100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! -1(Post No.10,556)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,556
Date uploaded in London – – 13 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் ஜனவரி 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! -1
ச.நாகராஜன்


இந்த வேக யுகத்தில் மூளை ஆற்றலை மிக அதிகமாகப் பயன்படுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நவீன் சாதனங்கள் ஒரு புறம், அன்றாடம் வளர்ந்து வரும் பல அறிவியல் கலைகள் என்று மறு புறம், குழந்தைகளானாலும் சரி, முதியோர்களானாலும் சரி மூளை ஆற்றலைப் பயன்படுத்தாமல் வாழவே முடியாத சூழ்நிலை.


ஆனால் பயப்படத் தேவை இல்லை. மூளை ஆற்றலைப் பயன்படுத்த நூறு வழிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்கு உகந்த நேரத்தில் பயன்படுத்தி மூளை ஆற்றலை முழுதுமாகப் பெற்று உலகில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம்.


இதோ நூறு வழிகள் :-


உலகில் உள்ள தலையாய ஆய்வு நிறுவனங்கள் இந்திய யோகாவின் பயனைக் கண்டு பிரமிக்கின்றன. ஹார்வர்டு, யேல், மசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் தியானத்தினால் மூளையின் அளவு பெரிதாகிறது என்று கண்டு பிடித்துள்ளன. கவனத்தையும் புலன்களின் உணர்வைச் செயல்படுத்தும் மூளைப் பகுதிகளின் கனம் தியானம் செய்வோர்களிடம் கூடுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உங்களின் மன அழுத்தத்தைப் போக்கி உங்களை நிதானமாக எப்போதும் வைக்க வல்லதும் தியானமே. ஆகவே தியானத்தை மேற்கொள்ளுங்கள்!
ஒரு சுலபமான வழி படிப்பது. ஆனால் யாரும் இதை அவ்வளவாகச் செயல்படுத்துவதில்லை. நீங்கள் படிக்கும் போது மூளையானது தகவலை ஆய்ந்து நடைமுறைப்படுத்தி ஒரு புதிய நியூரான் வழியை உண்டாக்குகிறது. தகவலைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. இதனால் அறிவு கூடுகிறது. புதிய தகவல்களைப் பெற முனைப்புடன் ஈடுபடுங்கள்; அறிவை அதிகமதிகம் பெறுங்கள். இதற்கு சுலபமான எளிய வழி படிப்பது தான்! ஆகவே படியுங்கள்!!


கேள்வி கேளுங்கள் : எந்த மேதையை எடுத்துக் கொண்டாலும் அவர் கேள்வி கேட்டுக் கேட்டு அறிவைக் கூர்மைப் படுத்திக் கொண்டதைக் காணலாம். தனக்குப் புரியாத எதையும் நன்கு அறிந்து கொள்ள அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. நீங்கள் கேள்வி கேட்கும் போது ஒரு பிரச்சினைக்கான விடையைக் காணத் துடிக்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். சிந்திப்பது என்பது மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான சிறந்த பயிற்சி! ஆகவே கேள்விகளைக் கேளுங்கள்.
இசையை அனுபவியுங்கள் : இசைப் பிரியராக இல்லாத ஒருவரை உலகில் காண்பது மிகவும் அரிது. இசையைக் கேட்கும் போது மூளை ஆற்றல் கூடுவதையும் வாக்கு வன்மை கூடி சரளமாகப் பேச முடிவதையும் ஆய்வுகள் கண்டுள்ளன. குறிப்பாக கரோனரி ஆர்டிரி வியாதி (Coronary artery disease) உள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்த கர்நாடக, ஹிந்துஸ்தானி, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படப் பாடல்களைக் கேட்டு அமைதி பெறலாம். வாக்கு வன்மை இரட்டிப்பாகக் கூடுவதை ஆய்வுகள் நிரூபிக்கும் போது வியப்பு தான் அடைய வேண்டியிருக்கிறது. இசை கேளுங்கள்!


கற்றுக் கொண்டே இருங்கள் : ஒரு விஷயத்தைக் கற்கும் போது நியூரான்கள் மற்றும் அவற்றின் இடையே உள்ள இணைப்புகள் ஆகியவற்றின் அளவும் அமைப்பும் மாறுகின்றன. படிப்பதால் மட்டும் கற்க முடியும் என்பதில்லை. புதிய இடங்களுக்குப் போவது, ஒரு புதிய மொழியை அறிவது, ஒரு புதிய இசையைக் கற்று நாமே பாடுவது, ஒரு இசைக் கருவியைக் கற்பது, ஏன் இணைய தளத்தில் ஒரு புதிய தகவலைத் தேடுவது இவை எல்லாமே கற்பதற்கான வழிகள் தாம்!


