எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்!(Post No.9488)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9488

Date uploaded in London – –  –13 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சுபாஷித செல்வம்

எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்; எப்போதும் ஸ்வர்க்க புகழை விட அதிகம் கொள்ளும் இருவர்!

ச.நாகராஜன்

த்வாவிபி புருஷௌ லோகே சுகினௌ ந கதாசன |

யஷ்சாதன: காமயதே யஷ்ச குப்யத்யநீஷ்வர: ||

இந்த இருவர் இந்த உலகில் எப்போதுமே சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். ஒருவர் மிகுந்த ஆசையுடைய, ஆனால் பணமில்லாத ஒருவர். இன்னொருவர் அதிகாரமே இல்லாத, ஆனால் கோபம் அதிகம் கொண்டவர்!

These two people are never happy in this world, one who is a pauper but is full of desires and the other who has no authority but is full of anger.

Translation by Kalyana-Kalpataru January 2018 issue

*

த்வாவிபி புருஷௌ லோகே ஸ்வர்கஸ்யோபரி திஷ்டத: |

ப்ரபுஷ்ஸ க்ஷமயா யுவதோ தரித்ரஸ்ச ப்ரதானவான் ||

இந்த இருவர் பூமியில் இருந்தாலும் கூட ஸ்வர்க்க புகழை விட அதிகமாகக் கொண்டவர்கள் ஆவர். ஒருவர் அதிகார பலம் இருந்தும் கூட இரக்க ஸ்வபாவம் கொண்டவர், இன்னொருவர் மிக ஏழ்மையில் இருந்தாலும் கூட கொடுக்கும் மனப்பான்மையை இயற்கையிலேயே கொண்டவர்.

These two people are above the glory of heaven although remaining in this world; one who is in authority but kind-hearted and full of pardon and the other who though poor is charitable in nature.

  • Translation by Kalyana-Kalpataru February 2018 issue

*

சிந்தா சிதாசமானாஸ்தி பிந்துமாத்ர விசேஷத: |

சஜீவம் தஹதே நிஜீர்வம் தஹதே சிதா ||

சிந்தையும் – அதாவது கவலையும், சிதையும் ஒன்றே தான்! ஒரு சின்ன ‘ந் என்ற புள்ளி தான் இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது. கவலையானது உயிரோடிருக்கும் போதே ஒருவனை எரிக்கிறது. ஆனால் சிதையோ செத்துப் போன ஒருவனை எரிக்கிறது.

Anxiety and the funeral pyre are virtually the same; a little ‘NA’ distinguishes the two. Anxiety burns a living person while the funeral pyre burns the dead.

Translation by Kalyana-Kalpataru January 2019 issue

*

கங்காயா சலிலம் சுப்ரம் சுப்ரம் ச சசிமண்டலம் |

சாதூனாம் ஹ்ருதயம் சுப்ரம் சுப்ரம் ஸத்கர்மணாம் யஷ: ||

கங்கையின் நீரானது சுப்ரமானது, சந்திர மண்டலமும் பிரகாசமானது, மகான்களின் இதயமும் பிரகாசமானது, அதே போலத் தான் நல்ல செயல்களும் பிரகாசனமானவை.

The water of the river Ganga is bright, the disk of the moon is bright, bright is the heart of saintly souls and such is the fame of meritorious deeds.

Translation by Kalyana-Kalpataru February 2019 issue

*

சுகமாபதிதம் சேவ்யம் துக்கமாபதிதம் ததா |

சக்ரவதி பரிவர்தந்தே துக்கானி ச சுகானி ச ||

சுகம் வரும் போது சந்தோஷப்பட வேண்டும். அதே போலத் தான் துக்கம் வரும் போதும்! ஏனெனில் துன்பங்களும் இன்பங்களும் ஒரு சக்கரத்தைப் போல சுழன்று சுழன்று வருபவையாகும்.

Happiness coming to our lot should be enjoyed and so also the distress that may befall us. For sorrows and joys come and go revolving like a wheel.

Translation by Kalyana-Kalpataru April 2019 issue

***

tags- சந்தோசம், அழுகை, புகழ் , எப்போதும்