ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு! (Post No.5520)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 October 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5520

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

  

இதற்கு முன்னர் வெளியான ஒரு வழக்கை எப்படி வாதாடுவது என்ற கட்டுரையைத் தொடர்ந்து இதைப் படிக்கலாம்!

ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு!

 

ச.நாகராஜன்

1

அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் சிறந்த மேதாவி. புத்திகூர்மையுள்ளவர். மனிதாபிமானி. எளிமையானவர். இன்னும் பல சிறப்புக்களைக் கொண்ட இவரது கூற்றுக்கள் பலராலும் இன்றும் மேற்கோளாகக் கூறப்படுகிறது. இவற்றில் இடம் கருதி பத்தை மட்டும் இங்கு பார்ப்போம்:

 

I am a slow walker, but I never walk back.

 

Whatever you are, Be a good one.

 

Give me six hours to chop down a tree and I will spend the first four sharpening the axe.

 

Do I not destroy my enemies when I make them my friends?

 

The ballot is stronger than the bullet.

 

Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.

 

Character is like a tree and reputation like a shadow. The shadow is what we think of it; the tree is the real thing.

 

Leave nothing for tomorrow which can be done today.

 

Nearly all men can stand adversity, but if you want to test a man’s character, give him power.

 

The best way to predict your future is to create it.

 

அவரது சுருக்கமான சூத்திர மயமான இதர மேற்கோள்கள் அனைத்தும் கூட அருமை தான்!

 

2

அவர் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்; கடுமையாக உழைத்தார். அப்போது ஒரு கொலை வழக்கை நடத்த குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் அண்டினார். அவரோ நிரபராதி. இதை அறிந்த லிங்கன் அவருக்காக நீதி மன்றத்தில் ஆஜரானார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

 

லிங்கன் பதட்டமின்றி கொலை செய்ததை நேரில் பார்த்ததாகச் சொன்ன சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார்.

அந்த ஒருவர் தான் முக்கியமான சாட்சி. ஏனெனில் அவர் தான் கொலையை ‘நேரில் பார்த்தவர்’!

குறுக்கு விசாரணை ஆரம்பித்தது:

 

லிங்கன் : நீங்கள் கொலை செய்யப்பட்ட நபருடன் கொலை நடப்பதற்கு சற்று முன்பு இருந்திருக்கிறீர்கள். துப்பாக்கியால் சுடப்படுவதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

சாட்சி : ஆமாம்

லிங்கன் : இருவருக்கும் அருகில் இருந்திருக்கிறீர்கள்

சாட்சி : ஆமாம்

லிங்கன் : அது திறந்தவெளியில் நடந்ததா?

சாட்சி : இல்லை, மரங்களுக்கிடையில் நடந்தது

லிங்கன் : என்ன மரங்களுக்கிடையில்?

சாட்சி : பீச் மரங்களுக்கிடையில்

லிங்கன் : இலையுதிர்காலத்தில் பீச் மரங்களின் இலைகள் அடர்த்தியாக இருக்கும்.

சாட்சி : அப்படித்தான் இருக்கும்

லிங்கன் : நீங்கள் கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாரே, அவர் சுட்டதைப் பார்த்தீர்கள்?

சாட்சி : ஆமாம்

 

லிங்கன் : எவ்வளவு அருகில் இந்தக் கொலை நடந்தது?

சாட்சி : முக்கால் மைல் தூரத்தில்

லிங்கன் : எங்கே விளக்குகள் இருந்தன?

சாட்சி : பாதிரியாரின் மேடைக்குத் தள்ளி

லிங்கன் : அது முக்கால் மைல் தூரத்தில் அல்லவா இருக்கும்?

சாட்சி : நான் அப்படித்தானே சொன்னேன்!

 

லிங்கன் : குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாரே, அவர் நின்ற இடத்தில் வெளிச்சம் இருந்ததா?

