ஆனந்த விகடனும் தாயுமானவ கவசமும்!

1947 vikatan

 

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by S NAGARAJAN

Date: 18th  September 2015

Post No: 2168

Time uploaded in London :– காலை 8-18

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

தாயுமானவர், கவசம் ஏதாவது பாடியிருக்கிறாரா என்ன, தெரியாமல் போய் விட்டதே என்று நினைப்பவர்களுக்கு முதலிலேயே சில வார்த்தைகள்.

தாயுமானவர் கவசம் ஒன்றையும் பாடவில்லை; அவரது அருமையான தமிழ்ப் பாக்களையே தாயுமானவ கவசம் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.

விஷயத்திற்கு வருவோம்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அநேகமாக பெரும்பாலான குடும்பங்களில் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் தவறாமல் சண்டை நடக்கும்.

சகோதரனுக்கும் சகோதரிக்கும். சகோதரர்கள், சகோதரிகளுக்குள். சில சமயம் குடும்பத் தலைவி, தலைவரும் இதில் பங்கு கொள்வார்கள். கடைசியில்பெரிய தலஒன்று அனைவரையும் சமாதானப் படுத்திபங்கீடுசெய்து வைக்கும்.

 

சண்டைக்குக் காரணம்: வாரம் தோறும் வரும் ஆனந்தவிகடன் பத்திரிகை.

அதை யார் முதலில் படிப்பது என்பதில் தான் சண்டை! சில சமயம் விகடனே கிழிந்து முழிக்கும். இந்த சண்டையைக் கொஞ்சம் ஈடுகட்டபசையுள்ளகுடும்பங்கள் விகடனின் இரண்டு பிரதிகளைக் கூட வாங்கிச் சமாளிக்கப் பார்க்கும்.

 

ஆனந்தவிகடனை 1928 பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாத ஐயரிடமிருந்து வாங்கி அதன் உரிமையாளராக அதைத் தன் பொறுப்பில் எடுத்தவுடன் வாசன் அவர்கள், பிரிண்ட் செய்த காப்பிகளை சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்று பீச்சில் விற்பாராம். மெல்ல மெல்ல விகடனை தமிழ் மக்களின் உள்ளங்களில் நிலை நிறுத்தினார்.

கல்கி, தேவன், மாலி என ஒரு பிரம்மாண்டமான பட்டாளம் விகடனைத் தூக்கி நிறுத்தியது.

 

ஆனால் தமிழ் மக்கள் மனதில் இது நிரந்தரமான இடத்தைப் பிடித்தது எப்படி?

இந்த மேதைகளின் படைப்புகளுக்கெல்லாம் மேலாக ஒரு கவசத்தை அது அணிந்திருந்ததால் தான்!

தாயுமானவ கவசத்தை அது அணிந்து கொண்டிருந்தது.

 

1928_vikatan

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

வாசன் அவர்கள் தன் பொறுப்பில் ஆனந்தவிகடனை ஏற்றவுடன் இந்த பராபரக் கண்ணியை விகடனின் குறிக்கோளாக ஆக்கி அதை விகடனில் வெளியிட ஆரம்பித்தார்.

தாயுமானவரின் இந்தஉலக நலப் பாட்டிற்குஈடு இணை ஏதுமில்லை.

 

அனவருக்கும் இன்பம் என்ற அற்புத மந்திரத்தை அது அணிந்து வாரந்தோறும் அதை முகப்பில் ஏந்தி பல்லாயிரக்கணக்கானோருக்குப் பறை சாற்றி வந்ததால் அது தமிழர்களின் நல்ல உள்ளங்களில் இடத்தைப் பிடித்தது.

 

ஆனால் லட்சோபலட்சம் உள்ளங்களில் இடம் பெற்று பெரிய சக்தியாக அது மாறியவுடன் சில வருடங்களுக்கு முன்னர் தீயசக்திகளின் பார்வை அதன் மீது சுயலாபத்திற்காகத் திரும்பியதாக செய்திகள் கசியவே நல்ல உள்ளங்கள் பதைபதைத்தன.

 

பாழாய்ப்போன அந்தப் பாப்பாரப் பத்திரிகைஅனைத்து உள்ளங்களிலும் குடி கொண்டு செல்வாக்கு மிக்க சக்தியாக விளங்கியதைக் கண்ட தீயசக்திகள் அதைலபக்என்று விழுங்கி ஏப்பம் விட்டு முடிந்த அளவு அந்த செல்வாக்கில் கிடைக்கும் ஆதாயத்தைப் பெறத் தீர்மானித்த போது விகடனைக் காப்பாற்றியது எது?

