
Post No. 9967
Date uploaded in London – 12 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com


ஜேம்ஸ் பாண்ட் JAMES BOND திரைப் ப்டங்களைப் பார்க்காதோர் இருக்கலாம். ஆனால் அதுபற்றி அறியாதோரும் இல்லை; கேள்விப்படாதோரும் இல்லை. பிரிட்டிஷ் ரகசிய ஏஜண்ட் SECRET AGENT 007 JAMES BOND ஜேம்ஸ் பாண்டை உருவாக்கியவர் இயன் பிளெமிங் IAN FLEMING என்ற ஆசிரியர் ஆவார். அவர் எழுதிய அத்தனை ஜேம்ஸ் பாண்ட் நாவல் களும் திரைப்படங்கள் ஆகி வெற்றி நடையும் போட்டன. அடுத்த திரைப்படம் எப்போது வரும் என்று ரசிகர்களைக் காக்கவைக்கும் அளவுக்கு ருசிகரமானவை. இவற்றின் மூலம் புகழ்க்கொடி நாட்டிய நடிகர்கள் பலர் ஆவர்.
இதே ஆசிரியர் சிறுவர் சிறுமியருக்காக எழுதிய ‘சிட்டி சிட்டி பாங் பாங்’ CHITTY CHITTY BANG BANG என்ற நவீன கால தேவதைக் கதையும் திரையுலகில் வெற்றி பெற்றது .
தென் கிழக்கு இங்கிலாந்திலுள்ள கான்டர்பரி CANTERBURY என்னும் ஊரில் பிளெமிங் பிறந்தார் . அவருடைய தந்தை, முதல் உலகப் போரில் காலமானார். பிளெமிங் , பணக்காரப் பிரபுக்கள் பயின்ற ஈடன் ETON கல்லூரியில் படித்தார். அங்கு அவர் படிப்பு சுமார்தான். ஆயினும் விளையாட்டு விஷயங்களில் முதல் வரிசையில் நின்றார். பின்னர் புகழ் மிகு சாந்தர்ஸ்ட் ராணுவப் பள்ளியில் SANDHURST MILITARY ACADEMY படித்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல மொழிகளைக் கற்றார் .
அவர் எடுத்துக் கொண்ட முதல் வேலை ராய்ட்டர்ஸ் REUTERS செய்தி நிறுவனத்தின் மாஸ்கோ நிருபர் வேலை ஆகும். அங்கு தான் பிளெமிங்கிற்கு உளவாளிகளின் ரகசிய உலகம் பற்றி பரிச்சயம் ஏற்பட்டது; இந்தத் தொடர்புகள் பிற்காலத்தில் அவருக்கு ரகசிய ஏஜண்டுகள் பற்றி எழுத உதவியது. லண்டனுக்குத் திரும்பி வந்தவுடன் பாங்குகளில் பணியாற்றினார். ஸ்டாக்ப்ரோக்கராகவும் STOCKBROKER இருந்தார். இரண்டாவது உலகப்போர் காலத்தில் கடற்படை உளவு அதிகாரியாக SENIOR NAVAL INTELLIGENCE OFFICER வேலை செய்தார். அப்போது உளவு வேலைகளின் சூட்சுமம் முழுதையும் அறிந்தார். இவைகளை வைத்து ஏன் ஒரு நாவல் எழுத க் கூடாது என்ற எண்ணம் உதித்தது. இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்து 9 ஆண்டுகள் ஆன தருவாயில், ‘காஸினோ ராயல்’ என்ற முதல் நாவலை எழுதினார் . அப்போது அவருக்கு வயது 46.

பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்ட் தோன்றும் 12 நாவல்களையும், 7 சிறுகதைகளையும் படைத்தார். அவை அனைத்தும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘டாக்டர் நோ’ என்ற திரைப்படம் 1963-ல் வெளியானவுடன் ஜேம்ஸ்பாண்டின் புகழும் அவரை உருவாக்கிய இயன் பிளெமிங் புகழும் உலகம் முழுதும் பரவின.
இந்தக் கதைகளும் திரைப்படங்களும் பெரிய வெற்றி அடைய க் காரணங்கள் – ஜேம்ஸ்பாண்டின் சாகசச் செயல்கள்; இக்கட்டான நிலையில் தப்பிக்கக் கையாளும் சாதுர்ய வழிகள் , அவருடன் தொடர்பு கொள்ளும் அழகிகள், ஜேம்ஸ்பாண்ட் கையாளும் அதி நவீன உளவு சாதனங்கள், மற்றும் அந்தச் செயல்கள் நடைபெறும் கவர்ச்சியான இடங்கள்.
பிளெமிங் இறந்த பின்னரும் அவர் புகழைப் பரப்பிக்கொண்டிருக்கிறார் கற்பனைக் கதாநாயகன் ஜேம்ஸ் பாண்ட் .
பிறந்த தேதி – மே 28, 1908
இறந்த தேதி – ஆகஸ்ட் 12, 1964
வாழ்ந்த ஆண்டுகள் – 56
எழுதிய நாவல்கள், கதைகள் :–
1954 – CASINO ROYALE
1954 – LIVE AND LET DIE
1955 – MOONRAKER
1956 – DIAMONDS ARE FOR EVER
1957- FROM RUSSIA WITH LOVE
1958 – DR NO
1959 – GOLDFINGER
1961- THUNDERBALL
1964 – YOU ONLY LIVE TWICE
1964 – CHITTY CHITTY BANG BANG
சுபம்



TAGS- ஜேம்ஸ் பாண்ட் , நாவல் ஆசிரியர், இயன் பிளெமிங், IAN FLEMING, 007
