அஸ்வமேத யக்ஞமும் அஸ்வப் படுகொலைகளும்

 

GOOD NEWS : This blog has crossed 81,000 hits. I have uploaded more than 400 research articles and at least one article is uploaded on an average every day. We thank you for your continued support. Both my blogs put together attract 1200 to 1800 hits a day. Please spread the word to your friends. Wherever you use my matter, please give full blog address. Pictures are not mine. They come under copyright rules.

 

அஸ்வமேத யக்ஞமும் அஸ்வப் படுகொலைகளும்

 

அஸ்வமேத யக்ஞம் என்பது என்ன? பெரிய மன்னர்கள் ஒரு குதிரைக்குப் பூஜை செய்து பட்டம் கட்டி திரிய விடுவார்கள் அது சென்றவிடமெல்லாம் எந்த மகாராஜா அனுப்பினாரோ அவருக்கு அந்த நாடு எல்லாம் கப்பம் கட்ட வேண்டும். யாராவது துணிவு இருந்தால் குதிரையைக் கட்டிப் போடுவார்கள். உடனே அதை அனுப்பிய மன்னர் சண்டைக்கு வருவார். யாருக்கு வெற்றியோ அவர்கள் பக்கம் அந்த இடம் போய்ச் சேரும். இறுதியில் குதிரையை வெட்டி யாகம் செய்வர். இப்படிச் செய்த இந்திய மன்னர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இருந்தபோதிலும் இந்தச் செய்தியைப் படித்த பலர் புருவத்தை உயர்த்துவர். உயிர்க் கொலை நியாயமா என்பர். அவர்களுக்கெல்லாம் ‘ஷாக்’ கொடுக்கும் செய்தி பிரிட்டனில் வெளியாகி இருக்கிறது.

 

சில நாட்களுக்கு முன்னால் பெரிய சூப்பர் ஸ்டோர்களில் விற்ற மாமிசத்தில் குதிரை மாமிசமும் கலந்திருந்தது. சொல்லாமல் இப்படிச் செய்வது சட்ட விரோதம். செய்தி வெளியானவுடன் டன் கணக்கில் விற்பனைக்கிருந்த மாமிசம் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு அநுப்பப்பட்டது. அப்போது பத்திரிக்கைகள் ஒரு உண்மைச் செய்தியை வெளியிட்டன. குதிரை மாமிச ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்துவிட்டன.

 

இதைப் பார்த்தால் மேலை நாட்டில் தினமும் லட்சக் கணக்கில் “ அஸ்வமேதங்கள்” நடக்கின்றன என்று சொல்லலாம்.

2010ஆம் ஆண்டுப் புள்ளி விவரங்கள் இதோ:

சீனா கொன்ற குதிரைகள் 201,600

பிரான்ஸ்————————–     4500

இதாலி                  67,000

அமெரிக்கா             110,000

ஆர்ஜெந்தினா           150,000

கனடா               100,000+

 

ஒரே ஆண்டில் பல லட்சம் குதிரைகள் மனிதர்களின் வயிற்றுக்குள் போய்விட்டன. அது மட்டுமல்ல. தமிழ் நாட்டில் இருந்து அடிமாடுகளை எப்படி லாரியில் அடைத்து அனுப்புகிறார்களோ அப்படி 67000 குதிரைகளை கொடுமையான முறையில் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுமதி செய்வதும் பத்திரிக்கைகளில் வெளியானது.

பிரிட்டனில் மட்டும் ஆறு வதைக் களங்களில் 8000 குதிரைகளைக் கொல்லுகின்றனர். ஒரே துப்பாக்கி ரவையைப் பயன்படுத்தி குதிரையின் மூளையில் சுட்டு “ மனிதாபிமான” முறையில் கொல்லுகின்றனர்!!!

குதிரைப் பந்தயத்தில் ஓடி வெல்லும் குதிரைகளுக்கு ராஜ உபசாரம். அது கிழடு தட்டிப் போய் ஆட்டம் ஒடுங்கிய பின் கொலைக் களம்.

 

போகிற போக்கில் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

 

கொல்லான் புலாலை மறுத்தானை

எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் (வள்ளுவப் பெருமான்)

contact: swami_48@yahoo.com