அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 1 (POST NO.3162)

kumara-4842-1bv-344-31

Written by London swaminathan


Date: 17 September 2016

Time uploaded in London: 14-30

Post No.3162

Pictures are taken from various sources; thanks.

 

அஸ்வமேத யக்ஞம் என்றால் என்ன?

இது அரசர்கள் மட்டும் செய்யக்கூடியது. தங்கள் ஆட்சியை விஸ்தரிக்க – விரிவாக்க — அதிகாரத்தை நிலைநாட்டச் – செய்யும் வேள்வி. யாகக் குதிரையை இறுதியில் பலி கொடுக்கும் வேள்வி இது.

 

இது எப்போது துவங்கியது?

ரிக் வேத காலத்திலேயே இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டு வரை இது நடந்தது. ராமாயணம், மஹாபாரதம், புராணங்களிலும், கல்வெட்டுகளிலும் இது பற்றிய தகவல்கள் உள. இதை நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை.

 

அதிசயம் 1

இந்த வேள்வியில் 4, 400  முதலிய நான்கின் மடங்கிலுள்ள எண்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சங்கத் தமிழர் வாழ்விலும் இதே போக்கைக் காணலாம். 18 மேல் கணக்கு நூல்களிலும் , 18  கீழ்க்கணக்கு நூல்களிலும் இதே போல 4, 40, 400  எண்களிலேயே பல நூல்கள் தொகுக்கப்பட்டன. இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் பார்க்கவும்.

 

 

அதிசயம் 2

யாகத்தில் விடப்பட்ட குதிரைக்கு 1000 முத்துக்களாலும், தங்கத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த முத்துக்கள் எங்கிருந்து வந்தன? “பாண்டிய கவாடம்” என்னும் முத்து பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் குறிப்பிடுகிறான். தமிழ் நாட்டிலிருந்து முத்து  போயிருந்தாலும், குஜராத்திலிருந்து போயிருந்தாலும், இது வரை வெள்ளைக்காரர்கள் எழுதிய தவறான கருத்துகளுக்கு இது வேட்டு வைக்கும்.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் என்பதே தெரியாது என்றும், அவர்கள் கங்கை நதிக்ரையில் கூட குடி புகவில்லை என்றும், அவர்கள் நாடோடிகள் என்றும் பல அரை வேக்காடுகள் எழுதிவைத்துள்ளன. ஆனால் உலகின் பழைய நூலான ரிக் வேதமோ அஸ்வமேதம் பற்றி குறைந்தது மூன்று மண்டலங்களில் பேசுகிறது. தங்கம் முத்து என்பவை நாகரீக வளர்ச்சியையும், செல்வ வளத்தையும் பூகோள வீச்சையும் காட்டுகிறது.

 

அதிசயம் 3

அஸ்வ மேத யாகத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரைக்கு 34 விலா எலும்புகள் இருப்பதாக வேதம் குறிப்பிடுகிறது. இது இந்திய வகைக் குதிரையாகும். ஆரியர்கள், மத்திய ஆசியாவிலிருந்து வந்தனர் என்று பல அரை வேக்காடுகள் எழுதியுள்ளன. ஆனால் வேதமோ இந்திய குதிரைகள் பற்றிப் பேசுகின்றன!

அதுமட்டுமல்ல. இந்த 34 என்ற எண் 27 நட்சத்திரங்களையும் 5 கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் குறிக்கும் என்றும் வியாக்கியானம் உள்ளது. இது உண்மையாகில் வேத காலத்திலேயே நமக்கு இந்த வானவியல் தெரியும் என்று விளங்குகிறது .பல அரைவேக்காடுகள்,  நாம் இவற்றை கிரேக்கரிடமிருந்து கற்றதாக எழுதிவைத்துள்ளன.

 

அஸ்வமேத யாகத்தில் வரும் குதிரை சூரியனைக் குறிக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

gupta-empire-samudragupta-i-c-330-70-av-dinar-7-70g

அதிசயம் 4

இந்திய அரசர்கள் அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் தங்கக் காசுகளை வெளியிட்டனர். குதிரை பொறித்த குப்தர் கால தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதே போல பெருவழுதி என்ற பெயருடன் குதிரை பொறித்த நாணயம் கிடைத்துள்ளது. இது புற நானூறு குறிப்பிடும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ராஜசூய வேள்வி செய்த குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் பெருவழுதியும் அஸ்வமேதம் செய்திருக்கலாம். இதை காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் குறிப்பால் உணர்த்துவதை ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆக, தமிழர்கள் வேறு கலாசாரம் உடையவர்கள் என்ற வெளிநாட்டுக்கா ரன் வாதத்துக்கு இது பயங்கர வேட்டு வைக்கிறது.

 

புறத்துறை நூல்களில் பத்து வரிக்கு ஒரு முறை இந்துமத குறிப்புகளைக் காணலாம்.

 

அதிசயம் 5

சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதி நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகத்தில் காளைமாடு முத்திரைகள் உண்டு ஆனால் பசு மாடுகள் படம் இல்லவே இல்லை. அது போல குதிரை எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் குதிரை படம் இல்லை. ஒரு வேளை  பசுவும், குதிரையும் புனிதம் என்பதால் முத்திரையில் போடாமல் இருந்திருக்கலாம்.

