ஆகஸ்ட் 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள்(Post 10060)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,060

Date uploaded in London – 6 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

August

1-8-21    9916   ஜூலை 2021இல் வெளியாகியுள்ள S.நாகராஜன் கட்டுரைகள்

2-8-21    9921   மஹாத்மா காந்திஜி – தன்னைப் பற்றிய தவறான

           விமரிசனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்!

3-8-21    9927  அருணகிரிநாதர் போற்றும் முருகன் – 1 ஞானமயம் ஆடிக் 

           கிருத்திகை 2-8-21 உரை

4-8-21    9932  அருணகிரிநாதர் போற்றும் முருகன் – 2 ஞானமயம் ஆடிக் 

           கிருத்திகை 2-8-21 உரை

5-8-21    9937  350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் – 1  

           ஞானமயம் 2-8-21 உரை

6-8-21    9940  கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா 

           இந்துமதம்!

7-8-21    9944   350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் – 2  

           ஞானமயம் 2-8-21 உரை

8-8-21    9948   முயற்சியே வெற்றி தரும் ! சுபாஷிதம் – T.S. கௌரிபதிபதி

            சாஸ்திரி – (21- 25)

9-8-21   9953    பலாப்பழம் சாப்பிடலாம் – டயபடீஸ் இருந்தாலும்! (ஹெல்த்கேர்  

            ஆகஸ்ட் 2021 கட்டுஐ)

10-8-21 9957   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 1 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

11-8-21  9962   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 2 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

12-8-21  9965   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 3 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

13-8-21  9969   தேனீக்கள் இல்லாத உலகம் (AIR உரை எண் -8)

14-8-21  9973   மஹரிஷி அரவிந்தர் – 1  (ஞானமயம் 9-8-21 உரை)

15-8-21  9976    மஹரிஷி அரவிந்தர் – 2  (ஞானமயம் 9-8-21 உரை)

15-8-21  9977    தெய்வத் தமிழ் கண்டவர்!

16-8-21  9980   சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின்

             கதை!

17-8-21  9986  மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 1 16-8-21 ஞானமயம் உரை

18-8-21 9991     மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 2 16-8-21 ஞானமயம் உரை

19-8-21 9994    மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 3 16-8-21 ஞானமயம் உரை

20-8-21 9998     பக்திப் பெருக்கால் தம்மை மறந்து ஆடுவோரே உண்மை

             பக்தர்கள்!

21-8-21 10001    பத்தாயிரம் கட்டுரைகளைப் பதிப்பித்த மாபெரும் சாதனை!

22-8-21 10004   புராணத்துளிகள் 3ஆம் பாகம் அத் 13 (41 to 45) 41.மகாலக்ஷ்மி 

             தோற்றம் 42. ஒவ்வோர் இந்திரிய உணர்வினால் ஒவ்வோர்

             ஜீவராசி அடையும் நாசம் 43. சிவாலயம் எழுப்புவதால்

             அடையும் பயன்கள் 44. சிவனை பூஜித்து நன்மை

             அடைந்த்வர்கள் 45. ஹரிச்சந்திரன் சரிதத்தைக் கேட்பதன் பயன்!

23-8-21 10008    தள்ளாடும் தமிழகம்!   

24-8-21 10012    குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்-1, ஞானமயம்  23-8-21   

            உரை

25-8-21  10018 குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்-2, ஞானமயம்  23-8-21

             உரை

26-8-21  10022  அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!

27-8-21  10025  அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய ஊடகச் செய்திகள்!

28-8-21  10028   கேள்விகள் , ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!

30-8-21  10030   எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு?

31-8-21  10034    மகோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்!

***

tags- ஆகஸ்ட் 2021 , ச.நாகராஜன், கட்டுரைகள்,

மேலும் 31 ரிக்வேதப் பொன்மொழிகள் (Post No.9912)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9912

Date uploaded in London –30 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 நற் சிந்தனை காலண்டர்

ஆகஸ்ட் மாத பண்டிகைகள் – 3 ஆடிப் பெருக்கு , 8 ஆடி அமாவாசை , 11- ஆடிப் பூரம், 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம், 20- மொகரம், 21- வரலெட்சுமி விரதம், ஓணம் , 22- ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், 23 காயத்ரி ஜபம், 30- கிருஷ்ண ஜெயந்தி .

