ஜனவரி 2021 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.9090)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9090

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021  – அறிவு, விவேகம் பற்றிய பொன் மொழிகள்

பண்டிகை நாட்கள் — ஜனவரி 1- புத்தாண்டு தினம், 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசிய இளைஞர் தினம்,13-போகி பண்டிகை, 14- மகர சங்கராந்தி/ பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், 23-சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி, 26- குடியரசு தினம், 28- தைப்பூசம், 30- காந்தி நினைவு தினம்

அமாவாசை- ஜனவரி-13 , பெளர்ணமி- 28, , ஏகாதசி விரத நாட்கள் – 9, 24; முஹுர்த்த தினங்கள் -– ஜன. 17, 18, 25, 27

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை

அஸாரேஷு தீமான் கோ நாம மஜ்ஜதி – கதாசரித் சாகரம்

பலன்தராத செயல்களில் எந்த புத்திசாலி ஈடுபடுவான்

xxx

ஜனவரி 2  சனிக்கிழமை

உத்பன்ன மாபதம்  யஸ் து சமா த்யத்தே ஸ புத்திமான் – ஹிதோபதேசம் 4-6

ஆபத்து வரும்போது அதை சமாளிப்பவனே புத்திமான்

xxx

ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை

ஏததேவாத்ர பாண்டித்ய ம் யத் ஸ்வல்பாத் பூரி ரக்ஷணம் – பஞ்ச தந்திரம் 4-29

குறைந்த சக்தியைப் பயன்படுத்தி நிறைந்த பலனைப் பெறுவதே விவேகம்

ஜனவரி 4 திங்கட்கிழமை

அறிவுடையார் எல்லாம் உடையார் – திருக்குறள் 430

Xxx

ஜனவரி 5 செவ்வாய்க் கிழமை

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – திருக்குறள் 428

xxxx

ஜனவரி 6 புதன் கிழமை

அறிவுடையார் ஆவது அறிவார் – திருக்குறள் 427

xxx

ஜனவரி 7 வியாழக்கிழமை

கிமக்ஞே யம் ஹி  தீ மதாம்

அறிவாளிகளால் சாதிக்க முடியாதது ஏதேனும் உண்டா

xxx

ஜனவரி 8 வெள்ளிக்கிழமை

கார்யாணாம் கர்மணா பாரம் யோ கச்சதி  ஸ புத்திமான் –

வால்மீகி ராமாயணம் 6-88-13

xxx

ஜனவரி 9  சனிக்கிழமை

மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு – திருக்குறள் 425

Xxx

ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை

பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு — திருக்குறள் 424

xxx

ஜனவரி 11 திங்கட்கிழமை

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு – திருக்குறள் 423

xxxx

ஜனவரி 12 செவ்வாய்க் கிழமை

தீ தொரீஇ  நன்றின்பால் உய்ப்பதறிவு – திருக்குறள் 422

xxxx

ஜனவரி 13 புதன் கிழமை

கர்மணா பாத்யதே புத்திர் ந பத்யா கர்ம பாத்யதே – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செய்யும் செயல்கள்தான் மன உளைச்சலுக்கு காரணம்

xxx

ஜனவரி 14  வியாழக்கிழமை

ந க்ரோதயாதுதானஸ்ய  தீ மான் கச்சே த் விதீ யதாம்  – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பேய்போன்ற கோபத்துக்கு புத்திசாலிகள் அடிமையாது இல்லை

xxxx

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை

தீமான் மத்யம் ந சேவேத் – சதோபதேச பிரபந்தம்

புத்திசாலிகள் மது அருந்தக்கூடாது

xxx

ஜனவரி 16  சனிக்கிழமை

தீமானேக ஹ  சஹாயோஸ்தி  பஹுனா முதயஸ்ரீயே – ப்ருஹத் கதா மஞ்சரி

ஒரு புத்திசாலியால்  ஏராளமானோர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும்

