சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Post. 9987)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9987

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் உலக யுத்தம் முடிந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. ALDOUS HUXLEY  அவருடைய கட்டுரைகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுவன.

பிரேவ் நியூ ஒர்ல்ட் BRAVE NEW WORLD என்ற அவருடைய புதினம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

ஹக்ஸ்லி மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தை நாடே அறியும். ஏனெனில் ஹக்ஸ்லியின் தாத்தா தாமஸ் ஹக்ஸ்லி ஒரு உயிரியல் விஞ்ஞானி. டார்வினின் பரிணாமக் கொள்கை THEORY OF EVOLUTION உருவாக அவரும் உதவி செய்தார். ஆகையால் அவருக்கும் ஈடன் கல்லூரியிலும் ETON COLLEGE  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் அவருக்கு 16 வயதில் ஏற்பட்ட ஒரு கண் நோய் அவரை ஏறத்தாழ குருடராக (nearly blind) ஆக்கிவிட்டது.

முதல் உலகப்  போரில் சண்டை போட வேண்டும் அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற அவருடைய ஆசை பொய்யாய் பழங் கனவாய்ப் போயிற்று. அதிலும் ஒரு நன்மை விளைந்தது. அவர் கவிதை எழுதுவதிலும் கதை எழுதுவதிலும் கவனத்தைச் செலுத்தினார். 27 வயதிலேயே  அவருடைய முதல் நாவல் க்ரோம் யெல்லோ CHROME YELLOW வெளியானது ; சமுதாயத்தின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும்  நக்கலும் நகைச் சுவையும் மிகுந்த நாவல் அது. அடுத்து வந்த 4 நாவல்களில் ஒன்றுதான் பிரேவ் நியூ வோர்ல்ட் . இது அவருக்கு இலக்கிய உலகிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது.

எதிர்காலத்தில் உருவாகும் கட்டுப்பாடு மிக்க, தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு சமுதாயத்தை வருணிக்கும் நாவல் அது. அதில் ரிக் வேத தாக்கத்தையும் காணலாம்.மக்களை எப்போதும் மகிழ்சசியில் திளைக்கச் செய்ய  ‘சோமா’ SOMA என்னும் ஒரு அபூர்வ  குளிகை உருவாக்கப்படுவது குறித்து அந்த நாவல் பேசுகிறது. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களிலும்  உள்ள பல்லாயிரம் மந்திரங்களில் அற்புதமான சோமரசம் பற்றி ரிஷிகள் பாடியுள்ளனர். (ஆனால் அந்தக் குளிகை இப்போது அழிந்து போயிற்று) ‘சோமா’ வுடன் ஹக்ஸ்லி  நிறுத்தவில்லை. எந்த வேலை பார்க்க என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டு குழந்தை பெறும்  அறிவியல் முன்னேற்றம் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆயினும் மக்கள் ஆன்மா ( SOULLESS, EMOTIONLESS) இல்லாதவர்களாக உணர்ச்சி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி மேலை நாட்டு நாகரீகத்தின் மீது கேள்விக்குறிகளைப் போடுகிறார் . அதாவது தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து நிற்கும் அதே நேரத்தில் மக்கள் அடிப்படை பண்புகளை இழப்பத்தைச் சித்தரிக்கும் நாவலே BRAVE NEW WORLD பிரேவ் நியூ வோர்ல்ட் / துணிச்சல் மிக்க புதிய உலகம்.

தீவு என்ற அவருடைய கடைசி  நாவலில் நிறைய இந்துமத குறிப்புகள் வருகின்றன . சிவ பெருமானுடைய ஆனந்த நடனம், மோக்ஷம், முருகன் மைலேந்திர என்ற தமிழ் கதாபாத்திரம், ராஜா, ராணி, மற்றும் நிறைய சம்ஸ்க்ருத சொற்கள் இடம்பெறுகின்றன . இது மத தாக்கத்தை இதில் அதிகம் காணலாம்.

பிரான்ஸ், இதாலி ஆகிய நாடுகளில் வசித்துவிட்டு ஹக்ஸ்லி, அமெரிக்காவுக்குச் சென்று ஹாலிவுட்டில் சினிமா கதை வசனம் எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை கலிபோர்னியாவில் இருந்து நாவல்கள், கவிதைகள், தத்துவம் பற்றிய கட்டுரைகள் , அரசியல் விஷயங்கள் ஆகியவற்றை  எழுதி வந்தார் . ரிக் வேத சோமா குளிகை பற்றிய அவருடைய சிந்தனை மனதை மாற்றக்கூடிய மருந்துகளை (MIND ALTERIG DRUGS) உருவாக்கும் விஷயம் பற்றியும் எழுதத்  தூண்டியது. இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகள் பற்றியும் இரண்டு புஸ்தகங்களை எழுதினார்.

