ஸ்ரீ அரவிந்த ரகசியம்! (Post No.8998)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8998

Date uploaded in London – – 5 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 5 அரவிந்தர் சமாதி தினம்

ஸ்ரீ அரவிந்த ரகசியம்!

ச.நாகராஜன்

1

மிக பிரமாண்டமான தெய்வீக அறிவும் அருளும் ஸ்ரீ அரவிந்தர் உருவில் பூமியில் அவதரித்தது.

அவரது அருளுரைகள், சம்பாஷணைகள் ஆகிய அனைத்தும் நமக்கு உள்ளது உள்ளபடி கிடைத்துள்ளன.

அரவிந்த இலக்கியம் மிகப் பரந்தது. அதை ஆழ்ந்து உன்னிப்பாகக் கற்றால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

அரவிந்தருடன் அன்றாட வாழ்வில் நெருக்கமான சிஷ்யர்களாக பலர் இருந்துள்ளனர்.

நிரோத்பரன், சம்பக்லால்,  நளினி காந்த குப்தா (நளினி தா என்று அனைவராலும் அறியப்படுபவர்), போன்றோர் தங்களின் அனுபவங்களை எழுதி வைத்துள்ளனர்.

அரவிந்தர் அவதரித்த நாள் : 15, ஆகஸ்டு, 1872

அரவிந்தர் சமாதி தினம் : 5, டிசம்பர் 1950

அரவிந்தர் புதுச்சேரியை அடைந்த நாள் 4, ஏப்ரல், 1910

படிக்கத் தெவிட்டாத அரவிந்த இலக்கியத்தைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகளே!

சில துளிகளை இங்கே காண்போம் : உத்வேகம் பெற்று முழுவதையும் படிக்க முனைவதற்காக!

2

ஸ்ரீ அரவிந்தர் :

It is a fact that I was hearing constantly the voice of Vivekananda speaking to me a fortnight in the jail in my solitary meditation and felt his presence.

சிறைச்சாலையில் எனது தனிப்பட்ட தியானத்தின் போது விவேகானந்தரின் குரலை இரு வாரங்கள் தொடர்ந்து நான் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை தான். அவர் என் முன் இருப்பதையும் உணர்ந்தேன்.

3

ஸ்ரீ அரவிந்தர் :

Put yourself with all your heart and all you strength into God’s hands. Make no conditions, ask for nothing, not even for siddhi in the yoga, for nothing at all except that in you and through you His will may be directly performed.

உன்னை முழுமையாக உன் இதயத்துடனும் முழு வலிமையுடனும் கடவுளின் கையில் ஒப்படை. ஒரு நிபந்தனையையும் விதிக்காதே. எதையும் கேட்காதே – யோக சித்தியைக் கூடத் தான்! ஏனெனில் உன் மூலமாகவும் உன்னிலும் அவனது விருப்பம் நேரடியாகவே நடைபெறும்.

4

10, டிசம்பர், 1938

மாலை ஏழு  மணி.

டாக்டர் மணிலால் : நீங்கள் ஏன் பாண்டிச்சேரியை உங்கள் சாதனைக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஸ்ரீ அரவிந்தர் : ஏனெனில் ஒரு கட்டளையினால், ஒரு ஆதேஷினால். இங்கு வருமாறு ஒரு குரலினால் கட்டளையிடப்பட்டேன்.

16/17 டிசம்பர் 1938

நிரோத்பரன் : அன்றொருநாள் நாம் கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் வேதத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினீர்கள். வேதம் மற்றும் உபநிடத மந்திரங்கள் எப்படி இயற்றப்பட்டன என்பதை அறிய நான் விரும்புகிறேன். உண்மையாகவே அவை ரிஷிகளால் கேட்கப்பட்டது போலத் தோன்றுகிறது. உள்முகமாக கேட்கப்பட்டவையா அவை?

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், அவை உள்ளிருந்து கேட்கப்பட்டவையே. சில சமயம் ஒரு வரியோ அல்லது ஒரு பகுதியோ அல்லது ஒரு முழுக் கவிதையோ ஒருவரால் கேட்கப்படுகிறது. சில சமயம் அவை தானாகவே வருகின்றன. மிகச் சிறந்த கவிதை அப்படித்தான் எப்போதுமே எழுதப்படுகிறது.

