
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9651
Date uploaded in London – –26 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (புத்தகங்கள்) உள்ளன. அதில் 1000 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மந்திரங்கள் இருக்கும்; மொத்த மந்திரங்கள் பத்தாயிரத்துக்கும் சற்று அதிகம். இதில் முதல் மண்டலத்தில் உள்ள 112 ஆவது பாடல் முக்கியமானது. அதில் 25 மந்திரங்களில் ஏராளமான அற்புதங்களின் பட்டியலும், மன்னர்களின் பெயர்களும் வருகின்றன . இந்திய வரலாற்றை எழுதிய ஆங்கில அயோக்கியர்கள் இந்தியாவில் மன்னர்களே இல்லை என்றும் புத்தர் காலம் முதலே மன்னர்கள் பெயர்கள் உள்ளன என்றும் எழுதிவிட்டார்கள். அதை படித்துதான் நானும் மதுரைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றேன் . வெட்கக்கேடு.
கி.மு 2500ல் துவங்கிய சரஸ்வதி- சிந்து நதி தீர நாகரிகம் கி.மு 1700ல் வறட்சி, வெள்ளப் பேருக்கு முதலியவற்றால் அழிந்தது . வெள்ளைக்காரன் கணக்குப்படி 2000 ஆண்டுகளுக்கு மன்னரே கிடையாது. பெயரில்லாப் பூச்சி ஆட்சி செய்தது! அனால் இதே காலத்தில் பாபிலோனிய, எகிப்திய, சீன , மாயா மன்னர்களின் பெயர்கள் எல்லாவற்றையும் வெள்ளைத் தோல்களே பட்டியல் போட்டுக் காட்டுகின்றன. புராணங்களோ வேனில் 140 தலைமுறையினரை கி.மு காலத்தில் காட்டுகின்றன. அவற்றை எல்லாம் அயோக்கியர்கள் ஒதுக்கிவிட்டனர். சூரிய வம்ச 140 +++ தலை முறை தவிர சந்திர வம்சம் வேறு உள்ளது !
மாக்ஸ்முல்லர் முதலிய 20 கோமாளிகள் ரிக் வேதத்தை மொழி பெயர்க்கப் புறப்பட்டு “முழி பெயர்த்தனர்”. அவர்களுக்கிடையே மஹா குழப்பம் !!! தெரியாத ஒரு சொல் வந்தால் ஒரு கோமாளி அதை புழு பஎன்பான் . மற்றோரு கோமாளி அதை அரக்கன் என்பான். மூன்றாவது கோமாளி இது ஒரு தெய்வத்தின் பெயர் என்பான். ஒரே ஜோக் Joke மயம் . வாய்விட்டுச் சிரிக்கலாம். 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் என்ற மஹான், வேதத்துக்கு பாஷ்யம் எழுதினார். அதை ஆதாரமாக வைத்து எழுதுவதாகச் சொல்லும் ‘’மாக்ஸ்முல்லர் கும்பல்’ ஏராளமான இடங்களில் அவரை மறுப்பதோடு, சாயனருக்குத் தெரியாத ஆரிய- திராவிட வாதத்தை செய்யுளுக்குச் செய்யுள் சேர்த்துள்ளனர். அதாவது இவர்கள் மொழி பெயர்ப்பாளர் அல்ல. நாட்டைப் பிடிக்க வந்த, மதத்தைப் பரப்ப வந்த அயோக்கிய சிகாமணிகள்!
ரிக் வேதத்தை அனைவரும் படிக்க வேண்டும். முதல் மண்டல 112 ஆவது பாடலை (RV 1-112) கட்டாயம் படிக்க வேண்டும்.
உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம். ஒவ்வொரு வெள்ளைத்தோல் கோமாளியும் அதற்கு ஒரு காலம் சொல்லுவான். மாக்ஸ்முல்லர் முதலி ல் கி.மு.1200 என்று சொல்லி, மூஞ்சி மொகரை எல்லாம் குத்து வாங்கிய பின்னர் இது. கி.மு 1500 அல்லது அதற்கும் முந்தையது; எவராலும் இதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லிவிட்டுச் செத்துப்போனார். இந்திய மண்ணை மிதிக்க அஞ்சி, வாழ் நாள் முழுதும் இந்தியா வராமலேயே ரிக் வேதத்துக்கு ‘பாஷ்யம்’ (COMMENTARY) எழுதினார். அதாவது கொட்டாம்பட்டி கிராம மேஸ் த்திரி நியுயார்க்கிலுள்ள உயர்ந்த கட்டிடம் பற்றி தீசிஸ் THESIS எழுதியது போல. நியூயார்க்குக்கு போகாமலேயே!!