சாட்சி : இல்லை. வெளிச்சம் எதற்கு வேண்டும்?

லிங்கன் : வெளிச்சம் தேவை இல்லையெனில் எப்படி சுடப்படுவதைப் பார்த்தீர்கள்?

சாட்சி : நிலா வெளிச்சத்தில்

 

லிங்கன் : ஆக, நீங்கள் இப்படி சுட்டதை இரவு பத்து மணிக்கு பீச் மரங்களுக்கிடையே விளக்கு இருந்த இடத்திலிருந்து முக்கால் மைல் தூரத்தில் பார்த்திருக்கிறீர்கள். பிஸ்டலைக் கொண்டு குறி பார்த்து சுட்டதைப் பார்த்தீர்கள். அதை நிலா வெளிச்சத்தில் பார்த்தீர்கள். சரி தானே?

 

சாட்சி : ஆமாம், அதைத் தான் அப்போதே சொன்னேனே!

இளம் வக்கீலான லிங்கன் மெதுவாக தனது பாக்கெட்டிலிருந்து  ஒரு பஞ்சாங்கத்தை எடுத்தார். அதை நீதிபதியிடம் காண்பித்தார்.

குற்றம் நடந்த தினம் ஒரு அமாவாசை தினம் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

 

குற்றம் சாட்டப்பட்டிருந்த நிரபராதி விடுதலையானார்.

லிங்கனின் புகழ் அன்றிலிருந்து ஊரெங்கும் பரவத் தொடங்கியது.

 

3

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

Lincoln : You were with the murdered man just before, and saw the shooting?

Witness : Yes

Lincoln : You stood near the two men?

Witness : Yes

Lincoln :

Lincoln : Was it in the open field?

Witness : No, in the timber

Lincoln : What kind of timber?

Witness : Beech Timber

Lincoln : The leaves of beech are rather thick in autumn?

Witness : Rather

Lincoln : You could see the prisoner shoot?

Witness : Yes

Lincoln : How near did this happen to the meeting place?

Witness : Three quarters of a mile away

Lincoln : Where were the lights?

Witness : Up by the minister’s stand

Lincoln : That was three- quarters of a mile away?

Witness : I have already said so

Lincoln : Was there a candle where the prisoner was standing?

Witness : No. What would he want a candle for?

Lincoln : Then how did you see the shooting?

Witness : By moonlight

Lincoln : You saw this shooting, at ten o’clock at night, in beech timber, three-quarters of a mile away from the lights? Saw the man point the pistol and fire? Saw it all by moon light?

Witness : Yes, I have already said so.

Then the young lawyer slowly drew from his pocket an almanac and showed that on the night of the crime the moon was not visible.

 

***

 

ஏழு லட்சம் புத்தகங்களை முஸ்லீம் வெறியன் எரித்தது ஏன்? (Post No.4686)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 17-03

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4686

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட் ரியா நகரில் (Alexandrian Library) இருந்த நூலகத்தை மத வெறிபிடித்த காலிபா உமர் எரித்து அழித்தது எப்படித் தெரியுமா?

 

“இங்கேயுள்ள 700,000 புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதையே, சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது குரான் ஒன்றே போதுமே! இந்த நூல்கள் எதற்காக?”

 

இங்கேயுள் ள   புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்; அப்படியானால் உடனே தீக்கிரையாக்க வேண்டும்.

இரண்டு விதத்தில் நோக்கினாலும் தீ வைத்துக் கொளுத்துங்கள்!

 

இந்தியாவில் பீஹாரில் இருந்த நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் அதன் நூலகத்துக்கும் முஸ்லீம்கள் தீ வைத்தபோதும் இதேதான் சொல்லியிருப்பார்கள்.

xxx

 

மதவெறியர்களுக்கு ஆப்ரஹாம் லிங்கன் பதிலடி

ஒரு முறை  ரெவரென்ட் திரு ஷ்ரிக்லி என்பவர் ராணுவத்தில் மருத்துவ மனைக்கான சமய குருவாக (Chaplain) நியமிக்கப்பட்டார். இது அமெரிக்க ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association) நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. உடனே ஒரு கூட்டம் போட்டு, ஒரு கமிட்டியை அமைத்து, வாஷிங்டனுக்கு அனுப்பினர்.

