பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்) -Post No.10093

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,093

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)

அலெக்ஸாண்டர் தூமா(ஸ் ) ALEXANDRE DUMAS 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர். அவர் எழுதிய இரண்டு துணிகர நாவல்களைப் பலரும் படித்திருப்பார்கள் – த்ரீ மஸ்கிடீர்ஸ் THREE MUSKETEERS /மூன்று துப்பாக்கி வீரர்கள் ; THE COUNT OF MONTE CRISTO தி கவுன்ட் ஆப் மா ண்டி கிறிஸ்டோ

தூமா,  பிரான்ஸ் நாட்டில் கிராப்புறத்தில் பிறந்தார். தந்தை ஒரு ராணுவ அதிகாரி; தாய் சத்திரத்தை நடத்தும் ஒரு பெண்மணி.அவருடைய தந்தை நெப்போலியன் போனபர்ட் படையில் பணிபுரிந்தார். சண்டையில் உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி தூமா , தலைநகர் பாரிசுக்கு வந்தார். அப்போதுதான் எழுதத் துவங்கினார்.

27 வயதில் மூன்றாவது ஹென்றி Henry III என்ற வரலாற்று நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து, இடைவிடாது புதிய கதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதி வந்தார். எப்போதாவது ஒய்வு வேண்டுமென்றால் கிராப்புறத்திற்குச் சென்று ஓய்வு எடுப்பார்.

பிரான்ஸ் நாட்டின் முழு வரலாற்றையும் எழுத வேண்டும் எனது அவருடைய ஆசை. அதன் காரணமாக எழுந்ததுதான் முன்னர் குறிப்பிட்ட இரண்டு நாவல்கள் .

நாவல் , கதைகள் எழுதுவதில் எவ்வளவு வேகம் இருந்ததோ அவ்வளவு வேகம் செலவு செய்வதிலும் இருந்தது. இதனால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன்காரனானாகி விடுவார். மீண்டும் உழைத்து கடனை அடைப்பார்.

தூமாவுக்கும் அவருடைய காதலிக்கும் பிறந்த மகனின் பெயரும் அலெக்சாண்டர்தான் . அவரும் தந்தை போலவே நாவல் எழுதி புகழ் பெற்றார். அவர் எழுதிய கமீய் Camille என்ற சோகமான காதல்கதை அவரைப் புகழ் பெற வைத்தது. அது 1852-ம் ஆண்டிலேயே பிரான்சில் நடித்து காண்பிக்கப்பட்டது.

தூமா பிறந்த தேதி – ஜூலை 24, 1802

இறந்த தேதி – டிசம்பர் 5, 1870

வாழ்ந்த ஆண்டுகள் – 68

எழுதிய நாவல்கள், நாடகங்கள் –

1829 – HENRY III

1830- CHRISTINE

1831 – NAPOLEON BONAPARTE

1831 – ANTONY

1832 – THE TOWER OF NESLE

1836- KEAN

1844 – THE THREE MUSKETEERS

1844 – THE COUNT OF MONTE CRISTO

1845 – TWENTY YEARS AFTER

1850- THE BLACK TULIP

***

எனது பிளாக்கில் 2015 அக்டோபர் 9ம் தேதி எழுதியது இதோ:-

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–subham—

Tags –  பிரெஞ்சு, நாவல், ஆசிரியர், அலெக்ஸாண்டர் தூமா(ஸ்), Alexandre Dumas

சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Post. 9987)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9987

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் உலக யுத்தம் முடிந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. ALDOUS HUXLEY  அவருடைய கட்டுரைகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுவன.

பிரேவ் நியூ ஒர்ல்ட் BRAVE NEW WORLD என்ற அவருடைய புதினம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

ஹக்ஸ்லி மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தை நாடே அறியும். ஏனெனில் ஹக்ஸ்லியின் தாத்தா தாமஸ் ஹக்ஸ்லி ஒரு உயிரியல் விஞ்ஞானி. டார்வினின் பரிணாமக் கொள்கை THEORY OF EVOLUTION உருவாக அவரும் உதவி செய்தார். ஆகையால் அவருக்கும் ஈடன் கல்லூரியிலும் ETON COLLEGE  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் அவருக்கு 16 வயதில் ஏற்பட்ட ஒரு கண் நோய் அவரை ஏறத்தாழ குருடராக (nearly blind) ஆக்கிவிட்டது.