20, டிசம்பர் 1938

டாக்டர் சவூர் (DR Savoor) :சில யோகிகள் உடலில் ஏற்படும் வலியையும் கஷ்டத்தையும் போக்க, அதிலிருந்து விடுபட, சமாதி நிலைக்குச் செல்கிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ அப்படிச் செய்யாமல் வலியைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.

நிரோத்பரன் : ராமகிருஷ்ண(பரமஹம்ஸர்) அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்.

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், யோகிகள் சமாதி நிலையை எய்தி சம்ஸ்காரத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம்.  ஆனால் வலியிலிருந்து நிவாரணம் பெற ஒருவர் சமாதிக்குச் செல்வதால் என்ன பயன் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக, ஒருவர் வியாதியைப் பொறுத்துக் கொள்ள நினைத்தால் அது அதை ஒருவிதமாக ஏற்றுக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு முறை மிகத் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட போது ராமக்ருஷ்ணர் கேசவ சேனரிடம் தனது உடல் ஆன்மீக முன்னேற்றத்தின் அழுத்தத்தினால் உடைந்து போகிறது என்றார். ஆனால் ஆன்மீக முன்னேற்றமானது எல்லா சமயத்திலுமே வியாதியில் கொண்டு விடும் என்பதில்லை.

நிரோத்பரன் : ராமகிருஷ்ணர் நினைத்திருந்தால் அவர் வியாதியைத் தடுத்திருக்கலாம், இல்லையா?

ஸ்ரீ அரவிந்தர்: ஆம், ஆனால் அவர் தனது இச்சையை உபயோகிப்பதிலோ  அல்லது வியாதி குணமாக தெய்வீக சக்தியிடம் பிரார்த்தனை செய்வதிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

நிரோத்பரன்: அவர் தனது சீடர்களின் பாவத்தினால் (sins) தான் கான்ஸர் நோயை அடைந்தார் என்று கூறப்படுகிறதே.

ஸ்ரீ அரவிந்தர் : அதை அவரே சொல்லி இருக்கிறார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். சீடர்களின் விஷயங்களை குரு தான் ஏற்க வேண்டும்.

(சம்பாஷணை நீண்டு தொடர்கிறது)

7

இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் பற்றி அரவிந்தரிடம் அணுக்கத் தொண்டர்கள் பேசி தெளிவு பெற்றிருக்கின்றனர்.

அனைத்தையும் நிதானமாகப் படித்தால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதோடு உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களையும் அறியலாம்; சில புரியாத புதிர்களுக்கு விடைகளையும் காணலாம்.

அரவிந்தரைக் கற்போமாக; ஆன்ம உயர்வு பெறுவோமாக!

***

ஆதாரம் : அரவிந்த இலக்கியத்தில் பல நூல்கள்

1.Reminiscences and Anecdote of Sri Aurobindo my M.P.Pandit

2.Prayer and Mantra Published by Sri Aurobindo Society, Pondicherry -2

3. The Incarnate World – Talks with Sri Aurobindo – Nirodbaran

tags– அரவிந்த ரகசியம், அரவிந்தர்

அரவிந்த ரகசியம் (Post No.3001)

 

aravindarArticle Written by S NAGARAJAN
Date: 23 July 2016
Post No. 2996
Time uploaded in London :– 6-32 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அரவிந்த இரகசியம் – கடவுளரின் அர்த்தங்கள்!
ச.நாகராஜன்

