சிந்து சமவெளியின் “கொம்பன்” யார்? (Post No.9484)

PASUPATI IN IRELAND- CERUNNOS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9484

Date uploaded in London – –12  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் அவர்கள் பின்பற்றிய சமயம் (மதம்) தொடர்பான பல முத்திரைகள் கிடைத்துள்ளன. இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும்.

“பசுபதி” முத்திரையில் ஒரு கடவுள் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவரைச் சுற்றி யானை, புலி, காண்டா மிருகம், எருமை ஆகிய நிற்கின்றன.

அவரது தலையில் கொம்பு போன்ற மகுடம் உள்ளது. இந்து மத யஜூர்வேதத்தில் சிவபெருமானை பிராணிகளின் தலைவன் (பசு பதி) என்று ரிஷிகள் வருணிக்கின்றனர்.  ஆகையால் இந்த முத்திரையிலுள்ள கடவுள் சிவன் அல்லது சிவபெருமானின் மூல வடிவம் (Proto Siva) என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

பழைய நாகரீகங்களில் கடவுளோ அல்லது மக்கள் தலைவர்களோ இப்படி ‘கொம்புள்ள கிரீடங்கள்’ அணிவதைக் காண்கிறோம்.  காளை மாடு அல்லது எருமை மாட்டின் கொம்பு தாங்கிய தலைக் கவசங்களையோ மகுடங்களையோ அணிவது வழக்கம்.  பல பழங்குடி இனத்தலைவர்கள் இதை இன்றும் பின்பற்றுகின்றனர்.  தமிழ் இலக்கியமும் சம்ஸ்க்ருத இலக்கியமும் மன்னர்களோ மக்களில் சிறந்தோரையோ ஏறு (BULL காளை) என்று போற்றுகின்றனர்.

மன்னர் ஏறு (பதிற் 38/10) குட்டுவர் ஏறு (பதிற் 90-26) புலவர் ஏறு (பத்துப்பாட்டு 1-2, 6-8) பரதவர் போர் ஏறு (பத்துப்பாட்டு 6-44) புயல் ஏறு (ஆற்றல் மிக்க மழை) உறுமின் ஏறு (ஆற்றல் மிக்க இடி) என்று சங்கப் புலவர்கள் பாடுகின்றனர். முதலில் மனிதனுக்கு மட்டும் பயன்படுத்திய “ஏறு” பின்னர் மிகப்பெரிய மழை, இடி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.  இன்றும் கூட ஆங்கிலத்தில் ‘GIANT’ ‘MONSTER’ போன்ற சொற்களை இப்படி பலவாறாகப் பயன்படுத்துகிறோம். சம்ஸ்க்ருதத்தில் “இந்திரனை” BULL காளை என்று வேதங்கள் போற்றுகின்றன. இதை இன்றும் கூட மன்னர்களுக்கும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் கூட பயன்படுத்துகிறோம். ராஜேந்திரன் மகேந்திரன் கஜேந்திரன் (யானைகளில் தலைமை யானை) மச்சேந்திரன் மிருகேந்திரன் (சிங்கம்) புவனேந்திரன் என்று பல ‘இந்திரன்’களைப் பார்க்கிறோம்.

சீக்கியர்கள் (பஞ்ஜாப்) தங்களின் பெயருக்குப் பின்னால் “சிங்” (சிங்கம்) என்று சேர்த்துக் கொண்டனர். ரோமானிய மன்னர்களும் “சீசர்” (கேசரி – சிசர்) என்றும் அழைத்துக் கொண்டனர்.

ஆகவே தலைமைப் பதவியிலுள்ளவர்கள் ஆதிகாலத்தில் அதற்கு அடையாளமாக காளையின் கொம்பை அணிவது வழக்கம்.