முதல் உலகப்  போரில் சண்டை போட வேண்டும் அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற அவருடைய ஆசை பொய்யாய் பழங் கனவாய்ப் போயிற்று. அதிலும் ஒரு நன்மை விளைந்தது. அவர் கவிதை எழுதுவதிலும் கதை எழுதுவதிலும் கவனத்தைச் செலுத்தினார். 27 வயதிலேயே  அவருடைய முதல் நாவல் க்ரோம் யெல்லோ CHROME YELLOW வெளியானது ; சமுதாயத்தின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும்  நக்கலும் நகைச் சுவையும் மிகுந்த நாவல் அது. அடுத்து வந்த 4 நாவல்களில் ஒன்றுதான் பிரேவ் நியூ வோர்ல்ட் . இது அவருக்கு இலக்கிய உலகிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது.

எதிர்காலத்தில் உருவாகும் கட்டுப்பாடு மிக்க, தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு சமுதாயத்தை வருணிக்கும் நாவல் அது. அதில் ரிக் வேத தாக்கத்தையும் காணலாம்.மக்களை எப்போதும் மகிழ்சசியில் திளைக்கச் செய்ய  ‘சோமா’ SOMA என்னும் ஒரு அபூர்வ  குளிகை உருவாக்கப்படுவது குறித்து அந்த நாவல் பேசுகிறது. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களிலும்  உள்ள பல்லாயிரம் மந்திரங்களில் அற்புதமான சோமரசம் பற்றி ரிஷிகள் பாடியுள்ளனர். (ஆனால் அந்தக் குளிகை இப்போது அழிந்து போயிற்று) ‘சோமா’ வுடன் ஹக்ஸ்லி  நிறுத்தவில்லை. எந்த வேலை பார்க்க என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டு குழந்தை பெறும்  அறிவியல் முன்னேற்றம் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆயினும் மக்கள் ஆன்மா ( SOULLESS, EMOTIONLESS) இல்லாதவர்களாக உணர்ச்சி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி மேலை நாட்டு நாகரீகத்தின் மீது கேள்விக்குறிகளைப் போடுகிறார் . அதாவது தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து நிற்கும் அதே நேரத்தில் மக்கள் அடிப்படை பண்புகளை இழப்பத்தைச் சித்தரிக்கும் நாவலே BRAVE NEW WORLD பிரேவ் நியூ வோர்ல்ட் / துணிச்சல் மிக்க புதிய உலகம்.

தீவு என்ற அவருடைய கடைசி  நாவலில் நிறைய இந்துமத குறிப்புகள் வருகின்றன . சிவ பெருமானுடைய ஆனந்த நடனம், மோக்ஷம், முருகன் மைலேந்திர என்ற தமிழ் கதாபாத்திரம், ராஜா, ராணி, மற்றும் நிறைய சம்ஸ்க்ருத சொற்கள் இடம்பெறுகின்றன . இது மத தாக்கத்தை இதில் அதிகம் காணலாம்.

பிரான்ஸ், இதாலி ஆகிய நாடுகளில் வசித்துவிட்டு ஹக்ஸ்லி, அமெரிக்காவுக்குச் சென்று ஹாலிவுட்டில் சினிமா கதை வசனம் எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை கலிபோர்னியாவில் இருந்து நாவல்கள், கவிதைகள், தத்துவம் பற்றிய கட்டுரைகள் , அரசியல் விஷயங்கள் ஆகியவற்றை  எழுதி வந்தார் . ரிக் வேத சோமா குளிகை பற்றிய அவருடைய சிந்தனை மனதை மாற்றக்கூடிய மருந்துகளை (MIND ALTERIG DRUGS) உருவாக்கும் விஷயம் பற்றியும் எழுதத்  தூண்டியது. இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகள் பற்றியும் இரண்டு புஸ்தகங்களை எழுதினார்.

பிறந்த தேதி – ஜூலை 26, 1894

இறந்த தேதி – நவம்பர் 22, 1963

வாழ்ந்த ஆண்டுகள் – 69

ஹக்ஸ்லி எழுதிய நூல்கள்:-

1921 – CHROME YELLOW

1923- ANTIC HAY

1928 – POINT COUNTER POINT

1932- BRAVE NEW WORLD

1936 – EYELESS IN GAZA

1939 – AFTER MANY A SUMMER

1944 – TIME MUST HAAVE A STOP

1948 – APE AND ESSENCE

1958 – BRAVE NEW WORLD REVISITED

1962- ISLAND.