 

ஆப்ரஹாம் லிங்கன் அறையில் நடந்த சம்பாஷனை:–

 

“ஐயா, நாங்கள் இந்த திருவாளர் ஷ்ரிக்லி நியமனம் விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறோம்.”

 

லிங்கன்: “ஓ, கவலையே படாதீர்கள். என்னுடைய தீவிர சிபாரிசுடன் நியமனத்தை செனட் சபைக்கு அனுப்பிவிட்டேன். வெகு விரைவில் அவர்கள் அதை உறுதிப்படுத்துவர்”.

“ஐயா, நாங்கள்……… நாங்கள்………. அந்த நியமனம் வேண்டாம், கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்”.

 

லிங்கன்:-

“அ ப்படியா சேதி! கதையே மாறுகிறதே. சரி, என்ன காரணத்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்.

“ஐயா, அவர், நம்முடைய பைபிள் கூற்றுக்கு எதிரான பிராசாரத்தை முன்வைக்கிறார்.

லிங்கன்:-

அட, அப்படி என்ன சொன்னார்?

“ஐயா நம் சுதந்திரப் போருக்கு எதிர் தரப்பில் இருந்த எதிரிகளையும் பரம பிதா மன்னிப்பார் என்கிறார். அது எப்படி சரியாகும்? இறைவன் எல்லையற்ற தண்டனை தருவார் என்பதை அவர் ஏற்கவில்லை.

இவரை ஆஸ்பத்திரி சமய குருவாக நியமித்தால் நம் மதத்துக்கே ஆபத்து”.

மற்றவர்களும் ‘’ஆமாம், ஆமாம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

 

ஆப்ரஹாம் லிங்கன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன சொன்னீர்கள்? எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா? அப்படியானால் இவர்தான் இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர்”

 

ஆப்ரஹாம் லிங்கனின் பதில் அந்தக் குழுவுக்கு நெத்தியடி, சுத்தியடி கொடுத்தது போல இருந்தது.

xxx

 

கிறிஸ்தவர் என்ன செய்தார்கள்?

அமெரிக்க வரலாற்றுப் பாடம் முடிந்தது.

வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்:-

மாணவர்களே! இவ்வளவு நேரம் பாடம் கேட்டீர்களே! ப்யூரிடன் (Puritan) கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள்?

ஒரு மாணவன் எழுந்தான்:-

“ஐயா, அவர்கள் தங்கள் வழியில் இறைவனைக் கும்பிட்டார்கள்; அதே வழியில் மற்றவர்களையும் கும்பிட வைத்தார்கள்.”

 

(கட்டாய மதமாற்றத்தை அந்தப் பையன் அழகாக சொல்லி முடித்தான். வாத்தியார் அதை ரசிக்கவில்லை!)

 

சுபம்–

நோஞ்சான் குதிரை மூலம் லிங்கன் சொன்ன புத்திமதி! (Post No.3367)

Written by London Swaminathan

 

Date: 18 November 2016

 

Time uploaded in London: 9-38 am

 

Post No.3367

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு முன் ஆப்ரஹாம் லிங்கன் வக்கீல் தொழில் செய்துவந்தார். ஒரு நாள் வயதான, எலும்பும் தோலுமான தனது நோஞ்சான் குதிரை மீது லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் பயணமானார்.

 

அந்தக் குதிரை தெனாலிராமன் குதிரை போன்றது. முன்னே இரண்டு பேர் இழுக்க, பின்னே இரண்டு பேர் தள்ள, பத்து தப்பிடி நகரும். அவ்வளவுதான்.