நம் கண் முன்னாலேயே வாழ்ந்து உலகை உயர்த்திய மகான்கள் ஏராளம்.
மஹாத்மா காந்தி
ஸ்ரீ சத்ய சாயிபாபா
அரவிந்தர்
அன்னை
இப்படி பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்களில் அரவிந்தர் புதிய ஒரு பொன்னான உலகத்தை சிருஷ்டிக்கத் தன்னை அர்ப்பணித்தார்.
இவரது அனுபவங்களும் அறிவுரைகளும் பொக்கிஷம் போல அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன.
ஆனால் அவை ஒரு பிருஹத் ஆரண்யத்தில் புகுவது போல.
பெரிய காட்டில் எது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியாது அல்லவா.
நல்ல வேளையாக அறிஞர்கள் பலர் அதில் சில முத்துக்களை இனம் கண்டு நமக்குச் சிறு சிறு கட்டுரைகளாகத் தந்துள்ள்னர். இன்னும் சிலரோ அவரது உரைகளில் முக்கியமானவற்றைத் தனியே பிரித்துத் தொகுத்துத் தந்துள்ளனர்.
இவற்றில் ‘A Practical Gudie to Integral Yoga’ என்ற நூல் அருமையான தொகுப்பு நூல். அதில் பல இரகசியங்கள் விளக்கப்பட்டுள்ளன.
கடவுளரின் அர்த்தங்களை அவரும் அன்னையும் (அரவிந்த ஆசிரம அன்னை) தெளிவாகக் கூறுகின்றனர்.

 

ஒரு பிரம்மாண்டமான மஹா சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகிறது. அதுவே ஆத்ய சக்தி.
பிரபஞ்ச இறைத்தன்மையின் மூன்று பெரும் சக்திகள் மற்றும் ஆளுமை கொண்டவர்களே பிரம்மா,விஷ்ணு, சிவன்.
உருவாக்கம், படைப்புக்குப் பின்னால் இருப்பவர் பிரம்மா.
படைப்பவர் விஷ்ணு
தவத்திற்கு சிவன்
தெய்வீக சக்தியே தேவி
சிங்கத்துடன் கூடிய துர்க்கையே தெய்வீக பிரக்ஞை
மஹாகாளி உயரிய மட்டத்தில் உள்ளவள். தங்க மயமாக ஜொலிப்பவள்.
கடவுளர் தெய்வீகப் பணிகளை ஆற்றுபவர்கள்.
விக்கினங்களை நீக்க கணேசர்.
வெற்றியைத் தர முருகன்.
பக்திக்கு ஹனுமான்.
தெய்வீக அன்புக்கு ஸ்ரீ கிருஷ்ணர்
முழு அன்புமயத்திற்கு ராதை.
இதை உணர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம். அரவிந்தரும் அன்னையும் கூறும் இரகசியத்தை ஆங்கிலத்தில் பார்ப்போம்:

 

IMG_3089
SYMBOLIC MEANING OF GODS
ADYA SHAKTI – Is the original Shakti, therefore, the highest form of the Mother
Brahma, Vishnu, Shiva – Are only three powers and personalities of the one Cosmic Godhead.
Brahma – Is the power of the Divine that stands behind formation and creation
Vishnu – Being the creator, all the three gods are often spoken of as creating the universe – even Shiva who is by tradition the Destroyer.
Shiva – is theLord of Tapas. The Power is the power of Tapas.
Devi – Is the Divine Shakti – the Consciousness and Power of the Divine, the Mother and Energy of the worlds.
Durga – The lion with Durga on it is the symbol of the Divine Consciousness acting through a divinized physical-vital and Vital-emotional force.
Kali and Mahakali – Are not the same. Kali is a lesser form. Mahakali in the higher planes appears usually with golden colour.
Gods – Are the powers that stand above the world and transmit the divine workings.
Ganesh – Is the power that removes obstacles by the force of Knowledge. He is a god of spiritual Knowledge.
Hanuman – Perfect Bhakti
Kartikeya – Represents victory over the hostile powers. He is also the leader of the divine forces.
Sri Krishna – Is the Lord of divine love and ananda – and his flute calls the physical being to awake out of the attachments of the physical world and turn to that love and ananda.
Radha – Is the personification of the absolute love for the Divine, total and integral in all parts of the being from the highest spiritual to the physical, bringing the absolute self-giving and total consecration of all the being and calling down into the body and the most material nature the supreme Ananda.

அரவிந்தர் நூல்களில் பொதிந்து கிடக்கும் ஏராளமான இரகசியங்களை அறிந்தால் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடைய முடியும்!
******