“கொம்பு“ என்றால் யானையின் தந்தம். “கொம்பன்“ என்றால் தந்தமுள்ள ‘பெரிய தலைமை யானை’ என்ற பொருளும் தமிழில் வழங்குகிறது.  இதனால்தானோ என்னவோ தமிழில் “நீ என்ன பெரிய கொம்பனா?“ என்ற சொற்றொடர் வழங்குகிறது போலும். யாரேனும் சிறப்பான கௌரவத்தையோ மரியாதையையோ எதிர்பார்த்து நின்றால் அவரது கர்வத்தைக் குறிக்க இந்த மரபுச் சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது.

புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் காளிதாசன் கூட “கொம்பு“ “கொம்பு சீவல்“ பற்றிக் கூறுகிறான்.  “கொம்பு“ என்றால் கர்வம் என்றும் சாதாரண கொம்பு என்றும் பொருள் உண்டு.  ரகு வம்ச மகாகாவியத்தில் காண்டா மிருகங்களை தசரதன் வேட்டையாடுவதை காளிதாசன் பாடுகிறான் (9-62). கருணையின் பொருட்டு காண்டா மிருகங்களைக் கொல்லாது அதன் கொம்புகளை மட்டும் சீவினானாம் தசரதன். அதாவது மன்னர்களைக் கொல்லாமல் அவர்களுடைய கர்வத்தை மட்டும் வெட்டி வீழ்த்தினான் என்பது காளிதாசன் கவிதையின் உட்பொருள்.

காளிதாசன் ரகுவம்சத்தில் “வீர்ய ச்ருங்கன்” (11-72) என்று கூறுகிறான். மகாபாரதத்திலும் ச்ருங்கவான் (9-52) ச்ருங்கி (1-40) என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காளிதாசனுக்கு முன்னர் வாழ்ந்த வால்மீகியும் தனது ராமாயணத்தில் ‘அரசர்களுள் ஏறு’ ‘மனிதர்களில் ஏறு’ சொற்களைப் (BULL Among Kings, BULL Among Men) பயன்படுத்துகிறார். சிந்து சமவெளி முத்திரைகளில் அடிக்கடி காணப்படும் காளை/ BULL முத்திரை இப்படிப்பட்ட “ஏறு” (தலைவன், சிறந்தவன்) என்பதை குறிப்பதாக இருக்கலாம். மிருகங்களின் தலைவனான சிங்கத்தைக் குறிக்கவும் இதை பயன்படுத்தலாம். மனிதர்களில் சிறந்த ராஜாக்களைக் குறிக்கவும் (ராஜேந்திரன்) இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இரண்டையும் வேறுபடுத்த ஏதேனும் ஒரு குறியீடு (DIACRITICAL MARK) அவசியம்.

INDUS-SARASVATI VALLEY PAUPATI- PROTO SIVA

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கொம்பன்

மகாபாரதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகப்பழமையான சஹஸ்ரநாமம் (சஹஸ்ரநாமம் = ஆயிரம் பெயர்கள்) ஆகும். இதைப் பின்பற்றியே பிற்காலத்தில் எல்லாக் கடவுள் சஹஸ்ரநாமங்கள் தோன்றின என்றால் தவறில்லை. இதில் வேதகாலக் கடவுளரும் சிவன், முருகன், கணபதி ஆகிய கடவுளரைக் குறிக்கும் சொற்களும் இருப்பதே இதை வேறுபடுத்திக் காட்டும்.

இதில் கொம்பு பற்றியும் பல நாமங்கள் உள்ளன. விஷ்ணுவைப் போற்றும் ஆயிரம் நாமங்களில் மஹா ச்ருங்காய (536), ச்ருங்கினே (797) —-நைக ச்ருங்காய (763, ) சதுர் தர்ம்ஷ்ட்ராய (நான்கு பற்கள்/கொம்பு உடையவர்) என்றெல்லாம் வருகின்றன. “பெரிய கொம்பன்”, ஒரு கொம்பு மட்டும் இல்லாமல் பல கொம்புகள் உடையவன் என்றும் இதன் பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு முதல், முதலில் உரை எழுதிய ஆதிசங்கரர் தனது உரையில் சத்வாரி ச்ருங்காஹா – (ரிக் வேதம் 4-58-3), (தைத்ரிய ஆரண்யகம் 1-10-17) என்று  குறிப்பிடுவதை எடுத்துக் காட்டுகிறார். இதைப் பார்க்கையில் “பசுபதி” முத்திரை சிவனா விஷ்ணுவா அல்லது இவர்களுக்கு முந்திய மூலக் கடவுளா என்ற வினா எழுகிறது.

