
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7552
Date uploaded in London – 8 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகில் மிகவும் அற்புதமான விஷயம் இந்தியாவின் பெண் அறிவாளிகளாகும் . உலகில் வேறு எந்த நாட்டிலும் பழங்காலத்தில் இவ்வளவு பெண் அறிவாளிகள் இருந்ததாக கிரேக்க, பாபிலோனிய, எகிப்திய வரலாறுகளில் இல்லை. அதிலும் குறிப்பாக பெண் கவிஞர்களை அங்கு விரல்விட்டு எண்ணிவிடலாம். வேதகாலம் என்பதை கி.மு.1500 அல்லது அதற்கு முந்தைய காலம் என்பதை இப்பொழுது பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழ் சங்கப் புலவர் காலம் என்பது சுமார் 2000 ஆண்டுகளு க்கு முந்தையது என்பதிலும் கருத்து ஒற்றுமை உளது. ஆக இந்தக் காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலேயே 60 பெண் கவிஞர்களின் பெயர்களும் கவிதைகளும் கிடைக்கின்றன.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பழங்கால உலகில் இந்தியாதான் பெரிய நாடு. இமயம் முதல் குமரி வரையும் . மேற்கே ஆப்கனிஸ்தான் வரையும் பரவிய பிரம்மாண்டமான நிலப்பரப்பு. அ தில் இப்படி 60 பேர் இருந்ததை எண்ணி இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படலாம். மேலும் அவர்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் பாடிய கவிதைகளிலும் பெரிய, அரிய கருத்துக்கள் உள்ளன. இதுதவிர அந்தக் காலத்தில் அரசாண்ட அரசிகள், கவிதை பாடாமல் புகழ் ஏணியின் உ ச்சியைத் தொட்ட பெண்மணிகள் என்று பட்டியலிட்டால் அது இரு நூற்றுக்கும் மேலாகப் போய்விடும் . வரலாற்றுக்கும் முந்தைய காலத்தில் ஆண்ட ஸ்த்ரீ ராஜ்ய அரசிகள் பற்றி எல்லா பழைய நூல்களும் குறிப்பிடுகின்றன.
இந்தக் கட்டுரையில் வேத கால பெண் புலவர்கள் பற்றி மட்டும் காண் போம் வேத காலம் என்பதில் சம்ஹிதை, பிராமண, ஆரண்யக, உபநிஷத்துக்கள் உருவான காலம் அடக்கம். உலகிலேயே பழமையான நூலான ரிக்வேதம், ஒவ்வொரு மந்திரத்தைக் ‘கண்ட/ கண்டுபிடித்த’ ரிஷி அல்லது ரிஷிகாவின் பெயரைச் சொல்கிறது. பெண் கவிஞர்களை ரிஷிகா என்பர்.
ரிக்வேதத்தில் 30 ரிஷிகாக்களின் பெயர்கள் இருக்கின்றன. ‘கில’/ பிற்சேர்க்கை சூக்தங்களில் காணப்படும் 5 பெயர்களும் இதில் அடக்கம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
கோஷா, லோபாமுத்ரா,அப்பால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரேயீ , ஸாஸ்வதீ , விஷ்வாவாரா முதலிய பெயர்களை ரிக் வேதத்தில் பார்க்கலாம்.

30 பெண் புலவர்களையும் கீழ்கண்டவாறு பிரிக்கலாம் —
கடவுளராகக் கருதப்படும் பெண்கள் –
இந்த்ரமாதரஹ , இந்த்ரனுசா , இந்த்ராணி , அதிதி, சூர்யா, ஸாவித்ரீ , யமீ வைவஸ்வதீ, சசி பௌலோமி முதலியோர் இந்த வகையின் கீழ் வருவார்கள் .
ஒரு மந்திரத்தில் இந்திரனின் மகனான வசுக்ராவின் மனைவி பாடியது என்று வரும். அப்படியானல் இந்திரனின் மருமகள் என்று பொருள்படும். இந்திரன் என்பது அரசனா , கடவுளா , இயற்கைச் சக்தியா அல்லது, பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிப் பெயரா என்று ஆராய்ந்து முடிவு காண வேண்டும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் 10-86ல் 11 மந்திரங்களில் இந்திராணி துதிபாடுகிறார் .
