மூன்று புதிர், குட்டி போட்டு, 4 ஆன கதை!(Post.9242)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9242

Date uploaded in London – –8 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கட்டுரையை எழுதியவர் ஞானமயம் ப்ரொட்யூஸர் லண்டன் சுவாமிநாதன்

வாசிப்பவர் வைஷ்ணவி ஆனந்த் (Gnanamayam Broadcast on 7-2-2021)

அருணகிரி நாதர் 3 விடுகதை போட்டார் ;அது நான்கு ஆன

சுவையான கதை இதோ !

சில வாரங்களுக்கு முன்னர் இதே அரங்கத்தில் அருணகிரிநாதர், பாடிய திருப்புகழில் , அவர் போட்ட மூன்று விடுகதைகளை  உங்களுக்கு வழங்கினோம். அந்த 3 விடுகதைகளில் ஒன்றை  விடுவிக்க நமது ப்ரொட்யூசர் திரு கல்யாண சுந்தர சிவாசார்யார் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை எனக்கு அனுப்பினார் . அது புதிரை விடுவிக்காமல் நாலாவது புதிரை — விடுகதையை – உருவாக்கிவிட்டது . இதோ 4 புதிர்களையும் கேளுங்கள்; விடை கிடைத்தால் எமக்கு எழுதுங்கள் அல்லது ஆடியோ, வீடியோ பதிவுகளில் பேசி அனுப்புங்கள்

இதோ 4 புதிர்கள் 

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை முந்தைய எட்டு கட்டுரைகளில் கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

  1. திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.
  1. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.
  1. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?

மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

மாங்கனியா? மாதுளங்கனியா?

திருவிளையாடல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு முருகன் – பிள்ளையார் இடையே நடந்த போட்டி தெரியும். கலகம் செய்வதையே பொழுது போக்காகக் கொண்ட நாரத மாமுனிவன் ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து அதை வெட்டாமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். உலகம் சுற்றும் வாலிபனுக்கே அந்தப் பழம் என்று போட்டி வைக்க, முருகன் மயில் மீது பறந்து சென்றார். கெட்டிக் கார பிள்ளையார் அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவந்து உலகத்தையே சுற்றிவிட்டதாகச் சொல்லி பழத்தை வென்றார்., முருகன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறினார். ஆனால் அது மாம்பழக் கதை. அருணகிரிநாதர் சொல்வதோ மாதுளம்பழம். இது புதுக் கதையா? பழைய கதையில் செய்யப்பட்ட ஒரு சிறிய மாற்றமா?

இதோ மாதுளங் கனி திருப்புகழ்:

உவகாரியன்பர்பணி கலியாணி எந்தை இடம்

முறைநாய கங்கவுரி             சிவகாமி

ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை

ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா

Xxxxx

இப்போது புதிய புதிர் – விடுகதை என்ன என்று காண்போம்.

மாதுளம் பழம் என்று சம்ஸ்க்ருதத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தை அனுப்பி இதில் விடை கிடைக்குமா என்று பாருங்கள் என்று திரு கல்யாண சுந்தர சிவாசார்யார்  அனுப்பியிருந்தார். அது சிவ ரஹஸ்யம் என்னும் புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. மிகவும் ஆவலுடன் ஒரு கட்டுரை தீட்டுவதற்குத் தயாரானேன். அப்பொழுது மாதுளம் பழம் என்பதற்கு சம்ஸ்க்ருத அகராதியில்  பொருளைக் கண்டுபிடிக்கத்  திருப்பினேன். பச்சை எலுமிச்சம் பழம் என்று போட்டிருந்தது . பின்னர் நாம் மாதுளம்பழம் என்று சொல்லும் பழத்துக்கு என்ன பெயர் என்று பார்த்தால் தாடிம  (Dadima) என்று போட்டிருக்கிறது. இன்றும் வட இந்திய மொழிகளில் மாதுளம் பழத்தை — அதாவது POMEGRANATE போம்கிரனேட்  என்று — ஆங்கிலத்தில் சொல்லும் பழத்தை – தாடிம என்றே  அழைக்கின்றனர். ஹிந்தியில் அனார் (ANAR) என்றும் சொல்லுவார்கள்

நமது தமிழ் அகராதிகளில் என்னிடம் உள்ள பழைய அகராதி 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி ஆகும் .அதில் மாதுளம் பழத்துக்கு வேறு பொருள் உண்டோ என்று கண்டேன்.