 

அவர் குதிரை ஒரு வயக்காட்டு வழியே போன போது நடந்த சம்பாஷணை:-

 

ஏய் அபி (Abraham Lincoln) ! என்ன லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் போறியா?

 

ஆமாம், டாமி மாமா (Uncle Tommy). நீங்க சவுக்கியமா இருக்கீங்களா?

 

ம்ம்ம்ம்ம்……. இருக்கேன்……..

 

என்ன அங்கிள் டாமி? ஏதாவது பிரச்சனையா? இழுத்து…… இழுத்து …….. பேசுறீங்களே

 

இல்ல, நானும் லூயிஸ்டன் கோர்ட்டுக்கு வந்து உன்ன பாக்கறேன்.

 

என்ன மாமா. கோர்ட்டு, கீர்ட்டுன்னு பேசறீங்க !என்ன பிரச்சன?

 

ஒன்னுமில்ல. எல்லாம் நம்ம பக்கத்து நிலம் ஜிம்மிதான் — கொஞ்சம் அத்து மீறி போயிட்டிருக்கான்.

அவன கோர்ட்டுல ஒரு கை பாக்கனும்.

 

மாமா, இருங்க, பொறுங்க. நீங்களும் ஜிம்மியும் எத்தன வருஷம் பக்கத்துல பக்கத்துல வசிக்கிறீங்க.

என்ன ஒரு 25 வருஷம் இருக்கும்னு நினக்கிறேன்

என்ன மாமா இது? 25 வருஷமா சேர்ந்து வசித்துவிட்டு இப்ப கோர்ட் பத்திப் பேசறீங்க.

 

மாமா என் குதிரையை பாருங்க. இதுவும் 10, 15 வருஷமா இருக்கு. எப்படி நடக்குதுன்னு நீங்களே பாருங்க. முன்ன எல்லாம் ஒழுங்காத்தான் போச்சு. இப்ப அது மேல நான் கோபப்படுறேனா. இல்லையே.

 

அவ்வளவுதான்! அதோட “அட்ஜஸ்ட்” பண்ணி போறேன்.

 

நோஞ்சான், நொண்டி என்று தூக்கிப்போட முடியுமா?

 

அப்ப நீ சொல்ற. நானும், உன்னைப் போல பொறுமையாய் அட்ஜஸ்ட பண்ணிட்டு போனும்; வழக்கு வாய்தான்னு வம்பு வேண்டாங்கற.

 

பின்ன? அங்கிள் டாமி,  பழைய குதிரை போல நண்பரையும் பாருங்க.

 

சரீப்பா, அபி, நீ சொல்றதும் சரியாத்தான் படறது.

 

இதைக் கேட்டவுடன் ஆப்ரஹாம் லிங்கனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

 

கோர்ட்டுக்கு வரும் முன்னரே ஒரு வழக்கைத் தீர்த்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

அவரது நோஞ்சான் குதிரை முன்னைவிட சிறிது வேகமாக லூயிஸ்டன் நீதிமன்றத்தை நோக்கி நடைபோட்டது!

 

நாய் “வாலால்” கடிக்கட்டுமே!

 

அமெரிக்காவில் லாங் ஐலண்ட் (LONG ISLAND) ராணுவ முகாம் அருகில் ஒரு பெரிய எஸ்டேட் இருந்தது. அங்கே பாதுகாப்புக்காக நல்ல உயர்தர, விலை மதிப்புள்ள நாய்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தனர். ஒரு நாள், ஒரு நாய் ராணுவ முகாம் பாதுகாவலரைக் (Army Camp Sentry) கடித்துவிட்டது. அவர் கோபத்தால் துப்பாக்கி  சனியனால் (துப்பாக்கி  முனையில் சொருகப்பட்ட கத்தி Bayonet) நாயைக் கொன்றுவிட்டார்.