சிந்து சமவெளி முத்திரையிலுள்ள பசுபதி போலவே ஐரிஷ் (அயர்லாந்து) கடவுளின் உருவமும் உள்ளது. அக்கடவுளின் பெயரும் கொம்பன்”தான் (CERNUNNOS)  பெயர் மருவி இன்று CERUNNO என்று அழைக்கப்படுகிறார். இது ஹாலந்தில் ஒரு புதை குழியில் (GUNDESTRUP CAULDRON) கண்டெடுக்கப்பட்ட உலோகத்தாலான பெரிய அண்டாவில் பொறிக்கப்பட்டு உள்ளது. சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது சிந்து சமவெளி “பசுபதி” முத்திரை கி.மு. 1800–க்கும் முந்தியது.

சிந்து சமவெளியின் பசுபதி முத்திரையில் உள்ள நான்கு மிருகங்களும் நான்கு வர்ணத்தையோ நான்கு இன மக்களையோ குறிக்கலாம். யானை பிராமணர்களையும், புலி க்ஷத்ரியர்களையும், காண்டாமிருகம் வைஸ்யர்களையும், எருமை சூத்திரர்களையும் குறித்திருக்கலாம். பசுபதி ஆசனத்தின் கிழேயுள்ள ஆடு ஐந்தாம் வருணத்தையோ அல்லது வெளிநாட்டினரையோ குறித்திருக்கலாம். பைபிலில் (DANIEL 7) நான்கு மிருகங்கள் கனவில் வந்ததை விளக்குகையில் நான்கு நாட்டு அல்லது நான்கு இன மக்கள் என்றே வியாக்கியானம் செய்கின்றனர்.  கீழே ஆடு இருப்பதால் இந்த பசுபதியை அக்கினி தேவனாகவும்  கருதலாம்.

பசுபதி முத்திரையில் நான்கு மிருகங்கள் உள்ளன யானை, எருது, காண்டாமிருகம், புலி உள்ளன. இவை இந்திரன், யமன், வருணன், வாயு/ மித்திரன் ஆகியவற்றை குறிப்பனவா?

PAUPATI IN BAHRAIN/DILMUN

இந்திரன் – இந்திரன் வாகனம்

யமன் – எருமை வாகனம்

வருணன்- கொம்பு (சுறா அல்லது காண்டா மிருகம் )

புலி –  சாஸ்தா அல்லது தேவி

கீழேயுள்ள மான் அல்லது ஆடு- அக்கினி தேவன்

வேதத்தில் குறிப்பிடப்படும்   ஏக ச்ருங்கியும்  சிந்து வெளி ஒற்றைக் கொம்பு மிருக முத்திரையும் ஒன்றா என்றும் ஆராய்வது அவசியம். தமிழில் ‘கோண் மா’ என்ற சொல் எருமையை யோ அல்லது காண் டா மிருகத்தையோ குறிக்கும்..

மிருகங்களால் சூழப்பட்ட கடவுள் உருவம் முதலில் சிந்து/சரஸ்வதி நதிக்கரையில் கிடைத்தது. பின்னர் ஹாலந்தில் அதைப் போன்ற ஐரிஷ் கடவுள் சிலை கிடைத்தது. நான் செய்த ஆராய்சசியில் அதே போல மத்திய கிழக்கு — பஹ் ரைன்  தீவிலும் கிடைத்துள்ளது. ஐரிஷ்  என்பது ஆரிய மொழிகளின் நஃபிரிவு என்பர் . மத் தியக் கிளக்கோ இந்திய கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது மூன்று வெவ்வேறு இடங்களில் இதுபோல கிடைத்திருப்பதா ல்  சிந்துவெளி மக்கள் யார் என்று கேள்வி எ ழுகிறது ; எழுத்தைப் படிக்கும்போதுதான் உண்மை புலப்படும் .

