இதயச் சிறையில் காதலி: கம்ப ராமாயண இன்பம் (Post No. 3010)

heart-pierced-by-cupids-a-007

 

Article written by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3010

Time uploaded in London :–  7-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள், காதல் இவைகளைக் குறிப்பிடுகையில் இதயம் போன்று ஒரு படம் எழுதி அதில் ஒரு அம்புக்குறி போடுவதைக் காண்கிறோம். இது அதர்வ வேதத்தில் உள்ள உருவகம்; இதை இன்றும் காதலர் தினத்தன்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது பற்றியும் தமிழில் இருதயம் என்றே சொல் இல்லை என்பதையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். குருத்து என்பதே ஹ்ருத் என்று சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது, இதுவே ஹார்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலம் என்றும் குருதி (இரத்தம்) என்பதே இதற்கு ஆதாரம் என்றும் எழுதினேன். இதன் மூலமாக பழைய மொழிக் கொள்கைகள் பித்தலாட்டம் என்றும் ஆரிய-திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு இல்லை என்பதையும் நிலைநாட்டினேன். இதை உலகம் விரைவில் ஏற்கும்.நிற்க.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு. இதுவும் இந்துக்கள் கற்பித்ததே.

அன்பு எனும் சிறையில் அகப்பட்ட யாருக்கும் இது பொருந்தும்! ராமனை எப்போதும் தன் இதயத்தில் காட்டும் அனுமனின் படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

 

கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பாடல் வருகிறது. ராவணனின் இதயத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளாம்!

 

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட

எயிலுடை இலங்கை வேந்தன் இதயம் ஆம்  சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

உயர்ந்த மதிலையுடைய இலங்கைக்கு அரசனான ராவணன், மயில் போன்ற சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைப்பதற்கு முன்னர், தனது இதயம் என்னும் சிறையில் வைத்தான். அப்பொழுதே வெய்யிலில் உருகும் வெண்ணை போல அவனது மனமும் உருகிற்று. (ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்).

 

 

வெய்யிலில் உருகும் வெண்ணெய் என்ற உவமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கது.

 

நாகரீக வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திலேயேதான் இதுபோன்ற உவமைகள் தோன்ற முடியும். இது அதர்வண வேதத்திலேயே வருவதால் கம்பன் அந்த உவமையைக் கையாண்டதில் வியப்பொன்றும் இல்லை. பாரத சமுதாயமே பழங்கால உலகின் தலைவன், முதல்வன் என்பதில் இனிமேலும் ஐயப்பாட்டிற்கு இடமுண்டோ?

 

–சுபம்—

 

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda ( Research article written by London Swaminathan, posted on 26 September 2012)