நண்பர்களைப் பெறுங்கள். மனிதர்கள் கூட்டு சமூகத்தால் வாழ்பவர்கள். தனியாக ஒருவரால் வாழவே முடியாது. உறவுகள் மூளையை மேம்படுத்தும். மற்றவர்களுடன் ஊடாடி மகிழ்வது, உண்மையிலேயே மூளைக்கான சிறந்த பயிற்சி. நண்பனில்லா மனிதன் பாழ்!
மன அழுத்தத்தைக் குறையுங்கள். அது தான் மனிதனின் முதல் எதிரி. தொடர்ந்து மன அழுத்தம் இருந்தால் அது மூளை செல்களைப் பாதிக்கிறது. நினைவாற்றல் திறன் குறைகிறது. ஆகவே வாழ்க்கையை லகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சிரித்து மகிழுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து என்ற அனுபவ மொழி அற்புதமான உண்மை. அது மூளைக்கும் நினைவாற்றலுக்கும், உடலுக்கும் அற்புதமாகப் பொருந்தும். ஜோக்குகளும், பஞ்ச் டயலாக் வரிகளும் மூளையைக் கற்கச் செய்கிறது; படைப்பாற்றல் திறனைக் கூட்டுவிக்கிறது.


எதையும் நேர்த்தியாக வைத்திருங்கள் : இந்தியரிடம் இருக்கும் மகத்தான குறை எதையும் நேர்த்தியாக நிர்வகிக்காமல் கன்னா பின்னாவென்று அலங்கோலமாக வைத்திருப்பது தான். எதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். இது மூளைச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலைக் கூட்டுகிறது. விஷயங்களை எளிதாக்குகிறது. படபடப்பைத் தவிர்க்கிறது. டெஸ்கிலிருந்து மட்டும் குப்பைகளை அகற்ற வேண்டாம். மூளையிலிருந்தும் அனாவசிய விஷயங்களைத் தேக்காமல் அகற்றி விடுங்கள்.


பகல் கனவு காணுங்கள் : பகல் கனவை அனுபவித்துக் காண்பது மூளைக்கான சிறந்த பயன் தரும் ஒன்று. மனம் அங்கும் இங்கும் அலை பாயும் போது பிரச்சினைக்கான தீர்வைக் காணும். இது ஆய்வின் முடிவு. பல மேதைகளின் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இது அமைந்துள்ளது.


கையினால் எழுதுங்கள் : நாம் மறந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கம் கையினால் எழுதுவது. வார்த்தைகளை எழுதிப் பார்ப்பதால் மூளை ஆற்றல் கூடுகிறது; கற்றல் மேம்படுகிறது. நினைவாற்றல் கூடுகிறது.


மூளை விளையாட்டுக்கள் எனப்படும் ப்ரெய்ன் கேம்ஸ் – Brain Games – பலவற்றை விளையாடுங்கள். மூளையில் உள்ள வெவ்வேறு பகுதிகள் புதிர்களை விடுவிக்கும் போதும், விடுகதைகளை விடுவிக்கும் போதும் புதிய தொடர்புகளைப் பெறுகின்றன; மூளைத் திறனைக் கூர்மையாக்குகின்றன.


கார்ட்டுன் வரையுங்கள். கார்ட்டூன், கேலிப்படம் வரைவது, சில அர்த்தமற்ற கிறுக்கலகளை வரைவது மூளையை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது.


தொலைக்காட்சியைப் பாருங்கள். தொலைக்காட்சியை அளவோடு அதாவது ஒரு நாளைக்கு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் பார்ப்பது மூளை ஆற்றலை வளர்க்கிறது. நேரடிப் பேட்டியில் பங்கு கொள்வோரில் பலர் இப்படி தொலைக்காட்சியை அளவோடு பார்ப்பதால் மிகத் திறமையுடன் பதில் அளிக்கின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.


ஒரே வழியில் தினமும் போகாமல் சற்று வழியை மாற்றிப் பழகுங்கள். இப்படிப் புதிய செயலைச் செய்வதால் டோபமைன் வெளியாகிறது. அது புதிய நியூரான்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. உங்களை ஊக்குவிக்கிறது.
உங்கள் நகரைப் பற்றி நன்கு அறிந்து அதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஆய்வு ஒன்றில் நகரத்தில் டாக்ஸி ஓட்டும் டிரைவர்கள் இடம் பற்றி அறியும் மூளைப் பகுதிகளில் வல்லுநர்களாக இருப்பது தெரிய வருகிறது.