பிறந்த தேதி – ஜூலை 26, 1894

இறந்த தேதி – நவம்பர் 22, 1963

வாழ்ந்த ஆண்டுகள் – 69

ஹக்ஸ்லி எழுதிய நூல்கள்:-

1921 – CHROME YELLOW

1923- ANTIC HAY

1928 – POINT COUNTER POINT

1932- BRAVE NEW WORLD

1936 – EYELESS IN GAZA

1939 – AFTER MANY A SUMMER

1944 – TIME MUST HAAVE A STOP

1948 – APE AND ESSENCE

1958 – BRAVE NEW WORLD REVISITED

1962- ISLAND.

–SUBHAM —

TAGS- சோம ரசம் , நாவல் ,ஆங்கில ,ஆசிரியர்,  ஆல்டஸ் ஹக்ஸ்லி, ALDOUS HUXLEY

இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில சிறுவர் கதை ஆசிரியர் (Post.9844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9844

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜங்கிள் புக் JUNGLE BOOK  என்ற கதையையும் அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கையும் RUDYARD KIPLING அறியாதோர் வெகு சிலரே. அவர் பம்பாயில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தார். ஐந்து வயதுக்குப் பின்னர் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியாவில் பல பதவிப் பொறுப்புகளில் இருந்தார்.

பிறந்த தேதி – டிசம்பர் 30, 1865

இறந்ததேதி – ஜனவரி 18, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 70

1907ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதிலிருந்தே அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர், இந்திய சுதந்திர எதிர்ப்பாளர் என்பது விளங்கும் . அதுமட்டுமல்ல கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் இந்தக் கருத்துக்களும் இனவேற்றுமையும் காணப்படும். ஆயினும் கதை சொல்லுவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்  காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தம்பதிகளுக்குப் பிறந்தார் என்பதால் இதில் வியப்புமில்லை. இந்தியா  பற்றி எழுதிய கதை, கவிதைகளில் தான் நேசித்த விஷயங்களையும் சொல்கிறார். 17 வயது வரை இங்கிலாந்தில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைக் துவக்கி தனது கதைகளையும், கவிதைகளையும் வெளியிடத் துவங்கியவுடன் புகழ் பரவியது. 29ஆவது வயதில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் ஜங்கிள் புக் JUNGLE BOOK என்னும் காட்டு மிருகங்கள் பற்றிய கதை எழுதினார். இது அவரது மகளுக்குச் சொல்லிய கதையின் அடிப்படையில் அமைந்தது.  காட்டு விலங்குகளிடையேயே வாழ்ந்த ஒரு சிறுவன் பற்றிய கதை இது . 1899ல் அவரது மகள் இறந்தவுடன் குடும்பம் இங்கிலாந்துக்கே திரும்பிவந்தது.

இந்தியாவில் நடக்கும் துணிகர, சாகசச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு கிம் KIM  என்ற நாவல் எழுதினார். இது நேருஜிக்கு மிகவும் பிடித்த  நாவல். ‘இப்போது’ மிருகங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதை 37 வயதில் நகைச் சுவையுடன் எழுதினார்.

வன விலங்குகள் பற்றி இவர் எழுதியதையே சிறியோரும் பெரியோரும் விரும்பிப் படித்தனர். ஆங்கிலேயர்கள் தொலைதூரப் பிரதேசங்களில் செய்த சாகசங்களை எழுதியதால் ஆங்கிலேயரும் விரும்பிப் படித்தனர். முதல் உலகப் போரில் கிப்ளிங்கின் 18 வயது மகன் இறந்தான். இதற்குப் பின்னர் அவர் எழுதியவற்றில் இந்த சோகம், துயரத்தின் தாக்கத்தை காணலாம்.

-சுபம்–

Publications

1888 – SOLDIERS THREE

1888 – BAA, BAA, BLACK SHEEP

1890 – WEE WILLIE WINKIE

1892- BARRACK ROOM BALLADS

1894- THE JUNGLE BOOK

1899- STALKY AND CO

1901- KIM

1902 – JUST SO STORIES

1906- PUCK OF POOK’S HILL

–SUBHAM—

tags- நோபல் பரிசு, ரட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக்  , ஆங்கில,  சிறுவர் கதை ஆசிரியர், Rudyard Kipling

ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர் ஹென்றி ஜேம்ஸ் (Post.9649)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9649

Date uploaded in London – –26 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர் ஹென்றி ஜேம்ஸ்

Henry James

(1843 – 1916)

ஹென்றி ஜேம்ஸ் ஒரு ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர், – சிறுகதை ஆசிரியர். நியூயார்க்கில் பிறந்தார். இவரது தந்தை சமயம் தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார். பணம் படைத்தவர். இதனால் ஜேம்ஸ் அவர்களுக்கு விருப்பம் எதையும் செய்ய முடிந்தது.