xxx

ஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை

ந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்

புத்திசாலிகளால் செய்ய முடியாதது எதுவுமில

xxx

ஜனவரி 18 திங்கட்கிழமை

புத்தயஹ குப்ஜ காமின் யோ பவந்தி மஹாதமபி – பஞ்ச தந்திரம்

பெரியாருடைய புத்தியும்  கூட குறுக்கு வழியில் செல்கிறது

xxx

ஜனவரி 19 செவ்வாய்க் கிழமை

உலகத்தோடு ஒ ட்ட ஒழுகல்  பல கற்றும்

கல்லார் அறிவிலாதார் – திருக்குறள் 140

xxxx

ஜனவரி 20 புதன் கிழமை

நாடு  ஒப்பன செய் – ஆத்தி சூடி

xxx

ஜனவரி 21 வியாழக்கிழமை

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் -470

xxx

ஜனவரி 22 வெள்ளிக்கிழமை

புத்யா யுக்தா மஹாப்ரஜா விஜானந்தி சுபாசுபே – வால்மீகி ராமாயணம் 3-66-16

நன்மை எது, தீமை எது என்பதை அறிவுடையார் பகுத்தறிவார்கள்

xxx

ஜனவரி 23  சனிக்கிழமை

நிஜே சரீரே அபி மமத்வம் நாஸ்தி தீமதாம்

புத்திசாலிகளுக்கு அவர்களுடைய உடல்மீதும் பற்று இராது

xxx

ஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை

முண்டே முண்டே மதிர்பின்னா – கஹாவத் ரத்னாகர்

ஆளுக்கு ஆள் அபிப்ராயங்கள் வேறுபடும்

xxx

ஜனவரி 25 திங்கட்கிழமை

புத்தயா சித்யந்தி யத்கார்யம் ந தத் க்லேச சதைரபி – விக்ரம சரிதம்

நூற்றுக் கணக்கான போராட்டங்களால் அடைய  முடியாததையும் அறிவினால் அடைந்துவிடலாம்

xxx

ஜனவரி 26 செவ்வாய்க் கிழமை

புதிதிஹி ஸர்வார்த்த சாதினீ – ப்ருஹத் கதா மஞ்சரி

அறிவுடையார் எல்லாம் அடைவர்

ஜனவரி 27 புதன் கிழமை

சர்வம் ச ஸாத்யதே புத்யா

அறிவினால் எல்லாம் பெறலாம்

xxx

ஜனவரி 28  வியாழக்கிழமை

புத்திமான் பலவான் ஆவான்  –பழமொழி

xxx

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

சுத்தாஹி  புத்திஹி  கில காமதேனுஹு – பழமொழி

உண்மைதான் – தூய அறிவு  காமதேனுவே

xxx

ஜனவரி 30 சனிக்கிழமை

யஸ்ய புத்திர் பலம் தஸ்ய – பஞ்ச தந்திரம் 1-217

எங்கு அறிவு இருக்கிறதோ அங்கு பலம் உளது

xxx

ஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை

எவ்வத்துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வதுறைவது அறிவு – திருக்குறள் 426

Xxx subham xxxxx

Tags-  ஜனவரி 2021, அறிவு, விவேகம், பொன் மொழிகள்

மே 2019 நற் சிந்தனை காலண்டர் (Post No.6320)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 28 April 2019


British Summer Time uploaded in London – 17-44

Post No. 6320

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஞானம், அறிவு பற்றி 31 பொன்  மொழிகள்

சுபமுகூர்த்த தினங்கள்- 2, 8, 10, 16, 17, 23, 9

அமாவாசை- மே 4; பௌர்ணமி- மே 18

ஏகாதசி விரத நாட்கள்- 15, 30

பண்டிகை தினங்கள்- மே 1- மே தினம்; 4-அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம்; 7- அக்ஷய த்ருத்யை; 18- வைகாசி விசாகம்; மே 23- இந்தியத் தேர்தல் முடிவுகள்;29- அக்னி நக்ஷத்திரம் முடிவு.

மே 1 புதன் கிழமை

அஜ்ஞானேனாவ்ருதம் ஜ்ஞான தேன முஹ்யந்தி ஜந்தவஹ- பகவத் கீதை 5-15

அஞ்ஞானத்தினால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளது; அதனால் பிராணிகள் மோஹத்தை அடைகின்றன.

மே 2 வியாழக் கிழமை

அஞ்ஞானம் அகன்றவுடன் ஞானம் சூரியனைப் போல பிரகாசிக்கிறது-பகவத் கீதை 5-16

மே 3 வெள்ளிக் கிழமை

ஆத்மஞானம் பரம் ஞானம்- தன்னைப் பற்றிய அறிவே சிறந்தது- ஸம்ஸ்க்ருதப் பொன்மொழி

மே 4 சனிக் கிழமை

எல்லா உயிர்களிடத்திலும் தன்னைக் காண்பவனே உண்மையில் காண்பவன்

ஆத்வத்ஸர்வபூதேஷு யஹ பஸ்யதி ஸ பஸ்யதி- சாணக்கிய நீதி 6-2; ஹிதோபதேசம் 1-14

மே 5 ஞாயிற்றுக் கிழமை

ஒன்றாகக் காண்பதே காட்சி- அவ்வையார்

மே 6 திங்கட் கிழமை

ஞானம் ஹி தபஸஹ பலம்- பாரத மஞ்சரி

ஞானமே தவத்தின் பலன்.