 

 

நாயின் சொந்தக்காரர் வழக்கு போட்டார். வழக்கு விசாரணை நாளும் வந்தது. நாயின் சொந்தக்காரர் , அந்தக் காவலரை தன்னுடைய நாய் அப்படி ஒன்றும் கடித்துக் குதறிவிடவில்லை என்று நிரூபித்தார்.

 

உடனே நீதிபதி கேட்டார்:

ஏம்பா. உன்னை நாய் ஒன்றும் அப்படிப் பெரிதாக கடிக்கவில்லையே! துப்பாக்கி முனை கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதன் பின்புறப்பகுதியால் (Rifle Butt) அடித்து விரட்டி இருக்கக் கூடாதா?

உடனே அந்தக் காவலர் பளிச்சென்று பதில் தந்தார்”

 

அது சரி கனம் நீதிபதி அவர்களே! அந்த நாயும் முன்பக்கத்தால் கடிக்காமல் அதன் பின்புற வாலால் என்னைக் கடிக்கக்கூடாதா?

 

நீதிபதி  இந்தப் பதிலைக் கேட்டு திகைத்துப் போனார்!

 

–Subham–

மோடி ‘டீ’ விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்!!- சூடான பதில்கள் (Post No.3051)

Abraham-Lincoln

Translated by london swaminathan

Date: 11th    August 2016

Post No. 3051

Time uploaded in London :– 6-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சில தலைவர்கள் கொடுக்கும் சூடான பதில்கள் வரலாற்றில் இடம் பெற்றுவிடுகின்றன. இந்தியப் பிரதமர், ஒரு காலத்தில் டீக்கடை வைத்தது பற்றி பலர் கிண்டல் செய்தவுடன், பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள், எல்லா இடங்களிலும் இலவச தேநீர் கடை வைத்து தேநீர் வழங்கியதை நாம் அறிவோம்

 

 

இதுபோல அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். அமெரிக்காவின் தலை சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர் ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்க சுதந்திரப் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். கறுப்பின மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறியவர்.

 

ஒருமுறை, வாழ்க்கையின் உயர்மட்டத்திலுள்ள பிரமுகர் டக்ளஸ் என்பவர் பொது இடங்களில்   லிங்கனை விமர்சித்து வந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் டக்ளஸ் சொன்னார்:-

 

“நான் லிங்கனை முதலில் சந்தித்ததே ஒரு கடைப் பையனாக வேலை பார்த்தபோதுதான். அவன்  விற்காத பொருள் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?  அவன் மதுபானக் கடையில் எடுபிடியாகவும் இருந்தான்!”

 

இப்படி டக்ளஸ் பேசி முடிந்தவுடன் ஒரே கரகோசம்!

 

லிங்கனா சளைப்பார்? அவர் சொன்னார்:’

 

“மாண்புமிகு டக்ளஸ் சொன்னது எல்லாம் உண்மை. எள்ளளவும் பிசகில்லை! நான் பலசரக்குக் கடையில் வேலை பார்த்தேன்; பஞ்சு விற்றேன்; சுருட்டு விற்றேன்; மெழுகு வர்த்தி வியாபரமும் செய்தேன்; சில நேரங்களில் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு விஸ்கியும் விற்று இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் டக்ளஸ், ‘கவுண்ட’-ருக்கு எதிர்ப் பகுதியில் நின்று என்னிடம் பொருள்களும் வாங்கியது உண்மையே; ஆனால் இப்பொழுது என்ன நிலை?

 

‘கவுண்ட’–ருக்கு அந்தப்புறம் நின்று பொருள்களை விற்ற நான், அங்கிருந்து வெளியேறி விட்டேன். உங்களுக்கே தெரியும். ஆனால் மதுபானக் கடையில் என்னிடம் ‘கவுண்ட’’-ருக்கு எதிர்ப்புறத்தில் நின்று என்னிடம் விஸ்கி வாங்கிக் குடித்தாரே அவர் மட்டும் அந்தப் பகுதியை விட்டு இன்று வரை விலகவே இல்லை! அது மட்டுமல்ல, அதிபயங்கர விசுவாசத்தோடு அக்கடையை விட்டு அகலுவதே இல்லை என்றார்.

