Post No. 10,377
Date uploaded in London – – 25 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எண்களை / ‘நம்பர்’களை வணங்கும் வினோத இந்துக்கள்!
உலகில் எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்போர் இந்துக்கள் ஒருவராகத்தானிருக்கவேண்டும் படுக்கையிலிருந்து காலையில் 4 அல்லது 4 மணிக்கு எழுந்திருக்கும் நான் விளக்கைப் போட்டுவிட்டு வலது கை உள்ளங்கையைப் பார்த்து என் கையில் உறையும் லெட்சுமிக்கு, சரஸ்வதிக்கு, கோவிந்தனுக்கு நமஸ்காரம் என்று சொல்லுகிறேன் (கராக்ரே வசதே லக்ஷ்மி …. என்ற ஸ்லோகம்). லண்டனில் 7 மாதங்களுக்கு காலையில் விளக்கு வேண்டும். பின்னர் 5 மாதங்களுக்கு வெளியே 4 மணிக்கே வெளிச்சம் இருக்கும் . நான் மட்டுமல்ல பழைய சம்பிரதாயத்தைப் பின்பற்றும் லட்சக் கணக்கான இந்துக்களும் 40 லட்சம் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களும் இதை தினமும் சொல்கிறார்கள். படுக்கையிலிருந்து கால்களை பூமியில் வைப்பதற்கு முன்னால், பூமித்தாயே உன் மீது பாதங்களை வைப்பதற்கு மன்னித்துவிடுங்கள் என்று ஒரு ஸ்லோகம். அந்த அளவுக்கு புற சூழல் பற்றிய மஹா அறிவு. உழவர்கள் நிலத்தை உழுவதற்கு முன்னால் பூஜை; திருடர்கள், திருடுவதற்கு முன்னால் முருகனுக்கு அல்லது பிள்ளையாருக்கு பூஜை!! இப்போது திருடர்கள், திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதிக்கு பூஜை போடுகிறார்கள்; அல்லது கள்ளப்பணம் அத்தனையையும் உண்டியலில் போட்டு விடுகிறார்கள். LUCKY GOD ‘லக்கி’ சாமி; பெருமாள் வாழ்க.
பொறுமை, பொறுமை ! இதோ ‘சப்ஜெக்டு’க்கு வந்து விட்டேன்.
அதர்வண வேத மந்திரத்தில் சில மந்திரங்களைப் படித்துவிட்டு அசந்து போனேன் . தினமும் சிவன் கோவிலில் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்யும்போது சொல்லும் ருத்ரம்- சமகத்தில் எண்களை அடுக்கிச் சொல்லுவது பலருக்கும் தெரியும்.ஆனால் அதர்வண வேத நம்பர் NUMBER மந்திரம் பற்றி பலருக்கும் தெரியாது. முதலில் அதைக் காண்போம்.
அதர்வண வேதம் – காண்டம் 5- மந்திரம் 15 (சூக்தம் 157)
தமிழில் ‘சாதனம்’ என்ற தலைப்பு; ஜம்புநாத அய்யர் கொடுத்த தலைப்பு.
கருத்து செல்வம் தழைக்கப் பாடுவது
ரிஷி- விசுவாமித்திரன் (பாடியவர்)
பாடப்படுவோன் – வனஸ்பதி
1.எனக்கு ஒன்று, எனக்கு பத்து கஷ்டம் தடுப்பவள்.
ஓஷதியே நீ ருதத்தில் பிறப்பவள் ; நீ ருதம் மிகுந்தவள் .
இனி நீ எனக்கு இனிமை செய்.