 

ரிக்வேதத்தில் அஸ்வமேத என்ற பெயரில் ஒரு அரசன் இருந்ததாகப் பாடியுள்ளனர் (RV 5-27-4/6; 8-68-15)

 

அதிசயம் 6

குஷ்டரோகிகள், அஸ்வமேத யாகத்தில் இடம்பெறுகிறார்கள். ஏன் என்றே தெரியவில்லை. வெள்ளைக் குதிரை, மற்றும் வெள்ளைக் குதிரையில் கருப்புக் காதுடைய குதிரைகள் புகழப்படுகின்றன. சிந்து வெளி, சரஸ்வதி நதிப் பகுதி குதிரைகள் புகழப்படுகின்றன.

 

அதிசயம் 7

தாவர, பிராணிகள் உலகத்தில் புழுப்பூச்சிகள் முதல் பெரிய காட்டு மிருகங்கள் வரை 609 மிருகங்கள் அஸ்வமேதத்தில் பங்குபெற்றன. இவைகள் அனைத்தும் கொல்லப்படவில்லை, விடுதலை செய்யப்பட்டன என்றே பலரும் கருதுகின்றனர். காட்டு மிருகங்களைக் கொல்லாமல் விட்டது பற்றிய தெளிவான குறிப்புளது. அந்த அளவுக்கு வனவிலங்குகலைப் பாதுகாக்கும் நாகரீக முதிர்ச்சி பெற்று இருந்தனர்.

 

அகநானூறில் வேள்விக்குண்ட ஆமை உவமை ஒரு புதிராக இருந்தது. அதுவும் அசுவமேத யாக குண்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆமையாக இருக்கலாம் (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்)

 

அதிசயம் 8

ஆரியர்கள் அங்கிருந்து வந்தனர் , இங்கிருந்து வந்தனர் என்று பிதற்றும் பேர்வழிகளுக்கு ஒரு யாகமோ யக்ஞமோ, ஒரு சுயம்வரமோ அப்பகுதியில் நடந்ததாக இன்று வரை காட்ட முடியவில்லை;  மிகவும் கஷ்டப்பட்டு சில பிராணிகள் படுகொலையை ஒப்பிட முயற்சி செய்கின்றனர். ஒன்று கூட பொருந்துவ தில்லை.அத்தகைய ஆராய்ச்சிகளைப் பார்கையில் நமக்குச் சிரிப்பும் பரிதாபமும்தான் வரும். இந்துக்கள் உலகம் முழுதும் சென்றதால் அவர்கள் மொழியின் தாக்கம் அவர்கள் மீது அதிகமாகவும் மற்ற விஷயங்கள் குறைவாகவும் இருக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் ஈரான் (பாரசீகம்) வரை நமது ஆட்சி இருந்ததால் அங்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அவர்கள் இங்கிருந்து குடியேறிய ஒரு பிரிவினர் ஆவார்கள்.

 

ஆனால் இரண்டயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இமயம் முதல் குமரி வரை இந்தப் பண்பாடு ஒரே மாதிரியாக இருந்ததற்குச் சான்றுகள் உள. இந்த அளவுக்கு வேறு எங்கும் சான்றுகள் இல்லை.

 

malayalam-coin

அதிசயம் 9

 

அஸ்வமேதத்தின்போது ஏராளமான தட்சிணை கொடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பசுமாடுகள், நூற்றுக் கணக்கான குதிரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் அந்த நேரத்தில் பிராமணர்கள் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் . அரசாட்சியையே கேட்டாலும் கொடுக்க வேண்டும் ஆனால் அக்கால பிராமன்ணர்கள் அப்படி எக்குத் தப்பாக எதுவும் கேட்கவில்லை. துரோணர் மட்டும் பரசுராமர் செய்த அஸ்வமேதத்தில் பங்கு பெறாமல் வேடிக்கை பார்க்கும் பிராமணர்களில் ஒருவராக நின்றபோதும் எனக்குத் தனுர்வேதம் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். பரசுராமனும் அவ்வாறே செய்தார்.

 

 

அதிசயம் 10

வேள்வி என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அக்கினியில் ஆகுதி செய்வது என்பது மட்டும் பொருள் அல்ல. யஜூர்வேதத்திலேயே யாகக் குதிரையின் கண்களை சூரியனாகவும், தலையைக் காலைப் பொழுதாகவும், வாயு தேவனை மூச்சாகவும், சந்திரனைக் காதுகளாகவும் ஒப்பிடும் பகுதிகள் உள்ளன. வேத இலக்கியத்தை அப்படியே பொருள் கொள்ளாமல் அதிலுள்ள தத்துவங்களை உணரவேண்டும்.

 

 

 

அதிசயம் 11

யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேதம் யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய் யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம். பரசுராமர், ஆண்டுக்கு ஒன்று வீதம்    100 அஸ்வமேதம் செய்தவர். இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).

 

 

அதிசயம் 12

அஸ்வமேத யக்ஞத்தின்போது புதிர்கள் போடுவதுண்டு. அவர்கள் மந்திரங்கள் புதிர்கள் நிறைந்ததாகவும் சில ஆபாச வசனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இவைகள் ஏன் இப்படி உள்ளன? உண்மைப் பொருள் என்ன என்பது எவரும் அறியார். வேத கால சமூகம் இலக்கியம் தெரிந்தவர்கள்’ நாகரீகத்தின் உச்சியைத் தொட்டவர்கள் என்பது இதனால் விளங்கும். வெளிநாட்டு, உள்நாட்டு அரை வேக்காடுகள் எழுதியது போல அவர்கள் மாடு மேய்த்த நாடோடிகளும் அல்ல, காலனி பிடிக்க வந்த வெள்ளைக்க ரர் போன்ற பரதேசிகளும் அல்ல!

 

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைக் காண்போம்.

தொடரும்……………………………..

 

–SUBAM–