Written by S NAGARAJAN
Date:30 April 2017
Time uploaded in London:- 6-25 am
Post No.3864
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்!
by ச.நாகராஜன்
இறைவா, எனக்கொரு வரம் அருள்வாய்.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்றந்தப் பேதை சொன்னான்
இந்த வசை எனக்கு எய்திடலாமோ என்று
பாரதி பாடிய நிலை இன்று இன்னும் மோசமாயிற்றே
இதை மாற்றிட ஒரு வரம் அருள்வாய்
திராவிடப் பிசாசுகள் கூத்தும் கும்மாளமும் போட்டுத்
தமிழின் பெயரால் தம் பெயர்களை
சந்து முனை தொட்டு நகர்,கிராமம் என
எங்கும் தங்க வைக்கும் தாங்கா நிலையை அழித்திடு
தமிழின் பெயரால் பேராசான் பதவி முதல் அனைத்தையும்
விலை கொடுத்து வாங்கும் வீணர்களை ஒழித்திடு
கல்வி நிலையத் துணைவேந்தர் முதல் கடை நிலை பியூன்
வரை லஞ்சம் வாங்கும் லஞ்ச நிலையங்களை அழி; அவர்களை ஒழி!
திராவிட மாயைகள் எழுதிய பொய் பித்தலாட்ட புத்தகங்களை
நூலகத்திலிருந்து எடுத்து எரி; நல்ல புத்தகங்களை லஞ்சமின்றி
வாங்கி அடுக்கவும் படிக்கவும் வழி வகை செய்
மருத்துவ நிலையங்கள் மாய நிலையங்களாக்கிக் கொள்ளையடிக்கும் கொள்ளையரைக்
கொள்ளை நோயில் போக்கி நல் நிலையை உருவாக்கு
லாயர் என்ற பெயரில் ரவுடிகளாக உலா வரும்
அவல நிக்குலையை நீக்கு
நீதி நிலையங்களை அறம் வளர்க்கும் ஆலயமாக்கு
கோவில் உண்டியல்களை உடைக்கும் வீணர்களை உடை
கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் அநியாயக்காரர்களை அழி
நற்பணி என்ற பெய்ரில் துர்ப் பிணி பரப்பும் தோழர்களை தூர்த்திடு
நாத்திகம் பேசி நர்த்தனம் ஆடிடும் நயவஞ்சகர்களை நாசமாக்கு
கன்னியரைத் தாய்க்குலத்தை ஏமாற்றும் எத்தரை அழி
பொய்யாக் காவிரியைப் பொய்த்துப் போகச் செய்த
மெய் காக்கும் வையையை வறளச் செய்த
தங்கம் நிகர் தாமிரபரணியைத் தரைக்கும் கீழே தாழ்த்திய
மணல் கொள்ளை மாபியாக்களை மண்ணாக்கு
தமிழ் இலக்கியம் என்ற பெயரில் தம் இலக்கியத்தைச்
செய்யும் தறுதலைகளை மூளை செயலிழக்கச் செய்
தேசீய நீரோட்டத்தில் தமிழகத்தை இணையச் செய்
தம் வீடகத்தை வளர்க்கும் பொய் ஊடகத்தை ஒழி
நாளிதழ் என்ற பெயரில் நாச இதழ் நடத்துவதை ஒடி
அனைத்து அக்கிரமங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கும்
அக்கிரம அரசியல்வாதிகளை அழி; ஒழி!
பூமித் தாய் பிளந்து அவர்களை உள் வாங்க வேண்டாம்;
ஏனெனில் பூமித் தாய் தீட்டுப்பட்டு மாசு படுவாள்
வானில் வாயுவால் பறக்க வைத்து எங்கோ போக விடு
எங்களை ஒழுக்கத்தின் உயரத்தில் ஏற்றி விடு
நல்ல தமிழர்களை வளமுறச் செய்; நலம் பெறச் செய்!
வள்ளலார், பாரதியார் உள்ளிட்ட தமிழினக் காவலர் தமை
எள்ளளவுப் பொழுதும் மறக்காத நிலை தனை உருவாக்கு
அறிவியலில் சிறக்க அழியா நிலை அடைய ஆதரவளி
எனக்கு ஒரே ஒரு வரம் அருள்வாய் இறைவா!
இங்கு சொன்னதெலாம் இமைப்பொழுதில் நடக்கவொரு
அற்புதத் தமிழ்த் தலைவனை அருள்; உன்
பொற்பதம் போற்றுவேன்
தீய பந்தம் போக்க வந்த சம்பந்தன் போல
என்னப்பன் என்று மேலோர் சொல்லும் அப்பர் போல
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற
மந்திரச் சொற்களைச் சொன்ன மறத்தமிழன் போல
உத்வேகமூட்டும் ஒருஎழுச்சி மிக்க
தலைவனைத் தமிழைக் காப்பாற்றத் தா
இந்த நல் வரம் – ஒரு வரம் மட்டும் ஈந்திடு
என் இறைவா; தங்கத் தமிழ் நாட்டைக் காத்தருள்வாய்!
இனிய இந்த ஒரு வரம் மட்டும் போதும்
இனி எனக்கு வேறு எது வேணும்?
***