2.ஓஷதியே (மூலிகையே)! எனக்கு இரண்டு , எனக்கு இருபது ………… இனிமை செய்
3.எனக்கு மூன்று , எனக்கு முப்பது ……
4.எனக்கு நான்கு , எனக்கு ………… இனிமை செய்
5.எனக்கு ஐந்து , எனக்கு ஐம்பது ………… இனிமை செய்
6.எனக்கு ஆறு , எனக்கு அறுபது ………… இனிமை செய்
7.எனக்கு ஏழு , எனக்கு எழுபது ………… இனிமை செய்
8.எனக்கு எட் டு , எனக்கு எண்பது ………… இனிமை செய்
9.எனக்கு ஒன்பது , எனக்கு தொண்ணு/நூ று ………… இனிமை செய்
10.எனக்கு பத்து , எனக்கு நூறு ………… இனிமை செய்
11.எனக்கு நூறு , எனக்கு ஆயிரம் ………… இனிமை செய்
XXX
கிரிப்பித் GRIFFITH என்ற ஆங்கிலேயர் கொடுத்த விளக்கம்-
பொதுவாக செல்வம் தழைக்கப் பாடப்படும் பாடல்கள்
வனஸ்பதி – பல கஷ்டங்களைத் தவிர்ப்பவள்
ஒளஷதங்களால் நோய் நீக்குங்கள்
முதல் 11 பாடல்களும் ஒரே மாதிரியானவை ; துன்பத்தைத் தருபவர்கள் எண்ணிக்கை ஏறு வரிசையில் சென்று 1100ல் முடிகிறது . எவ்வளவு எண்ணிக்கையில் துன்பங்கள் இருந்தாலும் அவைகளை அழிக்க தெய்வ நம்பிக்கை முக்கியம் என்பது பொருள்.
(புள்ளிக்கோடிட்ட இடங்களில், முதல் மந்திரத்தில் உள்ள வரிகளை ஏனைய 10 மந்திரங்களிலும் எழுதிக் கொள்க)
XXX
எனது வியாக்கியானம்
இனி என் கருத்துக்களை சொல்கிறேன்.
1.முதலில் இது வனஸ்பதி (HEAD OF HERBS) என்னும் கானக தேவதை பற்றிப் பாடிய பாடல் .
ரிக் வேதம் முழுதும் வனஸ்பதியைக் காணலாம். ஆக , ஆயுர்வேதத்தின் துவக்கம் ரிக்வேதத்திலேயே உள்ளது.
2.இரண்டாவது, ‘பதி’ என்னும் பின் ஒட்டு SUFFIX ஆகும். இதையும் ‘மதி’, ‘வதி’ என்ற பின் ஓட்டுக்களையும் இன்றுவரை இந்துக்கள் பெயர்களில் பயன்படுத்துவது உலக மஹா அதிசயம் ( உ.ம். ) கணபதி, பார்வதி, இந்துமதி
3.மூன்றாவது, எண்களில் அதிசயம் இருக்கிறதா அல்லது அந்த மந்திர ஒலியில் அதிசய சக்தி இருக்கிறதா என்பதாகும். ‘ஒலி’யில்தான் (SOUND EFFECT) சக்தி, மந்திரத்தின் பொருளைப் பார்க்கத் தேவை இல்லை என்பதே சம்ப்ரதாயம் (காலா கால நம்பிக்கை )
4.நாலாவது, இது போன்ற பாடல் சமகத்திலும் வருகிறது . அதற்கு இதுவரை சொல்லப்படும் விளக்கம் எதுவும் திருப்தியாக இல்லை. ஆக ஒலி – யையே நம்ப வேண்டியுள்ளது
5.ஐந்தாவது , முற்றிலும் என் கருத்து — வேதம் முழுதும் நம்பிக்கை ஊட்டும் ஆட்டோ சஜ்ஜஷன் AUTO SUGGESTION பயன்படுத்தப்படுகிறது . அதாவது ஒரு விஷயத்தை நாம் வலுவாக நம்பினால் அது நடக்கும்; “நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு” எனற பாரதியார் வரிகளிலும் “மனம் போல மாங்கல்யம்” என்ற பழமொழிகளிலும் அதைக் காணலாம்.