மே 7 செவ்வாய்க் கிழமை

ஞானலவதுர்விதக்தம்  ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்சயதி- நீதி சதகம் 2; ஹிதோபதேசம் 1-56

அறிவற்றவனை பிரம்மா கூட திருப்தி செய்ய முடியாது

மே 8 புதன் கிழமை

அறிவற்ற மக்கள் விலங்குகளுக்கு சமம்- ஸம்ஸ்க்ருதப் பொன்மொழி

ஞானேன ஹீனாஹா பசுபிஸ்ஸமானாஹா

மே 9 வியாழக் கிழமை

ஞானாக்னிஹி ஸர்வகர்மானி பஸ்மஸாத் குருதே – பகவத் கீதை 4-37

எல்லா கருமத்தையும் ஞானத் தீ சாம்பலாக்கிவிடும்

மே 10 வெள்ளிக் கிழமை

ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரஹ – பகவத் கீதை 4-38

இவ்வுலகில் ஞானம் போல பரிசுத்தம் செய்யும் பொருள் கிடையாது.

மே 11 சனிக் கிழமை

ந ஹி ஸர்வஹ ஸர்வம் ஜானாதி- முத்ரா ராக்ஷசம்

எல்லோருக்கும் எல்லாம் தெரியாது.

மே 12 ஞாயிற்றுக் கிழமை

நாஸ்தி ஞானாத் பரம் ஸுகம் – சாணக்கிய நீதி 2-12

அறிவைவிட இன்பம் தருவது எதுவும் இல்லை.

மே 13 திங்கட் கிழமை

எந்த அளவுக்குக் கேட்கிறானோ அந்த அளவுக்கே ஒருவனின் அறிவு (யஹ ப்ராயஹ் ஸ்ரூயதே யாத்ருக்தத்தாத்ருகவகம்யதே- ஸம்ஸ்க்ருதப் பொன்மொழி

மே 14 செவ்வாய்க் கிழமை

நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (வாக்குண்டாம் அவ்வையார்)

ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது அவன் கற்ற நூல்கள்.

மே 15 புதன் கிழமை

அறிவற்றங் காக்குங் கருவி- தமிழ் வேதம் திருக்குறள் 421

அறிவு என்பது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி ஆகும்

மே 16 வியாழக் கிழமை

சென்றவிடத்தில் செலவிடா தீதொரீ இ

நன்றின்பால் உய்ப்பதறிவு– தமிழ் வேதம் திருக்குறள் 422

மனம்போன போக்கில் போகாமல் தீயதை விலக்கி நல்லவற்றில் மனதைச் செலுத்துவதே அறிவு-தமிழ் வேதம் திருக்குறள் 422

மே 17 வெள்ளிக் கிழமை

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு-தமிழ் வேதம் திருக்குறள் 423

யார் எதைச் சொன்னாலும் உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதே அறிவு

மே 18 சனிக் கிழமை

எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பதறிவு –தமிழ் வேதம் திருக்குறள் 424

அரிய பொருளை எளிமையாகச் சொல்; பிறருடைய நுட்பமான கருத்துக்களை ஆராய்ந்து காண்க

மே 19 ஞாயிற்றுக் கிழமை

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு- 425

உலகத்தை நட்பாக்கிக் கொள்வது அறிவு; மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒரே மாதிரி  எந்நேரத்திலும் இருத்தல் அறிவு.

மே 20 திங்கட் கிழமை

எவ்வதுறைவது  உலகம் உலகத்தோடு

அவ்வதுறைவது அறிவு- 26

உலகத்தோடு ஒட்ட ஒழுகு

மே 21 செவ்வாய்க் கிழமை

அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்

அஃதறி கல்லாதவர் 427

பின்வருவனவற்றை முன்கூட்டியே எண்ணுபவர் அறிவுடையார்; அப்படி அறியாதோர் அறிவில்லாதவர்.

மே 22 புதன் கிழமை

அஞ்சுவது அஞ்சாமை பேதமை- 428 அஞ்சத்தக்க விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம்.