 

பொதுக்கூட்ட மண்டபத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு கரவொலி எழுந்தது!

 

Xxxx

m twain

மார்க் ட்வைனின் சூடான பதில்!

(சாமுவேல் லாங்ஹார்ன் க்ளெமென்ஸ் என்பவரின் புனைப் பெயர் மார்க் ட்வைன். சிறந்த அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர், நாவலாசிரியர், நகைச் சுவைப் பேச்சாளர்)

 

ஒருநாள் அவரும் வில்லியம் டீன் ஹவல்ஸ் என்ற பிரமுகரும், சர்ச்சிலிருந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கன மழை கொட்டியது.

 

ஹவல்ஸ்: “ சாமுவேல் இந்த மழை நிற்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

சாமுவேல் (மார்க் ட்வைன்):- எனக்குத் தெரிந்தவரை மழை, எப்போது பெய்யத் துவங்கினாலும் நின்று போய் இருக்கிறது!

–என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னார்.

 

மழையில் சொன்னாலும், இ துவும் சூடான பதில்தான்!

 

–subham–

 

 

ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை: பதவிக்காக அலையும் கழுதைகள் (Post No.2630)

415-Abraham-Lincoln-Block-of-4

Written by london swaminathan

 

Date: 14 March 2016

 

Post No. 2630

 

Time uploaded in London :–  8-57

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(Already posted in English by me under the title: Every jackass wants an office;post no. 2628)

jackass (1)

அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை; தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்

 

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் மந்திரியுடன் சேர்ந்து வேட்டைக்குப் போனார்.

“மந்திரியாரே! இன்று மழை வருமா?”

“மன்னனே! இன்று கட்டாயம் மழை வராது.”

 

இந்த உரையாடலுக்குப் பின்னர், ராஜா, ஒரு விவசாயியைப் பார்த்தார். அவன் ஒரு கழுதை மீது சவாரி செய்து கொண்டிருந்தான். “என்ன, வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று ராஜா கேட்டார்.

“ஐயோ, ராஜா, மழை கொட்டப்போகிறதே! அதனால்தான் வேகமாகப் போகிறேன்” – என்றான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று ராஜா கேட்டார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கழுதையின் காதுகளைப் பார்த்துத்தான் நான் கண்டு பிடித்தேன். இதோ பருங்கள்! காதுகளை நன்றாக நீட்டி வைத்துக்கொண்டுள்ளன. இப்படியிருந்தால் மழை கொட்டப்போகிறது என்று அர்த்தம்” – என்றான்.

 

ராஜாவும் , மந்திரியும் காட்டுக்குள் வேட்டையாடப் போனார்கள். மழை கொட்டித் தள்ளிவிட்டது. ராஜாவுக்குப் பயங்கர கோபம். மந்திரியைப் பதவி நீக்கம் செய்தார். அந்த விவசாயியைக் கண்டுபிடித்து, அவன் கழுதையை விலைக்கு வாங்கி, அதற்கு மந்திரி பதவி கொடுத்தார்.

 

எல்லோரும், ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதையைச் சுவையாகக் கேட்டனர்.

“அந்த ராஜா பெரிய தப்புச் செய்துவிட்டார்” ….. என்று லிங்கன் கதையைத் தொடர்ந்தார். எல்லோருக்கும் சந்தேகம். ராஜா என்ன தப்பு செய்தார்? கூட்டத்தில் ஒருவன் எழுந்து “ராஜா, என்ன தப்பு செய்தார்?” – என்று கேட்டான்.

“அவர் ஒரு கழுதைக்கு மந்திரி பதவி கொடுத்ததிலிருந்து, இப்பொழுது எல்லா கழுதைகளும் மந்திரி பதவிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன” – என்று போட்டாரே ஒரு போடு!

