மனைவி சொத்தில் வாழலாமா? (Post No. 2965)

kalai3

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2965

Time uploaded in London :– 14-19

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி சொத்தில் வாழலாமா? மனைவி மூலம் கிடைத்த பணத்தில் வாழவே கூடாது. அது மிக மிக கடைத்தரமானது. அப்படியே கிடைத்தாலும், அதை விஞ்சும் அளவு ஒரு ஆண்மகன் சம்பாதித்துக் காட்டவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே செல்வம்.

 

குந்தித் தின்றால் குன்றும் கரையும்; ஒருவன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவானால், அந்தச் செல்வம் மலை போல இருந்தாலும் கரைந்து போகும் என்பது சான்றோர் வாக்கு.

 

உத்தமம் ஸ்வ ஆர்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம்

அதமம் சேவகாவித்தம் ஸ்த்ரீ வித்தம் அதமாதமம்

 

 

ஸ்வ ஆர்ஜிதம்உத்தமம் – சுயமாக சம்பாதிப்பது மிகச் சிறந்தது

 

பிதுரார்ஜிதம் மத்யமம் – அப்பா விட்டுச் சென்ற சொத்தைப் பெறுவது மத்தியமம் – இடைநிலைப்பட்டது.

 

சேவகாவித்தம் அதமம் – பிறரிடம் உழைத்துச் சம்பாதிப்பது கடைநிலைப்பட்டது ( அதமம்)

 

ஸ்த்ரீ வித்தம் அதமாதமம் – பெண்கள் (மனைவி) மூலம் கிடைத்த சொத்து மிகவும் கீழ்த்தரமானது. அதமத்திலும் அதமம்!

 

பெண்கள் வருமானத்தில் பெற்றோர்கள் வாழ்வதும் கூட பல பிரச்சினைகளை உண்டாக்குவதைக் காண்கிறோம்.

 

பெண்கள், திருமணமாகிப் போனால், தங்களுக்கு வருமானம் நின்று, வாழ்வு இருண்டுவிடுமே என்று கருதி, தி ருமணத்தைப் பல சாக்குகள் சொல்லி தள்ளிப்போட்டு,  சொந்தப் பெண்களின் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறார்கள்.

kalai23

மற்றொரு புறம் பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கத் துவங்கிவிட்டால், அவர்கள் ஆட்டம்போடுவது அதிகரிப்பதையும் காண்கிறோம். இஷடப் பட்ட இடத்துக்கு இஷ்டப்பட்ட ஆட்களோடு போய்விட்டு,  இஷட்ப்பட்ட நேரத்துக்கு நள்ளிரவில் வீட்டுக்கு வருவதையும் அதனால் ஏற்படும் சீர்கேடுகளையும் காண்கிறோம்.

 

மனு ஸ்ம்ருதி சொல்வது போல பெண்களுக்கு அவர்களது சகோதரர்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்த முந்தைய சமுதாயம் ஒழுங்குக் கட்டுப்பாடுகளுடன் இருந்தது. பெண்களை மனமகிழ்ச்சியோடு வைக்காத வீடு அடியோடு அழிந்துவிடும், பெண்கள் மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் மட்டுமே தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் என்றும் மனு ஸ்மருதி சொல்லுகிறது. அப்படி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துவிட்டால் பின்னர், அவர்களுக்க் சம்பாதிக்கும் தேவையும் இல்லையே.

 

இன்ன பிற காரணங்களால்தான் மேற் சொன்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் பெண்களின் பணத்தில் வாழ்வது அதமாதமம் என்று சொன்னதுபோலும்!!!

 

–Subham–