அமாவாசை -8, பெளர்ணமி -22, ஏகாதசி விரத நாட்கள் – 4, 18

சுப முஹுர்த்த நாட்கள் -20, 26

முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், அடுத்த எண் துதியையும் , மூன்றாவது எண் மந்திரத்தையும் குறிக்கும் .

xxxx

ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக் கிழமை

வருணனே!  எல்லா மக்களும் பிழை செய்கிறார்கள் நாங்களும் உன் விதியை மீறுகிறோம். கோபப்பட்டு எங்களை அழித்து விடாதே -1-25-1, 1-25-2

xxx

ஆகஸ்ட் 2 திங்கட்  கிழமை

கண்டேன், கண்டேன், கண்ணுக்கினியன கண்டேன்.அவனுடைய தேரையும் இந்த பூமியில் கண்டேன். என் துதிப்பாடலையும் அவன் ஏற்றுக்கொண்டான் – 1-25-18

xxx

ஆகஸ்ட் 3 செவ்வாய்க்  கிழமை

என் நினைவுகள் , மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் பசு மாடுகளைப் போல, எல்லோரும் போற்றும் அவனையே நாடிச் செல்கிறது 1-25-16

xxx

ஆகஸ்ட் 4 புதன்  கிழமை

பேரறிஞனான வருணன் எங்களை நாள்தோறும் நன்னெறியில் செலுத்துவானாக ; எங்கள் ஆயுளை நீடிப்பானாக -1-25-12

xxx

ஆகஸ்ட் 5 வியாழக் கிழமை

நாங்கள் வாழ மேலேயுள்ள, நடுவிலுள்ள,கீழேயுள்ள பந்த பாசங்களிலிருந்து கட்டுக்களிலிருந்து, தளைகளிலிருந்து அவிழ்த்து விடுங்கள் – 1-24-21

Zxxx

ஆகஸ்ட் 6 வெள்ளிக் கிழமை

உணவின் தலைவனே ; நீ ஒளி ஆடைகளை அணிந்து கொள் ; எங்கள் வேள்வியை ஏற்றுக்கொள் – 1-26-1

Xxx

ஆகஸ்ட் 7  சனிக் கிழமை

அக்னியே , நீ தந்தை, நான் மகன்;நீயும்  நானும் உறவினர்கள் ; நான் உன் நண்பன்; நீ என் நண்பன் – 1-26-3

Xxx

ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை

அமிர்த சொரூபனே , எங்களுடைய துதிப்பாடல்கள் , நம் இருவருக்கும் இன்பம் தரட்டும் – 1-26-9

Xxx

ஆகஸ்ட் 9 திங்கட்  கிழமை

அக்னியே ,எங்கும் செல்லும் நீ, எங்களை அருகிலிருந்தோ தொலைவிலிருந்தோ துன்புறுத்த நினைப்பவர்களிடமிருந்து காத்தருள்க 1-27-3

Xxxx

ஆகஸ்ட்10 செவ்வாய்க் கிழமை

சித்திரபானுவே /அக்னியே , நீ நதியின் அலைகளைப் போல செல்வங்களை பகிர்ந்து கொடுக்கிறாய்; யாகம் செய்ப்பவனுக்குப் பொழிகிறாய் 1-27-6

xxx

ஆகஸ்ட் 11 புதன்  கிழமை

பெரிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; சிறிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; இளைஞர்களுக்கு நமஸ்காரம்; முதியோருக்கு நமஸ்காரம்; சக்திமிக்க  நாங்கள் எல்லா தேவர்களையும் போற்றுகிறோம் நான் பெரிய தேவர்களுக்கு மறக்காமல் துதி பாடுவேனாக 1-27-13

xxx

ஆகஸ்ட் 12 வியாழக் கிழமை

இந்திரனே ! உரலில் இடிக்கும்போது உலக்கை விழும் நேரத்தை சரியாக அறிந்து ,இடிப்பதற்கு உதவும் பெண்களைப் போல நீயும்,  இந்த உரலில் இடிக்கும்போது விழும் சோம ரஸத்துளிகளைப் பருகுவாயாக 1-28-3

