இசையும் இசையின் கதையும்! – Part 2 (Post.9030)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9030

Date uploaded in London – – 13 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

picture posted by Lalgudi Veda

இசையின் பெருமை

தெய்வமாக வணங்கும் கடவுளான கண்ணன், தன் குழலிசையால்

அனைவரையும் வசப்படுத்தினான்.பசுக்களும் கறக்காமலே. பால்

சுரந்தன!!! மக்கள் மதி மயங்கி அவனைத் தலைவனாக ஏற்றனர்.

சிவன் மற்றும் மகா விஷ்ணு, துர்க்கையம்மன கையில் உள்ள சங்கு

இசையை கடவுளும் இசைக்கின்றனர் என்று பறை சாற்றுகின்றது . மேலும் கல்வி மற்றும் இசைக் கடவுளான , வீணையைக் கையில் உடைய சரஸ்வதி அனைவராலும் இசை ஆரம்ப தினத்தன்று வணங்கப்படுகிறாள்!! போற்றப்படுகிறாள்!!!

இசையோடு இணைந்தது தான் நாட்டியம், இசை இல்லாமல் நாட்டியம் இல்லை எனபதை உணர்த்தும் வடிவமே நடராஜர்!!!

2000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில்

“குரவைக்கூத்து” நடப்பதாக எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள்.

ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் தெய்வீகப் பாட்டுகளும் கதைரூபத்தில் மக்கள் மனதை ஆட்கொண்டன..பின்னர் தெருக்கூத்தாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன.

இசைதான் இதற்கெல்லாம் ஆணி வேர்!!!

தான்சேன் என்ற வட இந்தியப் பாடகர் “தீபக்” என்னும் ஒரு ராகத்தைப்பாடி விளக்கை எரிய வைத்தாராம்!!!

“அமிர்த வர்ஷினி” என்ற ஒரு ராகத்தைப் பாடி மழையையே

வருவித்தார் முத்து சாமி தீட்சிதர்.

“உடுக்கை” அடித்துப் பாட்டுப் பாடி தெய்வங்களை மானிட உடலில்

வரவழைத்து “குறி” கேட்டனர் பூசாரிகள்.

மேலும் அந்த காலத்தில் தெய்வங்களின் திருவிளையாடல்களைப் பாடுவதும் கடவுளின் அடியார்களின் பாடல்களை பாடுவதும்

மக்களை நல் வழிக்கு செலுத்தின.

இசைக்கு வடிவம் தருவது எது???

மனிதன்

மனிதனின் தொண்டை- குரல்வளை.

நரம்புக்கருவிகள்( CHORDO PHONES)

யாழ், வீணை, தம்பூரா,வயலின்,கோட்டு வாத்தியம், மாண்டலின்

தோல் / மற்றம் சில கருவிகள்(MEMBRANO PHONES,)

பறை, மிருதங்கம், தவில், கடம், முகர்சிங், ஜால்ரா, சிப்ளாக்கட்டை

காற்றுக்கருவிகள்(AERO PHONES)

புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரிநெட், மகுடி

இயற்கை இசை

வண்டுகளின் ரீங்காரம்,

குயில் போன்ற பறவைகளின் கூவல்

மயிலின் அகவல்,

யானைகளின் பிளிறல்,

ஏன் கழுதைகளின் கத்தல் கூட ஒரு வகை இசைதான்!!!

மக்கள் அதை ஒரு நல்ல சகுனமாக எடுத்து கொள்வதிலிருந்து இது தெரிகிறதல்லவா!

இராகம்

இசைக்கு இன்றியமையாதது இராகம். ராகம் பல ஸ்வரங்களின் சேர்க்கையால் உண்டாகிறது.உலக இசையிலேயே இந்திய

இசைதான் இராக வளர்ச்சியில் முழுமை கண்டுள்ளது என்பதே

அறிஞர் கண்ட உண்மை.

ஆதாரங்களின்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் உள்ள “முல்லைத் தீம்பாவணி” என்ற இராகத்தில் ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்தில் பாடினார்கள். அதில் கையாளப்பட்ட சுரங்கள் “ச,ரி,க,ப,த,ச “ இதுதான் மோகனத்தின் ஸ்வரம். இதுதான் உலகிலேயே முதலில் தோன்றிய இராகம் என ஆய்வாளர்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர்!!!

