
Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9227
Date uploaded in London – –4 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொல்காப்பியர் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் எழுதி விட்டேன். இப்பொழுது அவர் பற்றிய மேலும் சில உண்மைகளை அவரே தன து நூலில் காட்டுகிறார். அதை ஆதாரங்களுடன் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் ஒரு ஜோக்.. திருவள்ளுவர் உருவத்தைக் காட்டும் பழந்தமிழ் நூல் களில் அவர் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி இருக்கும். 1967ல் திராவிடக் கடசிகள் ஆட்ச்சிக்கு வந்தவுடன் அவர் நெற்றியில் இருந்ததை அழித்து விதவை போல ஆக்கிவிட்டனர்.ஆனால் தொல்காப்பியர் படத்தை எந்த நூலிலும் காண முடியாது. தொல்காப்பியர் காப்பியக் குடியில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர் என்றும் அவருடைய உண்மையான பெயர் த்ருண தூமாக்கினி என்றும் பழைய உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் என்சைக்ளோபீடியாவான ‘அபிதான சிந்தாமணி’யிலும் இந்த விஷயம்தான் இருக்கிறது.
காப்பியக் குடி – காவ்ய கோத்ரம் – கவி = ரிக் வேதமும் கிருஷ்ணனும் (பகவத் கீதையில்) புகழும் உஷனஸ் கவி. ரிக் வேத காலத்திலேயே அவர் மிகப் பழைய கால கவி என்பப்படுகிறார்!!!


மீசை வைத்த பிராஹ்மணன் !
ஜமதக்கினி முனிவரின் மகன், பரசுராமனின் சகோதரன். அத்தகைய பெருமை மிகு குலத்தில் உதித்தவர் என்பதே பொருந்தும் இதற்கு இன்னும் இரண்டு எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன் கேரளத்தைக் கடலிலிருந்து மீட்டுக் கொடுத்த பரசுராமன் ‘ஒரிஜினல்’ Original அல்ல. அந்தக் குலத்தில் வந்த , அவரைப் போன்ற சிறப்பு மிக்கவர். இதே போல ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பரசுராமன் (கர்ணனின் குரு ) வருகிறார். மஹாபாரத பரசுராமன் ‘ஒரிஜினல்’ அல்ல. அகத்தியர் என்பதும், பரசுராமன் என்பதும் கோத்திரப் பெயர்கள். நாம் மதுரைக்காரன் என்றவுடனே அவன் செந்தமிழ் பேசுவான் மதராஸ்காரன் என்றால் சம்ஸ்கிருதம் பேசுவான் (வாடா , கஸ்மாலம்; கஸ்மலம் = பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்ட கண்ணன் பயன்படுத்திய சொல் – கஸ்மலம் ) என்றெல்லாம் பொதுப்படையாகக் கொள்வதை போன்றதே இதுவும்.
தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் நட்டு மலர்களை வெளியிட்டபோது தொல்காப்பியருக்கு மீசை வைத்து படங்களை வெளியிட்டது! பாவம் அவர் பிராமணர் இல்லை என்று காட்ட இந்த முயற்சி. ஆனால் சிவபெருமானுக்கே மீசை உள்ள பழைய படங்கள் இருப்பது அந்த திராவிட கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை. போகட்டும் . சப்ஜெக்ட் subject டுக்கு வருவோம் .
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் உண்டு (அதிகாரம் என்பது தொல்காப்பியம், திருக்குறள் , சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதால் இவை மூன்றும் சமணர் ஆடசிக் காலத்தில் — சுமார் 4, 5ம் நூற்றான்டில் தோன்றியவை என்றும் முன்னரே காட்டிவிட்டேன்)






தொல்காப்பியத்தின் சிறப்பே பொருள் அதிகாரம்தான். தொல்காப்பியருக்கு சுமார் 1000 அல்லது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் பல்வேறு விஷயங்களை கதைத்தாலும் இப்படி தனி அதிகாரமாக எழுதவில்லை. ஆனால் இந்தப் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை என்பது சிலர் கருத்து. ஏனெனில் இதன் சொல் அமைப்பும் , பொருளடக்கமும் அப்படிப்பட்டவை என்பது அவர்கள் வாதம். இந்திரன், வருணன் ஆகியோரை தமிழ்க் கடவுள் என்று பாடிவிட்டார் தொல்காப்பியர் . அதுமட்டுமல்ல பலராமனின் பனைக்கொடி முதலிய விஷயங்களையும் தொல்காப்பியர் காட்டுகிறார். சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத பதத்தையும் பயன்படுத்திவிட்டு நான்கு ஜாதிகள் பற்றியும் பாடுகிறார். அதில் அந்தணரை முதலில் வைக்கிறார். அது மட்டுமல்ல தர்மார்த்த காம மோக்ஷ என்ற வரிசையை அப்படியே தமிழில் திருக்குறள் போலவே அறம்,பொருள், இன்பம், வீடு என்று பேசுகிறார்.
