ஆயுளை குறைத்துக் கொள்ளாதீர்கள்! (Post No.8902)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8902

Date uploaded in London – – 8 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆயுளை குறைத்துக் கொள்ளாதீர்கள்!

ச.நாகராஜன்

‘ஜீவேம சரத சதம்’ என்பது வேதம் நமக்கு இட்டிருக்கும் கட்டளை – நூறு வயது வாழ்வோமாக!

இப்படிச் சொல்லி விட்டு அது ஒதுங்கி விடவில்லை.

100 வயது வாழ்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்றும் வழி காட்டி இருக்கிறது.

இந்த வேத நெறிகளை பல்வேறு நூல்கள் எளிதாகப் புரியும் வண்ணம் கூறி உள்ளன.

சுபாஷித ஸ்லோகங்கள் இந்த வகையில் பெரும் வழிகாட்டி ஸ்லோகங்களாக அமைந்துள்ளன.

ஆயுள் விருத்தியைப் பற்றி சில சுபாஷிதங்களைப் பார்ப்போம்.

சர்வலக்ஷண ஹீனோபி ய: சதாசாரவாந்தர: |

ச்ரத்யானோனசூயச்ச சதம் வர்ஷாத் ஜீவதி ||

நல்ல குணங்கள் இல்லாவிட்டாலும் கூட தனது செயலில் புண்யமான செயல்களைச் செய்து சிரத்தையுடனும் பொறாமை இல்லாமலும் இருக்கும் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வான்.

**

பாலார்கோ யக்ஞதூம்ரச்ச பாலஸ்த்ரீ நிர்ஜரோதகம் |

ஆயுஷ்யவர்தகம் நித்யம் ராத்ரௌ க்ஷீரான்னபோஜனம் ||

உதய சூரியன், யாகத்திலிருந்து எழும் புகை, இளம் பெண், ஊற்றிலிருந்து ஊறும் தெள்ளிய நீர் ஆகியவை ஆயுளை நீடிக்க உதவுபவை. அத்துடன் இரவில் பால் கலந்த உணவும் ஆயுளை நீடிக்கும்.

**

வ்ருத்தார்க: ப்ரேததூம்ரஸ்ச் வ்ருத்த ஸ்த்ரீ தில்லரோதகம் |

ஆயுஷ்ய நாசகம் நித்யம் ராத்ரௌ தத்யன்ன போஜனம் ||

நடுப்பகலில் உள்ள சூரியன், எரியும் சிதையிலிருந்து எழும் புகை, வயதான ஸ்த்ரீ, சேற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர் ஆகிய அனைத்தும் ஆயுளைக் குறைப்பவையாகும். அத்துடன் இரவில் தயிர் சாதம் சாப்பிடுவதும் ஆயுளைக் குறைக்கும்.

**

தீபநிர்வாணகந்தம் ச சஹ்ருத்வாக்யமருந்ததீம் |

ந ஜிக்னந்தினி ந ச்ருண்வந்தி ந பச்யந்தி கதாயுஷ: ||

 அணைக்கப்பட்ட தீபத்திருந்து எழும் நாற்றம், நண்பனின் புத்திமதி, அருந்ததி நட்சத்திரம்  ஆகியவை முகரப்பட்டதில்லை, கேட்கப்பட்டதில்லை, பார்க்கப்பட்டதில்லை – குறைந்த ஆயுளை உடையவனால்!

**

வேதோக்த ஆசீர்வாதம் அனைவரையும் நல்ல முறையில் வாழ்த்துகிறது இப்படி:

சர்வே பவந்து சுகின: சர்வே சந்து நிராமயா: |

சர்வே பத்ராணி பச்யந்து மா கஸ்சித் துக்க பாக்பவேத் ||


அனைவரும் சந்தோஷத்துடன் இருக்கட்டும்.

அனைவரும் வியாதிகள் இல்லாமல் இருக்கட்டும்.

அனைவரும் தங்களைச் சுற்றி நல்லனவற்றையே பார்க்கட்டும்.

அனைவரும் ஒரு போதும் துக்கம் அடையாமல் இருக்கட்டும்.

வேத பிரார்த்தனையைச் செய்வோம்; அனைவரும் சுகமாக இருக்கட்டும்.