தமிழில் மாதுளம் பழத்துக்கு இன்று நாம் சொல்லும் பொருளே உளது. இன்னொரு பெயர் மாதளை என்றும் உளது. சிறிது ள – கரத்தை மாற்றி மாதுல — என்று சொன்னால் ஊமத்தை என்றும் பொருள் உள்ளது. இவை எதுவும் நம்முடைய புதிருக்கு விடை சொல்ல வில்லை .

XXX

திரு கல்யாண சுந்தர சிவாசார்யார்  அனுப்பிய

हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको

ஹேமாத்ரி கில மாதுலுங்க பல மித்யாதாய  மோதாதிகோ

என்று துவங்கும் அந்த ஸ்லோகத்தில் முதல் வரியில் வரும் ‘மாதுலுங்க பல’ என்பதற்கு எலுமிச்சை என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்லும் . இந்த வரியின் மொத்த பொருள்:–

 மேரு மலையையே எலுமிச்சம் பழம் போல கையில் தூக்கும் கணபதியே – என்பதாகும் பின்னர் வரும் வரிகளில் ஜம்பு பழத்தையும் — அதாவது  நாவல் பழத்தையும் குறிப்பிட்டு– அத்தகைய கணபதி என்னைக் காப்பாற்றுவாராக என்று முடிகிறது

XXXX

கடைசியில் எஞ்சி நிற்கும் கேள்விகள் ………………………

அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியது போல பிள்ளையார் கையில் ‘மாதுளம் பழம் இருந்ததா? மாம்பழம் இருந்ததா?

அந்த மாதுளம் என்பது தாடிம, அனார் , POMEGRANATE போம்க்ரனேட் என்னும் பழமா சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில்  வரும் மாதுலுங்கம் அதாவது எலுமிச்சசையா ?

அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் கூட மாதுளம் பூ  நிறத்தாளை என்று அம்பிகையைப் பாடுகையில்  நாம் அறிந்த மாதுளம் பழத்தின் செந்நிறப் பூ தான்,  நம் மனக்கண் முன் வரும்

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

ஆக புதிருக்கு மேல் புதிர்!!!!

கட்டுரையை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

வாசித்தவர் வைஷ்ணவி ஆனந்த்

XXX

FOR REFERENCE ONLY ………………….

हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको
मौढयान्नाकनिवासिनां भयपरैर्वाक्यैरिव प्रार्थितः ।
नीलीशम्बरनीलमम्बरतलं जम्बूफलं भावयन्
तं मुच्ञन् गिरिमम्बरं परिमृशन् लम्बोदरः पातु मा

May the Lord Ganapati who joyously holds the Mount Meru as if it were berry (CITRON FRUIT) fruit ,who then pleaded by the frightened by celestial beings lets go of only to capture the blue expanse of the sky taking it to be like a jambu fruit -May that lord Ganapati with huge belly protect me


This sloka proclaim god by his Maya sakti can hold up all natural matters within him including smallest to biggest thing

FOR MATULUNGA PALA, PLEASE SEE WISDOMLIB.ORG DICTIONARY

Sanskrit dictionary

[«previous (M) next»] — Matulunga in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Mātuluṅga (मातुलुङ्ग).—A kind of citron tree; (bhuvo) भागाः प्रेङ्खितमातुलुङ्गवृतयः प्रेयो विधास्यन्ति वाम् (bhāgā prekhitamātulugavtaya preyo vidhāsyanti vām) Māl.6.19.

-gam The fruit of this tree, a citron.

Derivable forms: mātuluga (मातुलुङ्गः).

See also (synonyms): mātuliga.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Mātuluṅga (मातुलुङ्ग).—m.

(ga) Common citron. f.

(gā) The sweet lime. E. See the next.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Mātuluṅga (मातुलुङ्ग).—v. mātulaga.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Mātuluṅga (मातुलुङ्ग):—[from mātulaga] m. and n. = [preceding] m. and n., [Suśruta]

2) Mātuluṅgā (मातुलुङ्गा):—[from mātuluga > mātulaga] f. another species of citron tree, sweet lime, [ib.]

[Sanskrit to German] (Deutsch Wörterbuch)

XXXX SUBHAM XXXXX

tags–மூன்று புதிர், மாதுளம் பழம், அருணகிரி நாதர், திருப்புகழ்:

குண்டர்கள் யார்??? (Post No.9196)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9196

Date uploaded in London – – 28 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தினசரி பேப்பரில் தவறாமல் வரும் செய்தி________என்பவர் குண்டர்

தடைசட்டதின் கீழ் கைது செய்யப்பட்டார், என்ற செய்தி நிறைய வருவதைப் பார்க்கலாம்.

குண்டர்= hooligan, gangster, goon (in American English)

குண்டர் சட்டம் என்றால் என்ன???