 

தாயுமானவ கவசம் தான்! எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவாறே இருந்த போது அந்த எல்லோரிலும் நல்ல உள்ளங்கள் ஏராளம் இருந்தன அல்லவா! அந்த உள்ளங்களின் ஆசீர்வாதம் தொடர்ந்து அதற்கு இருந்து வந்ததல்லவா! அந்த தெய்வ சக்தி தீய சக்திகளைத் துரத்தி விட்டது; விகடன் பிழைத்தது!

விகடனை வாழ வைத்த அந்த தாயுமானவ கவசம் தன்னை அணிந்து கொள்ளும் தமிழர்களையும்  காப்பாற்றும் என்பதில் சந்தேகம் என்ன?

 

 தாயு

திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் தாயுமானவர் பாடல்களை அருமையாகத் தனது நூல்களில் விளக்கியுள்ளார். அவர் நடத்தி வந்த அந்தர்யோகத்திலும் தாயுமானவரின் பாடலின் விளக்கவுரை தவறாமல் இடம் பெறும்.

தாயுமானவரின் சிந்தனை உயரிய சிந்தனை; அதன் அகலமும் நீளமும் ஆழமும் தொடர்ந்து படித்தால் மட்டுமே புரியும்; உணர முடியும். அதன் பயன் எல்லையற்றது!

பொருளில்லா அடுக்கு மொழிகளில் தடுக்கி விழுந்து ஏமாறும் தமிழர்களுக்குப் பொருளுடன் கூடிய அடுக்கு மொழிகள் ஏராளம் தாயுமானவ கவசத்தில் உண்டு.

 

 

லைகடலென ர்ப்பரித்து வரக் கூவும் தமிழர்களுக்கான அடுக்குமொழி இன்றி மைதியுடன் னந்தமாக வாழ வழி கூறும் அடுக்குமொழி தாயுமானவர் பாடல்களில் நிறையவே உண்டு.

 

அவரது பாடல்களில் சில முக்கிய வரிகள் / வார்த்தைகள் இதோ இங்கே: (உத்வேகம் பெற்று அனுதினமும் ஒதிப் பயனடைவதற்காக):-

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப் பார்க்கின் அன்பர்க்கென்ன பயம் காண் பராபரமே

 

அன்பர் பணி செய்ய என்னை ஆளக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே

வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை நோக்கும் மவுனமிந்த நூல் அறிவில் உண்டாமோ?

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே

 

அருளால் எவையும் பாரென்றான் அத்தை                                                

யறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்                                                                         

இருளான பொருள் கண்டதல்லால் கண்ட                                       

வென்னையுங் கண்டிலனென்னேடி தோழி  சங்கர சங்கர சம்பு

வாழி சோபனம் வாழி நல்லன்பர்கள்                                                

சூழ வந்தருள் தோற்றமும் சோபனம்

 

 

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது?

சமயகோடிகள் எல்லாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?

அது கருத்திற்கிசைந்ததுவே கண்டனவெலாம் மோன உருவெளியதாகவுங் கருதி அஞ்சலி செய்குவாம்!

 

நாதவடிவென்பர் சிலர் விந்துமயமென்பர் சிலர் நட்ட நடுவே இருந்த நாமென்பர் சிலர் உருவமாமென்பர் சிலர் கருதி நாடில் அருள் என்பர் .. இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப் படுமலாற் பரம சுக நிட்டை பெறுமோ பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதினிலே ஆணை செலவே நினைவர்

இந்திரசாலம் கனவு கானல் நீர் என உலகம் எமக்குத் தோன்றச் சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தைச் சார்ந்து வாழ்க

 

 

பட்டப் பகல் பொழுதை இருள் என்ற மருளர் தம் பக்ஷமோ என் பக்ஷம்?

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவி தான் யாதினும் அரிதரிது காண்

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்; கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்வேன்!

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது

 

 

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர் நிற்குமோ! கர்மமானவை கோடி முன்னே செய்தாலும்  நின் கருணை ப்ரவாக அருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ?

பாகத்தினாற் கவிதைப் பாடிப் படிக்கவோ பத்தி நெறியில்லை வேத பாராயணப் பனுவல் மூவர் செய் பனுவல் அது பகரவோ விசையுமில்லை

 

 

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் ; ஒரு சிங்க முதுகின் மேற்கொள்ளலாம்; கட்செவி எடுத்தாட்டலாம்; வெந்தழலிலிரதம் வைத்து ஐந்து உலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்; விண்ணவரை ஏவல் கொளலாம்; சந்ததமும் இளமையோடிருக்கலாம்; மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்; சலமேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம்; தன் நிகரில் சித்தி பெறலாம்; சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது; சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே! தேஜோமயானந்தமே!!

 

 

எனக்கெனச் செயல் வேறிலைமனத்தகத்துள அழுக்கெலாம் மாற்றி எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

 

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

 

*************