      சிறுவயதிலேயே ஐரோப்பா சென்று வந்தார். இதனால் ஐரோப்பிய பண்பாட்டில் அவருக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும் பல பள்ளிகளில் அவர் கல்வி கற்றார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் சட்டம் பயின்றார். படிப்பை முடித்த சிறிது காலத்தில் அவருடைய முதலவது நாவல் வெளிவந்தது. 30 வயதானபோது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்தார்.

      ஜேம்ஸின் படைப்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

      பழைய அமைதியான ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும், புதிய முதிர்ச்சி பெறாத அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைச் சித்தரிக்கும் நாவல்கள் முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டன. “PORTRAIT OF A LADY”, “DAISY MILLER”, “THE BOSTONIANS” இவ்வகையைச் சேர்ந்தவை.

      இரண்டாவது காலகட்டத்தில் அவர் எழுதிய நாவல்கள் முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. WHAT MAISIE KNEW, THE AWKWARD AGE ஆகிய நாவல்கள் இந்த காலத்தைச் சேர்ந்தவை.

மூன்றாவது காலகட்டத்தில் மீண்டும் அமெரிக்க ஆங்கிலேய மோதல்கள் முரண்பாடுகளை மையமாக வைத்து எழுதினார். “THE WINGS OF A DOVE”, THE AMBASSADORS ஆகியன இந்தக் காலத்தைச் சேர்ந்தவை.

ஜேம்ஸ் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. 1915-இல் அவர் பிரிட்டிஷ் குடிமகனானார். 1916-இல் “ORDER OF MERIT” விருது பெற்றார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags– ஆங்கில, அமெரிக்க, நாவலாசிரியர், ஹென்றி ஜேம்ஸ், Henry James,

லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

IMG_7857

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2308

Time uploaded in London :–7-58    AM

(Pictures in this article are taken by London swaminathan) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7854

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உலகப் புகழ்பெற்ற ஒரு நாய்க்கு ஒரு சிலை இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். அதற்கு சிலை பெறும் தகுதி உண்டு. ஒரு பேராசிரியர் தினமும் அந்த நாயை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ரயில் ஏறுவார். மாலையில் திரும்பி வரும்போது அவரை நாய்  வரவேற்கும். ஒரு நாள் அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். பாவம் ஹசிகோ என்ற பெயருள்ள அந்த நாய்க்கு எஜமானர் இறந்தது தெரியாது. ஒன்பதரை மாதங்களுக்கு தினமும் ரயில் வரும் அதே நேரத்துக்குச் சென்று காத்திருந்தது. பின்னர் இறந்து விட்டது. இன்று ஹசிகோ நாயைத் தெரியாதோர் ஜப்பானில் இல்லை. அது புகழுக்கு உரிய நாய்.

ஆனால் வேடிக்கை! ஒரு செயற்கரிய செயலும் செய்யாமலேயே சிலை பெற்று விட்டது ஹாட்ஜ் (Hodge) என்னும் பூனை. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” – என்பது தமிழ்ப் பழமொழி. ஹாட்ஜ் செய்த புண்ணியம் என்ன தெரியுமா? அது உலகப் புகழ் பெற்ற ஆங்கில அகராதி மன்னன், பெரும் எழுத்தாளன், இலக்கிய விமர்சகன், ஷேக்ஸ்பியர் நாடகத் தொகுப்பாளன், பேச்சு மன்னன், நாவுக்கரசன் சாமுவேல் ஜான்சனின் Samuel Johnson (1709 – 1784) நெருங்கிய தோழன். அவ்வளவுதான். அவர் வளர்த்த பூனை என்பதால் அதற்கு, ஜான்சன் வீட்டுக்கு முன்னால், தெருவிலேயே ஒரு சிலை. அதைக் காண தினமும் ஒரு கூட்டம். நானும் போய்ப் புகைப்படம் எடுத்தேன்.

ஆனால் நான் போனது பூனையைத் தேடி அல்ல. புனைக்கதை மன்னனைத் தேடி! அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன்.