–SUBHAM —

TAGS- சோம ரசம் , நாவல் ,ஆங்கில ,ஆசிரியர்,  ஆல்டஸ் ஹக்ஸ்லி, ALDOUS HUXLEY

பெண்ணை எதிர்பார்த்து புலியிடம் சிக்கிய ஆசிரியர் (PostbNo.7783)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7783

Date uploaded in London – 4 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு ஊரில் பணக்கார வணிகர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகள் . அவளை அந்த ஊர் ஆசிரியர் ஒருவரிடம் அனுப்பி கல்வி கற்க வைத்தார்.வருடங்கள் உருண்டோடின. ஒரு நாள் அந்தப் பெண் பருவம் எய்திய செய்தி வந்தது. உடனே அந்த வணிகர் மகளை அழைத்து, “பெண்ணே நீ இனி தினமும்  அவர்  வீட்டுக்குச்  சென்று கல்வி கற்க இயலாது . ஆகையால் ஒரு நல்ல நாளில் அவருக்கு குருதட்சிணை , வெற்றிலை, பாக்கு, பழங்கள் கொடுத்து நமஸ்காரம் செய்து விட்டு வா” என்றார் .

அந்தப் பெண்ணும் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு , ஆசிரியர் வீட்டுக்குச் சென்று நமஸ்காரம் செய்துவிட்டு ஆசிர் வதிக்கும்படி கேட்டாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

காமப்பசியில் தகித்த அந்த ஆசிரியர் சொன்னார் — பெண்ணே, உன் அப்பன் எனக்கு நிறைய பணம் கொடுத்துவிட்டார். எனக்கு பணம் ,காசு வேண்டாம். நான் ஆவலுடன் காத்திருந்த நாள் வந்து விட்டது. இத்தனை நாளாக உன்னைக் கட்டித் தழுவக் காத்திருந்தேன் என்று சொல்லி அவள் மீது படு வேகத்தில் பாய்ந்தார்.

அவளோ உயர் குலத்தில்  உதித்த நங்கை. கடுமையான கோபம் கொந்தளிக்க அவரை ஒரே தள்ளாகத் தள்ளி உதறிவிட்டு , “அட கிராதகா! நீ படித்த படிப்புக்கும் நினைத்த நினைப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லையே ; நீ நாசமாய்ப் போ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைநதாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவருடைய அப்பா அப்போது பிஸினஸ்  விஷயத்தில் பிஸியாக இருந்ததால் இது பற்றிப் பேசவில்லை. அம்மாவிடம் மட்டும் அழுது புலம்பினாள்.

இதற்குள் கள்ள ஆசிரியருக்கு மின்னல் வேகத்தில் புத்தி வேலை செய்தது. தோளில் அங்க வஸ்திரம், அதற்கடியில் ஜிப்பா, கையில் ஒரு ஜோதிட புஸ்தகத்துடன் வணிகர் வீட்டுக்கு விரைந்தார். அவர் வழக்கமாக கொடுக்கும் மரியாதை எல்லாவற்ரையும் கொடுத்து ராஜ உபசாரம் செய்தவுடன் மகள் இன்னும் அப்பாவிடம்  தன்னுடைய வண்டவாளத்தை (வண்டல் வளம்) தண்டவாளத்தில் ஓடவிட வில்லை என்பதை அறிந்து ஆனந்தம் கொண்டார்.

ஒரு அவசர விஷயம் பேச வந்தேன் என்றவுடன், அவரும் கணக்குப் புஸ்தகம் எல்லாவற்றையும் மூடி விட்டுக் காது  கொடுத்தார் .

ஆசிரியர் தொடர்ந்தார்– சொல்லுவதற்கே கஷ்டமாக இருக்கிறது; உங்கள் மகள் பருவம் எய்திய பொது கிரகச் சேர்க்கை சரியில்லை. இதனால் உங்கள் குடும்பத்துக்கும் அவளுக்கும் பேராபத்து ஏற்படும் என்று சொல்லி 12 ராசிகள், ஓன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்களை வம்புக்கு இழுத்து அளவளாவினார். ஆசிரியர் மீது  இதுகால பர்யந்தம் நன் மதிப்பு இருந்ததால் அவர் சொன்னதை வேத வாக்காக வணிகர் ஏற்றார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

“ஆசிரியரே, எல்லாவற்றுக்கும் பரிகாரம் இருக்கிறதே. இதற்கும் பரிகாரம் இருக்குமே?” என்றார் வணிகர்.

