள் மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று உளறிவிட்டு , பேராசிரியர் வில்சன் முதலியோர் கொடுத்த அடி தாங்காமல் ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முன் உண்டானது; எவரும் இதன் காலத்தைக் கணக்கிடவே முடியாது என்று கதறினார். இப்போது அமெரிக்காவில் இந்துக்களை  எதிர்த்துப் பேசிவரும் விட்சல் இது கி.மு 1700 என்கிறார். இந்துக்களோவெனில் இதை நாலாக வேத வியாசர் பிரித்தது கி.மு. 3150ல் என்கின்றனர். அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (BARC) மற்றும் அமெரிக்க விண் வெளி நாசா (NASA) நடத்திய அராய்ச்சிகளோ இதில் குறிப்பிடும் சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் ஓடியதாக சொல்கின்றனர். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் 20-க்கும் மேலான பெண் புலவர்கள் இருக்கின்றனர். அதுவும் உலக சாதனை. இவ்வளவு பெண் புலவர்களின் பட்டியல் அக்காலத்தில் வேறு எங்கும் இல்லை.

ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் 91-ஆவது துதியாக வருகிறது (RV.8-91)அபாலா என்னும் பெண்மணி பாடிய கவிதை. அவர் இந்திரனை நோக்கி வேண்டுகிறார்.

இதில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. சோம லதா என்னும் அதிசயக் கொடி மலையில் விளைகிறது, அதை பருந்து கொண்டு தருகிறது என்றெல்லாம் பல புலவர்கள் பாடுகின்றனர் . ஆனால் அபாலா அதை  தான் போகும் வழியில் தண்ணீர் (நீரோடை) அருகில் காண்கிறாள்.அதைச் சாப்பிட்டு குணமும் அடைகிறாள். அவள் தனக்கும் தன்  தந்தைக்கும் இளமை திரும்ப வேண்டுகிறாள் . எப்படி தனக்கும் தத்தையின் வழுக்கைத் தலையிலும் முடி வளருகிறதோ அதே போல பயிரும் செழித்து வளர வேண்டும் என்கிறாள். மூன்று முறை அவளை இந்திரன் தேரின் சக்கரத் துளைகள் வழியாக இழுத்த பின்னர் அவளிடம் இருந்த தோல் வியாதி குணமாகி முடி வளர்ந்தது.

ஆண்டாளும் அபாலாவும்

இங்கு அபாலா  நமக்கு ஆண்டாளை நினைவுபடுத்துகிறார். அபாலாவுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆண்டாளும் தேச பக்தி உணர்ச்சி பொங்க , “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள” என்று வேண்டுகிறார்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!—திருப்பாவை

XXXX

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை மீது அவள் கொண்டுள்ள பாசம் மற்றும் விவசாயத்தில் முனைப்பு. ஆக, வெள்ளைக்காரன் சொன்ன நாடோடி விஷயம் பொய்யாகப் போனது ! வேத கால இந்துக்களை விவசாயம் செய்யாத நாடோடி என்று வெள்ளைக்காரர்கள் ‘கப்ஸா’ விட்டனர். அவர்களது முகத்திரையைக் கிழித்து விட்டது அபாலாவின் ரிக்வேதக் கவிதை

அவளுக்கு தோல் வியாதி இருந்ததால் கணவன் அவளை வெறுத்தான் என்பதும் கவிதையில் வருகிறது. ஆகையால் வியாதியுள்ள பெண்களின் அவல நிலையும் நமக்குத் புரிகிறது .

மூன்று முறை தேரின் துளை வழியாக இழுத்தனர் என்பது ஒரு சடங்காக இருக்கலாம்.  தேரின் 3 துளை பற்றி ரிக் வேத முதல் மண்டலத்திலும் வருகிறது (1-164)

XXXX

இதோ பாடலின் சுருக்கம் (RV.8-91)

8-91-1.நீரோடைக்குச் சென்ற ஒரு இளம்பெண்  சோம லதை  என்னும் செடியைக் கண்டாள். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் . இந்திரனே உனக்கு இதன் ரசத்தைப் பிழிந்து தருவேன் என்றாள்.

2.நீ வீரன், ஒளியுடன் பிரகாசிப்பவன்; வீடு வீடாகச் செல்பவன். என் பற்களால் கடித்துப் பிழியப்பட்ட  இந்த சோம ரசத்தை யவ /பார்லி பொரியுடனும், கரம்பைக் கஞ்சியுடனும், புரொடச ரொட்டிகளுடனும் சாப்பிடு .

XXXX

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்; இராம பிரானுக்கு சபரி என்னும் வேடுவ குலக் கிழவி இலந்தைப் பழத்தைக் பல்லால் கடித்து ருசி பார்த்துவிட்டு நல்ல கனிகளை மட்டும் கொடுத்தாள்; அது போல இங்கு ஒரு இளம் பெண் தன் பல்லால் கடித்து பிழியப்பட்ட சோம ரசத்தைக் கொடுக்கிறாள் . அது மட்டுமல்ல. அத்தோடு அவள்  கொடுக்கும் எல்லா உணவு வகைகளும் ‘வெஜிட்டேரியன்’ VEGETARIAN DISHES பண்டங்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் .XXXX

3. நாங்கள் உன்னை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் நீயே இங்கு வந்து இருப்பதை அறியவில்லை ; சோம ரசமே முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் பாய்ந்து போ.

4.இந்திரன் எங்களுக்கு அடிக்கடி பலத்தையும் செல்வத்தையும் தருக; கணவனால்  வெறுக்கப்பட்ட பெண்கள் இந்திரன் உதவியை நாடுவோமாகுக.

5. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் அங்கத்தையும் செழிப்பாக்குக ,

6. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக.. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் இடுப்புக்கு கீழேயுள்ள வியாதியுள்ள இடத்தையும் செழிப்பாக்குக ,

8-91-7.சதக்ரதுவே; நீ அபலையின் உடலை சகடத்தின் துளையிலே மூன்று முறை செலுத்தி சுகப்படுத்தினாய். அவளுக்கு சூரியனைப் போல ஒளிவீசும் தோலையும் தந்தாய்.

XXXX

இது ஒரு அருமையான, நிறைய தகவல் உள்ள கவிதை. சோமம் என்பது வெள்ளை க்காரன் சொல்லும் போதை பொருள் அல்ல. நோய் தீர்க்கும் ,மருந்து; ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகை ; தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் .

என்பதையும் இக்கவிதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவிபாடினர். 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய , சீன, பாரசீக ,எகிப்திய நாகரீகங்களில் பெண் கவிஞர்கள் அரிதிலும் அரிது!

இந்தக் கவிதைகளை நமக்குத் தொகுத்தளித்த வியாசருக்கு வணக்கங்கள்; அதைப் பாதுகாத்து வாமொழியாகவே பரப்பி வரும் பிராமணர்களுக்கும் நமஸ்காரம்.

-SUBHAM-

tags- மயிர், பயிர், அபாலா , ஆண்டாள், வழுக்கைத் தலை, ரிக் வேதம், கவிதை , சபரி

சோம லதையின் அபூர்வ மருத்துவ குணங்கள்! (Post No.7070)

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com

Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-33 am
Post No. 7070

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Jambunathan’s Translation
Griffith’s Tanslation