

Post No. 9795
Date uploaded in London – 30 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்
நாற்பது நகைச்சுவை நாடகங்களை 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி ‘நகைச் சுவை நாடகங்களின் தந்தை என்ற புகழுரை பெற்றவர் (Aristophanes) அரிஸ்டோபனிஸ் . ஆயினும் சாக்ரடீஸைக் குறை சொல்லி அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்ற இகழுரையும் இவருக்குண்டு. இவர் எழுதிய ஒரு கிண்டல் நாடகம் தவளைகள் பற்றியது . அதை கம்ப ராமாயண, ரிக்வேதத் தவளைப்பாட்டுட ன் ஒப்பிட்டு முன்னரே எழுதினேன் இணைப்பை கட்டுரையின் இறுதியில் காண்க
பிறந்த ஆண்டு- கி.மு.450
இறந்த ஆண்டு – கி.மு.385

இன்றைய தினம் நாம் டெலிவிஷனிலும் திரைப்படங்களிலும் நிறைய முழு நீள நகைச் சுவைப் படங்களை பார்க்கிறோம். இவைகளுக்கு வித்திட்டவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அரிஸ்டோபனீஸ் ஆவார். சம்ஸ்க்ருத நாடகங்களில் பிராமணர்களுக்கு விதூஷகன் (comedian) என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தைக் கொடுப்பது 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்திய வழக்கம். காளிதாசனின் நாடகங்களில் இதைக்காணலாம். ஆகையால்தான் தற்கால திரைப்படங்களிலும் பிராமணரைக் கொண்டு பிராமணர்களைக் கிண்டல், கேலி, நக்கல், பகடி செய்யும் காட்சிகள் இடம்பெறுகின்றன.ஆனால் கிரேக்க நாட்டில் முழு நீள காமெடிக்கள் (comedies) இருந்தன. சம்ஸ்க்ருதம் போல எல்லா நாடகங்களிலும் விதூஷகன் என்னும் கதாபாத்திரம் இருந்ததாக, அதுவும் ஜாதி அடிப்படையிலான நகைச் சுவை நடிகர் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியத்திலும் கூட பிராமணர்தான் பிராமணர்களைக் கிண்டல் அடிக்கமுடியும். இதைக் கபிலர் என்னும் புலவர் செய்கிறார். காண்க- குறிஞ்சிக் கலி , கலித்தொகை.
அரிஸ்டோபனிஸ் எழுதிய சுமார் 40 நாடகங்களில் நமக்கு இப்போது 11 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஒன்று ‘மேகங்கள்’ (The Clouds) என்ற நாடகம் ஆகும். இதுதான் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ (Plato) குற்றம்சாட்டுகிறார்.
அரிஸ்டோபனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரமான ஏதன்ஸில் பிறந்தார். இருபது வயதுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம், கிரேக்க நாட்டில் எல்லாத் துறைகளிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்த காலம் ஆகும் .அப்போது (Athens) ஏதென்ஸ் நகரம் அதன் பரம வைரியான ஸ்பார்ட்டா (Sparta) நகர அரசு மீது போர் தொடுத்தது. இந்தப் போர் 27 ஆண்டுகளுக்கு நீடித்தது.
இந்தப் போரில் மகத்தான ஏதென்ஸ் நகர அரசு தோல்வி அடைந்தது. இதனால் புகழோங்கிய கிரேக்க கலாசாரம் ஆட்டம் கண்டது. நாட்டில் அராஜகம் நிலவியது. ‘அ+ராஜகம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். ஆள்பவன் வலுவாக இல்லாவிடில் ‘தடி டுத்தவன் எல்லாம் தண்டல் நாயகம்’ ஆகிவிடுவான். இப்படி ஒரு நிலை ஏதன்ஸில் ஏற்படவே சர்வாதிகாரிகள் ஆட்சி உண்டாகியது . தன்னைச் சுற்றி ஏற்படும் நிகழ்ச்சிகளை நாடகமாக வடித்தார் அரிஸ்டோபனிஸ்; அவர் எழுதிய நாடகங்களில் அரசியல்வாதியை முட்டாளாகவும் சாதாரண குடிமகனை அறிவாளியாகவும் சித்தரித்தார். அதாவது சாதராணக் குடிமகன் அரசியல் தலைவர்களைத் தோற்கடித்து விடுவான்.தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும் குறை சொன்னார். எல்லா இடங்களிலும் நிலவிய ஊழலை எடுத்துக் காட்டினார். இரு பொருள்படும்படி (Satires) அங்கதங்களை இயற்றினார். இதில் அவர் மஹா மேதையான சாக்ரடீஸையும் விடவில்லை. சாக்ரடீஸுக்கு எதிரான குற்றம்சாட்டிய ஏதென்ஸ் அரசு அரிட்டாபனீசின் வசனங்களையும் பயன்படுத்தியது. சாக்ரடீசை அவர் பைத்தியக்காரன் என்றும் அவர் கிரேக்க (Greece) நாட்டில் விஷ- விஷமக் கருத்துக்களை வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் சாக்ரடீஸ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .
ராமன் பெயர் உள்ளவரை ராவணன் பெயரும் இருக்கும். சாக்ரடீஸ் பெயர் உள்ளவரை அரிஸ்டோபனிஸ் பெயரும் நீடிக்கும்.

Publications
The Acharnians
The Knights
The Clouds
The Wasps
The Peace
The Birds
Lysistrata
Thesmophoriazusae
The Frogs
Plutus
xxxxxxxxxxxxxxxxx
ரிக்வேதத்திலும் கம்ப … – Tamil and Vedas
https://tamilandvedas.com › ரிக்…
15 Dec 2016 — ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! … ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் பாடிய தவளைப் …
அரிஸ்டோபனிஸ் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
8 Aug 2017 — Written by London Swaminathan. Date: 8 August 2017. Time uploaded in London- 20-46. Post No. 4140. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks …
Aristophanes | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › aristophanes
15 Dec 2016 — Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies …
Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …
https://tamilandvedas.com › 2016/12/15 › aristophanes-…
15 Dec 2016 — 3452) | Tamil and Vedas …
Posts about Fish God on Tamil and Vedas | Ancient sumerian …
https://www.pinterest.es › pin
Jun 5, 2016 – Posts about Fish God written by Tamil and Vedas. … In Plato’s Symposium (189–190 AD), Aristophanes displays knowledge of an ancient myth of …
Tags- அரிஸ்டோபனிஸ் , கிரேக்க , நாடகங்கள், நகைச்சுவை ,