8 – ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “திவாகரம்” என்ற சங்கீத நூலில்

“ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ”எனும் இவ்வேழு எழுத்தும் இசைக்குரியன”

என்ற தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஏழும் தமிழிசையான

ஸ ரி , க, ம , ப , த , நி என்னும் ஏழு ஸ்வரங்களாகும்.

ஏழிசையாவன :-

ஸ – ஸட்ஜம் , ரி – ரிஷபம் , க – காந்தாரம் , ம – மத்யம ம் , ப – பஞ்சமம்

த – தைவதம் , நி – நிடாதம்

இந்த ஏழு ஸ்வரங்களை 12 பிரிவுகளாக்கி ராகங்கள் அமைத்து பாடினர் பண்டிதர்கள்.

இந்த இசையை அந்தந்த கால, தேச, வர்த்தமானத்திற்கு தகுந்த

மாதிரி, தமிழிசை முறை் கர்நாடக இசை முறை,இந்துஸ்தானி இசை

முறை, பார்சீய இசை முறை முதலியவை தோன்றி , அததற்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களையும் அதனுள் கொண்டு இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய இசையும், ஹிந்துஸ்தானி இசையும்……….

அன்னிய ஆதிக்கத்தினால், நம்நாட்டிற்குள் நுழைந்த ஐரோப்பிய

இசையின் அன்பளிப்பும், வேண்டாத அம்சங்களும் நிறைய உண்டு.

உதாரணமாக இசையை கற்க ஆரம்பிக்கும் எவரும் முதன்முதலில்

உபயோகிப்பது “ஹார்மோனியமே”!!!!! இதை ஒரு இசைக் கருவியாகவே ஒத்துக்கொள்ளவில்லை எவரும்!!! பிறகு நாடக மேடைகளுக்கும், முதன் முதலில் இசை பயில்வோருக்கும் இன்றியமையாததாக ஆகிவிட்டது!!! மேலும் “கிளாரினெட்” என்ற கருவி நாதஸ்வரத்திற்கு இணையாக போட்டி போட ஆரம்பித்தது!!!

நிறைய மாற்றங்கள் இந்துஸ்தானி இசையால் தமிழிசை, கர்நாடக

இசைக்கும்……. வந்தது.

இசையும், பஜனைப் பாடல்களும்

வட இந்திய இசை தமிழ் நாட்டில பக்தி பூர்வமாக வெகுவாக வேகமாக பரவலாயிற்று………மீரா பஜன், துக்காராம், சூர்தாஸ், கபீர்தாஸ், பாட்டுக்கள் மூலமாக இசையும், பக்தியும் சேர்ந்தே வளர்ந்தது!!! கதா காலட்சேபம் என்ற பெயரில் சகி, திண்டி டொகரா, ஓவி, கட்கா, சவாயி போன்ற மராட்டிய இசை வகைகள் நமது இசையுடன் சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. வட இந்திய இசைக்கருவிகளும் தமிழ் நாட்டில் தாண்டவமாடத் தொடங்கியது.

இவ்விதமாக வளர்ந்த இசை தமிழ் நாட்டிலும் மட்டுமல்ல உலெகெங்கும் பரவி புகழ் முரசு கொட்ட ஆரம்பித்தது.

இன்றைக்கும் அது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

என்னன்ன ராகங்களினால் என்னன்ன வியாதிகள் தீரும், என்பது பற்றி திரு.சந்தானம் நாகராஜன் எழுதிய அருமையான கட்டுரையை (கட்டுரை எண் 9017 வெளியான தேதி 10-12-2020)timeanndvedas இல் காணலாம்.

மேலும் கோவில்களில் என்னன்ன ராகங்கள் எந்தந்த பூஜா காலங்களில் பாடவேண்டும் என்ற கட்டுரையையும் tamilandvedas.com இல் (கட்டுரை எண் 9009 வெளியான தேதி 8-12-2020) திரு.சந்தானம் நாகராஜன் அருமையாக விளக்கியிருக்கிறார். தயவுசெய்து படித்து மகிழுங்கள்.

tags- இசையின் கதை-2

***