
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7451
Date uploaded in London – 13 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.









WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7451
Date uploaded in London – 13 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Posted by Tamil and Vedas on January 13, 2020
https://tamilandvedas.com/2020/01/13/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/
Wriiten by S Nagarajan
Post No.1167; Dated 12th July 2014
This is the nineth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First eight parts were published in this blog:- swami.
நாரத புராணம் பல யந்திரங்களை விவரிக்கிறது. அவற்றில் சில:
த்ரைலோக்ய மோஹன யந்த்ரம் – இதை முறையாக வழிபட்டால் ஒருவன் நினைத்ததெல்லாம் கை கூடும்.
நாரசிம்ஹ யந்த்ரம் – வெற்றி, செல்வாக்கு, பாதுகாப்பு ஆகியவற்றைத் தரும்.
சர்வ வசங்கர யந்த்ரம் – அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
காலாந்தக யந்த்ரம் – சாவை முறியடிக்கும் யந்த்ரம்
ஒரு யந்த்ரம் குறிப்பிட்ட ஜியாமெட்ரி வடிவமைப்புடையது. அதை சொல்லப்பட்ட உரிய முறைப்படி கல்லிலோ அல்லது உரிய உலோகத்திலோ அல்லது ஒரு பேப்பரில் வர்ணத்தினாலோ அமைத்து அதற்குள் உரிய மந்திர பீஜங்களை எழுத வேண்டும். பிறகு அந்த தேவதையை ஒரு மண்டலம் வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்று புராணம் தெரிவிக்கிறது.
யந்திரம் அமைக்கும் முறை அதை வழிபடும் முறை ஆகியவற்றை அதில் சித்தி பெற்ற குரு முகமாக மட்டுமே பெற வேண்டும்.
Symbol of Jainism which propagated Ahimsa.
அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்
அஹிம்சா பரமோ தர்ம: என்பதை பத்ம புராணம் அறிவிக்கிறது. மஹாத்மா காந்தி அடிகளின் வாழ்க்கையின் உயிர் மூச்சாக அஹிம்சா தத்துவம் இழைந்தோடியது.
அஹிம்சையின் உயர்வைத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:-
அஹிம்சா பரமோதர்மோஹ்யஹிம்சவைவ பரம் தப: I
அஹிம்சா பரம்ம் தானமித்யாஹுர்முனஸ்ய: சதா II
அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம். அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம். என்று முனிவர்கள் எப்போதும் சொல்லி வருகின்றனர்.
– பத்ம புராணம் , ஸ்வர்க்க காண்டம், 31ஆம் அத்தியாயம் 26ஆம் ஸ்லோகம்
சப்த ரிஷிகள் யார் யார்?
கஸ்யபர், அத்ரி.வசிஷ்டர். விஸ்வாமித்திரர்,கௌதமர். ஜமதக்னி,பரத்வாஜர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
– ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம்,வாமன புராணம், கூர்ம புராணம்
மரீசி, அங்கீரஸர், அத்ரி, புலஸ்த்யர், புலகர், க்ரது, வசிஷ்டர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
– வாயு புராணம், அக்னி புராணம்
மரீசி ஆகிய ஏழு ரிஷிகளும் பிரம்மாவின் புத்திரர்கள் என சிவ புராணம் கூறுகிறது.
சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
சப்த ரிஷிகளின் பெயர்கள் மாறி மாறி கூறப்படுகிறதே என்று பலரும் சந்தேகம் கொள்வர். ஆனால் ஒவ்வொரு கல்பத்திலும் சப்தரிஷிகள் மாறுவர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த சந்தேகம் எழாது.
சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?
தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல் அத்தியயனம் செய்வித்தல், வேதார்த்த பக்தி, வேதத்துக்கு விரோதமான நூல்களை விலக்குதல், சாந்தி, தாந்தி முதலியவை ஞானாங்கமாகும் என்று கற்றோர் சொல்வார்கள்.