ஒரு புதிய இசைக் கருவியைக் கற்றுக் கொள்ளுங்கள். மோட்டார் கண்ட்ரோல், கேட்டல், பார்க்கும் பகுதிகள் எனப்படும் மூளைப் பகுதிகள் இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களிடம் மற்றவர்களை விட அதிகத் திறனுடன் இயங்குவதை ஆய்வு கூறுகிறது.
உரக்கப் படியுங்கள். எதையேனும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உரக்கப் படித்துப் பழகுங்கள். உரக்கப்படித்தால் நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிறது.


ஒரு புதிய மொழியைக் கற்க ஆரம்பியுங்கள். மூன்று மொழிகளுக்கு மேல் தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களை விட அதிக ஐ க்யூ கொண்டிருக்கின்றனர். அல்ஜெமீர் வியாதி உள்ளவர்கள் ஒரே ஒரு மொழி மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.


குறிப்பேடுகளில் குறிப்பெடுங்கள் : உங்கள் கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொள்வது நினைவுக்கு ஆதாரமாகவும் இலக்கியத்தை கற்கும் உங்கள் மூளையில் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆக்ஸிஜனோடு கூடிய இரத்தைத்தை கொண்டு செல்லவும் உதவுகிறது. ஆகவே தான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் மாணவர்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும் படி தூண்டுகின்றனர்.


மற்றவர்களுக்குக் கற்பியுங்கள். மற்றவர்களுக்கு எதையேனும் கற்பிக்கும் போது நீங்கள் தகவலை நினைவுக்குக் கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது. அதைப் புதிய முறையில் திருப்பி அமைத்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இதனால் நினைவாற்றல் திறன் கூடுகிறது.


ஓவியம் வரையுங்கள். ஏதேனும் ஒரு சித்திரம், படம், ஓவியம் ஒன்றை வரைந்து பாருங்கள். படம் வரைவது வலது பக்க மூளைப் பகுதியின் செயலை அதிகரித்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துகிறது. கலர் பென்சில்கள் உங்கள் மூளையைச் சக்தி உள்ளதாக ஆக்கும் சிறிய கருவிகள்!


ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள். வெட்டி அரட்டை, வீண் பேச்சு இவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு விவாதத்தில் கலந்து கொள்ளும் போது மூளை வெகு வேகமாகச் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. கருத்துக்களை உரிய வார்த்தைகளில் சொல்ல அவசியம் ஏற்படுகிறது. ஆகவே சிறந்த விஷயங்களைக் குறித்து நிபுணர்களுடன் விவாதிப்பது மூளை ஆற்றலைக் கூட்டுவிக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆகையால் தான் அறிஞர்களிடம் பழகு, நல்லோரை அணுகு என நமது அறநூல்கள் வலியுறுத்துகின்றன.


உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். ஒரே இடத்தில் இருக்காமல் புதிய இடங்களில் செயல்படுவது மூளையை ஊக்கப்படுத்தி மாற்ற வழி வகுக்கிறது. அடுத்த முறை வேறு ரெஸ்டாரண்ட், ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இதற்கான வழிகள்.
குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பாஸிடிவ் சிந்தனைக்காக மூளையில் உள்ள பகுதிகளைச் செயலாற்ற வைப்பது உங்களால் நிர்ணயிக்கப்பட்ட உங்களின் குறிக்கோளே. வெற்றியைப் பெறச் சிறந்த வழி முதலில் குறிக்கோளை நிர்ணயிப்பது தான்! வாழ்க்கையை வளமாக்க வழி குறிக்கோள் ஒன்றைக் கொள்வது தான்!
*** மற்ற வழிகள் தொடரும்

tags — மூளை, ஆற்றல், 100 வழிகள்

ஆற்றலின் மகனே !கட்டிளங் காளையே! அக்கினி தேவனே ! (Post No.10,021)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,021

Date uploaded in London – 25 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் முழுதும், பாரதியார் பாட்டு போல, எல்லாம் ஆக்க பூர்வமான சொற்களே இருக்கும். அது மட்டுமல்ல; நல்ல கற்பனை வளம் மிக்க சொற்களையும் உவமைகளையும்  காணலாம். அக்கினி தேவனை அழைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் காலை, நண்பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் ஹோமத் தீ மூட்டுவர். அப்போது சொல்லும் மந்திரங்களை ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்திலுள்ள இரண்டு துதிகளில் உள்ள ஆக்கபூர்வ அடை மொழிகளை, சொற்களை,  மட்டும் தருகிறேன் . இன்னொரு துதியில் அக்கினியை ‘ஒளி ஆடை அணிந்தவனே’ என்று புலவர் விளிக்கிறார் இங்கே நெய் முடியுடைவனே என்று பகர்கிறார்.