 “ஆமாம் உண்டு ; அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றார் . உங்கள் மகள் ஒரு க்ஷணம் கூட உங்களுடன் இருக்கக்கூடாது. அவளை ஒரு பெட்டியில் வைத்து, ஆற்றில் மிதக்க விடுங்கள்; அவள் ஜாதகம் கெட்டி; அவள் பிழைத்துக் கொள்வாள். நீங்களும் சுகமாக  வாழ்வீர்கள்” என்று சொன்ன மாத்திரத்தில் அவரும் ஏற்பாடுகளைத் துவங்கினார்.

ஆசிரியர், இதுவரை தான் போட்ட திட்டங்கள் வெற்றி அடைந்த களிப்பில் வீடு ஏகினார்.

இரவில் தூங்கும் நேரத்தில், அந்தப் பெண்ணும் பெட்டியில் வைக்கப்பட்டு ஆற்றில் மிதக்க விடப்பட்டாள் .

அந்தக் காலத்தில் அரசர்கள் காட்டுக்கு வே ட்டை ஆட வருவது வழக்கம். ஒரு மன்னன் ஒரு புலியை வேட்டையாடி, காயமடைந்திருந்த அந்தப் புலியைக்  கயிற்றைக் கட்டி இழுத்துவந்து  ஆற்றில் தண்ணீர் குடிக்க இறங்கினார் ; தண்ணீரில் மிதந்து வரும் பெட்டியைப் பார்த்து , ஆவலுடன் திறந்தார். அழகிய பருவக் குமரியைக் கண்டு ஆனந்தம் கொண்டார் . தங்கப் பல்லக்கில் அவளை வைத்து அரண்மனைக்குக்  கொண்டு சென்றார் .

அப்படிப் போவதற்கு  முன்னர் தான் பிடித்து வந்த காயமடைந்த புலியைக்  கட்டவிழ்த்து பெட்டிக்குள் வைத்து பத்திரமாக ஆற்றில் மிதக்கவிட்டார். இவ்வளவு திட்டத்துக்கும்  மூல காரணமான ஆசிரியர் ஒரு பாலத்தின் அருகில் பெட்டியைப் பிடித்திழுக்க சில வேலைக்காரர்களுடன் காத்திருந்தார். பெட்டியும் வந்தது. வந்திருந்த வேலைக் காரர்களின் தலையில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றார். எல்லோரையும் கூலி கொடுத்து அனுப்பிவிட்டு சந்தன ஜவ்வாது பூ ச்சுடன் வந்தார். பெட்டியைப் படுக்கை அறைக்குள் கொண்டு சென்றார். பெட்டிக்கு அருகில் போய் காதல் மொழிகள் கிளர்ந்தார். இப்போது  உன் மனம் மாறியிருக்குமே என்று சொல்லிக் கொண்டே பெட்டியைத் திறந்தார். புலியோ, அடி பட்ட நாகம் போல சீறிப் பாய்ந்து ஆசிரியரைக் குதறிக்கொன்றது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேராசை பெரு நஷ்டம்!

தினை விதைத்தவன் தினை  அறுப்பான்;

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Tags – தினை, விதைத்தவன், வினை, பெண், புலி, ஆசிரியர்

—subham—

குரு யார்? ஆசிரியர் யார்? என்ன வேறுபாடு? (Post No.2907)

mdu school

Compiled by London swaminathan

 

Date: 19  June 2016

 

Post No. 2907

 

Time uploaded in London :– 9-51

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

devakottai school

தமிழிலும் ஆங்கிலத்திலும் குரு, ஆசிரியர் (டீச்சர்), உபாத்யாயர் போன்ற சொற்கள் வேறுபாடின்றி வழங்கப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொன்றுக்கும் தெளிவான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

டீச்சர், ஆசிரியர் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருதச் சொல்லான ‘ஆசார்ய’ என்பதிலிருந்து வந்தவை.

 

வட இந்தியாவில் இப்பொழுது பல்கலைக்கழகத் துணைவேந்தரை குலபதி என்று அழைக்கின்றனர். வேத காலத்தில் 10,000 மாணவர்களைக் கொண்ட ஆசிரியருக்கு மட்டுமே குலபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

உலகின் முதல் சட்டப்புத்தகமான மனு ஸ்மிருதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்.