ஞானங்கள் எல்லாவற்றுள்ளும் சிவலிங்க பூஜை செய்தல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தல்,சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தல், சிவனடியார்களைப் பூஜித்தல், விபூதி, ருத்ராக்ஷம் தரித்தல், ஞானாசிரியன் சேவடி தரிசனம் செய்தல், பஞ்சாட்சரம் உள்ளிட்ட மந்திரங்களை ஜபித்தல் இவைகள் மேலானவை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
சிவத் தலங்கள் பலவற்றுள்ளும் காசி, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியவை விசேஷமாகும்
ஸ்கந்த புராணம், சூத சம்ஹிதை,யக்ஞ வைபவ காண்டம், எட்டாவது அத்தியாயம்
சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!
சிவ பெருமானை லக்ஷ்மி துதி செய்தவுடன் மனம் மகிழ்ந்து சிவபிரான் லக்ஷ்மியை நோக்கிக் கூறுவது:-
“ஓ! கமலாக்ஷீ! நீ சொல்லி வந்த நியாயப்படி எனக்கும் விஷ்ணுவுக்கும் அபேதம் என்பது சத்தியமே! இந்த நியாயம் உனக்கு எப்படித் தெரிய வந்தது? யான் எல்லாமாய் இருக்கும் தன்மையாகிய ஏகத்வத்தைத் தேவர்களும், முனிவர்களும், வேதாந்தம் உணர்ந்த ஞானிகளும் குதர்க்கத்தால் அறியாமல் பேத புத்தி உடையவர்களாகி துவேஷிக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் இருக்க, உலகில் எனக்கு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் விஷ்ணுவைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும், விஷ்ணு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் என்னைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும் இருக்கின்றனர். இதற்குக் காரணம் தேவியின் மாயையினால் அவர்கள் கவரப்பட்டிருக்கும் தன்மையே ஆகும்.
ஏனெனில் பக்தர்கள் என்று சொல்லப்பட்ட இவர்கள் ஸ்தூல உருவங்களைக் கண்டு பக்தி செய்ய வந்தார்களேயன்றி சொரூப உண்மையை அறிந்து பக்தி செய்ய வந்தவர்கள் அல்லர். சொரூப உண்மையை அறியப் புகுவாராயின் துவேஷம் உடையவர் ஆகார். ஸ்தூல உருவம் பல வேற்றுமை உள்ளது. சொரூபம் வேற்றுமையாகாது ஒரே தன்மையாக உள்ளது. ஆகவே ஒரு தன்மையாய் இருக்கும் சொரூப உண்மையை விட்டு விட்டுப் பல தன்மையாய் இருக்கும் வடிவத்தைப் பற்றினாராதலின் கண்ட ஞானமுடையவராகி பேதவாதத்துக்கு உள்ளாகின்றனர். என்னுடைய வேற்றுமை இல்லாத ஏகத்வத்தை அறிவதென்றால் அகண்ட ஞானமும் புண்ணிய விசேஷமும் பெற்றவராக இருப்பின் அறிவர். அவர்களிட்த்தில் தேவியின் மாயா விலாசம் போய் ஞான விலாசம் உண்டாகும். இது யாவர்க்கும் கிடைத்தல் அரிது. கஷ்டப்பட்டு அறிதல் வேண்டும்.
இவ்வாறு லக்ஷ்மி தேவியிடம் சிவ பிரான் அருளுவதை தேவி பாகவதம் ஆறாம் ஸ்கந்தம் 18 ஆம் அத்தியாயம் விளக்குகிறது.
To be continued………………………………………………
Contact swami_48@yahoo.com
Posted by Tamil and Vedas on July 12, 2014
https://tamilandvedas.com/2014/07/12/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
சம்ஸ்கிருத செல்வம்–அத்தியாயம் 32 by ச.நாகராஜன்
Post no 867 Dated 26th February 2014
தர்மங்களில் எது உயர்ந்த தர்மம்? அஹிம்சையே உயர்ந்த தர்மம். யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது சிறந்த கொடையாகும்.