முதல் மண்டல 112ஆவது பாடலைக் “கேட்டவர்” பெயர் கவிஞர் குத்ச ஆங்கீரசன். அவர் பாடிய கடவுள் உலகிலேயே முதலில் பிறந்த TWINS இரட்டையரான அஸ்வினி தேவர்கள். இவரைப் பற்றி எல்லா வெள்ளைக்கார பயல்களும் ‘இவர்கள் புரியாத புதிர்கள்’ என்று எழுதிவிட்டனர். இவர்கள் செய்த அற்புதங்கள், கப்பல் பயணம், கடல் சாகசங்கள் எண்ணிலடங்கா. இந்த 112 ஆவது பாடலில் நீண்ட அற்புதப் பட்டியலும் மன்னர்களின் பெயர்களும் வருகின்றன. நாம் 25 மந்திரங்களையும் காண்போம் . வேத மந்திரங்கள் வானிலிருருந்து ரேடியோ அலைகள் போல “கேட்க”ப்பட்டவை. அவை கவிகள் எட்டுக்கட்டியதல்ல.
*****
மந்திரம் 1 (1-112-1)
குத்ச ஆங்கீரசன் செப்புகிறார் – நான் முதலில் வானத்தையும், பூமியையும், அக்கினி தேவனையும் வணங்குகிறேன் .அஸ்வினி தேவர்களே ! முன்னர் போரில் வெல்ல எந்த சங்க நாதம் எழுப்பினீர்களோ அத்துடன் வருக.
இதில் போர் வெற்றி, ‘கிடைத்த செல்வத்தைப் பங்கிடல்’ முதலிய செய்திகள் வருகின்றன.
மந்திரம் 2
இதில் ஒரு அருமையான வரி வருகிறது. புனித செயல்களில் ஈடுபட எங்களைத் தூண்டும் உத்திகளுடன் வருக. இன்னும் ஒரு அருமையான வரி வருகிறது ‘சொல் தேர்’-சொல் ரதம் ; தச்சன் தேர் கட்டுவது போல கவிகள் சொற்றேர் கட்டுகின்றனர் . தமிழிலும் இது உண்டு. சொல் தச்சன், கல் தச்சன்.
‘தச்சன்’, ‘தேர்’ என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பது பலருக்குத் தெரியாது
தக்ஷ என்ற சொல்லிலிருந்து டெக்கனிகல், டெக்னாலஜி, ஆர்க்கி ‘டெக்ட்’ போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு. இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல் சங்க இலக்கியத்திலும் உண்டு. ஒரே நாளில் எட்டு தேர் செய்த தச்சன் பற்றிய பாடலைக் காண்க. தேர் என்பதன் கண்ணாடி உருவம் ரத . அதாவது ரத என்பதைக் கண்ணாடியில் பார்த்தால் தேர். இதை மொழி இயல் வல்லுநர்கள் Mirror Image மிர்ரர் இமேஜ் என்பர்.
ஜம்புநாதனின் தமிழ் மொழி பெயர்ப்பில் இன்னும் ஒரு உவமை வருகிறது ஆனால் கிரிப்பித் ( R T Griffith ஆங்கில மொழி பெயர்ப்பில் அது இல்லை. அதாவது “அறிஞர்களின் மொழிகளைச் செவியுறும் மாணவர்களை போல அடியார்கள் அஸ்வினி தேவர்களின் தேருக்கு அருகில் நிற்கிறார்கள் ” என்பதாகும். இதற்கு ஆதாரம் எங்கு இருக்கிறது என்பதைக் காண வேண்டும். ஜம்புநாதன் எழுதியது சரி என்றால் ‘மாணவர் உவமை’ அக்கால கல்வி நிலையைக் காட்டுவதாகும்.
வேதம் முழுதுமுள்ள உவமைகள், உருவகங்களைப் பார்க்கையில் உலகிலேயே உன்னதமான கலாசாரம் அதுதான் என்று தலை மேல் அடித்துச் சத்தியம் செய்யலாம். பாட்டுக்குப் பாட்டு தங்கம் (Gold) பற்றி வருகிறது, கணவன் மனைவி காதல், தாய்- பிள்ளை பாசம், அரசன்- மக்கள் அன்பு, சகோதரன்-சகோதரி பாசம் என்ற உவமைகள் எண்ணிலடங்கா.