ஆட்டோ சஜ்ஜஷன் — அதாவது நமக்கு நாமே சொல்லிக்கொள்வது; உதாரணத்துக்கு ஒரு பெண், ‘ஐயோ என் தலையில் இருந்து முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறதே’ என்று மயிரைத் தடவிக்கொண்டே இருந்தால் முடி மேலும் உதிரும். ‘அடடா, கடவுள் எனக்கு எவ்வளவு அழகான முடி கொடுத்துள்ளார். இது மேலே வளரட்டும்’ என்று சொல்லிக்கொண்டே முடியை வருடினால் அது மேலும் மேலும் வளரும்.
மருத்துவத் துறை விஞ்ஞானிகளும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். PLACEBO EFFECT பிளாசிபோ தாக்கம்/ செல்வாக்கு என்ற கட்டுரைகள் அதிகம் வர துவங்கியுள்ளன. பிளாசிபோ என்றால் ‘போலி மாத்திரை’. இது உங்கள் கை வலியைப் போக்கும் என்று சொல்லி வெறும் மாவால் ஆன மாத்திரையை ஒரு பிரபல டாக்டர் கொடுத்தால் அது உங்களுக்குப் பலன் தருகிறது . இதற்கு நேர் மாறாக அதே டாக்டர் உண்மையான மருந்தை உங்களுக்குக் கொடுத்து உங்களுக்கு மருந்தோ டாக்டரோ பிடிக்கவில்லை என்றால் அந்த மருந்தின் வீரியம்/ சக்தி குறைகிறது
Autosuggestion is a psychological technique related to the placebo effect, developed by apothecary Émile Coué at the beginning of the 20th century. It is a form of self-induced suggestion in which individuals guide their own thoughts, feelings, or behaviour. The technique is often used in self-hypnosis. (Go to Wikipedia for more information)
உலகப் புகழ்பெற்ற ஹிப்னாஸிஸ் நிபுணர் பால் மக் கென்னா (PAUL MACCENNA) இங்கு பிரிட்டிஷ் டெலிவிஷனில் நடத்திய நிகழ்ச்சிகளை நான் வாரம் தோறும் பார்ப்பேன். அவர் மனோவசியத்தால் ஒருவரைத் தொட்டு “நீ மைக்கேல் ஜாக்சன்; பாடு இப்போது”- என்று கட்டளை இட்டால் உடனே அந்த பெண்ணோ ஆணோ மைக்கேல் ஜாக்சன் போல கைகால்களை ஆடிக் குதித்து பாடத் துவங்குவார்கள் . இதைக் கண்டு பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சிரிப்பார்கள் ; அவரே ‘ஸ்டாப் ; நீ .XYZ…..’.. என்று அவர் பெயரைச் சொல்லித் தொட்டவுடன் அவர் சுய ரூபத்தை அடைவார். இது எல்லோருக்கும் வராது .
ஆனால் ஆட்டோ சஜ்ஜஷன் நல்ல பலன் தரும். கண்களை நீவி விட்டுக்கொள்ளும் போதும் எனக்கு நல்ல கண்பார்வை வரட்டும் என்று சொல்லச் சொல்கிறார்கள் . இந்துக்களில் பிராமணர்கள் தினமும் சூரிய வழிபாட்டில் சொல்லும் மந்திரங்களில் இது உள்ளது. “ நான் நூறாண்டுக் காலம் வாழவேண்டும்; பார்க்க வேண்டும்; கேட்க வேண்டும்; மகிழ் ச்சியாக இருக்கவேண்டும்; பேச வேண்டும்” என்று சொல்லி சூரியனைப் பார்ப்பார்கள். உங்களை அறியாமலே நீங்கள் நோய் நொடியில்லாமல் 100 ஆண்டு வாழ தினமும் விதை நட்டு, உரம்போட்டு, வனஸ்பதியை வளர்க்கிறீர்கள்.