Xxx

ஆகஸ்ட் 13 வெள்ளிக் கிழமை

இந்திரனே! கழுதை போலக்  கத்தி அபஸ்வரம் பாடும் எங்கள் எதிரிகளை வீழ்த்துவாயாக. எங்களுக்கு ஆயிரக் கணக் கில் குதிரைகளையும் பசுக்களையும் தருவாயாக- 1-29-5

Xxx

ஆகஸ்ட் 14  சனிக் கிழமை

இந்திரனே இந்த சோம ரசம் உனக்கானது. கருத்தரித்த பெட்டைப் புறா விடம் வரும் ஆண் புறா போல வருக்கிறாய்.      அப்போது எங்கள் தோத்திரங்களையும் ஏற்பாயாக  1-30-4

Xxx

ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமை

அக்கினியே, பேரறிஞநான நீ, தீமையான செயல்புரிவோரை நற்பணியில் ஈடுபடுத்துகிறாய்  வீரர்கள் செய்யும் போரில் பரந்த செல்வமாக  இருக்கிறாய் . நீ போரிலே வலியோரைக் கொண்டு மெலிந்தவர்களை கொன்றாய்.1-31-6

Xxx

ஆகஸ்ட் 16 திங்கட்  கிழமை

ஏ நான்கு  கண்கள் உடைய அக்கினியே , புனிதர்களை நீ காக்கிறாய் உனக்கு அ வி அளிக்கும் மனிதனின் மந்திரத்தை நீ மனதில் இருத்திப் போற்றுகிறாய் 1-31-11

Xxx

ஆகஸ்ட் 17 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே , நீ எங்களுடைய அசட்டையை மன்னிக்கவும் . நாங்கள் தீய வழியில் சென்று விட்டோம்.. நீயே நண்பன்; நீயே தந்தை.எல்லோரையும் ஊக்கப் படுத்துகிறாய். எல்லோரையும் கவனித்துக் கொள்பவனும் நீயே -1-31-16

Xxxx

ஆகஸ்ட் 18 புதன்  கிழமை

நான் இந்திரன் செய்த வீரதீரத் செயல்களை சொல்கிறேன். வஜ்ராயுதனான அவன் மேகத்தைப் பிளந்தான்.தண்ணீரை பூமிக்குத் தள்ளினான்.மலைகளில் தண்ணீர் செல்ல வழிகளைக் கீறினான் 1-32-1

xxx

ஆகஸ்ட் 19 வியாழக் கிழமை

இந்திரனே, நீ அஹி என்னும் பாம்புகளிடையே தோன்றிய மேகத்தைப் பிளந்தாய்; பின்னர் மாயாவிகளின் மாயையை அழித்தாய்; அப்பால் சூரியனையும், வானத்தையும் உஷை என்னும் உதய காலத்தையும் தோற்றுவித்தாய். பின்னர் உன்னை எதிர்க்க எந்தப் பகைவனும் இல்லை 1-32-4

xxxx

ஆகஸ்ட் 20 வெள்ளிக் கிழமை

இந்திரனே நீ  அஹி  என்னும் பாம்பு அரக்கனைக் கொல்லும்போது உன் இதயத்தில் பயம் நுழைந்தபோது நீ யாரை நாடினாய் ? கலங்கிய நீயே 99 நதிகளை பருந்து போல விரைந்து கடந்தாயே 1-32-14

Xxxx

ஆகஸ்ட் 21  சனிக் கிழமை

வாருங்கள், நாம் திருடப்பட்ட பசுக்களை  மீட்க இந்திரனிடம் செல்லுவோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரரறிவை அதிகப்படுத்துகிறான் ; பிறகு அவன் பசுக்களின் செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அளிப்பான் 1-33-1

xxx

ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை

என் மனம் மரத்தின் உச்சியில் கட்டிய கூட்டுக்குப் பருந்து பாய்வது போல இந்திரனிடத்தில் பாய்கிறது . மறைந்திருக்கும் செல்வம் தரும் அவனைப் புகழ்மிகு கீதம் இசைத்துப் போற்றுகிறேன் 1-33-2