 

Xxx

 

jackass

கர்னல், இடத்தில் என்னைப் போடுங்கள்!

ஒரு ராணுவத்தில் பெரிய கர்னல் பதவி வகித்தவர் இறந்து போய்விட்டார். இன்னும் இறுதிச் சடங்கு கூட நடந்த பாடில்லை. அதற்குள் அந்த மாகாண கவர்னரிடம் அந்த பதவிக்காக பல மனுக்கள் குவிந்தன. இறுதிச் சடங்கு ஊர்வல நாளும் வந்தது. பெரிய ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் துவங்கியது. சவப்பெட்டிக்குள் கர்னலின் சடலம் இருந்தது. ராணுவ அதிகாரிகளில் ஒரு ‘முந்திரிக்கொட்டை’, கவர்னரிடம் போய், “கர்னலின் இடத்தில் (பதவியில்) என்னைப் போடுங்களேன்”. என்று சொன்னார். கவர்னருக்கு ஒரே கோபம்! “கர்னலின் இடத்திலா? அதோ, அந்த சவப்பெட்டியைத் துக்கிக்கொண்டு போகிறார்களே, அவர்களிடம் போய்க்கேளுங்கள்” – என்றார்.

-சுபம்-

 

 

 

 

 

நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!

lincoln india

Article No.2015

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 24  July 2014

Time uploaded in London : காலை 8-53

அமெரிக்காவின் 16-ஆவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன். அடிமைத்தனத்தை ஒழித்து, அமெரிக்க உள்நாட்டுப் போரில் வென்று, அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றியவர். அவரது பதவிக்காலத்தில் கடமையிலிருந்து தவறிய படைவீரர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆயினும் ஒவ்வொரு சிப்பாயும், செல்வாக்குமிக்க ஒரு ஆளிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று வரவேண்டும்.

ஒரு படைவீரனின் கடிதம் மொட்டையாக, தனிக் கடிதமாக இருந்தது. “அட! என்ன இது? இதனுடனிருந்த சிபாரிசுக் கடிதம் எங்கே?” — என்று இதைக் கவனித்த ராணுவ அதிகாரியிடம் கேட்டார்.

அவரும், அந்த வீரன் எந்தக் கடிதமும் இணைக்கவில்லை – என்றார்.

அட! முக்கிய ஆள் சிபாரிசுதான் வேண்டுமென்பதில்லை. யாராவது நண்பர், ஒரு ஆதரவுக் கடிதம் கொடுத்தால் போதுமே! – என்றார் லிங்கன்.

அதையும் நான் கேட்டுவிட்டேன்; அவருக்கு நண்பர் எவருமே இல்லை என்று சொல்கிறார் – என்றார் அதிகாரி.

அப்படியா? நானே அவருடைய நண்பன்! – என்று சொல்லி அந்தப் படைவீரனுக்கு மன்னிப்பு அளித்தார்!

குகன் என்னு வேடனையே தம்பி என்று உறவு முறை கொண்டாடினான் இராமன். ஒன்றும் தெரியாத, முன்னைப்பின் அறியாத, ஒரு படைவீரனை ஒரு நொடியில் நண்பனாக்கி உயிர்ப் பிச்சை அளித்தார் லிங்கன்!

Brahms (1)

அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

ஜெர்மானிய இசை அறிஞர் யொவன்னஸ் பிராம்ஸ். அவரை அறியாத மேல்நாட்டு இசைப் பித்தர் யாரும் இருக்கமுடியாது. ஆஸ்திரியாவில் தனது வாழ்நாள் முழுதும் இருந்தவர். இரக்க உள்ளம் படைத்த மாமேதை.