இதை வலியுறுத்தும் கவிதை இது:
அஹிம்சா பரமோ தர்ம: ததாஹிம்சா பரோ தம: I
அஹிம்சா பரமம் தானம் அஹிம்சா பரமம் தப: II
அஹிம்சா பரமோ தர்ம: – அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்
ததாஹிம்சா பரோ தம: – அந்த அஹிம்சை மிக உயர்ந்த சுய கட்டுப்பாட்டாலேயே அடைய முடியும்.
அஹிம்சா பரமம் தானம் – யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது மிகச் சிறந்த கொடையாகும்
அஹிம்சா பரமம் தப: – அஹிம்சையே மிக உயர்ந்த தவமாகும்.
தர்மப்படி வாழ வேண்டும் என்கின்றன நமது அற நூல்கள். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கவிஞர்கள் இதை வலியுறுத்தத் தவறுவதே இல்லை.
தர்மம் சரத் மா(அ)தர்மம் சத்யம் வதத் நாந்ருதம் I
தீர்கம் பஷ்யத மா ஹ்ரஸ்வம் பரம் பஷ்யத மா(அ)பரம் II
தர்மம் சரத் – தர்மத்தைக் கடைப்பிடி
மா அதர்மம் – அதர்ம வழியை அல்ல
சத்யம் வதத் – உண்மையே பேசு
ந அந்ருதம் – பொய்யைப் பேசாதே
தீர்கம் பஷ்யத பரம் பஷ்யத– தொலைவில் இருந்தாலும் கூட உறுதியான லட்சியத்தின் மீது கண்களைப் பதி
மா ஹ்ரஸ்வம்,மா அபரம் – உடனடியாக நிறைவேறும் அருகில் உள்ள லட்சியத்தின் மீது அல்ல
என்ன அருமையான அறிவுரை! மனத்தில் எப்போதும் நிலை நிறுத்தி வைக்க வேண்டிய அருளுரை அல்லவா இது!
இனி மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாடலைப் பார்ப்போம்:
தர்மம் யோ பாததே தர்மோ ந ச தர்ம: ப்ரகீர்தித: I
அவிரோதாத் து யோ தர்ம: ச தர்ம: சத்யவிக்ரம: II
(ய) தர்மம் (அன்யம்) தர்மம் பாததே – எந்த மதமானது இதர மதத்தைப் பின்பற்றுபவர்களை கொடுமைப் படுத்துகிறதோ
ச தர்ம: ந ப்ரகீர்தித: – அந்த மதம் உண்மையான மதம் அல்ல!
ய தர்ம: அவிரோதாத் (ஸ்வீகார்யதே) – எந்த மதமானது மற்றவர்களுக்குத் தடையாக இருக்காமலோ அல்லது மற்றவைகளை அடக்காமல் இருக்கிறதோ
ச தர்ம: சத்யவிக்ரம: – அந்த மதமே உண்மையானது, சாசுவதமாக நிலை பெற்றிருப்பதாகும்.
இந்த சாசுவதமான சத்தியத்தை கவிஞர் வாயிலாக நாம் அறியும் போது உளம் மகிழ்கிறோம்.
இதைப் படிக்கும் போது ஹிந்து மதத்தைச் சார்ந்தோர் பெருமிதம் அடைவர்.
ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் ஒரு நாளும் பிற மதத்தினரை இழிவாகப் பேசுவதில்லை. அடக்குவதில்லை.
சாசுவதமான தர்மத்தை சகிப்புத் தன்மையுடன் சொல்வதோடு அதைப் பின்பற்றுவோர் இதர மதத்தினரை மரியாதையுடன் நடத்துகின்றனர்.
அதனால் தான் அது சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது.
அது ஒரு மதம் மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை முறை; நேற்றும் இன்றும் நாளையும் என்றும் சனாதமாக இருக்கும் ஒரு தத்துவம், சத்தியம் அது!
Contact swami_48@yahoo.com
*****************
Posted by Tamil and Vedas on February 26, 2014
https://tamilandvedas.com/2014/02/26/%e0%ae%85%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae/
You must be logged in to post a comment.