*

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே – தாயுமானவர்

tags -ஆயுள் 

***

காஞ்சி பரமாசார்யார் ஆயுள் கண்டுபிடித்த ‘டெக்னிக்’ (Post No.4982)

Written by London Swaminathan 

 

Date: 6 May 2018

 

Time uploaded in London – 6-58 am (British Summer Time)

 

Post No. 4982

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருச்சி அருகிலுள்ள கூத்தனூரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள். வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையைப் படித்து காஞ்சிபரமாசார்ய ஸ்வாமிகளிடம் தங்க நாணயம், பசு மாடு, சால்வை பெற்றவர். பெரிய அறிஞர்–மஹா பண்டிதர். அவரிடம் ஒருவர் , இறந்து போனவரின் ஜாதகத்தைக் கொடுத்து அவரைச் சோதித்த போது அவருக்கு ஷாக் அடித்தது போல உடம்பு தூக்கிவாரிப் போட்ட நிகழ்ச்சியை முன்னரே எழுதினேன்.

 

அவரை மதுரை டி.வி.எஸ். நிறுவனத்தார் உபந்யாசம் செய்வதற்காக ஆண்டுதோறும் அழைத்தார்கள். அப்பொழுது அந்தக் கம்பெனி அனுப்பும் காரில் நானும் அவருடன் சென்று நோட்ஸ் (NOTES) எடுத்து அதை தினமணி பத்திரிகைக்கு செய்தியாகத் தருவேன். அவர் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வேதத்தில் இருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார். இதனால், விஷயம் அறிந்தவர்கள், அவருடைய சொற்பொழிவைத் தவறாமல் கேட்பர். அவர் உபந்யாசத்தைத் துவங்கும்போது ‘உத்தமோத்தமர்களே” என்று துவங்குவார். என் அருகில் உடகார்ந்து இருப்பவர் உடனே காமெண்ட் (COMMENT) அடிப்பார். இங்கு இருப்பவர்களில் யார் உத்தமர்? என் உள்பட எவனும் உத்தமர் இல்லையே! என்பார். இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் ‘வெளுத்ததெல்லாம் பால்’ என்று எண்ணும் அளவுக்குக் குழந்தை மனம் படைத்தவர் சாஸ்திரிகள்.

 

என்னிடம் சொல்லுவார்: சாமிநாதா, நீ எங்கள் திருச்சி பஜாருக்கு வந்து பார்க்க வேண்டும். முனிவர்கள், சந்யாசிகளும் கூட மனம் தடுமாறிவிடும் அளவுக்கு பெண்கள் ஆடை அலங்காரம் இருக்கும் என்பார்.

நான் உடனே மாமா, எங்கள் மதுரையிலும் அப்படித்தான்.

நீங்கள் எங்கள் டவுன்ஹால் ரோடு (TOWN HALL ROAD) அல்லது, பணக்காரத் திருமணங்களுக்கு வந்து பாருங்கள்’ என்று சொல்லுவேன்.

 

இதை எழுதும்போது இன்னும் ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. தொல்பொருட் துறை அறிஞர், வரலாற்று ஆசிரியரான டாக்டர் இரா.நாகசாமியும் பேச்சு வாக்கில் சொன்னார்; ‘பெரிய ஞானிகளையும் நிலை தடுமாறச் செய்து மனத்தை மாயையில் ஈடுபடுத்தும் சர்வ வல்லமை துர்கா தேவிக்கு உண்டு’ என்று சொல்லி ‘ஞானினாம் அபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி’ என்ற துர்கா சப்தஸ்லோகீ வரிகளைக் கூறினார்

 

ॐ ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा।

बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति॥१॥

 

விஸ்வாமித்ரர், புத்தர் ஏசு முதலியோரையும் இறைவன் இப்படிச் சோதித்ததாக நாம் படித்து இருக்கிறோம்.

காஞ்சி பரமாசார்யார் வயதைச் சொன்ன சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்!!!!

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளுக்கு (காஞ்சி சங்கராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி 1894-1994) இன்னும் எவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருப்போம் என்று அறிய திடீரென ஆவல் ஏற்பட்டது. அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து 1994ல் சமாதி அடைந்ததை நாம் அறிவோம்.