மே 23 வியாழக் கிழமை

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை

அதிரவருவதோர் நோய்- 429

முன்கூட்டியே காக்க வல்ல அறிவுடையோர்க்கு நடுங்க வாய்க்கும் நோய் திடீரென வராது.

மே 24 வெள்ளிக் கிழமை

அறிவுடையார் எல்லாம் உடையார் – 430

அறிவுடையோர்க்கு செல்வம் இல்லாவிடினும் எல்லாம் இருக்கும்.

மே 25 சனிக் கிழமை

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்- 411; நல்லதைக் கேட்கும் கேள்விச் செல்வமே சிறந்த செல்வம்

  மே 26 ஞாயிற்றுக் கிழமை                                    

செவிக்குணவில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப்படும்      -412

காதில் கேட்க நல்ல விஷயங்கள் இல்லாதபோது சிறிதளவு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் 

மே 27 திங்கட் கிழமை

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை-  திருமூலர் திருமந்திரம்.

மே 28 செவ்வாய்க் கிழமை

மடையனைவிட குருடன் மேல் (அந்தோ வரோ நைவ ச ஞானஹீனஹ- கஹாவத்ரத்னாகர்)

மே 29 புதன் கிழமை

கிம் கிராதோ விஜானீயாத்மௌக்திக்தக்ஸ்ய மஹார்கதாம் – விலை மதிப்பற்ற முத்தின் மதிப்பு வேடனுக்குத் தெரியுமா?–கஹாவத்ரத்னாகர்

மே 30 வியாழக் கிழமை

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?– தமிழ்ப் பழமொழி

மே 31 வெள்ளிக் கிழமை

ஞானமேவ பராசக்திஹி – அறிவே பலம் (சம்ஸ்க்ருத சுபாஷிதம்)

புத்திமான் பலவான் ஆவான்  — பழமொழி

–subham—

sex கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி (Post No.4436)

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-28 am

 

 

 

Post No. 4436

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கியம் : பெண்களின் நுட்பமான அறிவு

 

மார்பகம் சம்பந்தமான கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி!

 

ச.நாகராஜன்

 

1

நள தமயந்தியின் சரித்திரம் பாரதம் முழுவதும் தெரிந்த அற்புதமான ஒரு சரித்திரம். இதை வெண்பா பாக்களினால் தமிழில் புகழேந்திப் புலவர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்.

வடமொழியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் நைஷதம் என்ற மஹாகாவியத்தை இயற்றியுள்ளார். இது ஐந்து பெருங்காவியங்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது.

இந்தக் காவியத்தின் அழகில் ஈடுபட்டான் தமிழ் மன்னன் ஒருவன்.

 

 

அவர் பெயர் அதிவீர ராம பாண்டியர்; பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர். கொற்கையிலிருந்து அரசாண்டதாகத் தெரிகிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் பெரும் கவிஞர். வடமொழியில் விற்பன்னர். சிற்றின்பப் பிரியர். தமிழில் கொக்கோகத்தை எழுதியவரும் இவரே.

 

இவரது மனைவியாரும் சிறந்த தமிழ் அறிஞர்.

 

வடமொழிப் புலமையால் அதில் இருந்த நூல்களில் புலமை கொண்ட அதிவீர ராம பாண்டியன் நைஷத காவியத்தில் மனதைப் பறி  கொடுத்து அதைத் தமிழில் இயற்றினார். இதில் 1172 செய்யுள்கள் உள்ளன.

 

இதை அரங்கேற்றம் செய்த போது நடந்த ஒரு சம்பவத்தை இங்குக் காணலாம்

2

நைடத காவியம் அரங்கேற்றம் ஆரம்பமானது. புலவர்கள், ரஸிகர்கள் அவையில் கூடினர். அதிவீர ராம பாண்டியன் தன் காவியத்தை அரங்கேற்றும் செய்யும் விதமாகச் செய்யுள்களைப் படித்து அதை அறிஞர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

 

முதல் படலமான நாட்டுப் படலம் முடிந்தது. அடுத்து நகரப் படலம் ஆரம்பமானது.

அதில் தான் இயற்றிய செய்யுளைப் படிக்கலானார் அதி வீர ராம பாண்டியன்.

 

வாய்ந்த மின்னைம டந்தைய ராக்கிவிண்

பேர்ந்தி டாமலன்  றோமலர்ப் புங்கவன்

சாந்த ணிந்தத மனியக் குன்றென

ஏந்து வெம்முலைப் பாரமி யற்றினான்

 

 

நகரத்தை வர்ணிக்க வந்த போது அமைந்த பாடல் இது.