இதோ ரிக் வேதம் RV.8-60

அக்கினி தேவனை ரிஷி பர்க்க பிரகாதன் பாடுகிறார்.

ஆற்றலின் மகனே

நெய் கேசம் உடையவனே

பழையவனே

புலவனே (கவி)

சுத்தம் செய்பவனே

இன்பம் தருவோனே

வாரி வழங்குவோனே

பிரகாசிப்போனே

அதி இளைஞனே

நித்தியனே

சத்தியனே

மனைகளை அளிப்பவனே

பாலகனே

எங்கும் பரவியவனே

மஹானே

நண்பர்களை மேம்படுத்துவோனே

ஆற்றலின் தலைவனே

நலத்தை அளிப்பவனே

பலத்தின் தலைவனே

பலத்தின் மகனே

கொம்புகளைத் தீட்டும் காளையே

இரண்டு தாய் உடையவனே

(வேத காலத்தில் இரண்டு மரக்கட்டைகளை  வைத்து தீ உண்டாக்கினர்)

சூடான சுவாலையால் மேகத்தைக் கிழிப்பவனே

(மேகத்தின் இடையே ஒளிரும் கீற்று மின்னல்)

தடைப்படாத அக்கினியே

தேவனான அக்கினியே

ஜனங்களைக் காப்போனே

ஒளிச் செல்வனே

XXX

துதி RV.8-61 (ரிக்  வேதம்)

இது இந்திரனை நோக்கி ரிஷி பர்க பிரகாதன் பாடுவது-

இந்திரனே

புருவசுவே

மகவானே

விப்ரனே

அழகிய மோவாய் உள்ளவனே

பலத்தின் தலைவனே

சூரனே

வள்ளலே

பொன்னார் மேனியனே

தாங்க ஊற்றே

சதக்ரதுவே (சதாவதானி)

தடை படாதவனே

நண்பனே

செல்வபதியே

பகைவர்களைப் புடைப்பவனே

புரந்தரனே

இவ்வாறு பாசிட்டிவ் சொல்லாக்கத்தையே பாடினால் நமது மனதும் எதையும் செய்யும் சக்தி பெறு ம். எதையும் தாங்கும் சக்தியையும் பெறும்.

வேத மந்திரங்களை இசைக்க முடியாதோர் அதை கேட்கவாவது செய்யலாம்.

—SUBHAM—

TAGS– ரிக் வேதம், ஆக்கபூர்வ, சொல்லாக்கம் , ஆற்றல், அடைமொழி

அதிசய ஆற்றல்: பிறர் மனதை அறிவது எப்படி? (Post No. 2615)

vivekananda-stamps

Written by S Nagarajan 

 

Date: 10 March 2016

 

Post No. 2615

 

Time uploaded in London :–  8-49 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (6)

ச.நாகராஜன்

 

 

பிறர் மனதை அறிதல்

 vivek2

பிறரின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது ஸ்வாமிஜிக்கு எளிதான ஒன்று. ஒருவர் ஸ்வாமிஜியைப் பார்க்க வரும்போதே அவர் எதற்காக வருகிறார் என்ன நினைக்கிறார் என்   பதை அவர் மிக எளிதாக அறிந்து கொள்வார்.

 

ஒரு முறை பிராணாயாமம் பற்றிக் கேட்க வேண்டுமென்று சிலர் ஸ்வாமிஜியை அணுகினர்.

 

ஸ்வாமிஜி மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு பிராணாயாமம் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தானாகவே அது பற்றிக் கூறலானார். வந்தவர்கள் வியந்தனர். அவர்கள் கேட்க நினைத்த சந்தேகங்களுக்கெல்லாம் அவருடைய பேச்சில் பதில் இருந்தது.பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பித்த உரை இரவு ஏழு மணிக்கு முடிந்தது.

 

 

எப்படி தாங்கள் கேட்காமலேயே அவரால் பதில் சொல்ல முடிந்தது என்று சீடர் ஒருவர் கேட்ட போது ஸ்வாமிஜி, “இது போன்ற நிகழ்ச்சிகள் மேலை நாட்டில் பல முறை நடந்துள்ளன. மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் அது பற்றி என்னிடம் கேட்டுள்ளனர்” என்றார்.

 

மனதைப் படிக்கலாமா?

 

சிஸ்டர் கிறிஸ்டைன் ஸ்வாமிஜியை விட மூன்று வயது இளையவர். அவர் ஸ்வாமிஜியிடம் தீட்சை பெற விரும்பினார்.

