
Post No.7935
Date uploaded in London – 7 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சில புஸ்தகங்களில் இருந்து தொகுத்த தகவல்கள் — பெரும்பாலும் புகப்பெற்ற நடுநிலை அறிஞர் கமில் ஸ்வெலிபில் (Czech Tamil Scholar Kamil Zvelebil 1927-2009, author of The Smile of Murugan) கூறியது —
சங்க இலக்கிய காலம் – கி.பி.2-ம் நூற்றாண்டு
சங்க இலக்கிய புலவர் பரணர் – கி.பி.150ஐ ஒட்டி வாழ்ந்தவர்;
முதலாவது நக்கீரர் – கி.பி.250
இரண்டாவது நக்கீரர் – எட்டாம் நூற்றாண்டு
மூன்றாவது நக்கீரர் – பதினோராம் திருமுறை கூறும் நக்கீரதேவ நாயனார்.
ஒரு வேளை ஐந்து நக்கீரர்கள் இருந்திருக்கலாம் என்று கமில் ஸ்வெலிபில் செப்புகிறார்.
முதல் கபிலர் – தொல் கபிலர் – அகம் 282 பாடல் –
இரண்டாம் கபிலர் – சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய பார்ப்பனன்; ஜாதி வெறியை உடைத்தெறிந்த முதல் புரட்சி வீரன்; பாரி மகளிர் அங்கவை, சங்கவை இருவரையும் தன் மக்கள் போல் கா ப்பா ற்றிய சத்திய சந்தன் ; புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று அதிகமான சங்கப் புலவர்களால் துதிக்கப்பட்ட பிராஹ்மணன் – பரணர் காலத்தில் – கி.பி. 150-ஐ ஒட்டி வாழ்ந்த சத்யா பராக்ரமன்.
மூன்றாவது கபிலர் – பதினோராம் திருமுறையில் உள்ள கபில தேவ நாயனார் ; பிரமணர்களைக் குறைகூறும் கபிலர் அகவல் இயற்றியவர்.
முதல் ஔவையார் – சங்கப் புலவர் ; அதியமான் நண்பர் ; சத்ய புத்திரர் என்பதன் தமிழாக்கம் அதியமான்
இரண்டாம் ஔவையார் – சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் காலத்தவர் – ஒன்பதாம் அல்லது எட்டாம் நூற்றாண்டு.
மூன்றாம் ஔவையார் – தனிப்பாடல் தொகுப்பில் வரும் பெண்மணி; நீ தி நூல்களை இயற்றியவர்.
மொத்தம் ஆறு ஔவையார்கள் இருந்ததாக தற்கால ஆராய்ச்சி நூல் ஒன்று சொல்லும். இவர்களில் நாலாவது ஔவையார் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.
***

சேரன் செங்குட்டுவன் – கிபி. 170- 225
மதுரை நகரத்தை கண்ணகி எரித்த ஆண்டு – கி.பி.171
சிலப்பதிகார காலம் – கி.பி.756; பரி பாடல் காலம் கி.பி 634 என்று சுவாமிக்கண்ணு பிள்ளை வானியல் குறிப்புகளைக் கொண்டு கணித்துள்ளார்
***
பத்துப் பாட்டும் தெரியாது; எட்டுத் தொகையும் தெரியாது;
இன்று நாம் சங்க காலத்திய 18 நூல்களை பத்துப் பாட்டு , எட்டுத் தொகை என்று பிரித்துள்ளோம்.
ஆனால் இவையெல்லாம் பிற்காலப் பாகுபாடு .
உரை ஆசிரியர்களில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர் கூட இதைக் குறிப்பிடாது நூலின் பெயரை மட்டுமே குறிப்பிடுகிறார் .
உச்சிமேற் புலவர் கொள் உரைகாரர் நச்சினார்க்கினியர் , மதுரை நகர பாரத்வா ஜ கோத்ர பார்ப்பனன் – 14ம் நூற்றாண்டு ; அதாவது இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் ( எழுதுவதில் வேத வியாசர், ஆதி சங்கரர் ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் நிற்கும் எழுத்து மன்னன் .)
***

இறையனார்:– அகப்பொருள் பாடிய இவர் நாலாம் அல்லது ஆறாம் நுற்றாண்டுக்குட்பட்டவர் . குறுந்தொகை இரண்டாம் பாடல் பாடிய இவரை சிவ பெருமான் என்றே கருதினர்.
நக்கீரரின் இறையனார் அகப்பொருள் உரை – எட்டாம் நூற்றாண்டு
பெருந்தேவனார் – எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு;
பேராசிரியர் – உரை காரர் – 13ம் நூற்றாண்டு;
***
தமிழை முதலில் செந்தமிழ் அந்தஸ்துக்கு உயர்த்திய மதுரைப் பார்ப்பனன் வி.கோ .சூர்ய நாராயண சாஸ்திரி 1871- 1903 ; தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டவர் ; இவரைப்பார்த்து பிற்காலத் திராவிடங்களும் தங்கள் பெயர்களைத் தமிழ்ப் படுத்தின. (நச்சினார்க்கினியர் என்பதும் சம்ஸ்கிருதப் பெயரின் தமிழ் வடிவமாக இருக்கலாம்).
பாரதியார் – 1882-1921
உ.வே.சா. – 1855- 1042
தாமோதரம் பிள்ளை – 1832 – 1901
வி. கனகசபைப்பிள்ளை – 1855-1906
ஆனந்தரங்கம் பிள்ளை – 1709- 1761 ; 25 ஆண்டுக் காலம் டைரி (Diary) எழுதியவர்
குற்றாலக் குறவஞ்சி இயற்றிய திரிகூட ராசப்ப கவிராயர் – 1718.
****

18 சங்கத் தமிழ் நூல்களில் உள்ள வரிகள் 26,350; சிலர் 30,000 வரிகள் வரை சொல்லுவர் ; கடவுள் வாழ்த்து, பதிகச் செய்யுட்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்; சிலர் திரு முருகாற்றுப்படை , பரிபாடல், கலித்தொகை ஆகியன பிற்காலத்தியவை என்று ஒதுக்குவதில் வரி எண்ணிக்கை குறையும் .
திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களை 5, 6-ம் நூற்றாண்டுகளில் வையாபுரிப்பிள்ளை வைக்கிறார்.; அவருடைய அணுகு முறை –மொழியியல் அணுகுமுறை.
தொல்காப்பியர் காலம் பற்றி முன்னரே பல கட்டுரைகளில் தந்துவிட்டேன்.
சம்ஸ்க்ருத இலக்கண நூல் அஷ்டாத்யாயீ யுடன் ஒப்பிடுகிறேன் ; பாணினியின் காலம் :–
கோல்ட்ஸ்டக்கர் – கி.மு ஏழாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னர் ;
மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞர்கள்–
டி .ஆர். பண்டார்கர்
ஆர்.ஜி.பண்டார்கர் – இருவரும் சொல்வது – கி.மு ஏழாம் நூற்றாண்டு;
டாக்டர் வி.எஸ். அக்ரவாலா – கிமு.450.
tags – எந்த நூல்? , என்ன காலம் ? ,அறிஞர்கள்

-subham-
You must be logged in to post a comment.