அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம் ?! (Post No.8694)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8694

Date uploaded in London – – 17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

விதவையின் நெற்றியில் குங்குமப் பொட்டா?!

ச.நாகராஜன்

புதிரைக் கொண்டுள்ள விசித்திரமான ஒரு சுபாஷிதத்தை இப்போது பார்ப்போம்.

கிம் பூஷணம்  சுந்தரசுந்தரீணாம்

      கிம் தூஷணம் பாந்தஜனஸ்ய நித்யம் |

கஸ்மின் விதாதா லிகிதம் ஜனானாம்

      சிந்தூரபிந்து விதவாலலாடே ||

ஒரு அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம்?

சிந்தூரப் பொட்டு ( நெற்றியில் இடும் குங்குமப் பொட்டு)

ஒரு யாத்திரைக்குக் கிளம்பும் போது கெட்ட சகுனம் எது?

விதவை ஒருத்தி எதிரில் வருவது! (விதவா)

பிரம்மா தலைவிதியை எங்கு எழுதி இருக்கிறான்?

நெற்றியில் (லலாடே)

இந்த சுபாஷிதத்தின் கடைசி வரி விசித்திரமான நையாண்டியான ஒரு வரியைத் தருகிறது. ஆனால் அதில் தான் மூன்று கேள்விகளுக்கும் தனித் தனியே விடையை அளிக்கிறது.

கடைசி வரி : ஒரு விதவையின் நெற்றியை அலங்கரிக்கும் சிந்தூரப் பொட்டு!

இது வழக்கத்திற்கு மாறான விநோதமான ஒரு செய்கை அல்லவா?

ஆனால் இந்த சிந்தூரபிந்து விதவா லலாடே என்ற வரியை சிந்தூர பிந்து, விதவா. லலாடே என்ற மூன்று வார்த்தைகளாகப் பிரித்தால் மூன்று கேள்விகளுக்கும் விடை வருகிறது.

இது கவி சமத்காரம்!

What is the ornament to highly charming women?

Sindura – bindu  (the mark of saffron on the forehead.

What is always inauspicious to one who sets out on a journey?

Vidhava (The sight of a widow)

Where has Brahma inscribed his letters of fate?

Lalate (On the forehead)

(The last line which gives the answers, by itself gives an absurd meaning : “The mark made by saffron on the forehead of a widow!’)

                    – Translation by A.A.R

*

இதையே சற்று மாற்றித் தருகிறார் இன்னொரு கவிஞர்!

கிம் பூஷணம் வா ம்ருகலோசனாயா:

    கா சுந்தரி யௌவனதுக்கபாரா: |

தாதா லிலி வாஅ வித்தாதி குத்ர

     சிந்தூரபிந்து விதவா லலாடே ||

மான்விழியாளுக்கு எது ஆபரணம்?

சிந்தூர பிந்து.

எந்த அழகிய பெண் யௌவன வயதிலேயே துக்கத்தில் ஆழ்கிறாள்?

விதவையான இளம் பெண்

விதி எந்த இடத்தில் தன் எழுத்தை எழுதுகிறது?

நெற்றியில்

கடைசி வரி : ஒரு விதவையின் நெற்றியை அலங்கரிக்கும் சிந்தூரப் பொட்டு!

சென்ற சுபாஷிதத்தைப் போலவே அதே வரி தான்!

இந்த சிந்தூரபிந்து விதவா லலாடே என்ற வரியை சிந்தூர பிந்து, விதவா. லலாடே என்ற மூன்று வார்த்தைகளாகப் பிரித்தால் மூன்று கேள்விகளுக்கும் விடை வருகிறது.

What is the ornament to a gazelle-eyed damsel?

Sindura-binduh (the mark made of saffron on the forehead)

Which beautiful woman is burdened by sorrow in her youth?

Vidavah (Widow)

Where does fate inscribe its letters?

Lalate (on the forehead)

(The last line, which gives the answers to all the three questions, by itself absurd; “The mark made of saffron on the forehead of a widow”)

  • Translation by A.A.R

     *

அழகு பிறக்கும் இடம் எது?

கிமன்யஸ்தி ஸ்வபாவேன சுந்தரம் வாப்யசுந்தரம் |

யதேவ ரோசதே  யஸ்மை  பவேத் தத் தஸ்ய சுந்தரம் ||

ஸ்வபாவமாகவே – அதாவது இயற்கையாகவே – ஏதாவது ஒன்று அழகுடையதா அல்லது இல்லையா? எது மனதிற்கு ஒருவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அவனுக்கு அது அழகு தான்!

Is anything naturally beautiful or not beautiful? Whatsover is indeed is pleasing to anyone, to him that will be beautiful.

  • Translation by F. Johnson

மிக மிகப் பழைய காலத்தில் கூறப்பட்ட இந்தக் கருத்தை கிரேக்க நாடும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், Beauty is in the eye of  the beholder’ – பார்ப்பவனின் கண்ணில் தான் அழகு இருக்கிறது  கூறி இருக்கிறது!

tags- அழகி,  பெண், ஆபரணம், விதவை, நெற்றி,, 

          ***