குண்டர்கள் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர் “தமிழ்நாடு கள்ளச் சாரயம் காய்ச்சுவோர், போதைப்

பொருள் குற்றவாளிகள்,குண்டர்கள்பாலியல் தொழில் குற்றவாளிகள்குடிசைப்பகுதி நிலங்களை அபகரிப்போர்,மணல்

திருட்டுவீடியோ குற்றவாளிகளின் அபகாரசெயல் தடுப்பு சட்டம்”

“குண்டர்கள்” என்ற்வரையரையை விளக்கும்போது இந்திய குற்ற

இயல்்சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும்

குற்றம் எதையாவது செய்யக் கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் எனக் கருதினாலே இக்குற்றத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.அதாவது ஒருவர் குற்றத்தை புரிவதற்கு முன்பே அதை தடுப்பதற்காக, கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தை

சேர்ந்தது இந்த குண்டர்கள் சட்டம்!!!

இதில் முக்கிய விஷயங்கள் என்னவென்றால்

கைது செய்யப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் வாதிடக் கூடாது. கைது செய்யப்பட்ட நபரோ, அவரது நண்பரோ, உறவினரோதான் வாதிட முடியும்.

நீதி மன்றத்தில் இது விசாரிக்கப்பட மாட்டாது.

கைது செய்யப்பட்டவர் முறையீட்டுக் குழுவைத்தான் அணுக வேண்டும்.இந்தக் குழு , ஓர் உயர் நீதி மன்ற நீதிபதி,ஒரு அமர்வு நீதிபதி,ஒர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோரைக்கொண்ட ஒரு விசாரணைகுழு ஆகும்

இக்குழுவினால் குற்றம் உறுதி செய்யப் பட்டால் அந்த நபரை 12 மாதம் சிறையில் வைக்கலாம்

மாநில அரசு விரும்பினால், முன் கூட்டியே விடுவிக்கலாம்.

சரி வாருங்கள் வஷயத்திற்கு வருவோம்.

Xxxxx

நமக்கென்றே கடவுளிடம் வாதாட “பெட்டிஷன்கள்” போட திருப்புகழ்

மூலமாக , “பெட்டிஷன் திலகம்” அருணகிரி நாதர் , யார், யார்

“குண்டர்கள்” என்று “டெஃபனிஷன்” DEFINITION செய்திருக்கிறார்.

அவர்கள் யார் யார் என்று பார்போமா????

குண்டர்கள் யார்???

தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள்

ஒருவரிடம் நண்பர் போல் நடித்து, பின்னர் அவருக்கு துரோகம் செய்யும் கீழோர்,

ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்

போதித்த நன்றியை மறந்த கீழோர்.

சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள்

அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களை செய்யாமல் கை விட்டோர்.

பெரியோரை தூஷனண பகர்ந்த குண்டர்கள்

பெரியோர்களை திட்டி, வைது, அவர்களை நிந்தித்து, கேவலப்

படுத்தியவர்கள்.

ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்

மற்றவருக்கு கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்தவர்கள்

சூளுற வென்ப தொழிந்த குண்டரகள்

சத்திய வார்த்தை என்பதையே ஒழித்தவர்கள்.

தொலையாமல் வாழ நினைந்து வருந்து குண்டர்கள்

எப்போதும் தான் அழியாமல் நீண்ட காலம் வாழ நினைத்து

அதற்காக வருந்துவோர்.

நீதியறங்கள் சிதைந்த குண்டர்கள்

நீதியையும் தர்மத்தையும் அழித்தவர்கள்.

மானவகந்தை மிகுந்த குண்டர்கள்

குற்றமும் , ஆணவமும், அகந்தையையும், மிகுந்த கீழோர்.

வலையாலே மாயையில் நின்று வருந்து குண்டர்கள்

பாச வலையிலும், உலக மாயையிலும் சிக்கி வருத்தப்

கொண்டிருப்போர்

தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்

தெய்வங்களின் சொத்துக்களை அபகரித்த கீழ் நிலையோர்

இதோ, வாக்குச் சித்தர் அருண கிரியாரின் வாய் மொழியைக் கேளுங்கள்.

பாடல் பெற்ற ஸ்தலம் கோடைநகர்- இன்றைய பெயர் சென்னை

அருகிலுள்ள வல்லக் கோட்டை

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டரகள்,

ஓதிய நன்றஇ மறந்த குண்டர்கள………..

இப்போது சொல்லுங்கள் யார் குண்டர்கள்???