IMG_7860

சாமுவேல் என்ன சாதித்தார்? 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வருவதற்கு முன்னர், மிகப்பெரிய அகராதியைத் தயாரித்து ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாத இடம் பெற்றார். பிரான்சு நாட்டில் 40 அறிஞர்களைக் கொண்ட குழு, 40 ஆண்டுக் காலத்துக்கு உழைத்து பிரெஞ்சு மொழி அகராதியைத் தயாரித்தது. ஆனால் சாமுவேல் ஜான்சனோ மூன்றே ஆண்டுக் காலத்தில் ஒரு அகராதியைத் தயாரித்தார்.

கடன்கார எழுத்தாளன்!

இதற்காக அவரைப் பாராட்டி மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 300 பவுண்டு வருடாந்திய பென்ஷன் தொகை அளித்தார். அதை ஏற்க ஜான்சன் பயந்தார். மற்றொருவரின் கைப்பாவை ஆகி, எழுத்துச் சுதந்திரம் பறி போய்விடுமோ என்று அஞ்சினார். பின்னர் நண்பர்கள் சொற்படி அதை ஏற்றார். இத்தனைக்கும் அவர் கடன் பாக்கிக்காக இரண்டு முறை கைதானவர்!! ஒரு முறை 4 பவுண்டு, இன்னொரு முறை 40 பவுண்டு கடன் பாக்கிக்காக போலீசார் அவரைக் கைது செய்தனர். ஒவ்வொரு முறையும் அவரை நண்பர்கள் காப்பாற்றினர். அதுவும் எப்படி? இலவச அன்பளிப்புத் தொகை கொடுக்கவில்லை. இவர் ஏதேனும் ஒரு கதை, அல்லது இலக்கியப் படைப்பு எழுதித் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் பிணைத் தொகையைக் கொடுத்து இவரை விடுவித்தனர்.

ஆனால் நாளடைவில் ஜான்சனின் புகழ் பரவவே, அவரைச் சுற்றி அறிஞர் கூட்டம் குவிந்தது. அவர் தொடங்கிய வாசகர் வட்டத்தில் சேர ‘கியூ’வில் நிற்கவும். சிபாரிசுக் கடிதம் பெறவும் தேவை ஏற்பட்டது.

ஜான்சனுக்கு ஸ்காட்லாந்துக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால் ஸ்காட்லாந்திலிருந்து வந்த ஜேம்ஸ் பாஸ்வெல் என்ற அறிஞர் இவருடன் நண்பராகி ‘ஜான்சனின் வாழ்க்கை வரலாறு’ என்று புத்தகம் எழுதினார். அதனால் ஜான்சனின் புகழ் உச்சாணிக்குப் போய்விட்டது.

IMG_7865

ஜான்சன் சிறந்த பேச்சாளர்; நகைச்சுவை ததும்ப உரையாற்றுவார். அவருடைய இலக்கிய, அரசியல் விமர்சனத்தைக் கேட்க எப்பொழுதும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். அவர் சொன்னதை எல்லாம் பத்திரிகைகள் வெளியிடுமளவுக்குப் புகழ் பரவியது. அவரே ‘ராம்ப்ளர்’ என்றொரு பத்திரிக்கையும் நடத்தினார். ஆனால் பின்னர் அது மூடு விழா கண்டுவிட்டது.

ஜான்சன் ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியதால் 17 வீடுகளுக்கு இடம் மாறினார். பிறந்ததோ லண்டனுக்கு வெளியே. இப்பொழுது அவர் வசித்த ஒரு வீட்டில் மியூசியம் இருக்கிறது அங்கு அவருடைய இரண்டு ஒரிஜினல் அகராதிகள் உள்ளன. மேலும் 4 நகல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.

IMG_7893

ஷேக்ஸ்பியர் நாடகத்தொகுப்பு

ஜான்சனுக்கு முன்னால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை வெளியிட்டோரும், நடித்தோரும், ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை மக்களின் ரசனைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றினர். ஜான்சன் மிகப் பெரிய முயற்சி செய்து ஷேக்ஸ்பியரின் ஒரிஜினலை அப்படியே வெளியிட்டார்.  ஷேக்ஸ்பியர் காலத்தில் அந்தச் சொற்களுக்கு என்ன பொருள் நிலவியதோ அதை விளக்கி எழுதி நல்ல பதிப்பைக் கொண்டுவந்தார். இன்று நாம் காணும் நாடகம் எல்லாம் ஜான்சன் வெளியிட்ட திருத்திய பதிப்பே!

லண்டன் “போர்” அடித்தால், வாழ்க்கையே ‘போர்’!