ஆயிரம் தீவு பூங்காவில் ஸ்வாமிஜியுடன் இருக்கும் பேறு பெற்றார் அவர். மறு நாள் பலருக்கு மந்திர தீட்சை தர ஸ்வாமிஜி உத்தேசித்திருந்தார். முதல் நாள் அவரை அழைத்த ஸ்வாமிஜி, “ உனக்கும் தீட்சை தர விரும்புகிறேன். ஆனால் உன்னை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.அதனால் தீட்சைக்கு நீ தயாராக இருக்கிறாயா என்பது புரியவில்லை” என்று கூறிய ஸ்வாமிஜி சற்றே தயக்கத்துடன் தொடர்ந்தார்:” என்னிடம் பிறரின் மனதைப் படிக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை மிகவும் அபூர்வமாகவே நான் பயன்படுத்துவேன். உனக்கும் தீட்சை தர இருப்பதால், நீ அனுமதித்தால் நான் உன் மனதைப் படிக்க விரும்புகிறேன்” என்றார்.

 

உடனே கிறிஸ்டைன், “தாராளமாகப் படியுங்கள்” என்றார்.

“முற்றிலும் படிக்கலாமா?” என்று கேட்டார் ஸ்வாமிஜி.

“படிக்கலாம்” என்று உறுதியாகக் கூறினார் அவர்.

“தைரியசாலிப் பெண் நீ” என்று அவரைப் பாராட்டிய ஸ்வாமிஜி அவரது மனதைப் படித்தார். பின்னர் கூறினார்:’ உனக்கு இன்னும் மூன்று திரைகளே உள்ளன. இப்பிறவியிலேயே உனக்கு மூன்றாவது கண் திறக்கும்” என்று கூறி அருளினார்.

பிற்காலத்தில் ஒரு முறை ஸ்வாமிஜி, மேலை நாட்டில் இந்த சக்தியைப் பயன்படுத்தியதால் தன் தவ ஆற்றல் குறைவு பட்டு விட்டது என்று கூறி வருந்தினார்

 

 

மனதின் ஆற்றல் பற்றிய உரை

 

ஏற்கனவே இந்த தொடரில் நாம் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாமிஜியின் மனதின் ஆற்றல் பற்றி கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் கீழே பார்க்கலாம். இவை மனதின் ஆற்றல் பற்றிய சில புதிய விஷயங்களை விளக்கும் பகுதிகளாகும்:

 

malaysian-postal-stamp-on-swami-vivekananda

Have you ever noticed the phenomenon that is called thought-transference? A man here is thinking something, and that thought is manifested in somebody else, in some other place. With preparations — not by chance — a man wants to send a thought to another mind at a distance, and this other mind knows that a thought is coming, and he receives it exactly as it is sent out. Distance makes no difference. The thought goes and reaches the other man, and he understands it. If your mind were an isolated something here, and my mind were an isolated something there, and there were no connection between the two, how would it be possible for my thought to reach you? In the ordinary cases, it is not my thought that is reaching you direct; but my thought has got to be dissolved into ethereal vibrations and those ethereal vibrations go into your brain, and they have to be resolved again into your own thoughts. Here is a dissolution of thought, and there is a resolution of thought. It is a roundabout process. But in telepathy, there is no such thing; it is direct.

 

 

I can see only at a distance of so many feet. But I have seen a man close his eyes and see what is happening in another room. If you say you do not believe it, perhaps in three weeks that man can make you do the same. It can be taught to anybody. Some persons, in five minutes even, can be made to read what is happening in another man’s mind. These facts can be demonstrated.

 

I shall tell you a story which I heard from a great scholar in the West. It was told him by a Governor of Ceylon who saw the performance. A girl was brought forward and seated cross-legged upon a stool made of sticks crossed. After she had been seated for a time, the show-man began to take out, one after another, these cross-bars; and when all were taken out, the girl was left floating in the air. The Governor thought there was some trick, so he drew his sword and violently passed it under the girl; nothing was there. Now, what was this? It was not magic or something extraordinary. That is the peculiarity. No one in India would tell you that things like this do not exist. To the Hindu it is a matter of course. You know what the Hindus would often say when they have to fight their enemies — “Oh, one of our Yogis will come and drive the whole lot out!” It is the extreme belief of the race. What power is there in the hand or the sword? The power is all in the spirit.

 

****** முற்றும்

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான அற்புதமான அனுபவங்களை அன்பர்கள் படிக்க இந்தத் தொடர் உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

 

கேட்டது கிடைக்கும்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2528)

BHARATMATA VIVEKA

Written by S Nagarajan

 

Date: 11 February 2016

 

Post No. 2528

 

Time uploaded in London :–  6-01 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

இதன் முதல் பகுதி நேற்று வெளியானது.