 

ஒரு முறை அவர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகளை யாரும் இல்லாத போது அழைத்து, தன் கையில் அக்ஷதையைப் போடும்படி சொன்னாராம். சாஸ்திரிகளுக்கு ஒரே வியப்பு. ஆயினும் அவர் சொன்ன படியே செய்தார். அட்சதையைப் போட்டபின்னர் ஸ்வாமிகள் அதை எண்ணிப்  பார்த்துவிட்டு ‘ஓஹோ, நான் இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருப்பேன்’ என்றாராம். அது எத்தனை ஆண்டுகள் என்று சாஸ்த்ரிகள் சொல்ல மறுத்து விட்டார்.

 

மறைகளைக் காப்பவர்களே நான் மறையாளர் அல்லவா? (இரஹஸியம்=   மறை) இறுதிவரை சாஸ்திரிகள் எங்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தும் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்!!!!

 

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxx

கழிந்த இரவு மீண்டும் வராது!

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 3 

By ச.நாகராஜன்

 

கழிந்த இரவு மீண்டும் வராது!

 

அத்யேதி ரஜனி யா து  ஸா ந ப்ரதிநிவர்ததே I

யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம் II

 

யா ரஜனி – எந்த இரவு;

அத்யேதி – கழிந்து விடுகிறதோ

ஸா து – அது எப்படியும்

ப்ரதிநிவர்ததே ந – திரும்புகிறதில்லை

பூர்ணா யமுனா- பிரவாகமெடுத்தோடும் யமுனா நதியும்

உதகாகுலம் – ஜலங்களுக்கெல்லாம் சாஸ்வத

வாசஸ்தலமான

சமுத்ரம் – சமுத்திரத்திற்கு

யாதி ஏவ – சென்றே விடுகிறது.

 

பொங்கிப் பெருகும் யமுனா நதி எப்படிக் கடலைச் சென்று அடைகிறதோ அதே போல கழிந்த இரவு மீண்டும் வராது.

                     அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 19ஆம் ஸ்லோகம்

 

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

*************

சூரிய கிரணங்கள் செல்கின்றன; ஆயுளும் குறைகிறது!

 

அஹோராத்ராணி கச்சந்தி  சர்வேஷாம் ப்ராணிநாமிஹ I

ஆயும்ஷி க்ஷபயந்த்யாஷு க்ரீஷ்மே ஜலமிவாஷவ: II

 

இஹ அஹோராத்ராணி – இவ்வுலகில் அஹோராத்திரி

கச்சந்தி அம்சவ: – செல்லுகின்ற சூரிய கிரணங்கள்

க்ரீஷ்மே ஜலம் இவ – கோடைகாலத்தில் ஜலத்தைக் குறைப்பது போல

சர்வேஷாம் ப்ராணிநாம் – சமஸ்தமான பிராணிகளுடைய

ஆயும்ஷி  ஆஷு க்ஷபயந்தி – ஆயுள்களையும் விரைவில் குறைக்கின்றன

அஹோராத்திரியில் சூரிய கிரணங்கள் செல்லும் போது கோடைக்காலத்தில் ஜலத்தைக் குறைப்பது போல அனைத்து உயிர்களின் ஆயுளையும் குறைக்கின்றன.

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 20ஆம் ஸ்லோகம்

 

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

 

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின் 

                   திருக்குறள் நிலையாமை குறள் 334

 

வள்ளுவரின் திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கி இன்புதற்குரியது.

                        ****************** 

 

 

யமன் கூடவே வருகிறான்!

 

ஸஹைவ ம்ருத்யுர்வ்ரஜதி ஸஹ ம்ருத்யுர்நிஷீததி I

கத்வா சுதீர்க்கமத்வானம் ஸஹ ம்ருத்யுர்நிவர்ததே II

 

ம்ருத்யு ஸஹ ஏவ வ்ரஜதி –யமன் கூடவே நடக்கிறான்

ம்ருத்யு ஸஹ நிஷீததி – யமன் கூடவே வசித்து வருகிறான்

ம்ருத்யு சுதீர்க்க – யமன் மிக நீண்ட

அத்வானம் கத்வா – வழியில் சென்று

ஸஹ நிவர்ததே- கூடவே திரும்புகிறான்

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 22ஆம் ஸ்லோகம்

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

 

நிலையாமையை வற்புறுத்தி தர்மத்தைப் பின்பற்ற வேண்டியதை ராமர் வலியுறுத்திக் கூறும் அற்புதமான ஸ்லோகங்களில் மூன்றை மேலே பார்த்தோம்

*************