விண்கலம் ஏகும் போது அமெரிக்க வீரர்களின் பாரம்பரியப் பழக்கங்கள்! (Post No.7043

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com

Date: 1 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 16-48

Post No. 7043

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ச.நாகராஜன்

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன.

இந்தியர்களைக் குருட்டு நம்பிக்கைக்காரர்கள் என்று சொல்லும் மேலை உலகப் பகுத்தறிவு வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா போடும் நமது ‘பகுத்தறிவுச் செல்வங்களும்’ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்கள் விண்வெளி ஏகு முன் என்ன செய்கிறார்கள் என்பதையே.

கீழே உள்ள சுவையான செய்தியைப் பார்ப்போம்

*

நாஸாவின் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரி ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ரேஞ்சர் திட்டத்தை உருவாக்கியபோது சந்திரனைச் சுற்றவும் அதை போட்டோ எடுக்கவும் விண்கலங்களை அனுப்பியது.

என்றாலும் கூட ரேஞ்சர் திட்டமானது தொடர் திட்டமாக ஆகி விட்டது; ஏனெனில் முதலில் ஏவப்பட்ட ஆறு கலங்களும் தோல்வியில் முடிந்தன.

ஏழாவது முறை வெற்றியை அடைந்தனர். அல்லது தோல்வியை அடையவில்லை. இதற்கான காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்ததில் கண்ட்ரோல் அறையில் ஒருவர் ஜாடி நிறைய கடலையை வைத்துக் கொண்டு அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து விண்வெளியில் அமெரிக்கர்கள்  விண்வெளியில் வெற்றிகரமாகச் செல்வதற்கான காரணம் கண்ட்ரோல் அறையில் உள்ள கடலையினால் தான் என்று சொல்லப்பட்டது.

ரஷிய விண்வெளி வீரர்கள் பஸ் டயர்களின் மீது சிறுநீர் கழிக்கும் போது அமெரிக்க விண்வெளி வீரர்களோ தமக்கே உரிய பழக்கத்தை விடாது செய்கின்றனர்.

இந்தக் குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலான செயலின் போது அமெரிக்க விண்கலக் குழுவினர் போக்கர் விளையாட்டை விளையாடுகின்றனர். குழுவின் கமாண்டர் தோற்கும் வரை இது தொடரும்.பிறகே விண்கலத்தை நோக்கி அனைவரும் புறப்படுவர்.

நன்றி : TRUTH VOL.87 NO. 22 – 13-9-2019

இச் செய்தியின் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:

NASA’s Jet Propulsion Laboratory launched the Ranger mission in the 1960s, 

spaceflights intended to fly around and take photographs of the moon. However, the Ranger mission soon turned into a series of missions as  all of the first six launches were unsuccessful. 

On the seventh try they got lucky, or perhaps they didn’t get unlucky. Either way, the thing that was most noticeably different the seventhtime was that someone had got a jar of peanuts to the control room and shared it around. Since then, mystical powers of 

sending Americans successfully to space have been attributed to peanuts in the 

control room. 

While the Russian cosmonauts hydrate their bus tyres, their astronaut counterparts do their own thing en route to the launch pad. In this superstitious ritual, the crew play poker and the cards continue to the dealt until the commander loses. Only then can the launch proceed.

On the Earth-ridden side, ever since STS-1, the director of the Lanuch Control Centre treats his co-workers to a meal of beans and cornbread after a successful launch, a time for celebration and bonding for the entire team.

Source : TRUTH VOL.87 NO. 22 – 13-9-2019

***