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (2)

 

ச.நாகராஜன்

 

 

 கேட்டது கிடைக்கும்!

 

ஸ்வாமிஜி மேலை நாடு செல்வது என்று  முடிவாகி விட்ட சமயம் அது. ஹைதராபாத்தில் உள்ள் அன்பர்கள் அவரை உடனே அங்கு வருமாறு வேண்டினர். அதற்கிணங்க ஸ்வாமிஜி ஹைதரபாத் சென்றார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க ஹிந்துக்களும் முஸ்லீம்களுமாக 500 பேர் திரண்டனர். மெஹபூப் கல்லூரியில் ஸ்வாமிஜி 1000 பேர் கொண்ட கூட்டத்தில், “நான் ஏன் மேலை நாடு செல்கிறேன்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

 

 

ஹைதராபாத்தில் தங்கி இருந்த போது அமானுஷ்ய சக்தி படைத்த பிராமண யோகி ஒருவரை அவர் சந்தித்தார். எந்தப் பொருளை வேண்டுமானாலும் உடனடியாக வருவிக்கும் ஆற்றல் படைத்தவர் அவர்! நண்பர்கள் சிலருடன் சென்ற ஸ்வாமிஜியை யோகி வரவேற்றார். ஆனால் அப்போது அவருக்கு ஜுரம் கண்டிருந்தது.

 

 

ஸ்வாமிஜி, அவரிடம் அவரது அமானுஷ்ய சக்தியைக் காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்கிய அவர், ஸ்வாமிஜியை நோக்கி, “ நிச்சயம் காட்டுகிறேன். ஆனால் அதற்கு முன்னர் என் தலையில் கை வைத்து ஆசீர்வதியுங்கள். அதனால் என் ஜுரம் போகட்டும்” என்று வேண்டினார்.

ஸ்வாமிஜியும் அப்படியே அசீர்வதித்தார்.

 

பின்னர் அந்த யோகி அவர்கள் அனைவரையும் நோக்கி, “உங்களுக்கு வேண்டியதை ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுங்கள்” என்றார்.

 

 

அந்தப் பகுதியில் கிடைக்காத ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட சிக்கலான பொருள்களை எல்லாம் பேப்பரில் எழுதி அவரிடம் கொடுத்தனர்.

 

ஒரு கௌபீனம் மட்டுமே அணிந்திருந்த அந்த யோகிக்கு ஸ்வாமிஜி ஒரு சால்வையைக் கொடுத்தார். அதைப் போர்த்திக் கொண்ட அவர், அதனுள்ளிருந்து குலை குலையாக திராட்சைகள், ஆரஞ்சுப் பழங்கள் என்று ஒவ்வொன்றாக எடுத்துத் தந்தார்.

அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்

 

ஆவி பறக்க அப்போதே அரிசியிலான சாதத்தையும் அவர் வரவழைத்து அனைவரையும் சாப்பிடுமாறு கூறினார். சற்று பயத்தில் ஆழ்ந்த அனைவரும் ஸ்வாமிஜியை அதைச் சாப்பிட வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் அந்த யோகியே அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தார்.

 

அனைவரும் உடனே சாப்பிட ஆரம்பித்தனர்.

 

100 vivekas

எல்லாம் கை ஜாலம் தான்!

 

பின்னர் அழகிய ரோஜா மலர்களை வரவழைத்து ஸ்வாமிஜியிடம் கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தினார் அந்த யோகி.

 

இதெல்லாம் எப்படி என்று ஸ்வாமிஜி வினவினார். “ஒன்றுமில்லை கை ஜாலம் தான்” என்றார் அவர்.

ஆனால் வெறும் கை ஜாலத்தால் இப்படி உடனே கேட்கப்பட்ட பல பொருள்களைத் திரட்டித் தர முடியாது என்பதால் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று ஸ்வாமிஜி அனுமானித்தார்.

இந்த அனுபவத்தையும் அவர் தனது லாஸ் ஏஞ்சல்ஸ் சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

 

 

மனத்தின் ஆற்றல் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதையே இது காட்டுகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஸ்வாமிஜியின் ஆங்கிலச் சொற்பொழிவின் மூலம் கீழே தரப்படுகிறது.