‘பத்து நூறு அடுக்கிய கோடி’ என்பதை திருக்குறளிலும் சங்கத் பாடல்களிலும் காணலாம். இந்த Decimal System டெசிமல் சிஸ்டம் ரிக் வேதம் முழுதும் நிரம்பி வழிகிறது . ஏனைய கலாசார பழங்கால நூல்களில் இதைக் காண முடியாது.
மந்திரம் 3
மூன்றாவது மந்திரத்தில் மலட்டுப் பசுவை பால் சுரக்கும் கறவை மாடாக அஸ்வினி தேவர்கள் மாற்றிய அற்புதம் வருகிறது. இதை நாம் ஞான சம்பந்தரின் அற்புதத்துடன் ஒப்பிடலாம். ஆண் பனை மரம் காய்க்காது என்று சமண மத ஆள் கிண்டல் செய்யவே அவன் சம்பந்தரிடம் சொல்லி வருத்தப் பட்டான் . அதை அவர் செக்ஸ் சேஞ்ச் SEX CHANGE செய்து காய்க்கும் மரமாக மாற்றினார்.
மந்திரம் 4
இங்கு நிறைய உருவகம் வருகிறது; காற்று என்பதை எங்கும் சுற்றுபவனாகவும் (Wanderer) அதன் குழந்தை (offspring) அக்கினி என்றும் வருகிறது. அத்தோடு அக்கினியை இரு தாய்மார்களின் புதல்வன் என்கிறது (Twin mother)அதாவது இரண்டு கட்டைகளை உரசி தீயை உண்டாக்கியதால் இரட்டைத் தாய். காற்று வீசி தீ பரவுவதால் அதன் புதல்வன் அக்கினி. இப்படியெல்லாம் வியாசர் காலத்துக்கு முன்னே – கி.மு. 3150க்கு முன்னரே கவி பாடினால் அவர்கள் எவ்வளவு அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மந்திரம் 5
ஐந்தாவது மந்திரத்தில் கிணற்றில் தள்ளப்பட்ட ரேபனையும் வந்தனையும் அஸ்வினி தேவர்கள் காப்பாற்றியதாக ஒரு செய்தி உள்ளது. இது போல கண்வ மகரிஷி மீட்கப்பட்ட குறிப்பும் உள்ளது. முதல் மண்டலத்திலேயே 4 அல்லது 5 ரிஷிக்கள் கிணற்றில் தள்ளப்பட்டு மீட்கப்பட்டதாக பாடல் வருகிறது. “கிணற்றில் தள்ளுதல்” (Idiom and phrase) என்பது ஒரு மரபுச் சொற்றோடராக இருக்கலாம். ஒரு மணப் பெண் தவறான கணவனுக்கு வாக்குப்பட்டால் உடனே அவள் பிறந்தகத்துக்கு வந்து “என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டீர்களே” என்று அழுவாள். அடுத்த வீட்டுக் காரர்களும் “கிளியை வளர்த்து பூனைக்கு கொடுத்துவிட்டார்களே”
என்று அங்கலாய்ப்பர். இது போல “கிணற்றில் தள்ளப்பட்டது” அறியாமை என்னும் கிணறாகவும் ஒளி என்பது ஞானம் என்றும் இருக்கக்கூடும். ஆயினும் அப்பர் வாழ்வில் மஹேந்திர பல்லவன் அவரை சுண்ணாம்பு சூளையில் தள்ளியதையும் அவர் சிவ பெருமான் அருளால் உயிர் பிழைத்ததையும் நாம் அறிவோம். அது போல கண்வ மகரிஷியும் பிழைத்திருக்கலாம்.
ஆனால் ‘ஜோக்’ என்னவென்றால் எந்த ஒரு நிகழ்சசியிலும் 20 அயோக்கிய சிகாமணிகளும் இன வாதத்தைப் புகுத்தி இருப்பதுதான். உலகிலேயே 1500 ஆண்டுகளுக்குச் சண்டை போட்ட இனம் தமிழ் இனம்தான். சேர, சோழ , பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்ததைப் போல உலகில் வேறு எந்த இனமும் 1500 ஆண்டுகளுக்கு ஒருவரை ஒருவர் அழித்ததாக வரலாறு இல்லை.