இதன் பொருள் :-  தாமரைப் பூவில் இருக்கின்ற  நான்முகக் கடவுள் (புங்கவன்) மேகத்தின் கண் பொருந்திய மின்னற் கொடிகளை மங்கையராக்கி மீண்டும் அம்மேகத்தினிடத்தே போகாமல் இருத்தற்கன்றோ  சந்தனத்தைப் பூசி அமைக்கப்படுகின்ற, விருப்பம் செய்கின்ற, பாரமாகிய பொன்மலையைப் போல (தமனியக் குன்று)  அந்த நன்முலைகளை (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்) அந்த மங்கையருக்கு  உண்டாக்கினான்.

 

பிரம்மா மங்கையருக்கு ஏன் முலைகளை அமைத்தான் என்பதைக் கற்பனை நயம் படப் பாண்டியன் கூறி முடித்தார்.

இதைப் பாண்டியன் கூறி முடித்தவுடன் அவையிலிருந்த புலவர் ஒருவர் எழுந்தார்.

 

“அரசே! மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம்? இது பொருத்தமற்றதாக அல்லவா உள்ளது. இதை விளக்க வேண்டும்” என்றார்.

 

மங்கையரின் கொங்கைகளை ஏன் பிரமன் அமைத்தான் என்பதைச் சொல்லப் போய் வம்பில் மாட்டிக் கொண்டோமே என்று நினைத்த பாண்டியன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். அந்தச் செய்யுளுடன் அன்றைய அரங்கேற்றத்தை முடித்து, “நாளை இதைத் தொடருவோம்” என்றான்.

 

 

அரண்மனைக்கு மீண்ட மன்னன் ஓயாத சிந்தனையில் ஆழ்ந்தான். இந்தப் பாடலுக்கு எப்படிப் பொருள் சொல்வது. மேகத்தில் தோன்றி மறையும் மின்னலுக்கும் மலைக்கும் எப்படி ஒரு சம்பந்தத்தை உருவாக்குவது என்ற கவலையில் ஆழ்ந்தான்.

அந்தப்புரம் வந்த மன்னன் படுக்கையில் உறக்கமின்றி முகம் வாடிப் படுத்தான்.

 

மஹாராணியார் பெரும் புலமை வாய்ந்தவர். நல்ல கவிஞர். அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்து காலையில் நடந்த அரங்கேற்ற சம்பவத்தையும் நினைத்து அவனது முகம் வாடி இருக்கும் காரணத்தை அறிந்தாள்.

 

மெல்ல மன்னரிடம் பேச்சை ஆரம்பித்தாள். “நீங்கள் பாடிய பாடல் மிக அருமை” என்றாள்.

 

மன்னனோ, “அது எப்படி? மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் கூறுவது?” என்றான்.

 

“அது சுலபம். அது இயல்பாய் அமைந்த ஒன்று தானே” என்றாள் சர்வ சாதாரணமாக ராணி.

 

ஆர்வம் மேலோங்க, “எங்கே, அர்த்தம் சொல்லேன்” என்றான் பாண்டியன்.

 

ராணி விளக்கலானாள் : “ மின்னலுக்கும் மலைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டால் கூட இயைபு உண்டாக்கவன்றோ சூசுகமாகிய இருப்பு ஆணியை விதியோன் அடித்தான்” என்றாள் ராணி.

மன்னன் முகம் மலர்ந்தது. ராணி என்ன சொன்னாள் என்பதை கண நேரத்தில் அவன் புரிந்து கொண்டான்.

 

அதாவது மின்னல் போன்ற ஒடிந்த இடையை உடைய மங்கையருக்குக் கணத்தில் மறைகின்ற தன்மையை உடைய மின்னல் மறையாது இருக்க, அம்மலை முலைகள் மீது, ‘முலைக் கண்களாகிய’ இருப்பு ஆணிகளை பிரமன் அடித்தான் என்றாள் ராணி.

 

மறு நாள் அவை கூடியது. பாண்டியன் பெருமிதம் பொங்க (ராணியாரின்) விளக்கத்தைக் கூற அனைவரும் அதைச் சிறப்பான விளக்கம் என்று பாராட்டி ஏற்றுக் கொண்டனர்.

காவியம் தொடர்ந்தது.

 

பாண்டியன் தன் மஹராணியை எப்படிப் போற்றி இருப்பான் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை, அல்லவா!

