“மந்திரி பதவி விலகினால் விலகட்டுமே! ரொம்ப நல்லது” (Post No.2702)

lincoln speeches

Compiled by london swaminathan

Date: 7 April, 2016

 

Post No. 2702

 

Time uploaded in London :–  10-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள் 121

அடக்கத்தின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்

ஆப்ரஹாம் லிங்கன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர்; நேர்மையானவர். சமத்துவத்துக்குப் போராடியவர். கறுப்பின மக்களையும் மதித்தவர். அவர் வாழ்நாள் முழுதும் பல சுவை மிகு சம்பவங்கள் நடந்தன. அவருடைய ஒவ்வொரு பேச்சும் மேற்கோள் காட்டக்கூடிய பொன் மொழிகள்!

லிங்கனின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் பதவியை சால்மன் சேஸ் என்பவர் வகித்து வந்தார். ஒரு முக்கிய விஷயத்தில் எல்லா அமைச்சர்களுடனும் இவர் கருத்து வேறுபட்டார். உடனே பதவியை ராஜினாமாச் செய்தார்.

லிங்கனின் ஆலோசகர்கள், “ஐயன்மீர்! சேஸ் அவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்காதீர்கள். சேஸின் சேவை நாட்டுக்குத் தேவை” – என்று அறிவுரை வழங்கினர்.

உடனே ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார்:

“அடடா! என்ன தப்புக் கணக்கு இது! ஆனால் உங்களைச் சொல்லிக் குற்றமில்லை; நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் எண்ணியிருந்தேன்; இது சுத்த அபத்தம்.”

 

“நாம் எல்லோரும் நாளைய தினம் பதவியை விட்டு விலகினோம் என்று வைத்துக் கொள்வோம்; ஒரு வாரத்துக்குப் பின்னர் திரும்பி வருவோம்; நம்முடைய இடத்தில் புதியவர்கள் இருப்பார்கள்; நாம் என்ன செய்தோமோ அதையே அவர்களும் திறம்பட செய்வார்கள்; பல பதவிகளில், இப்போதைய மந்திரியைவிட, மேலும் திறமையானவர்கள் கூட இருப்பார்கள்”

“இதைச் சொல்லும்போது எனக்கு ஐரிஷ்காரர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருடைய முடிபு இதுதான்: ‘இந்த நாட்டில் ஒருவனைப் போலவே மற்றவனும் சிறந்தவன்தான். இன்னும் சொல்லப் போனால் ஒருவன் மற்றொருவனை விஞ்சுமளவுக்குத் திறமைசாலியும் கூட. இந்த அரசாங்கம், எந்த ஒரு தனி மனிதனையும் சார்ந்து நிற்கவில்லை”. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

 

Xxx

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் குறள் 121

ஒரு பிரமுகர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அப்போது அமெரிக்க ஜானாதிபதி ஆப்ரஹாம் லிங்கன், தனது பூட்சுக்கு கறுப்பு வண்ணம் ஏற்றி பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

“அடக் கடவுளே! இது என்ன கஷ்டகாலம்; ஜனாதிபதியான நீங்கள் கையெல்லாம் கறுப்புச் சாயம் ஏற, உங்களுடைய பூட்சுகளுக்குப் பாலீஷ் போடுகிறீர்கள்!” – என்று எள்ளி நகையாடினார்.

லிங்கன் அவருக்கே உரித்தான அங்கத பதில்களை அள்ளி வீசினார். “பின்ன என்ன? நான், வேறு யார் பூட்சுகளுக்குப் பாலீஸ் போட வேண்டும் என்கிறீர்கள்?”

வந்தவர் வாயடைத்துப் போனார்.

அடக்கத்தின் சின்னம் ஆப்ரகாம் லிங்கன்.

பணிவின் இலக்கணம் ஆப்ரகாம் லிங்கன். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

xxx