Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 19 December 2018 GMT Time uploaded in London – 7-29 am Post No. 5801
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
உலகின் முதல் சட்டப் புத்தகம் மநு நீதி நூல்- 12 அத்தியாயங்களைக் கொண்டது. ஹமுராபி எழுதிய சட்டப் புத்தகத்தைவிட முந்தியது. ஆனால் அவ்வப்பொழுது UUDATE ‘அப்டேட்’ செய்யப்பட்ட ஸரஸ்வதி நதி தீர நாகரீக நூல். 2600 ஸ்லோகங்களுக்கு மேல் கொண்டது. ஒன்பது முழு நீள வியாக்கியானங்கள் (உரைகள்) இப்பொழுது கிடைக்கின்றன. நாம் இது வரை வெற்றிகரமாக ஆறு அத்தியாயங்களைக் கண்டு களித்தோம்.
இன்று ஏழாவது அத்தியாயத்தில் அடி எடுத்து வைப்போம். இதில் அரசனுக்குரிய நீதிகள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. அவைகளை இன்று உலகை ஆளுவோருடன் ஒப்பிட்டாலும் பொருந்தும்.
முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டு BULLET POINTS களில் தருகிறேன்.
1.அரசனைக் கடவுள் என்று இந்துமத நூல்கள் போற்றும். இது சங்க இலக்கியத்திலும், தமிழ் வேதமான திருக்குறளிலும் உள்ளது தமிழில் ‘கோ’,’இறை’ என்பன கடவுளையும் மன்னர்களையும் குறிக்கும் சொற்கள்.
ஸ்லோகம் 1 முதல் 8 வரை காண்க
2.அரசனை இந்திரன் முதலான எட்டு தேவதைகளின் சக்தியுடன் ஒப்பிடுதல்— இதுவும் சங்க இலக்கியப் பாடல்களில் உள. அவன் அக்னி போன்றவன் ,யமன் போன்றவன்,இந்திரன் போன்றவன்; பகைவர்களுக்கு யமன், சூரியன் நெருப்பு; வேகத்தில் காற்று என்றெல்லாம் புற நானூற்றுப் புலவர்கள் வருணிப்பது மநுவின் ஸ்லோக அடிப்படையிலேயே. ஸ்லோகம் 1 முதல் 8 வரை.
3. திருக்குறளில் அதிகாரம் 55, 56 செங்கோன்மை, கொடுங்கோன்மை,அதிகாரம் 39 இறைமாட்சி, அதிகாரம் 70 மன்னரை சேர்ந்தொழுகல் ஆகியன மநுவின் ஏழாவது அத்தியாயத்தின் எதிரொலி.
மன்னன் கடவுள்- குறள் 388= மநு 7-5
மன்னன் நெருப்பு- குறள் 691
இப்படி தொடர்ந்து ஒப்பிட்டுக்கொண்டே போகலாம் நிற்க.
4.கெட்ட மன்னர்களும் நல்ல மன்னர்களும்
ஸ்லோகம் 41,42-ல் மக்களால் தூக்கி எறியப்பட்ட, போற்றப்பட்ட மன்னர்களின் பட்டியல் உளது. இதில் சுமுகன் என்னும் மன்னர் பெயர் சுமேரியாவில் மட்டும் உளது. இந்திய அறிஞர்களைத் திணற வைக்கும் பெயர். இது பற்றி ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன். மநு நூல் ரிக் வேத கால நூல் என்பதற்கு நான் தரும் பல சான்றுகளில் ‘சுமுகன்’ பிரச்சனையும் ஒன்று
5.தண்டனைகள்
மநு, தண்டனை பற்றிக் கூறும் ஸ்லோககங்கள் மிக முக்கியமானவை. தமிழர்களின் கல்வெட்டுகள் மன்னர்களை மநு நீதி வழுவாது ஆண்டவன் என்று போற்றுகின்றன. மநு நீதிச் சோழன் கதையை முன்னரே கொடுத்துவிட்டேன் ஸ்லோகங்கள் 9-31
6. உவமைகள்- மீன், நாய் காகம், நீரில் சிந்திய எண்ணைத் துளி, நீரில் விழுந்த நெய் முதலியன ஸ்லோகங்கள் 20, 21, 33, 34
7. 18 கெட்ட செயல்கள்
அரசர்கள் தவிர்க்க வேண்டிய 18 தீய செயல்கள், குணங்கள்