ஒருநாள் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். பிளாட்பாரத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த சாலைக் கலைஞனைக் கண்டு வியந்தார். அவ்வளவு தத்ரூபமான படங்கள்! இத்தகைய சாலையோரக் கலைஞர்கள், எல்லோரும் காசு போடுவதற்காக ஒரு தட்டு வைத்திருப்பார்கள். அப்படி ஒரு தட்டைப் பார்த்த பிராம்ஸ் மனமுருகி, ஒரு பெரிய நாணயத்தை அதில் போட்டார். அது பாறை மீது பட்ட நாணயம் போல ‘டங்’ என்ற ஒலியுடன் எகிரிக் குதித்தது. அவருக்கு மஹா வியப்பு! பின்னர்தான் அறிந்தார்: அது தட்டு அல்ல; உண்மையில் தட்டு போல தத்ரூபமாக வரையப்பட்ட படம் என்று!

அவரே ஒரு இசைக் கலைஞர். இதனால் கலையின் பெருமையை உணர்ந்து அதைப் போற்றினார். ஆனால் அவருடைய அந்தஸ்துக்கு ரோட்டில் போகும், வரும் கலைஞரை நின்று பார்க்க வேண்டிய தேவையே இல்லை. இது நடந்த இடம் பொலொஞா என்னும் இத்தாலிய நகரம் ஆகும். இவ்வளவுக்கும் அந்த சாலையோர ஓவியன் ஒரு ஊமை!

பிராம்ஸ், எங்கு திறமை இருந்தாலும் அதைப் போற்றிப் புகழ்வார். தன்னைவிட இளம் கவிஞர்களை ஊக்குவித்தார். பிரபல இசை மேதைகளின் படைப்புகளை வெளியிட உதவினார். ஒரு முறை ஒரு பிரபல இசைமேதைக்குப் பணம் உதவியும் அவரது நூலை வெளியிட அவருக்கு ‘ப்ரூப்’ பார்க்கத் தெரியவில்லை. பெரிய இசைமேதையாக இருந்த போதும் அவருக்காக பிராம்ஸே படி திருத்தும் பணியை மேற்கொண்டார்.

brahms

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

உலகில் எவ்வளவோ நல்லவர்கள் உளர். அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆட்களும் உண்டு. ஆகையால், உதவி செய்வதிலும்கூட கவனம் தேவை.

ஒரு சிறு பையன் மிக கனமான சாமானை ஏற்றிக் கொண்டு மேட்டில் ஏற முடியாதபடி தவித்தான். அதைப் பார்த்த  ஒரு வயதான நபர் அவனுக்கு மிகவும் கஷ்டப் பட்டு உதவினார்.

இருவரும் வெற்றிகரமாக,  மேட்டுக்கு வண்டியைக் கொண்டு சேர்த்தனர். பையன் நன்றி சொன்னான்.

யாரப்பா உன் முதலாளி? பெரிய கல் நெஞ்சக்கரானாக இருப்பான் போல இருக்கிறதே? ஒரு சின்னப் பையனிடம் இவ்வளவு பாரத்தைக் கொடுத்தால் அது தாங்காது என்று அவர்க்குத் தெரியாதா? – என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார் வயதான அந்த நபர்.

அதைக் கேட்ட அந்தப் பையன் சொன்னான்: “என் முதலாளிக்கு இது என்னால் செய்ய முடியாத காரியம் என்று நன்றாகவே தெரியும். ஆனால் அவர் சொன்னார்:

“இப்படியே போ, எவனாவது ஒரு இளிச்சவாயன், வழியில் கிடைப்பான்; அவனே உன் வண்டியை மேலே தள்ளிக் கொண்டுவந்து கொடுப்பான்” – என்று முதலாளி சொன்னார் என்றான்.

சும்மாவா சொன்னான் தமிழன்: “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்று!!

உத்தமனாக வாழ வேண்டும்தான்; ஆனால் அதற்காக “ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி”யாக இருத்தல் கூடா.

Abraham_Lincoln_1923_Issue-3c