நம்மில் பலர்

விசாரணைக் குழு

யமனும், சித்திர குப்தனும்

என்ன தண்டனை???

வாதை நமன்தன் வருந்திடும் குழி விழுவாரே!

வேதனை மிகுந்த யமனுடைய நரகக் குழியில் விழுந்து மிக மிக

வருந்தி கஷ்டப்படுவார்கள்.

கோழிக்கொடியோன் அடி பணியாமல் குவலயத்தே

வாழக்கருதும் மதியிலிகாள்மனம் திரும்புங்கள்,

அல்லவை கடிமின், நல்லவை செய்மின்!!!

— subham—

அருணகிரி நாதர், குண்டர்கள், குண்டர் சட்டம்

அருணகிரிநாதர் சொன்ன பெண் பூதம் பற்றிய கதை (Post No 2944)

thiruvilayadal006

Written by London swaminathan

 

Date: 5 July 2016

Post No. 2944

Time uploaded in London :– 8-12 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

thiruvilayadal_torment

திருவிளையாடல் புராணத்திலுள்ள தருமி என்ற பிராமணப் புலவன் கதையும் நக்கீரன் என்ற சங்கப் புலவர் சிவனுடன் மோதிய கதையும் எல்லோரும் அறிந்ததே. தருமி என்ற புலவனுக்கு சிவபெருமானே பாட்டு எழுதிக் கொடுத்தார். அதில் நக்கீரர் பிழை கண்டார். சிவனே அவர் முன் தோன்றி என்ன பிழை? என்று கேட்டார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியது. சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். நக்கீரனோ நெற்றிக்க ண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சாடவே, நக்கீரன் உடல் எரிந்து நோய் ஏற்பட்டது.

 

இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பர், தனது தேவார பதிகத்தில் பாடிவைத்துள்ளார்.

 

 

இதற்குப்பின் என்ன நடந்தது?

 

அந்தக் கதையை அருணகிரி நாதர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலில் சொல்கிறார்:-

 

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி

அபயமிட  அஞ்சலென் றங்கீரனுக் குதவி

–பூத-வேதாள வகுப்பு

 

பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இக்கதை மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

கற்கிமுகி என்ற பூதம் சிவபூஜையில் தவறு செய்த 999 பேரை பிடித்து ஒரு குகையில் வைத்திருந்தது. யாராவது ஒருவர் சிவ பூஜையின் போது கவனத்தை இழந்து மனதை வேறுபக்கம் செலுத்தினால் அந்தப் பூதம் பிடித்துவிடும். ஆயிரம் பேரைப் பிடித்தவுடன் அனைவரையும் சாப்பிட அந்த பூதம் திட்டமிட்டிருந்தது.

 

நக்கீரர், தன் உடலில் தோன்றிய நோய் அகல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். இவரைச் சோதிக்க விரும்பினார் சிவன்.

 

நக்கீரர் தவம் செய்த இடத்திலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. இலையின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி கரையிலும் இருந்தது. நீரிலுள்ள  பாதி மீனாகவும் தரையிலிருந்த பாதி பறவையாகவும் காட்சிதந்தது. இது நக்கீரருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆதைக் கவனித்ததால், சிவ பூஜையிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது. காத்துக் கொண்டிருந்த கற்கிமுகி பூதம், நக்கீரரைக் கவ்விப் பிடித்து குகைச் சிறையில் அடைத்தது. அவரைப்  பார்த்தவுடன், அங்கிருந்த 999 சிறைக்கைதிகளும் ஓவென்று கதறினர். காரணத்தை வினவியபோது நக்கீரர்தான் ஆயிரமாவது ஆள் என்றும், ஆயிரம் பேர் வந்தவுடன் சாப்பிடப் போவதாகப்  பூதம் சொன்னது என்றும் கூறினர்.

 

உடனே நக்கீரர், அஞ்சற்க, நான் என் பிரார்த்தனையின் மூலம் உங்களை விடுவிப்பேன் என்று சொல்லி இறைவனைத் துதித்தார். அப்பொழுது அவர் முருகன் மீது பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலாகும்.

nakkirar 1

இந்த நேரத்தில் , வெளியே குளிக்கச் சென்ற கற்கிமுகி பூதம் திரும்பிவந்தது. முருகனைத் துதித்த நக்கீரர், ஒரு இலையை அதன்மீது தூக்கி எறிந்தார். அது வேலாக உருமாறி பூதத்தை வதைத்தது.

 

இந்த நிகழ்ச்சி மதுரை அருகிலுள்ள திருப்பறங்குன்றத்தில் நடந்ததாக ஐதீகம்.

 

–சுபம்–