 

 

 

The Powers of the Mind

 

Delivered at Los Angeles, California, January 8, 1900

(Complete Works of Swami Vivekananda Volume II)

 

 

 

Another time I was in the city of Hyderabad in India, and I was told of a Brâhmin there who could produce numbers of things from where, nobody knew. This man was in business there; he was a respectable gentleman. And I asked him to show me his tricks. It so happened that this man had a fever, and in India there is a general belief that if a holy man puts his hand on a sick man he would be well. This Brahmin came to me and said, “Sir, put your hand on my head, so that my fever may be cured.” I said, “Very good; but you show me your tricks.” He promised. I put my hand on his head as desired, and later he came to fulfil his promise. He had only a strip of cloth about his loins, we took off everything else from him. I had a blanket which I gave him to wrap round himself, because it was cold, and made him sit in a corner. Twenty-five pairs of eyes were looking at him. And he said, “Now, look, write down anything you want.” We all wrote down names of fruits that never grew in that country, bunches of grapes, oranges, and so on. And we gave him those bits of paper. And there came from under his blanket, bushels of grapes, oranges, and so forth, so much that if all that fruit was weighed, it would have been twice as heavy as the man. He asked us to eat the fruit. Some of us objected, thinking it was hypnotism; but the man began eating himself — so we all ate. It was all right.
He ended by producing a mass of roses. Each flower was perfect, with dew-drops on the petals, not one crushed, not one injured. And masses of them! When I asked the man for an explanation, he said, “It is all sleight of hand.”
Whatever it was, it seemed to be impossible that it could be sleight of hand merely. From whence could he have got such large quantities of things?

**********

விவேகானந்தரின் அற்புத அனுபவங்கள் – பகுதி 1(Post No. 2525)

விவேகா-அனிடஸ் மரியா

Written by S Nagarajan

 

Date: 10 February 2016

 

Post No. 2525

 

Time uploaded in London :–  6-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)

 

ச.நாகராஜன்

 

 விவேகா

சித்திகளைக் கண்டு மயங்காதே!

 

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கை நெடுக தனது அற்புதமான தவ ஆற்றலால் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் உண்டு. அதீத உளவியல் சம்பந்தமாக அவர் அடைந்த அனுபவங்களும் ஏராளம் உண்டு. தனியே பெரிய நூலாகத் தொகுக்க வேண்டியவை இவை.

 

இந்த சிறு கட்டுரைத் தொடரில், ஒரு அறிமுகமாக, அவரது ஆற்றல்களையும அவர் அடைந்த அனுபவங்களையும் காணலாம். இதைப் படித்ததன் மூலம் அவரைப் பற்றி இன்னும் முற்றிலுமாக அறிய உத்வேகம் ஏற்பட்டால் அதுவே இந்த கட்டுரைத் தொடரின் பயனாக அமையும்.

முதலில் சித்திகள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியதை இங்கு நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

பரமஹம்ஸர் சித்திகளைக் கண்டு மயங்காதே என்று தெளிவாகப் பலமுறை கூறியுள்ளார். அதற்கு மதிப்புக் கொடுக்காதே; அதையும் தாண்டி உள்ள மஹாசக்தியை நாடு என்பதே அவரது அருளுரை.

 

இதையே ஸ்வாமிஜியும் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.

 

ஆனால் பெரும் அவதாரங்கள் தோன்றும் போது அளப்பரிய ஏராளமான ஆற்றல்கள் அவர்களுடன் இயல்பாகவே தோன்றும். இப்படி அற்புதங்களைத் தாம் ஆற்றியதாகவே அவர்கள் கூற மாட்டார்கள்; அவர்கள் இதை அறிவதும் இல்லை, போலும். மற்றவர்கள் கூறும் போது, அப்படியா என்று வியப்பது வழக்கம்!

இந்தக் கருத்தை பகவான் ரமண மஹரிஷியும் அழுத்தம் திருத்தமாக அடிக்கடி கூறியுள்ளார்.

 

லாஸ் ஏஞ்சல்ஸ் உரை ; நினைத்ததைச் சொல்பவர்!

ஸ்வாமிஜி கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி மனத்தின் சக்திகள் (The Powers of the Mind : Complete Works of Swami Vivekananda Volume II) என்று அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

அதில், “இயற்கைக்கு மீறிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. அதீதமான நிகழ்வுகளைப் பற்றி நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். சிலருக்கு சொந்த அனுபவங்களும் இதில் உண்டு. எனது சொந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அந்த உரையை அவர் ஆரம்பிக்கிறார்.

