பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்) -Post No.10093

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,093

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)

அலெக்ஸாண்டர் தூமா(ஸ் ) ALEXANDRE DUMAS 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர். அவர் எழுதிய இரண்டு துணிகர நாவல்களைப் பலரும் படித்திருப்பார்கள் – த்ரீ மஸ்கிடீர்ஸ் THREE MUSKETEERS /மூன்று துப்பாக்கி வீரர்கள் ; THE COUNT OF MONTE CRISTO தி கவுன்ட் ஆப் மா ண்டி கிறிஸ்டோ

தூமா,  பிரான்ஸ் நாட்டில் கிராப்புறத்தில் பிறந்தார். தந்தை ஒரு ராணுவ அதிகாரி; தாய் சத்திரத்தை நடத்தும் ஒரு பெண்மணி.அவருடைய தந்தை நெப்போலியன் போனபர்ட் படையில் பணிபுரிந்தார். சண்டையில் உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி தூமா , தலைநகர் பாரிசுக்கு வந்தார். அப்போதுதான் எழுதத் துவங்கினார்.

27 வயதில் மூன்றாவது ஹென்றி Henry III என்ற வரலாற்று நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து, இடைவிடாது புதிய கதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதி வந்தார். எப்போதாவது ஒய்வு வேண்டுமென்றால் கிராப்புறத்திற்குச் சென்று ஓய்வு எடுப்பார்.

பிரான்ஸ் நாட்டின் முழு வரலாற்றையும் எழுத வேண்டும் எனது அவருடைய ஆசை. அதன் காரணமாக எழுந்ததுதான் முன்னர் குறிப்பிட்ட இரண்டு நாவல்கள் .

நாவல் , கதைகள் எழுதுவதில் எவ்வளவு வேகம் இருந்ததோ அவ்வளவு வேகம் செலவு செய்வதிலும் இருந்தது. இதனால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன்காரனானாகி விடுவார். மீண்டும் உழைத்து கடனை அடைப்பார்.

தூமாவுக்கும் அவருடைய காதலிக்கும் பிறந்த மகனின் பெயரும் அலெக்சாண்டர்தான் . அவரும் தந்தை போலவே நாவல் எழுதி புகழ் பெற்றார். அவர் எழுதிய கமீய் Camille என்ற சோகமான காதல்கதை அவரைப் புகழ் பெற வைத்தது. அது 1852-ம் ஆண்டிலேயே பிரான்சில் நடித்து காண்பிக்கப்பட்டது.

தூமா பிறந்த தேதி – ஜூலை 24, 1802

இறந்த தேதி – டிசம்பர் 5, 1870

வாழ்ந்த ஆண்டுகள் – 68

எழுதிய நாவல்கள், நாடகங்கள் –

1829 – HENRY III

1830- CHRISTINE

1831 – NAPOLEON BONAPARTE

1831 – ANTONY

1832 – THE TOWER OF NESLE

1836- KEAN

1844 – THE THREE MUSKETEERS

1844 – THE COUNT OF MONTE CRISTO

1845 – TWENTY YEARS AFTER

1850- THE BLACK TULIP

***

எனது பிளாக்கில் 2015 அக்டோபர் 9ம் தேதி எழுதியது இதோ:-

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–subham—

Tags –  பிரெஞ்சு, நாவல், ஆசிரியர், அலெக்ஸாண்டர் தூமா(ஸ்), Alexandre Dumas