எகிப்து, கிரீஸ், கனடா, ஜெர்மனி, நார்வே அரசியல் சட்டங்கள்-ஒரு ஒப்பீடு (Post.8327)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8327

Date uploaded in London – – –12 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அரசியல் சட்டம் பற்றிய ஒப்பீடு – நான்காம் கட்டுரை!

இந்தியா, எகிப்து, கிரீஸ், கனடா, ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு

ச.நாகராஜன்

எகிப்து

எகிப்திய நாகரிகம் பழம் பெரும் நாகரிகங்களுள் ஒன்று.

இன்று தன்னை அது அராபிய தேசம் என்று சொல்லிக் கொள்கிறது.

அதன் அரசியல் சட்டத்தின் முன்னுரையில் (1971) அதன் முக்கியக் கொள்கைகள் இப்படி விளக்கப்படுகிறது.

 • We, (that is people of Egypt) believe in its spiritual and immortal heritage.
 • We are responsible for preserving the legacy of history, and pursue future objectives.
 • We in the name of God and with His assistance pledge to perform these responsibilities.
 • We acknowledge God’s right and His messages.

இப்படித் தெளிவாக ஆன்மீக, அழிக்க முடியாத பாரம்பரியத்தில் நம்பிக்கை,

வரலாற்று மரபு ஆகியவற்றைக் காக்கும் கடப்பாட்டில் உள்ள பொறுப்பு, எதிர்காலக் கொள்கைகளை வகுக்கும் பண்பு, கடவுளும் அவன் தரும் துணையும் கொண்டு பொறுப்புகளை நிர்வகிக்கும் உறுதி, கடவுளின் உரிமை மற்றும் அவன் தரும் சந்தேசங்களை நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை அனைத்தையும் அது இப்படிச் சுட்டிக் காட்டுகிறது.

இப்படி உள்ள எகிப்திய பாரம்பரியத்தையும் மீறி மிகப் பழமையைக் கொண்டிருக்கும் நாம் நமது மரபு பற்றியோ இறைவன் பற்றியோ அரசியல் சட்டத்தில் குறிப்பிடவில்லை; அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை!

கிரேக்கம்!

கிரேக்கத்தின் அரசியல் சட்டம் (2001) இப்படி தனது பத்தாம் வரியிலேயே முன்னுரையில் குறிப்பிடுகிறது:-

 • The prevailing religion in Greece is that of the Eastern Orthodox Church of Christ.
 • The Orthodox Church of Greece, acknowledging our Lord Jesus Christ as its head ….
 • The text of the Holy Scripture shall be maintained unaltered.

இப்படி கிரீஸ் ஈஸ்டர்ன் ஆர்தோடாக்ஸ் சர்ச் ஆஃப் கிறிஸ்து மதமே கிரீஸின் மதம் என்றும், யேசு கிறிஸ்துவே தலைவர் என்பதை நன்றியுடன் தெரிவித்தும், புனித நூலை யாரும் மாற்றாமல் அப்படியே இருக்க வைக்கப்படும் என்றும் உறுதி கூறுகிறது!

அயர்லாந்தும் கிரீஸும் இப்படி ஏறத்தாழ ஒரே மாதிரியாக கிறிஸ்தவத்தின் மீதான தமது நம்பிக்கையை அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்துகின்றன.

மேலை நாடுகளை எல்லா விதத்திலும் காப்பி அடிக்கத் துணிந்த நமது தலைவர்கள் கடவுளையும் மதத்தையும் நமது பாரம்பரியத்தையும் அரசியல் சட்டத்தில் “சௌகரியமாக” மறந்து விட்டார்கள்! என்ன அதிசயக் கொடுமை இது!

கனடா, ஜெர்மனி, நார்வே!

கனடா தனது அரசியல் சட்டத்தில் (1982) இப்படி பிரகடனம் செய்கிறது :-

 • Whereas Canada is founded upon the principles that recognize the supremacy of God and the role of law.
 • Everyone has first the fundamental ‘freedom of conscience and religion, (and three others) …

இப்படி இறைவன் மீதான நம்பிக்கையையும் மனச்சாட்சியையும் சட்டத்தின் உரிய பங்கையும் கனடா வறுபுறுத்துகிறது.

ஜெர்மனியோ தனதுஅரசியல் சட்டத்தில் (2010) கூறுகிறது இப்படி:-

அதன் முதல் வரியே இது தான்! ஆரம்பமே கடவுளுடன் தான்!