Xxxx

ஆகஸ்ட் 23 திங்கட்  கிழமை

அவன் பூமியின் எட்டு திசைகளையும், மூன்று வறண்ட பகுதிகளையும், ஏழு நதிகளையும் ஒளிமயமாக்கினான்.சவிதா தேவனின் கண் தங்க நிறமானது ; வழிபடுபவனுக்கு தேர்ந்து எடுத்த செல்வத்தை அவன் அளிக்கிறான் (சவிதா= சூரிய தேவன்)-1-35-8

Xxxx

ஆகஸ்ட் 24 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே ! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத அத்தனை போரையும் மட்பாண்டங்களை தடிகளால் அடிப்பது போல அடித்து நொறுக்கு – 1-36-16

மருத்துக்கள் (காற்று தேவன்) புள்ளி மான்களோடும் ஈட்டிகளோடும் மின்னும்  நகைகளோடும், தாமே துலங்கும் ஒளியோடும் ஒருமித்துப் பிறந்தார்கள்- 1-37-2

xxxx

ஆகஸ்ட் 25 புதன்  கிழமை

மருத்துக்கள் மொழியைப் பிறப்பிக்கிறார்கள்; தண்ணீரை அவற்றின் வழிகளிலே செலுத்துகிறார்கள்; அவர்கள் கதறும் பசுக்களை முழங்கால் அளவு நீருள்ள இடத்தில் பருக அனுப்புகிறார்கள் 1-37-10

xxx

ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை

மருத்துக்களே எப்போது உங்கள் இரு கைகளாலும் எங்களை மகனைத் தந்தை தூக்குவது போல தூக்குவீர்கள்? 1-38-1

xxx

ஆகஸ்ட் 27 வெள்ளிக் கிழமை

பேரறிஞனான இந்திரனே ! எங் களுக்கு நிறைய செல்வத்தைக் கொடு ; ஆனால் வணிகனைப் போல செயல்படாதே – 1-33-4

Xxx

ஆகஸ்ட் 28  சனிக் கிழமை

அஸ்வினி தேவர்களே ! ஒரு நாளைக்கு மும்முறை வந்து குற்றங்களை நீக்கும் நீங்கள் இன்று எங்கள் வேள்வியை ன்று முறை தேனால் தெளியுங்கள்.; இனிமைப் படுத்துங்கள். காலையிலும் மாலையிலும் எங்களுக்கு வலிமை தரும் உணவைப் படையுங்கள் 1-34-3

Xxx

ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை

3 முறை எங்கள் மனைக்கு வாருங்கள்; நீதியுள்ள மனிதனிடம் 3 முறை செல்லுங்கள்; உங்கள் பாதுகாப்புக்கு உரியவர்களிடம் 3 முறை தோன்று ங்கள்; எங்களுக்கு 3 மடங்கான அறிவைக் கற்பியுங்கள்; உங்களுக்குத் திருப்தி தரும் பொருட்களை 3 முறை தாருங்கள்; மழையைப் பொழியும் இந்தி ரண் போல் 3 முறை உணவைப் பொழியுங்கள் 1-34-4

Xxxx

ஆகஸ்ட் 30 திங்கட்  கிழமை

ஒளியுள்ள உலகங்கள் மூன்று உண்டு; இரண்டு சவிதா அருகில் இருக்கிறது . ஒன்று மானிடர்களை எமலோகத்துக்கு கொண்டு செல்கிறது; தேரின் அச்சாணி போல அமிர்தர்கள் ஸவிதாவில் நிலைக்கிறார்கள்; சவீதாவின் சிறப்பை அறிபவன் எங்களுக்கு கூறட்டும். 1-35-6

xxx

ஆகஸ்ட் 31 செவ்வாய்க் கிழமை

உங்கள் வாயால் ஸ்லோகங்களை சொல்லுங்கள். மழையைபி பரவலாக்கும் மேகத்தைப் போல அதை பரத்துங்கள்;காயத்ரீ சூக்தத்தைப் பாடுங்கள் 1-38-14

–subham–

 tags — மேலும் ,ரிக்வேத, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2021, காலண்டர்