அங்கு ஒருவரை ஆரியர் என்றும் மறறொருவரை திராவிடர் அல்லது பூர்வ குடிகள் என்றும் சொல்லவில்லை. ரோம சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு செத்து ஒளிந்ததையும் நாம் வரலாற்றில் படிக்கிறோம். அதை விட்டு விட்டு வில்சன் என்ற ஜோக்கர், ஒரு வேளை பூர்வ குடிமக்கள் இந்து மதம் பரப்ப வந்த கண்வ மகரிஷியை குழிக்குள் தள்ளி இருக்கலாம் என்று எழுதுகிறார்.
இவர்களை ‘ஜோக்கர்கள்’ என்பதை விட விஷமிகள் என்றே சொல்ல வேண்டும். ஆரி ய- திராவிட/தஸ்யூ மோதலை அதி கம் பிரஸ் தாபிப்பவர் மாக்ஸ்முல்லர். அதாவது விஷமிகள் கும்பலின் தலைவன்.
எல்லோரும் ரிக் வேதத்தைப் படிக்க வேண்டும். விருத்திரன், கி, சுஷ்ணன் , சம்பரன் முதலிய 30 அரக்கர்களை இந்திரன் கொன்றான். பத்து பாடல்களில் அவர்களை அரக்கர்கள், அதாவது பூர்வ குடிமக்கள் என்று எழுதிவிட்டு அடுத்த 10 ப்பாக்களில் இது வறட்சி, மேகம் என்று எழுதுகின்றனர். இந்திரன் என்பவனை ஒரே ஆளாக சித்தரிக்கின்றனர். இது பிழை என்பதை காஞ்சி பரமாசார்யார், அரவிந்தர் விவேகானந்தர், மஹாத்மா காந்தி, அம்பேத்கார் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் எவரும் ஆரிய- திராவிட மோதல் வாதத்தை ஏற்கவில்லை
ஆறாவது மந்திரம்
இங்கு அந்தகன், பூஜ்யூ , கற்கண்டு, வய்யா ஆகிய நால்வர் பற்றிய செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லோரும் அஸ்வினி தேவர்களின் உதவி பெற்றவர்கள். அந்தகன் ஏரியில் தள்ளப்பட்டபோது அஸ்வினிகளால் மீட்கப்பட்டவர். பின்னொரு பாடலில் த்ரிதன் என்பவனை சகோதர்களே கிணற்றில் தள்ளிவிட்டதாக வருகிறது. ஆக “கிணற்றில் தள்ளுதல் ” என்பதன் பொருள் வேறு.
‘வய்யா’ என்பதிலுள்ள ‘ய்யா’ தமிழ் செல்வாக்கைக் காட்டுகிறது. வேதங்களில் பல பெயர்கள் நம்ம ஊர் மாதவையா, அய்யா சாமி , முருகையா என்பது போல முடிகிறது.இது சம்ஸ்க்ருதத்தில் இப்போது இல்லை. அனால் தமிழில் ஐயா ஒட்டு உண்டு. ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
ஆறாவது மந்திரத்தில் வரும் பூ ஜ் யூ , துக்ரா என்பவரின் மகன். அவனை அவர் கடலில் விட்டவுடன் அஸ்வினி தேவர்கள் மிகப்பெரிய கப்பலில் காப்பாற்றிக் கொண்டுவந்ததாக ரிஷிகள் பாடுகின்றனர். பிற இடங்களில் அவர் பற்றி வரும் செய்தியில் கப்பலின் முழு விவரமும் உள்ளது
ஏழாவது மந்திரம்
இதில் வரும் ஆட்களில் இருவர் பற்றி ஒரு விவரமும் எங்கும் கிடைக்கவில்லை. மாற்வர்களில் அத்ரி மகரிஷியை அசுரர்கள் தீக்குழியில் தள்ளிவிட்டதாகவும் அஸ்வினிகள் காப்பாற்றியதாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் சுச்சந்தி, பிருசினிக்கு பற்றி செய்தி எதுவும் இல்லை. மற்றோருவரான புருகுத்சன் அரசன் என்று தெரிகிறது . இதுவரை குறிப்பிட்ட பெயர்களில் பல, அரசர்களுடைய பெயர்களாக இருக்கலாம். சிந்து – சரஸ்வதி தீர எழுத்துக்களை படித்தால் இந்தப் பெயர்கள் அங்கே கிடைக்கலாம்.

–தொடரும்
tags- முதல் வரலாற்று ஆசிரியர், ரிக் வேதம் , இந்திய வரலாறு
You must be logged in to post a comment.