 • conscious of their responsibility before God ..
 • …freedom to profess a religious shall be guaranteed.
 • The undisturbed practice of religion shall be guaranteed.

இப்படி இறைவன் மீதான நம்பிக்கையையும், மதத்தைக் கடைப்பிடிக்கும் சுதந்திரத்தையும், தொந்தரவில்லாமல் மத வழிபாட்டைக் கடைப்பிடிக்கத் தரும் உறுதியையும் ஜெர்மனி பிரகடனப்படுத்துகிறது.

நார்வே நாடு ஒரு படி மேலே போகிறது.

அதன் அரசியல் சட்டத்தில் (1995) ஒரு தலைப்பே இருக்கிறது இப்படி:

‘Form of Government and Religion’

பின்னர் அது பிரகடனப்படுத்துவது :

 • Right to free exercise of religion
 • The Evangelical- Lutheran religion shall remain the official religion of the State. The inhabitants professing it are bound to bring up their children in the same.
 • The King shall at all times profess the Evangelical – Lutheran religion, and uphold and protect the same.

அதிரடியாக அது அறிவிக்கும் அறிவிப்பில் மதத்தை சுதந்திரமாகக் கடைப்பிடிக்கும் உரிமையை வலியுறுத்துவதோடு, அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற மதமாக இவாஞ்சலிகல்-ல்யூதெர்ன் மதம் இருக்கும் என்று கூறுகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தனது வாரிசுகளை அதே மதத்தில் கடைப்பிடிக்கச் செய்யும் கடப்பாடு பற்றியும் அது வலியுறுத்துகிறது.

மேலும் நாட்டு மன்னன் எப்போதுமே இவாஞ்சலிகல்-ல்யூதெர்ன் மதத்தைக் கடைப்பிடித்து அதைப் பாதுகாப்பார் என்று உறுதி கூறுகிறது.

இப்படி ஒவ்வொரு நாட்டையும் எடுத்து அதன் வரலாற்றின் பின்னணியையும் அதன் மீது அவை எழுப்பிக் கொள்ளும் அரசியல் சட்டமும் தயக்கமின்றி இறைவன் மீதும் தங்கள் தங்கள் மதத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்தியர்களாகிய நாம் சற்று சிந்திக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

சிந்திப்போம்!

tags — எகிப்து, கிரீஸ், கனடா, ஜெர்மனி, நார்வே, அரசியல் சட்டங்கள்

***

இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள் – அரசியல் சட்டங்கள் – ஒப்பீடு -2 (Post No.8262)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8262

Date uploaded in London – – –30 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அரசியல் சட்டம் பற்றிய ஒப்பீடு – இரண்டாம் கட்டுரை!

இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு -2

ச.நாகராஜன்

ஸ்ரீலங்கா

நமக்கு மிக அருகில் இருக்கும் குட்டி நாடு ஸ்ரீ லங்கா. ஒரு குட்டித் தீவு, ஆனால் பழம் பெரும் பாரம்பரியத்தையும் இந்தியாவுடனான நீண்ட நெடுங்கால உறவையும் கொண்டுள்ள ஒரு நாடு அது.

அதன் அரசியல் சட்டத்தின் முகவுரை (Preamble) ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

அதனுடைய தலைப்பு ஸ்வஸ்தி என்பதாகும்.

“பற்பல தலைமுறைகளாக உணர்ந்தறிய முடியாதபடி உள்ள தொடர் பாரம்பரியத்தை (intangible heritage .. for succeeding generations)” அது சுட்டிக் காட்டுகிறது.

தனது மக்களுக்கு “அவர்களின் வீரதீர மற்றும் திருப்பிச் செலுத்த முடியாத போராட்டங்களை நினைவு கூர்ந்து” (while gratefully remembering their heroic and unremitting struggles) செய்ய வேண்டிய கடமையை அது சுட்டிக் காட்டுகிறது.

புத்த மதத்தை முதலிடத்தில் அது வைக்கிறது. அரசு புத்தமதத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்க்கும் என்று அது கூறுகிறது.

ஸ்ரீ லங்காவின் தேசிய கீதம் ஸ்ரீ லங்கா மாதா என்கிறது.

இப்போது நமது அரசியல் சட்டத்தைச் சிறிது பார்ப்போம்.

ஸ்வஸ்தி வாசனம் என்பது இந்தியாவிற்கே உரித்தான ஒன்று.