ஒரு சமயம் அவர் எந்தக் கேள்வியை மனதில் நினைத்தாலும் அதை அறிந்து கொண்டு அதற்கு உடனே விடை தரும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.  எதிர்காலத்தில் இனி நடக்கப் போகும் சம்பவங்களையும் கூற வல்லவர் அவர்.  ஆர்வம் உந்தவே, சில நண்பர்களுடன் அவரைச் சந்திக்க ஸ்வாமிஜி கிளம்பினார். ஒவ்வொருவரும் தன் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டனர். தவறு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நினைத்தது என்ன என்பதை ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி அதைத் தங்கள் பாக்கட்டில் போட்டுக் கொண்டனர். அந்த குழுவினரைப் பார்த்தவுடனேயே அந்த மனிதர் ஒவ்வொருவரும் என்ன கேள்வியை நினைத்திருக்கிறோம் என்பதைக் கூறி அதற்கான பதிலையும் கூறி விட்டார்.

 

 

பிறகு அவர் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை மடித்து அதில் ஸ்வாமிஜையைக் கையெழுத்திடுமாறு கூறி. “இதைப் பார்க்காதீர்கள். உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

 

பின்னர், “நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ, அது எந்த  மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்! , நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த மனிதருக்குத் தெரியாத சம்ஸ்கிருத மொழியில் ஒரு பெரிய வாக்கியத்தை ஸ்வாமிஜி நினைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த மனிதர், “இப்போது உங்கள் பையில் இருக்கும் பேப்பரை எடுத்துப் பாருங்கள்” என்றார். ஸ்வாமிஜி நினைத்த சம்ஸ்கிருத வாக்கியம் அந்தப் பேப்பரில் அப்படியே இருந்தது.

 

சிவாஜி, விவேகா, நேதாஜி

ஒரு மணி நேரம் முன்னர் அந்தப் பேப்பரில் அவர் எழுதியபோது, “நான் எழுதியதை உறுதி செய்து இவர் அதே வாக்கியத்தை நினைப்பார்” என்று சொல்லி இருந்தார். அது முற்றிலும் சரியாக ஆனது.

 

இதே போல இன்னொரு நண்பர் அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க சற்றும் வாய்ப்பே இல்லாத அராபிய மொழியில், குர் ஆனில் வரும்  ஒரு பகுதியை எழுதி இருந்தார். அது அப்படியே அவர் முன்னரே வைத்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

 

 

இன்னொரு நண்பரோ ஒரு வைத்தியர். அவர் ஜெர்மானிய மருத்துவ புத்தகத்தில் வரும் ஒரு வரியை நினைத்தார். அதுவும் அப்படியே பேப்பரில் எழுதப் பட்டிருந்தது.

 

 

சில நாட்கள் கழித்து  முந்தைய முறை எப்படியோ தான் மயக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்தவாறே ஸ்வாமிஜி மீண்டும் அந்த மனிதரிடம் சென்றார். ஆனால் என்ன ஆச்சரியம், இந்த முறையும் அவர் அப்படியே அந்த நிகழ்ச்சியை அதிசயமாக நடத்திக் காட்டினார்.

 

ஸ்வாமிஜியின் அனுபவங்கள் …       தொடரும்

 

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக ஸ்வாமிஜியின் மூலச் சொற்பொழிவுப் பகுதிகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன.

 

All over the world there has been the belief in the supernatural throughout the ages. All of us have heard of extraordinary happenings, and many of us have had some personal experience of them. I would rather introduce the subject by telling you certain facts which have come within my own experience.

 

I once heard of a man who, if any one went to him with questions in his mind, would answer them immediately; and I was also informed that he foretold events. I was curious and went to see him with a few friends. We each had something in our minds to ask, and, to avoid mistakes, we wrote down our questions and put them in our pockets. As soon as the man saw one of us, he repeated our questions and gave the answers to them. Then he wrote something on paper, which he folded up, asked me to sign on the back, and said, “Don’t look at it; put it in your pocket and keep it there till I ask for it again.” And so on to each one of us. He next told us about some events that would happen to us in the future. Then he said, “Now, think of a word or a sentence, from any language you like.” I thought of a long sentence from Sanskrit, a language of which he was entirely ignorant. “Now, take out the paper from your pocket,” he said. The Sanskrit sentence was written there! He had written it an hour before with the remark, “In confirmation of what I have written, this man will think of this sentence.” It was correct. Another of us who had been given a similar paper which he had signed and placed in his pocket, was also asked to think of a sentence. He thought of a sentence in Arabic, which it was still less possible for the man to know; it was some passage from the Koran. And my friend found this written down on the paper.
Another of us was a physician. He thought of a sentence from a German medical book. It was written on his paper.
Several days later I went to this man again, thinking possibly I had been deluded somehow before. I took other friends, and on this occasion also he came out wonderfully triumphant.

(To be Continued)