உபநீயது ய: சிஷ்யம் வேதமத்யாபயேத் த்விஜ:

சகல்பம் சரஹஸ்யம் ச தமாசார்யம் ப்ரசக்ஷதே (மனு 2-140)

உபநயனம் (பூணூல்) செய்வித்து வேத வேதாந்தங்களை ஓதிவைப்பவன் ‘ ஆசார்யன்’ என்று அழைக்கப்படுகிறான்.

xxx

 

SCHOOL CHILDREN jr

ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்கான்யபி வா புன:

யோ அத்யாபயதி வ்ருத்தர்தமுபாத்யாய: ச உச்யதே

பணம் (தட்சிணை) வாங்கிக் கொண்டு வேத வேதாங்கங்களைக் கற்பிப்பவன் உபாத்யாயன் என்று சொல்லப்படுகிறான்.

xxx

நிஷேகாதினி கர்மாணி ய: கரோதி யதா விதி

சம்பாவயதி சான்னேன ச விப்ரோ குருர் உச்யதே

விதிப்படி, கர்ப்பாதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப்பவன் குரு என்று அழைக்கப்படுகிறான்

xxx

பிதா மாதா ச ததாசார்யோ மஹாகுருரிதி ச்ம்ருத:

தந்தை, தாய், ஆசிரியர் ஆகியோர் மஹா (பெரிய) குருக்கள் என்று கருதப்படவேண்டும்.

xxx

 

school tree

முனீனாம் தசசாஹஸ்ரம் யோ அன்னதானாதி போஷணாத்

அத்யாபயதி விப்ரர்ஷிரசௌ குலபதி: ஸ்ம்ருத:

10,000 சிஷ்யர்களுக்கு உணவு அளித்து, போதிக்கும் (கற்பிக்கும்), ரிஷிக்கு ‘குலபதி’ என்று பெயர். (பத்தாயிரம் முனிவர்களுடைய கூட்டத்துக்கு எவன் அன்னதானம் முதலியன கொடுத்து ஆதரிக்கிறானோ அவன் குலபதி என்று அறியப்படுகிறான்)

xxxx

ஆசிரியனின் இலக்கணம்:  ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்றும் இந்துமத நூல்கள் செப்புகின்றன:–

 

ஜிதேந்த்ரிய ஜித த்வந்த்வஸ் தபோ தான பராயணா:

சத்யவாக் ஊர்ஜித: ராக்ஞோ மேதாவீ நியதஸ் சுசி:

புலனடக்கம், இருமைகளை (வெற்றி தோல்வி, சுக துக்கம் போன்றவை இருமைகள்) வென்றவன், தானம்-தவம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவன், உண்மை விளம்பி, வீர்யமுடையவன், கற்றறிந்தவன், புத்திகூர்மையுள்ளவன், ஒழுங்கு கட்டுப்பாடு உடையவன், தூய்மையானவன் (ஆசிரியன் ஆவான்)

xxxx

நிஸ்சம்திக்த: குலீனஸ்ச ஸ்ரௌதகர்மணி தத்பர:

நிக்ரஹானி க்ரஹேதக்ஷஸ் சர்வ தோஷ விவர்ஜித:

காயத்ரீமந்த்ர குசல ஆசார்ய ஸமுதாஹ்ருத:

 

அப்பழுக்கற்ற குலத்தில் பிறந்தவன், வேத அனுஷ்டானம் உடையவன், செய்யத் தக்கது-செய்யத்தகாதது எது என்ற விவேகம் உடையவன், மாசுமருவற்ற ஒழுக்கம் உடையவன், எல்லாம் அறிந்தவன், காயத்ரீ மந்திரத்தில் தேர்ச்சியுடையவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

xxxx

Skt at school level

Sanskrit instructor conducting a contact class for professionals at Rashtriya Sanskrit Sansthan on Tuesday. Photo by K Asif 26/09/12

ஆசினோதி ஹி சாஸ்ரார்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி

ஸ்வயமாசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே

சாத்திரங்களை அறிந்து பிறரையும் அனுசரிக்கச் செய்பவனே ஆசார்யன்.

(சாத்திர நூல்களின் பொருளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அறிந்துஆராய்பவன், பிறரையும் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபடச் செய்பவன், தானும் அதைக் கடைப்பிடிப்பவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

–சுபம்–