நமது முதல் கடமை வேத மந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும்; வேதத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக வாய் மொழியாகக் காத்து நமக்கு அளித்துவரும் வேத பண்டிதர்களை வணங்கி ஆதரிக்க வேண்டும்.
XXX
அடுத்த மந்திரம் – சூக்தம் 158-
தலைப்பு – காளை
விசுவாமித்திரன் – ஏக விருஷன் உற்பத்தி செய்
1. நீ ஒரே காளையானால் உற்பத்தி செய்; செய்யவில்லையேல் நீ இரசமன்னி யிலுள்ளவன் (NO VITAL SAP)
2……………..
11………………………..
இப்படி 11 மந்திரங்கள் உள்ளன. போன மந்திரம் போலவே இதிலும் எண்கள்தான்!
கால்நடைகளைப் பராமரிக்கும் பாடல் என்று சொன்ன Ralph T H Griffith கிரிப்பித், மனிதன் காளையாக விளிக்கப்படுகிறான் என்றும் சொல்கிறார்.வெள்ளைக்காரர்களின் விளக்கம் சரியில்லை என்பதே என் கருத்து
xxx
Rudram- Chamakam in Yajur Veda
சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.
XXX
PLEASE READ MY OLD ARTICLES ON NUMBERS
ருத்ரம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ர…
9 Jul 2012 — ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்). Athi Rudra Maha Yagna organised by Sri Sathya Sai Baba. ருத்ரம் …
வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண்! (Post No.3919)
https://tamilandvedas.com › வேத…
18 May 2017 — யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சமகத்தில் இப்படி எண்களை …
வேத,உபநிஷத்துகளில் கனவுகள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › வேத…
6 Aug 2015 — … அபிஷேகம் செய்கையில் ருத்ரம்–சமகம் என்ற யஜூர் வேத மந்திரத்தைச் சொல்லி…
Quiz on Hymns in English and Tamil
https://tamilandvedas.com › quiz-on-…
13 Aug 2012 — ருத்ரம் சமகம் 28. காயத்ரி மந்திரம் 29. பஞ்ச புராணம்: தேவாரம், திருவாசகம், …
ரிக் வேத கணிதப் புலிகள்! | Tamil and Vedas
https://tamilandvedas.com › ரிக்-…
4 Sept 2014 — கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்:–1267; …
எண்கள்; ரிக் வேதம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › எ…
16 Apr 2020 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No.7835. Date uploaded in London – 16 April 2020. Contact – swami_48@yahoo.com.
புனித எண் 7 | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ப…
19 Aug 2019 — https://tamilandvedas.com/…/பாபிலோனிய-ப…. ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் …
ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் …
https://tamilandvedas.com › ஏழு-…
·
22 Nov 2014 — சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை! கட்டுரையை எழுதியவர் …
ரிக் வேதத்தில் தமிழ்வேதம் திருக்குறள் – 2 (Post No …
https://tamilandvedas.com › ரிக்-…
6 Jul 2021 — (மூன்று எண்களில் முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும், …
எண் 8 மர்மம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › எ…
1 Jul 2015 — Written by London Swaminathan. Research Article No. 1965. Dated 1 July 2015. Uploaded at London time : 5-45 am. ரிக் வேதம் …
ரிக் வேதத்தில் 15 வகை பிரார்த்தனைகள் ! (Post No.9256)
https://tamilandvedas.com › ரிக்-…
12 Feb 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. if you need the article in word …
எண் 7, | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › எ…
10 Oct 2016 — உண்மை என்னவென்றால் வேத கால, இதிஹாச-புராண கால, சிந்து சமவெளி கால, சங்கத்தமிழ் …
MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2012/07/29 › most-hated-n…
29 Jul 2012 — The Book of Revelation (13:16-18) in the Bible mention 666 as the number of the beast. When the US President Reagan moved to California his …
–SUBHAM–
TAGS- எண்கள் , வணங்கும், இந்துக்கள், வினோதம்
You must be logged in to post a comment.