ரிக் 10-85 என்பது கல்யாணத்தில் பயன்படுத்தும் மந்திரம் . இதன் ரிஷிகாக்கள் சூர்யா,சாவித்ரி ; இவ்விருவரும் விவஸ்வன் எனப்படும் சூரியனின் மனைவியர் என்றும், அவர்களை வ்ருஷகாபேயி என்று பல மந்திரங்கள் துதிபாடும் என்றும் பிருஹத்கதா என்னும் நூல் உரைக்கும்..
யமனுடைய சகோதரி யமீ. இருவருக்கும் இடையே நடந்த சம்பாஷணை க் கவிதை பத்தாவது மண்டலத்தில் வருகிறது.
யமி வைவஸ்வதி என்ற பெயரும் காணப்படுகிறது.
சசி பவுலோமி ஒரு கவிதை பாடியுள்ளார்
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
அரசர் தொடர்புடைய புலவர்கள்
கோஷா கக்ஷிவதீ , லோபாமுத்ரா,அபால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரே யீ , ஸஸ்வதீ ஆங்கிரஸி , விஷ்வாவாரா முதலிய பெயர்கள் அரசர் தொடர்புடைய பெண் புலவர்கள்.
அபால என்பவர் அத்ரியின் புதல்வி.
10-39, 10-40 ஆகிய இரண்டு சூக்தங்களும் கோஷா கக்ஷிவதியின் பெயரில் உள்ளன .
அகஸ்திய மகரிஷியை மணந்த லோபாமுத்ரா ஒரு மஹாராணி. இவர் பெயரிலும் மந்திரங்கள் இருக்கின்றன.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx

சம்பாஷணைக் கவிதைகள்
உலகில் சம்பாஷணை (Conversational Poems) வடிவத்தில் அமைந்த ஒரே வேதப்புத்தகம் பகவத் கீதை. அர்ஜுனன் கேள்விக்கு கிருஷ்ணன் விடை தருகின்றார் . ஏனைய மதங்களின் வேதப் புத்தகங்களில் அங்குமிங்கும் கொஞ்சம் உரைநடையைக் காணலாம். இதை சாக்ரடீஸ் பின்பற்றியதால் வெளிநாட்டினர் இதை சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்பர். நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் கேள்வியில் பிறந்தவையே . முக்கிய உபநிஷதங்களும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தவை. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் சம்பாஷணைக் கவிதைகள் இருக்கின்றன. உலகின் பழைய நூல்களில் இதைக் காண்பது அரிது. சொல்லப்போனால் இது இந்து மதத்தின் எல்லா புராண , இதிகாசங்களிலும் உள்ளது. வேதகால உபநிஷத்துகளிலும் உண்டு. மருத்துவ, ஜோதிட நூல்கள் அனைத்திலும் உண்டு. ஒருவர் கேள்வி கேட்டவுடன் மற்றொருவர் பதில் சொல்லுவார். ரிக் வேதத்தில் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் கவிதை நடை சம்பாஷணைகள் கல்யாண நலுங்குப் பாடல்கள் போல கிண்டல் தொனியில் இருக்கும். நலுங்குப் பாடல்களில் கொஞ்சம் செக்ஸ் விஷயங்கள் வரும். அதுபோலவே இந்தக் கவிதைகளிலும் உண்டு tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
வெள்ளைக்காரர்களுக்கு இதைப் படித்தவுடன் , அடடா, குறை சொல்ல ஒரு விஷயம் கிடைத்துவிட்டது என்று மகிழ்வர் .ரிக் வேதத்தின் முதல் மண்டலத்திலும், பத்தாவது மண்டலத்திலும் வரும் கவிதைகளைக் காலத்தால் பிந்தியவை என்று சொல்லி மகிழும் வெள்ளைத்தோல் அறிர்கள் இங்கு வாய் மூடி மௌனமாகி விடுவர் . உலகப் புகழ் பெற்ற காதல் பாட்டு இங்குதான் வருகிறது. அதை எல்லாக் கல்யாணங்களிலும் பிராமணர்கள் விரிவாக ஓதுவார்கள். அது இல்லாமல் கல்யாணம் நிறைவு பெறாது. அந்த அற்புதமான கவிதை ரிக் வேதத்தில்(10-85) 47 மந்திரங்களுடன் இருக்கிறது. அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
tags – ரிக் வேதம், பெண் புலவர்கள், சம்பாஷணை , கவிதைகள் , அறிவாளிகள்
–subham–