India’s Brahmos Missiles
அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்
ச.நாகராஜன்
விஞ்ஞானி ஃப்ராங்க்ளின் ரூஹெல்
விண்ணில் தோன்றும் பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆராயும் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஃப்ராங்க்ளின் ரூஹெல் என்பவர். இவர் ஒரு சிறந்த க்ரிப்டோஜூவாலஜிஸ்டும் கூட. கொள்கை ரீதியான இயற்பியலில் பி,ஹெச்.டி பட்டம் பெற்றவர்.
பல அறிவியல் தொலைக்காட்சி தொடர்களுக்கும் திரைப்படங்களுக்கும் ஆலோசகராகப் பணியாற்றிய இவரது புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கும் பரபரப்புடன் விற்பனையாகியுள்ளன.
இவர், தான் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சிகள் மூலமாக இந்திய இதிஹாஸங்களான ராமாயணமும் மஹாபாரதமும் அணு ஆயுதங்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் விரிவாக விளக்குகின்றன என்கிறார்.
“இந்திரனுடைய விமானங்களைப் பற்றி 32 விளக்கங்கள் உள்ளன. விமானம் இயக்கும் விதம், அதன் வடிவமைப்பு, ஒளி விளக்குகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சூரியனுடைய ஆற்றலால் இயங்கும் விமானங்கள் இவை. லேசர் ஒளி ஆயுதங்கள், ராடார் திரைகள் ஆகியவை இந்த விமானங்களில் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது” என்று அவர் வியந்து கூறுகிறார்.
அனுமனின் வேகத்தைக் கணக்கிட்ட கோல்ட்மேன்
பெர்க்லி பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியரான ஆர்.பி.கோல்ட்மேன் அனுமனின் வேகத்தையே கணக்கிட்டு விட்டார்.சஞ்சீவி மலை இருந்த இடத்திற்குச் சென்று அதைப் பெயர்த்து இலங்கைக்கு வான்வழியே வந்து திருப்பி அதை எடுத்த இடத்திலேயே வைக்க அவர் பறந்த வேகம் சுமார் மணிக்கு 660 கிலோமீட்டர் இருக்க வேண்டும் என்பது அவரது கணிப்பு.
அர்ஜுனன் கண்ட வான் உலகங்கள்
சந்திரனில் காலடி பதித்தவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று நவீன அறிவியல் கூறுகிறது. ஆனால் மஹாபாரத கதாநாயகனான அர்ஜுனனோ இந்திரனின் புத்திரன். ஆகவே இந்திரனின் தேரில் அவன் வானுலகம் சென்றது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்திரனின் சாரதியான மாதலி அர்ஜுனனைத் தேரில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது வழியில் தென்படுகின்ற உலகங்களைக் கண்டு அர்ஜுனன் ஆச்சரியப்படுகிறான். அவற்றையெல்லாம் பற்றி ஏராளமான கேள்விகளைக் கேட்கிறான். இவை அனைத்திற்கும் மாதலி விரிவாக பதில் கூறுகிறான்.
இந்த விவரங்களையெல்லாம் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் புராதன பாரதத்தில் அணு ஆயுதங்களும் அதி வேகமாகப் பறக்கும் பறக்கும் தட்டுகளும் இருந்ததை அறியலாம். முதல் அஸ்ட்ரானட் அல்லது விண்வெளி வீரனாக அர்ஜுன்னையே கூறலாம்.
India’s Agmi Missiles
டபிள்யூ ரேமாண்ட் ட்ரேக்கின் ஆய்வுகள்
இது பற்றி ஆராய்ந்த இன்னொரு அறிஞர் பிரிட்டனைச் சேர்ந்த டபிள்யூ..ரேமாண்ட் ட்ரேக் என்பவர். (1913-1989) இவர் புராதன விண்வெளி வீரர்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் ஒன்பது புத்தகங்கள் எழுதியுள்ளார்.மிகவும் அறிவார்ந்த உயிரினங்கள் அல்லது தேவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பூமி வாழ் மக்களுக்குத் தந்ததாகக் கருதுகிறார். Gods and Spacemen in the Ancient East என்ற தனது புத்தகத்தில் மஹாபாரதத்தில் வரும் ஏராளமான அஸ்திரங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அவர் மேற்கோள்கள் காட்டி விளக்குகிறார்.