3

பாரதம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இது போல ஆணுக்குச் சமமாக அறிவில் பெண்கள் ஓங்கி இருந்த வரலாறுகள் ஏராளம் உண்டு. தொகுப்பின் பெருகும். அத்தோடு மட்டுமின்றி செக்ஸ் எனப்படும் பாலியலில் – தாம்பத்ய உறவில் – அவர்களின் அறிவு மிகவும் நுட்பமாக இருந்தது என்பதையும் அறிய முடியும்.

 

அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா? (Post No.3682)

Written by S NAGARAJAN

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-  5-53 am

 

 

Post No.3682

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

24-2-2017  பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

 

ச.நாகராஜன்

 

தமிழ் நாட்டுப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள். அதிலும் கொங்கு நாட்டுப் பெண்க்ள் அறிவில் சிறந்திருப்பதோடு தாங்கள் சிறந்திருப்பதை தக்க விதமாக எடுத்துக் காட்டுவதிலும் சிறந்தவர்கள். எளிதில் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி ஆணுக்கு அறிவு அதிகமா அல்லது பெண்ணுக்கு அதிகமா என்பது.

 

 

இதற்கு தக்க விதமாக விடையளித்த கொங்கு நாட்டுப் பூங்கோதையின் சரித்திரம் சுவையானது.

தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பூங்கோதை அறிவில் சிறந்தவர். கவி பாட வல்லவர். அடக்கத்திற்கும் பெயர் பெற்றவர்.

 

 

ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவ்ருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.

 

திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.

 

 

வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

 

ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

 

 

அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

அறிவில்  முதிஞரே ஆவர் – அறிகரியோ

தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

தான் கொண்ட சூல் அறியார் தான்

 

 

இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். பேச முடியாமல் திகைத்திருந்த புலவர்களைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டு நடந்ததை அறிந்தார் எம்பிரான் கவிராயர்.

புலவர்கள் அவரது மனைவியார் எழுதிய பாடலை கவிராயரிடம் கொடுக்கவே அதைப் படித்துப் பார்த்துச் சிரித்த அவர் தன் மனைவியாரிடம் விளக்கம் கேட்டார்.

 

 

ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே  ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவ்ர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கற்பமுற்றி சிசு பிறக்கிறது. இதை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் விளக்கவில்லையா, என்ன? ஆகவே தங்கள் கர்ப்பதைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.

 

உயிர்கள் பிறத்தலைப் பற்றி பிரம்மசூத்திரம் மூன்றாம் அத்தியாயம் முதல் பாதம் முதல் சூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள் அருளிய விளக்கவுரையையும் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்தில் உள்ள விளக்கவுரையையும் பூங்கோதை வீட்டின் உள்ளிருந்தபடியே நன்கு விளக்கினார்.

 

மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

சொர்க்கம் சென்ற ஆன்மா,  மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலைத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

 

 

விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

விஷயம் கொங்கு  மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

 

 

இந்த் சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

கொங்கு மண்டல சதகத்தில் 45வது பாடலாக மலர்ந்துள்ள பாடலைப் பார்ப்போம்:

 

 

குறுமுனி நேர்  தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

 

பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

****

 

 

 

தாவரங்களின் அறிவு!

ச.நாகராஜன்

 

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

 

தாவரங்களுக்கான ‘ப்ளாண்ட் நியூரோ பயாலஜி’ எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

 

“பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு” என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால்  தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

 

“மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது,எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன” என்று மேலும் அவர் கூறுகிறார்!

 

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

 

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர்.அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

 

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம்.தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ‘ப்ளாண்டாய்ட்’ தான்  செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை  செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.

 

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது.ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

 

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

 

‘தி சீக்ரட் லைப் ஆ·ப் ப்ளாண்ட்ஸ்’ என்ற திரைப்படம்  ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது.தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும்  உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் ‘அறிவுள்ள தாவரங்கள்’ பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

 

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ‘ப்ளாண்ட் நியூரோபயாலஜி’ என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

 

பத்து லட்சம் யூரோக்கள் ( ஒரு யூரோ என்பது சுமார் ஐம்பத்தைந்து ரூபாய்கள்) இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

 

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி,” இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது” என்கிறார்.

 

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று!  இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

 

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது!இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!

 

-தொடரும்

(என் சகோதரர் ச. நாகராஜன் எழுதும் கட்டுரைகளும் இங்கே தொடர்ந்து வரும்)