ஸ்லோகங்கள்-45 -53
8. எண்பேராயம், ஐம்பெருங்குழு
தமிழர்கள் அக்காலத்தில் பஞ்சாயத்து (5), எட்டு அமைச்சர் குழு முதலியன வைத்திருந்தது சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணப்படுகிறது மநுவும் 7 அல்லது 8 அமைச்சர் குழு பற்றிப் பேசுகிறான். வீர சிவாஜி, கிருஷ்ண தேவ ராயர் முதலியோர் எட்டு அமைச்சர் அமைப்பைப் பின்பற்றினர். காண்க ஸ்லோகம் 54
9. பிராமணர்களுக்கு சலுகை
உலகில் இன்று வரை ஒழுக்கம் மிக்கவர்களும் அறிஞர்களும், ஒரு சிறு தவறு செய்தால் மன்னிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிராமணர்களுக்கு தண்டனை விஷயத்தில் மென்மை காட்டும் படி மநுவும் அறிவுரை தருகிறான். அண்மையில் பிரிட்டனில் ஒரு டாக்டருக்கு வழங்கிய தீர்ப்பு, சோவியத் ரஷ்யாவில் அரசை எதிர்த்த அணு விஞ்ஞானி ஷகாரோவுக்குக் கிடைத்த சலுகைகள் முதலியவற்றைப் பல கட்டுரைகளில் பகர்ந்துவிட்டேன். ஸ்லோகம் 38, 82 முதல்
10. தூதர்கள்
உலகில் தூதர்கள், கொடி , சின்னங்கள் ஆகியவற்றை முதலில் கையாண்டது பாரதமே என்பதை சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து விட்டேன். தூதர் நியமனம் பற்றி ஸ்லோகம் 63 முதல் மநு கதைக்கிறார். வள்ளுவனும் தூது (அதிகாரம் 69) என்னும் பொருள் பற்றிப் பத்துகு றள்களில் கதைக்கிறார்.
11. மலை மேல் கோட்டை கட்டுவதில் உள்ள சாதகங்களை மநு எடுத்துரைக்கிறான். இவ்வாறு செய்ததால் ராஜஸ்தானியர்களும், வீர சிவாஜியும் துலுக்கப் படைகளை துவம்ஸம் செய்தனர். வள்ளுவனும் அரண் என்னும் அதிகாரத்தில் இதை ஆராய்கிறார். ஸ்லோகம் 71-75 .
12. தர்ம யுத்தம்
ஸ்லோகம் 90- 98 தர்மயுத்தம் பற்றியவை. அந்தக் காலத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில், ஊருக்கு வெளியே, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே சண்டை போடுவர். பிராமணர்கள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகளை அந்தப் பக்கம் வரக்கூடாது என்று முன் எச்சரிக்கை செய்துவிடுவர். மநுவும் போர் பற்றிப் பேசிவிட்டு போரில் வென்ற பொருள்கள் யாருக்குச் சொந்தம் என்றும் சொல்கிறான். மநு சொல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அரச நீதி முறை பற்றிய ஏழாவது அத்தியாயத்துக்கு ஒன்பது பாஷ்யக் காரர்களும் வழங்கிய வியாக்கியானங்களைப் படிப்போருக்கும் மநு உலக மஹா ஜீனியஸ், (Great genius) மேதாவி என்பது விளங்கும். இதனால்தான் உலகம் முழுதும் இன்று வரை மநுவைப் புகழ்கிறது. 40 Anti-Shudra சூத்திர எதிர்ப்பு ஸ்லோககங்களை மட்டும் வைத்துக்கொண்டு கூத்தடிக்கும் மார்கஸீயங்களுக்கும் திராவிடங்களுக்கும் கரி பூசும் பகுதி இது.
மநு, ஒவ்வொரு அதிகாரத்திலும், மன்னரானாலும், பிராஹ்மணன் ஆனாலும் ஒழுக்கத்தையும், புலன் அடக்கத்தையும் வலியுறுத்துகிறான். காம, க்ரோத, லோபம் கூடாது என்கிறான். அப்படிப்பட்ட ஆட்சி இருந்தால் எவருக்கும் குறைவில.