பிரம்மாஸ்திரம்,ஆக்னேய அஸ்திரம், நாராயணாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற திவ்ய அஸ்திரங்களின் விளக்கம் பல நூறு அணுகுண்டுகள் வெடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதை ஒத்திருக்கிறது. ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் அழிவையே உலகம் இன்னும் கூட தாங்க முடியவில்லை என்பதை நினைத்துப் பார்த்தால் மஹாபாரத அஸ்திரங்களின் உக்கிரமும் தொழில்நுட்பமும் நம்மை வியக்க வைக்கும்.
துரோண பர்வத்தில் வரும் அணு ஆயுதங்கள் பற்றிய விளக்கம் அனைவரையும் வியப்புறச் செய்யும். எடுத்துக் காட்டாக அஸ்வத்தாமன் எய்த ஆக்னேயாஸ்திரம் பற்றிய ஒரு சிறிய பகுதி இதோ:
“அக்னி ஜ்வாலையால் சூழப்பட்ட மழை பொழிவது போன்ற சரங்கள் நெருக்கமாக வானில் தோன்றியது.அவை அர்ஜுனனை நோக்கி வந்தன.கொள்ளிக்கட்டைகள் ஆகாயத்திலிருந்து விழுந்தன.திக்குகள் பிரகாசிக்கவில்லை. பயங்கர இருளானது விரைவாக அந்த சேனையை வந்தடைந்தது. காற்றும் உஷ்ணமாக வீசியது.” என்று ஆரம்பித்து உலகம் கோரமான அந்த ஆயுதத்தால் என்ன பாடுபட்டது என்பதை வியாஸர் விரிவாக விளக்குகிறார். ஆக மேலை நாட்டு அறிஞர்கள் பலரும் வியக்கும் இந்திய இதிஹாஸங்களைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகள் இந்தியர்களின் புராதன தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகின்றன.
அதுமட்டுமின்றி கோரமான ஆயுதங்களை கோபத்தால் கூட உலகின் மீது பிரயோகிக்கக் கூடாது என்பதையும் இந்திய புராண இதிஹாஸங்கள் விளக்குவது நமது முன்னோர்களின் பொறுப்புணர்ச்சியை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக தர்மர் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்று வந்த அர்ஜுனனிடம் பாசுபத அஸ்திரத்தை தமக்குக் காட்டுமாறு கேட்ட போது அதை விளையாட்டாகக் கூடப் பிரயோகிக்கக் கூடாது என்று கட்டளை வருவதால் அதன் மஹிமையை அவன் அவருக்குக் கூட காண்பிக்கவில்லை.
இதே போல பிரம்மாஸ்திரத்தை விடுவிக்கும் ஆற்றல் பெற்றிருந்தும் கூட அதன் மஹிமையை உணர்ந்த அனுமன் அதற்குக் கட்டுப்பட்டிருந்ததையும் ராமாயணத்தின் மூலம் உணரலாம்.
திவ்ய அஸ்திரங்களை எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் இருந்ததை நமது இதிஹாஸ புராணங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
அறிவியல் வியக்கும் அஸ்திரங்களின் மஹிமைக்கு ஓர் எல்லையே இல்லை!
மக்கள் கோஷம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை: written by Santanam Nagarajan
Related Topics already available here; please read the following articles written by Santanam (London) Swaminathan in this blog:
Is Brahmashtra a Nuclear Weapon?
Maruti Miracle: 660 Kms per Hour
How Did Rama Fly His Pushpaka Vimana/plane?
Time Travel by Two Tamil Saints
Free Charter Flight to Heaven
Teleportation Miracles in Hindu Scriptures
Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin
God With A Laser Weapon
Hindu God With ‘’An Ipod’’
Scientific Proof for Samudrika Lakshan
Do Hindus believe in ETs and Time Travel?
Bhishma- First Man to Practise Acupuncture
Why Do Hindus Follow Homeopathy?
Hindu Views on Comets
Science Behind Swaymbu Lingams
Aladdin’s Magic in Ramayana
Aladdin’s Magic Lamp and Tamil Saints
What is Special About India?
Science Behind Deepavali ( Two Part Article)
Hindus’ Future Predictions ( Two Part Article)
Lie Detector in Upanishads
Head Towards North is Wrong
Spaceships and Special Prayer Days
Miracles! You Can Do It
Great Engineers of Ancient India
The Amazing Power of the Human Mind
To get the above articles, type any of the article titles and add ‘from tamilandvedas.wordpress.com or from swamiindology.blogspot.com
For further list contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.