–சுபம்–

TAGS -PASUPATI SEAL, INDUS VALLEY, BAHRAIN, DILMUN, IRISH, CERUNNOS, பஹ்ரைன்,  சிந்துவெளி,  பசுபதி , அயர்லாந்து

மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்! (Post No.3020)

constituition

Article Written S NAGARAJAN

Date: 30 July 2016

Post No. 3020

Time uploaded in London :– 9-18 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

85 சதவிகிதம் ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா தன் பாரம்பரியத்தை அரசியல் சாஸனத்தில் ஏன் பிரதிபலிக்க வைக்கவில்லை என்பது புரியாத புதிர்!

 

எல்லா தேச அரசியல் சாஸனங்களையும் எடுத்துப் படித்துப் பார்த்தால் நமக்கு வியப்பு மேலிடும்.

 

அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் தங்கள் நம்பிக்கையையும் தெள்ளத் தெளிவாக அரசியல் சட்டத்தில்  முன்னுரையிலேயே (Preamble) புலப்படுத்தி விடுகிறார்கள்.

மூன்று நாடுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

 sl constitution.jpg

ஸ்ரீ லங்காவின் அரசியல் சட்ட முன்னுரை (Sri Lanka Preamble SLP) ஸ்வஸ்தி என்று ஆரம்பிக்கிறது. (நமது சோழர் கால கல்வெட்டுக்கள் உட்பட ஸ்வஸ்தி என்றா மங்களகர்மான சம்ஸ்கிருத வார்த்தையிலேயே ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூரலாம்)

 

தங்களது வீரம் கொண்ட போராட்டங்களை அது சொல்கிறது. பாரம்பரியப் பண்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்கிறது. புத்தமதத்தையும் புத்த சாஸனைத்தையும் 9ம்பிரிவில் கூறுகிறது. இப்படி புத்தமதத்தை அது ஏற்றுக் கொண்டதால் பெருமை அல்லவோ பெறுகிறது!

வாழ்க ஸ்ரீலங்கா!

 

அடுத்து அயர்லாந்து ஏசு கிறிஸ்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறது. தங்களது மூதாதையரின் தியாகங்களை அது நன்றியுடன் நினைவு கூர்கிறது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லிக் கொள்வதில் அது பெருமை கொள்கிறது!

வாழ்க அயர்லாந்து!

 

அடுத்தது நாம் வியக்கும் நேபாளம். ஹிந்து நாடு என்பதில் பெருமை கொள்ளும் ஒரே நாடு அது தான். உலகின் ஒரே ஹிந்து நாடு அது தான்!

 

அங்கு 2007இல் ஏற்பட்ட அரசியல் சட்டம் அதை செகுலர் நாடு என்று சொல்ல வைத்தாலும் அதனுடைய தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதன் தேசீய மிருகம் பசு! புனிதமான பசுவின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ!

 

ஹிந்து மதம் எதையெல்லாம் புனிதமாகக் கருதுகிறதோ அதையெல்லாம் நேபாளம் புனிதமாகக் கருதி அறிவிக்கிறது – அதிகார பூர்வமாக!

 

வாழ்க நேபாளம்!

 nepal-constitution

ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, அனைத்து நல்லனவற்றையும் தாயகமாகக் கொண்ட இந்தியா …  ??

 

ஹிந்து என்று சொல்லிக் கொள்ளத் தயங்கி விட்டது.

ஒரு ஹிந்து நாடு என்று சொல்லிக் கொண்டாலேயே மற்ற மதங்களை அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையாகி விடும்.

ஒரு ஹிந்து செகுலரை விட அதிகம் செகுலர் இல்லையா?

 

(More secular than the so called secular in real sense, is it not?)

 

மத வழிபாட்டில் சுதந்திரம் தரும் ஒரே மதம் ஹிந்து  மதம் தான், இல்லையா!

 

சிந்திக்க வேண்டும்!

**********