பிற்காலத்தில் ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாஸ்வெல், ஸ்காட்லாந்திருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்து குடியேறத் தயங்கினார். லண்டனுக்கு வந்துவிட்டால் அது மிகவும் சலிப்பை ஏற்படுத்துமே என்றார். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்: “ஒருவனுக்கு லண்டன் மாநகரம் களைப்பையோ சலிப்பையோ எற்படுத்துமானால் அவர் வாழ்க்கையே சலிப்பானதுதான்” என்றார். லண்டனில் ‘போர்’ அடித்துப் போனவர் எவரும் இல்லை! . பின்னர், ஜேம்ஸ் பாஸ்வெல்லுடன், ஸ்காட்லாந்து முதலிய இடங்களைச் சுற்றிப்பார்த்தார்.

ஜன்சன் எழுதிய கதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனக்கள் எல்லாம் புத்தக வடிவில் வந்துவிட்டன. ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, இலக்கிய விமர்சனத்தோடு ஆறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

IMG_7877   IMG_7878

உருவத்தில் பெரியவர்; விநோத நடை, உடை பாவனை!

1709 ஆம் ஆண்டில் லிட்ச்பீல்ட் என்னுமிடத்தில் பிறந்த ஜான்சன் ஆஜானுபாஹு. பலத்த உடல்வாகு கொண்டவர். கண்பார்வை மங்கியவர். புத்தகங்களை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கக்கூடியவர். ஒரு காதும் கேளாது. விநோதமான நடவடிக்கைகளை உடையவர். இதனால் அவரைப் பலரும் பைத்தியம் என்று நினைப்பர். வில்லியம் ஹோகார்த் என்ற ஓவியர் இவரைப் பார்க்க வந்த போது, சரியான மடையன் என்று நினைத்தார். அவர் பேசத் துவங்கிய பின்னர்தான் அவர் ஒரு அறிஞர் என்று தெரிந்தது. அவருடைய தந்தை புத்தகக்கடை வைத்திருந்தார். அவருடைய கண், காதிலிருந்த குறையை, அவர் மூளை ஈடு செய்தது. எதையும் ஒருமுறை படித்தவுடன் அது அப்படியே மனப்பாடம் ஆகிவிடும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போனவர், பணம் கட்ட முடியாததால் படிப்பைவிட்டு விட்டு ஆசிரியர் ஆனார். பின்னர் பத்திரிக்கையாளர் ஆனார்.

அவருடைய வாழ்வில் நடந்த இன்னொரு விநோதம், அவர் வயதைப் போல இரு மடங்கு வயதுடைய ஒரு விதவையைத் திருமணம் செய்துகொண்டதாகும். கையில் காசு இல்லததால் காப்பிக் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் பொழுதைக் கழித்த அவர் 1738ல் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட.

அந்தக் காலத்திலிருந்த ஆங்கில அகராதிகள் தெளிவான விளக்கம் இல்லமல் குறைபாடுகளுடன் இருந்தன. ஆகையால் ஒரு புத்தகக் கடைக்காரர், ஜன்சனிடம் பணம் கொடுத்து, அவருக்கு ஆறு உதவியாளர்களையும் அனுப்பினார். ஜன்சனின் பல்துறை அபார அறிவினால் சில ஆண்டுகளில் அப்பணி முடிந்து அவருக்கு பெரும் புகழைக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அகராதி வெளிவரும்வரை அகராதி என்றால், அது ஜான்சனின் அகராதிதான் என்று பெயர் விளங்கியது. அவர் 43,000 சொற்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

IMG_7902  IMG_7918

1759 ஆமாண்டில் அவர் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே அவரிடம் பணம் இருந்தது. ஒரு நாவல் எழுதித் தருவதாகச் சொல்லி பணம் கடன் வாங்கினார். சொன்னபடியே நாவலையும் முடித்துக் கொடுத்தார்.

ஆங்கிலக் கவிஞர்கள் வாழ்க்கையை இவர் எழுதுவதற்கு கொஞ்சம்தான் பணம் வாங்கிக் கொண்டார். தான் முப்பது ஆண்டுக் காலம் படித்ததை நினைவிற்கொண்டு அருமையாக எழுதி முடித்தார். இதைப் பார்த்துவிட்டு சிலர்,  “என்ன அநியாயம் இது? இவ்வளவு பெரிய பணிக்கு கொஞ்சம் பணம் கொடுதிருக்கிறார்களே?” என்று அங்கலாய்த்தனர். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்:- “அவர்கள் சரியாகத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள். நான் தான் கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன்” – என்றார்

பெருந்தன்மை மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்தவர். ஆங்கில இலக்கிய உலகில் அழியா இடம் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.

IMG_7909

IMG_7912

IMG_7908

–Subham–