
Post No. 9522
Date uploaded in London – –23 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PART THREE OF CARBON ARTICLE IN TAMIL
போர் முனையில் …………………..

கார்பன் உலோகமா, காரமா ? இரண்டும் இல்லை. இது உலோகம் வகையில் சேராத ஒரு தனிமம். மூலக அட்டவணை என்னும் பிரியாடிக் டேபிளில் 14ஆவது க்ரூப்பில் இடம்பெறுகிறது.
இரண்டாவது உலக மகாயுத்தம் வரை, போர் முனையில் கரி செய்த அழிவுகள் கொஞ்சமோ நஞ்சமோ அல்ல. கரி, கந்தகம், சால்ட் பீட்டர் (பொட்டாசியம் நைட்ரேட் SALT PETER= POTASSIUM NITRATE) ) ஆகியவற்றைக் கலந்து வெடி மருந்து செய்து, அதை பீரங்கி மூலம் குண்டு மழை பெய்துவிட்டனர்.
அழகிகளின் காதுகளில் தொங்கியது வைரத் தோடு ;
போர்க் களங்களில் உருண்டது மண்டை ஓடு ;
எல்லாம் கரியின் அவதார லீலைகள் !!

XXXX
பூமியின் மேற்பரப்பில் ஏராளமாக கார்பன் இருக்கிறது. நாம் வெட்டி எடுக்கும் சுண்ணாம்புக் கல், டோலமைட், பளிங்குக்கல் (MARBLE) எல்லாம் கார்பனேட்டுகள் ஆகும். அதாவது ஆக்சிஜனுடன் கார்பன் சேர்ந்து கொடுக்கும் உப்பு . இதே போல பெட்ரோலிய எண்ணை , எரிவாயு, நிலக்கரி ஆகியனவும் கரியின் மறு வடிவங்களே! இவற்றில் வெவ்வேறு அளவில் கரி என்னும் கார்பன் உள்ளது.
கிராபைட் GRAPHITE என்பது கலப்படமில்லாத கரி. இது இலங்கை, மடகாஸ்கர், ரஷ்யா , தென் கொரியா , இத்தாலி , செக் ரிபப்ளிக் நாடுகளில் கிடைக்கிறது .
கிராபைட் பயன்படும் இடங்கள் – லெட் (LEAD PENCIL) பென்சில், செல்களில் எலெக்ட்ரோட் (ELECTRODES IN BATTERY), மின்சார மோட்டர்களில் பிரஷ் ஆக .
கார்பனின் மற்றோர் தூய வடிவம் வைரம். இன்று அதிக வைரம் உற்பத்தி செய்யும் நாடுகள் – ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நமீபியா, பாட்ஸ் வானா , அங்கோலா ஆகும்.
XXX
செயற்கை வைரங்கள் உற்பத்தி
1953-ல் முதல் முதலாக செயற்கை வைரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 3000 டிகிரி சி CELSIUS வெப்பம், 90000 அட்மாஸ்பியர் ATMOSPHERE அழுத்தத்தில் இதை உண்டாக்கினர். இன்று ரஷ்யா இத்துறையில் முன்னணியில் இருக்கிறது. லேசர் ஒளியைப் பயன்படுத்தி செயற்கை வைரம் தயாரிக்கும் முறையை அமெரிக்கா வாழ் இந்தியர் கண்டு பிடித்துள்ளார்.
அனல் மின்சார நிலையங்களிலும், உருக்கலைகளிலும்
நிலக்கரி பயன்படுகிறது. அச்சுத் தொழில், டயர் தொழில்களில் கார்பன் பயன்படுகிறது. ஆக்டிவேட்டட் சார்கோல் என்னும் வடிவில் சர்க்கரை சுத்திகரிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு, சமையல் அறை காற்று வெளியேற்றும் வலைகள் ஆகியவற்றில் பயன்படுகிறது.
தேங்காய் ஓடுகளை – சிரட்டை/கொட்டாங் குச்ச்சிகளை எரித்து (ACTIVATED CHARCOAL) ஆக்டிவேட்டட் சார்கோல் உண்டாக்குவார்கள்
xxxx
கார்பன் பைபர் Carbon fibre
கார்பன் பைபர் (Carbon fibre) என்பது எஃ கு போல வலுவானது. அக்ரிலிக் இழையை (ACRYLIC FIFBRE) கட்டுப்படுத்தப்பட்ட வெப்பத்தில் எரித்தால் கார்பன் பைபர் இழை கிடைக்கும் . இது விஷ வாயுவை உறிஞ்சி விடும் சக்தி படைத்தது. ஆகையால் இதை பாதுகாப்புக் கவசங்களாக பயன்படுத்துகின்றனர்.. இதை விமானத்திலும் ராக்கெட்டிலும் வலு சேர்க்க பயன்படுத்துவர். விளையாட்டுக்கு கருவிகளிலும் வலு உண்டாக இது பயன்படுகிறது. காரணம் எடை குறைவு; பலம் அதிகம்.
xxxx

நாம் எரிக்கும் பொருள்களில் இருந்து கார்பன் டை ஆக்சைட் என்னும் கரியமில வாயு உண்டாகும். இது மழை நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக பூமியில் விழுகிறது. இது பூமியிலுள்ள மண் வளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் ஆண்டுதோறும் 7 பில்லியன் டன் எரிபொருளை பயன்படுத்துகிறோம். இவை கார்பன் டை ஆக்ஸைடை தோற்றுவித்தாலும் அதை தாவரங்கள் உண்டு நமக்கு ஆக்சிஜனைத் தந்து உதவுகின்றன . இது தவிர பசு மாடுகளும் சதுப்பு நிலமும் மீத்தேன் (methane) என்னும் வாயுவை உண்டாக்கு கின்றன.
அழுகிப் போகும் தாவரங்கள் நிலத்துக்கடியில் புதைந்தால் மக்கிய உரம், பழுப்பு நிலக்கரி/ லிக்னைட், தார் , அசல் நிலக்கரி என்று படிப்படியாக மாறுகிறது. இதுவே கடலுக்கடியில் போனால் அது பெட்ரோலிய எண்ணையாக மாறுகிறது.கடல் வற்றிப்போன பாலைவனங்களிலும் இது கிடைக்கிறது . இதற்கு 25 கோடி ஆண்டுகள் ஆகிறது .
XXXX
கார்பன் சுழற்சி CARBON CYCLE
கார்பன் சுழற்சி என்பது என்ன?
வான மண்டலத்தில் 724 பில்லியன் டன் ,
நிலத்தில் வசிக்கும் பிராணிகளிடத்தில் 2000 பில்லியன் டன் ,
கடலில் 39000 பில்லியன் டன் ,
கடல் வாழ் உயிரினங்களில் 40 பில்லியன் டன் ,
பூமியின் மேற்பரப்பில் 100 மில்லியன் பில்லியன் டன்,
(பெட்ரோலிய, எரிவாயு , நிலக்கரி, கார்பனேட் உப்புக்கள்)
கார்பன் இருக்கிறது.
இது நிலத்திலிருந்து நீருக்கும் அங்கிருந்து வான மண்டலத்துக்கும் போய் மீண்டும் பூமிக்கே திரும்புகிறது இவைகளில் ஒரு பகுதி பூமியில் படியும். அதை நுண்ணுயிர்கள் சாப்பிடும். இவைபற்றி ஆராய்வது நம் புறச்ச சூழல் எப்படி இருக்கிறது என்பதை அறிய உதவுகிறது.

XXX SUBHAM XXXXX
tags- கரி 3 , அற்புத மூலகம், புறச் சூழலில், கார்பன்