எனது முடிவு
கீழேயுள்ள இணைப்புகளில் தொல்காப்பியர் 300 இடங்களுக்கும் மேலான வரிகளில் ‘என்மனார்’, ‘என்ப’, ‘மொழிப’ எந்றெல்லாம் பாடியிருக்கிறார். இது பத்திரிகையாளர் பயன்படுத்தும் (Journalists Jargon) வழக்கு. ‘அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்’, ‘என்று சொல்லப்படுகிறது’, ‘என்று அறியப்படுகிறது’, ‘பேசப்படுகிறது’ என்ற வகையைச் சேர்ந்தது. முதல் சூத்திரமே “எழுத்தெனப்படுவது ……………………… “ என்று துவங்குகிறது —
சிலர் , எங்கெங்கு தனக்குப் பிடிக்காத விஷயங்கள் வருகின்றதோ அவற்றை எல்லாம் இடைச் செருகல் (Interpolation) என்று சொல்லி விட்டனர் . சில வெளிநாட்டுக்காரர்கள் மூன்றாவது அதிகாரமான பொருள் அதிகாரம் பிற்பாடு வந்தது என்றும் கூறிச் சென்றனர் (Kamil Zvelebil )கமில் சுவலபில் கூட இப்படிச் சொன்னதாக நினைவு.)
ஆனால் பொருள் அதிகாரம் பிற்சேர்க்கை அல்ல என்பதை அவர் ‘என்ப’, ‘மொழிப’ , ‘என்மனார்’ என்பதை ஒரே வேகத்தில் , ஒரே மூச்சில் (cogently, uniformly) பாடுவதை 300 இடங்களையும் கவனிப்போருக்கு விளங்கும் .
தொல்காப்பியர் காலத்தை அறியவும் இது உதவுகிறது. ‘என்ப’ என்பதை இவரைப் போலவே திருவள்ளுவரும் அதிகம் பயன்படுத்துகிறார். சங்கப் புலவர்கள் இதை அதிகம் பயன்படுத்தவில்லை. ஆக நமக்குக் கிடைத்த தொல்காப்பியம் – மூன்று அதிகாரங்களும் – ஒரே காலத்தவை – களப்பிரர் காலத்தவை – களப்பிரர் எனப்படும் மர்ம (கர்நாடக சமணர்?? ) ஜாதி ஆட்சி முடிந்த காலத்தவை. அதாவது 4 அல்லது 5ம் நூற்றாண்டு .
இன்னொரு விஷஜ்யத்தையும் சொல்ல வேண்டும். தொல்காப்பியர் ‘ஒரிஜினல்’ வேறு. நாம் மனதிற் கற்பனை செய்யும் தொல்காப்பியர் வேறு. அதாவது இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது
உண்மையானால், அவர் கஜபாகு (கிபி.132) காலத்தில் வாழ்ந்தவரே. ஆனால் அவர் பெயரிலுள்ள சிலப்பதிகாரம் அந்த இளங்கோ யாத்தது இல்லை. அது போலவே தொல்காப்பியர் என்பவர் அ கத்தியர் மாணாக்கர் என்றால் அவர் வேறு; அவர் பெயரில் நாம் படிக்கும் தொல்காப்பியம் வேறு.சங்க இலக்கியத்திலும் காண முடியாத நீண்ட உவமை உரு பு பட்டியலைக் கொடுப்பதால் இவர் பழங்கால விதிகளை, சூத்திரங்களை, நமக்கு 5ம் நூற் றாண்டில் தொகுத்துத் தந்தார் என்று சொல்லுவதே பொருந்தும்.
சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் தொல்காப்பியர் மிகப் பழங்காலத்தவர். ஆனால் தொல்காப்பிய நூல் பிற்காலத்தது.

திராவிட ரகஸியம்
தொல்காப்பியத்துக்கு சொல்லடைவு (Word Index) வெளியிட திராவிடர்கள் பயப்படுகிறார்கள் . ஏனெனில் அவர் யார், எக்காலத்தவர் என்பது வெளிப்பட்டுவிடும். அதாவது அவர் சொல்லும் பல ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் முதலியன வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும். திருவள்ளுவர் துணிச்சலாக குணம், காமம், காலம், தானம், என்றெல்லாம் சம்ஸ்கிருத்ச் சொற்களை முதலில் வைத்தே கவி பாடினார். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவன் காமத்துப் பால் என்று ஒரு அத்தியாத்துக்கு சம்ஸ்கிருதப் பெயர் வைத்தார். இதைப் போலவே த்ருண தூமாக்கினி என்ற பெயர்படைத்த பார்ப்பன தொல்காப்பியரும் உவம இயல் என்று ஒரு பிரிவுக்கே சம்ஸ்கிருதத் சொல்லை பயன்படுத்துகிறார். ஏனெனில் இவர்கள் அனைவரும் உலகப் புகழ் பெற்ற உவமை மன்னன் காளிதாசன் காலத்துக்குப் பிற்பட்டவர்கள். சங்கப் புலவர் சிலரும் வள்ளுவனும் உவமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் கையாளுகின்றனர் .
முதல் இரண்டு அதிகாரங்களில் வேத கால மக்கள் எழுத்தின் பிறப்பிடம் பற்றிப் பாடியதை தொல்காப்பியர் நமக்குத் தருகிறார். கர , கார (அ -கர, உ-கார ) என்பதை பற்றி பாணினி சூத்திரம் செய்தது போலவே இவரும் சூத்திரம் செய்கிறார் . இவர் காலத்தில் சம்ஸ்கிருதத் சொற்களை கடன் வாங்குவது இருந்ததால் அதுபற்றியும் சூத்திரம் செய்கிறார். மேலும் சம்ஸ்கிருத நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதால் அது பற்றியும் பாடுகிறார்.
இதற்கெல்லாம் மேலாக இவருக்கு ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து நூலை உலகிற்கு அளித்தது நான்கு வேதங்களில் கரைகண்ட பார்ப்பனன் அதங்கோட்டு ஆச்சார்யா என்பதை பனம்பாரனார் பாடிவிட்டார். அக்கால மன்னர் பெயர்கள் மஹா கீர்த்தி! நூல்களின் பெயர்கள் பூதபுராணம்!! , ஊரின் பெயர் கபாடபுரம்!!! , அவர் படித்தது ஐந்திரம்!!! என்றெல்லாம் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதம் வருகிறது. அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்களாக விளங்கின.
305 இடங்களில் “மொழிப , என்ப, என்மனார்” என்பதெல்லாம் அகத்தியர் சொன்னதை இவர் திரும்பிச் சொல்கிறார் என்று உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர். “முந்து நூல்” என்று பனம்பாரானார் சொல்லுவதும் அகத்தியமே என்பது ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரின் துணிபு
ஆக முடிவுரை —
தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒருவரால் இயற்றப்பட்டதே.
ஒரே காலத்தில் — திருக்குறள் காலத்தை ஒட்டி – 4, 5-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டதே .
தொல்காப்பியர் பெயரில் இந்த நூல் இருந்தாலும் இதை தொகுத்து நமக்குத் தந்தவர்கள் பிறகாலத்தவரே.
வாழ்க தமிழ், வளர்க தொல்காப்பியன் புகழ்
–subham—

tags தொல்காப்பியர், காப்பி அடித்தாரா?, தொகுத்தாரா ?, இலக்கணம் , எழுதினாரா?
You must be logged in to post a comment.