ஸ்வஸ்தி ஸ்ரீ என்று தான் நமது மன்னர்களின் கல்வெட்டுக்கள் ஆரம்பிக்கும்.

ஓம் என்ற மந்திரம் நமக்கே உரித்தானது.

நமது அரசியல் சட்டத்தின் ஆரம்பமாக ஓம் ஏன் இல்லை? (அல்லது ஸ்வஸ்தி ஸ்ரீ என்று ஏன் ஆரம்பிக்கவில்லை?!)

திருப்பிச் செலுத்த முடியாத, அபாரமான வீரர்களைக் கொண்ட நாடாக ஸ்ரீ லங்கா இருந்து அதன் பழம் பெரும் பாரம்பரியத்தை எவ்வளவு அழகாக அது அரசியல் சட்டத்தின் ஒரு பக்கத்திற்கும் குறைவான முன்னுரையில் நன்றியுடன் நினைவு கூர்கிறது.

நமது அரசியல் சட்டத்தில் நமது பாரம்பரிய மிக்க வீரர்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை.

ரிஷிகள், இராமர், கிருஷ்ணர், அர்ஜுனன், தர்மர், பீஷ்மர் என் அவதார புருஷர்களுக்கும், மகான்களுக்கும், வீரர்களுக்கும் பஞ்சமா என்ன இந்த நாட்டில்?

சந்திரகுப்தன், சாணக்கியன், ராஜ ராஜ சோழன், திருவள்ளுவர் போன்ற அற்புதமான மாமன்னர்களுக்கும், அறிஞர்களுக்கும் பஞ்சமா இந்தியாவில்!

இந்தப் பழம் பெரும் பாரம்பரியமிக்க மகான்களை, அறிஞர்களை, வீரர்களை மா மன்னர்களை ஒரு சொல்லிலாவது  நன்றி கூறி, பாராட்டி அவர் வழி நடப்போம் என்று சொல்லக் கூடாதா?

புத்த மதம் போற்றுவோம், புத்த சாஸனம் போற்றுவோம் என்று சொல்லி விட்டதால் ஸ்ரீ லங்கா பத்தாம் பசலித் தனமான கொள்கை உடைய நாடாக ஆகி விட்டதா, அப்படித்தான் இன்றைய உலகத்தினர் அதை எள்ளி நகையாடுகிறார்களா?

மாபெரும் புத்தர் நாடு என்றல்லவா அதைப் புகழ்கிறார்கள்!

இந்தியாவை எடுத்துக் கொண்டால் வசிஷ்டரிலிருந்து விவேகானந்தர் வரை எத்தனை ஆயிரம் மஹாபுருஷர்கள்!

அவர்களைப் போற்றுவோம் என்று ஒரு சொல் கூட ஏன் இல்லை!

பண்டைய பழம் பெரும் பாரம்பரியம் நமக்கு இல்லையா அல்லது 15, ஆகஸ்ட், 1947இல் தான் திடீரென்று இந்தியா தோன்றியதா?!

நேபாளம்

2007இல் ஒரு இடைக்கால அரசியல் சாஸனத்தை நேபாள் மேற்கொண்டது.

அது ஒரு ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையை, இல்லை, இல்லை, உலகின் ஒரே ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது செகுலர் தேசமாக மாறியது.

ஒரு சுவையான தகவல் என்னவெனில் இந்தியா தவிர செகுலர் என்ற வார்த்தையை அரசியல் சாஸனத்தில் கொண்டுள்ள இன்னும் ஒரு நாடு நேபாளம் தான்! (ஆனால் கடைசியாகக் கிடைக்கும் உறுதியாகாத தகவலின் படி அது மீண்டும் ஒரே ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையைப் பெறலாம்)

என்றாலும் கூட நேபாளம் தேவநாகரியை அது தனது அதிகாரபூர்வமான எழுத்தாக அறிவித்துள்ளது!

அது மட்டுமல்ல, பசுவை தேசீய விலங்காக அது அறிவித்துள்ளதோடு அதைப் போற்றிப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் பாரம்பரியம் மிக்க இலக்கிய வளம் செழித்த சம்ஸ்கிருதம் என்ன ஆனது? கோடானுகோடி ஹிந்துக்கள் காலம் காலமாகப் போற்றி வழிபடும் பசுவைப் போற்றக் கூடாதா, அரசியல் சட்டத்தில்?!

குறைந்த பட்சம் அதன் வதையையாவது தடுக்கக் கூடாதா?

சிந்திக்க வேண்டும்!

***